Latest Movie :
Recent Movies

மட்டக்களப்பு மக்கள் வளமும் வாழ்க்கையும்


மட்டக்களப்பு நாட்டுப் பாடல்கள்

மட்டக்களப்பு நாட்டுப் பாடல்கள்

பதிப்பாசிரியர் கலாநிதி சு.வித்தியானந்தன்

இலங்கைக் கலைக்கழகத் தமிழ் நாடகக்குழு வெளியீடு

---------------------------------------------------.

ARTS COUNCIL TAMIL DRAMA
PANEL SERIES

Published under the authority

of the

Arts Council of Ceylon

GENRAL EDITOR
S.VITHIANANTHAN, M. A. ph. D.
Chairman, Tamil Drama Panel,
Arts Council of Ceylon

SECOND EDITION 1962

Price Re. 1.00

-------------------------------------------------

இந்நூலில்

தோற்றுவாய் பக்கம் 5
இரண்டாம் பதிப்புர ” 19
Introduction ” I-VI

கவிகள் ” 21-66
(அ). காதலன் கூற்றாய் உள்ளவை 21
(ஆ). காதலி கூற்றாய் உள்ளவை 41
(இ). தோழி கூற்றாய் உள்ளவை 57
(ஈ). தாயார் கூற்றாய் உள்ளவை 63

பொதுப்பாடல்கள் 67-74

தொழில்முறைப் பாடல்கள் 75-80
(அ). பொலிப் பாட்டு 75
(ஆ). ஏர்ப் பாட்டு 79
கொம்புவிளையாட்டுப் பாடல்கள் 81-82

இலங்கைக் கலழகத் தமிழ் நாடகக்குழு வெளியீடு 4.

இரண்டாம் பதிப்பு : கார்த்திகை 1962

எல்லா உரிமையும்
இலங்கைக் கலைக்கழகத்திற்கே.

கண்டி,
றோயல் அச்சகத்தில் அச்சிடப்பட்டது.


தோற்றுவாய்

இயற்கையோடு ஒட்டிவாழும் உள்ளத்தினையும் பண்பினையும் உடைய நாட்டு மக்களின் உணர்ச்சிiயையும் செயல்களையும் வெளியிடும் பாடல்களே நாட்டுப்பாடல்கள், நாடோடிப்பாடல்கள், பாமரப்பாடல்கள், வாய்மொழிப்பாடல்கள் என்றெல்லாம் பெயரிடப்படும் இப்பாடல்கள் பெரும்பான்மையும் எழுத்தறிவில்லாத நாட்டுப்புற மக்களிடையே வழங்கும் பலவிதப்பாடல்களைக் குறிக்கின்றன. மக்கள் வாழ்க்கையில் உள்ள செய்திகளை, அவர்கள் இன்பதுன்பங்களை, விளையாட்டு வேடிக்கைகளை உள்ள படியே எடுத்துக்காட்டுபன நாட்டுப்பாடல்கள்.

இவைபல ஆண்டுகளளாக தலைமுறை தலைமுறையாக வாய்மொழியாகவும் கேள்வி மூலமாக பொதுமக்களிடையே பயின்று வருகின்றன. காலத்துக்கு காலம் இடத்துக்கு இடம் பரவி, மாறியும் விரிந்தும் சுருங்கியும் வழங்கும் இப்பாடல்களை யார் எப்பொழுது இயற்றினனார் எனக்கூறமுடியாது. பாடலாசிரியர் யார் என கூற இயலாமை இவற்றின் இலக்கனங்களுள் ஒன்றாக அமைந்து விட்டது.

தொழிலாளர், குடிமக்கள், வேலைசெய்யும் பெண்கள் முதலியோர் தத்தம் வேலையினால் உண்டாகும் அலுப்பைப் போக்கி கொள்ளப்படும் பாடல்கள் ஒரு வகை; குழந்தைகளை தொட்டிலில் இட்டு தாழாட்டி நிலாக்காட்டி தலையையாட்டி தோழைவிசச் செய்து விளையாட்டுக்காட்டி தாய்மார் குழந்தையோடு குழந்தையாய் பாடும் தாளட்டுப்பாடல்கள். ஓருவகை; புத்தாண்டு பொங்கள் போன்ற விழாக்காலத்தில் மக்கள் ஒன்று கூடி ஆடிப்பாடி இசைக்கும் பாடல்கள் ஒருவகை; சில பிள்ளைகள் ஆடும் விளையாட்டுக்களிடையே பாடும் பாடல்கள் ஒருவகை. திருமணம் இழவு வீடு முதலியவற்றில் பாடும் பாடல்களும் ஒர் இனத்தவை. இவ்வாறு பலதுறைப்பட்டு நிற்கும் நாட்டுப் பாடல்களை பாரதியார்.

மானுடப் பெண்கள் வளரும் ஒரு காதலினால்
ஊனுருகப் பாடுவதிலூறிடுந் தேன்வாரியிலும்
ஏற்றநீர்ப் பாட்டினிசையினிலும் நெல்லிடிக்குங்
கோற்றொடியார் குக்குவெனக் கொஞ்சு மொழியினிலும்
சுண்ணமிடிப்பார்தஞ் சுவைமிகுந்த பண்களிலும்
வட்டமிட்டுப பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்கக்
கொட்டி யிசைத்திடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும்

எனத் தான் பாடிய குயிற்பாட்டிற் குறிப்பிடுகிறார்.

நாட்டுப் பாடல்களில் ஓசை இனிமையும் கருத்தழகும் மலிந்து கிடக்கின்றன. வயல்வெளியிலே நாற்றுநடும் பொதுமக்கள் பாடும் பாடல்களைக் கவனித்தால் இதன் உண்மை தெரியும். இசையுடன் நாற்று நடுகை நடைபெறுகின்றது. முறைமுறையாக யாவரும் பாடுகின்றர்.இயற்கையான சங்கீதக் கச்சேரி இங்கு நடைபெறுகின்றது. முறைமுறையாக யாவரும் பாடுகின்றனர் இயற்கையான சங்கீதகச்சேரி இங்கு நடைபெறுகின்றது. கச்சேரியை நடத்துபவர் நாற்றுநடுவோர். நாற்றும் நடும்போது தாளம் பிறக்கப்படும் அந்த சங்கீதம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் ஓர் இடத்திற்குள் சிறைப்படவில்லை அவர்கள்குனிந்து நாற்று நடும்போது உண்டாகும் அலுப்பை அந்தச் இனிய பாட்டு மறக்கச்செய்யிறது. அவர்கள் தொழிலுக்கு இன்பம் அளிக்கின்றன அவர்கள் பாடும் பாட்டுக்கள் அவர்களுக்கு உணவே தேவையில்லை முறைமுறையாக அவர்கள்பாடும் பாட்டுக்கள். அவர்களுக்கு இன்பத்தை கொடுக்கின்றன. ஓசை இனிமையிலும் கருத்தழகிலும் தம் உள்ளத்தைப் பறிகொடுத்து உவகைபொங்க தொழிலாற்றுகின்றனர்.

ஒரு விசயத்தைப் பலவகையாக திருப்பித் திருப்பிச்சொல்வது நாட்டுப்பாடல்களில் காணப்படும் ஒரு பண்பாகும். உதாரணமாகப் பின்வரும் பாடல்களை கொள்ளலாம். சின்னப்பு என்பவன் தன் மச்சாள் லட்சுமிமேற் காதல்கொண்டிருந்தது அவன் தாயாருக்கும் பிடிக்கவில்லை லட்சுமி வீட்டுக்குச் சென்ற சின்னப்புவின் வரவை எதிர்பார்த்திருந்து. அவன் வந்ததும்.

இவ்வளவும் எங்கிருந்தாய்
சின்னப்பு சின்னப்பு
இவ்வளவும் எங்கிருந்தாய்
சின்னப்பு சின்னப்பு

என்று கேட்டாள். அவள்

அழகவல்லி லட்சுமியோடு
நாள் முழுதும் இருந்தேன்
இவன் என்னை கவர்ந்துகொண்டாள்
அழகவல்லி லட்சுமி

என்று குசாமல் விடை அளித்தான்

சோறு கறி ஆக்குவாளா
சின்னப்பு சின்னப்பு
சோறு கறி ஆக்குவளா
ஏன் சின்னப்பு சின்னப்பு

என்று கேட்டால் தாய்.

ஒடியல்கூழ் காய்ச்சுவாள்
ஊழுத்தம் கழியும்ங் கிண்டுவாள்
அவள் என்னை கவர்ந்து கொண்டால்
அழகவல்லி லட்சுமி

அன்று மறுமொழிகூறினான் அவன்.

சீதனமும் கேளடா
சின்னப்பு சின்னப்பு
சீதனமும் கேளடா
என் சின்னப்பு சின்னப்பு

என்று தாய்.
வன்னிவயலும் பரந்தன்காடும்
சீதனமாய்த் தருகிறார்கள்
அவள் என்னை கவர்ந்துகொண்டாள்
அழகவல்லி லட்சுமி

என்று அவன் மறுமொழி கூறக்கேட்ட தாய் இவர்களுக்கு குறுக்கே நிற்கவிரும்பாது.

அப்படியே செய்யடா
சின்னப்பு சின்னப்பு
அப்படியே செய்யடா
என்சின்னப்பு சின்னப்பு

என்று சம்மதத்தைத் தெரிவித்தாள். இப்பாடல்களில் ஒரே விஷயம் திருப்பித் திருப்பிச் சொல்லப்படுவதைக் காணலாம். இது செந்தழிழ் இலக்கியத்தில் ஒருவேளை குற்றமாகலாம். ஆனால் நாட்டுப்பாடல்கள் இப்படி அமைந்திருப்பது அப்பாடல்களின் பண்புகளுள் ஒன்றாகும். எத்தனைதரம் திரும்பித் திரும்பிச் சொன்னாலும் சொல்பவனுக்கும் கேட்பவனுக்கும் இன்பமே உண்டாகின்றது. ஒரு வரியை இன்னொரு வரியில் திருப்பிச் சொல்லக்கூடிய முறையில் இவை அமைந்திருப்பதும் கவனித்தற்குரியது. இன்ன தென்றுசொல்லி விவரிக்கமுடியாத ஓசைநயம் பொதிந்துகிடக்கும் இப் பாடல்கள் மக்கள் உள்ளத்தைத் தம்பால் இழுக்கும் அரிய பண்பைப் பெற்றிருக்கின்றன.

கிராம மக்களின் உள்ளத் துடிப்புகளையும் உணர்ச்சிப் பெருக்குகளையும் வெளியிடும் இப்பாடல்கள் பேச்சுவழக்கிலுள்ள சொற்களையும் சொல்லுரவங்களையும் கொண்டு விளங்குவது இயல்பே.

புல்லைப் புடுங்கிவெச்சேன்
புறவளவைத் துத்துவெச்சேன்
அன்னப் பசுங்கிளியின்
அடியழகைப் பார்ப்பதற்கு.

தோற்றுவாய்

தேருவால போவெண்ணா
தேன்போல மணக்கிறது
உறவாட நான்வாறேன்-உன்ர
அண்ணன்மார் காவலாமே

என்ற பாடல்களில் இப்பண்பைப் பெரிதும் காணலாம்.

நாட்டுப் பாடல்களுக்குத் தொடக்கமுமில்லை, முடிவுமில்லை. அந்த அந்தக் காலத்துச் செய்திகளையும் முறைகளையும் அவை ஏற்றுக்கொள்ளும். ஈழத்திற் பறங்கியர் ஆங்கிலேயர் முதலியோர் ஆண்டதன் பயனாக அவருடைய பழக்க வழக்கம் முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டும். அவர்கள் மொழியிலுள்ள சொற்களைக் கடன்வாங்கியும் பல நாட்டுப் பாடல்கள் எழுந்தன.

சிங்கிலிநோனா சிங்கிலிநோனா
சீப்புக் கொண்டைக்காரி
பார்த்தபேர்கள் ஆசைகொள்ளும்
பந்துக் கொண்டைக்காரி.

என்னபிடிக்கிறாய் அந்தோனி
எலிபிடிக்கிறேன் சிஞ்ஙோரே
பொத்திப்பொத்திப் பிடிஅந்தோனி
புறிக்கொண்டோடுது சிஞ்ஙோரே

போன்ற பாடல்கள் இவ்வகையாய் எழுந்தவையே.

இலக்கியத்திற்கும் நாட்டுப் பாடல்களுக்கும் குறிப்பிடத்தக்க வேற்றுமை உண்டு. இலக்கியங்கள் பெரும்பாலும் இலட்சிய வாழ்க்கையையே அடிபடபடைக் குறிக்கோளாகக் கொண்டவை. தமிழிலுள்ள காவியங்கள் பல அதர்மத்தின் அழிவையும் தர்மத்தின் வெற்றியையும் கூற எழுந்தவையே. இதனால் இலக்கியங்களுக்குத் தலைவராக அமைபவர் குற்றமே இல்லாதவராய்க் குணங்களுக்கு இருப்பிடமாய் படைக்கப்படுகின்றனர்.
எல்லாக் காவியங்களிலும் இத்தகைய குணம்படைத்த தலைவரையே நாம் காணுகின்றோம். இது உண்மையான வாழ்க்கைக்குப் பொருத்தமற்றதாக இருக்கின்றது.

இதற்கு மாறாக மனிதனின் குறைகுற்றங்களையும் சமூக ஊழல்களையும் உள்ளவாறே எடுத்து இயம்புகின்றன. நாட்டுப்பாடல்கள். கற்பின் சிறப்பை இலக்கியம் பாட, உலகில் மலிந்து கிடக்கும் கள்ளக்காதல் வாழ்க்கையை நாட்டுப் பாடல்கள் சித்திரிக்கின்றன. நாள்தோறும் வாழ்க்கையிற் காணப்படும் நிகழ்ச்சிகளைச் சுவைபடப் பாடும் நாட்டுப் பாடல்கள் ஆபாசங்களை வெட்ட வெளிச்சமாக உள்ளபடி கூறுகின்றன. ஆகவே, கல்வி, உருவம், ஒழுக்கம், வயது முதலியவற்றில் தம்மை ஒத்த ஆணையும் பெண்ணையும் காவியங்கள் பாட, எந்த விதத்திலும் ஒவ்வாத இருவர் வாழ்கை நடத்துவதைக் கேலி செய்து இயம்புகின்றன நாட்டுப்பாடல்கள்.

நடோடிப் பாடல்களில்வரும் பாத்திரங்கள் நெர்லுக்குற்றும் பொன்னி, நாற்று, நடும் சின்னாச்சி, வண்டியோட்டும் சின்னப்பு, ஏற்றம் மிதிக்கும் மாரிமுத்து, கஞ்சிகொண்டுவரும் வேலாயி, பொலிதுற்றும் சித்தி போன்றவர்களே. இவர்களுக்கு என்ன காதல், இவர்களைப்பற்றி என்ன பாடல் என்று நாடோடிப் பாவலன் ஒதுக்கிவிடகில்லை. அவன் பொன்னியின் காதலைப்பற்றிப் பாடுகின்றான், மாரிமுத்தனின் வீரத்தை விளம்புகின்றான், வேலாயியின் துக்கங்களை வியாக்கியானம் செய்கின்றான். இத்தகையோரைப் பாத்திரங்களாக வைத்துப் பாடிய பாடல்களிலேயே நாம் இலக்கியங்களிற் காணமுடியாத இன்பத்தை, உணர்ச்சிப் பெருக்கை, வாழ்க்கைப் பண்பைப் பார்க்கின்றோம். இதற்க்கு உதாரணமாகத் தெம்மாங்கு என அமைந்தது எனக் கூறுவர். வண்டியோடும் வண்டிக்காரன் சுப்புவும் வண்டி இழுக்கும் மாடுகளும் மயக்கும்படி பாடப்படும் அப்பாடல்கள் தேன்போலவே இனிக்கின்றன.

சின்னச்சின்ன வண்டிகட்டிச்
சேவலைமாடு ரெண்டுபூட்டி
வாழக்காய்ப் பாரம்ஏற்றி
வாருண்டி உன்புருஷன்

மாடுமோ செத்தல்மாடு
மணலுமோ கும்பிமணல்
மாடிழுக்க மட்டாமல்
மாய்கிறாண்டி உன்புருஷன்.

என்று பாடும்போது இவை கேட்போருடைய உள்ளத்தையும் பாடுவோர் உள்ளத்தையும் கவரகின்றன.
தமிழ் இலக்கியத்தில் அப்பொருள் இலக்கியம் காதலைப்பற்றிப்பாடுகின்றது. இத்தகைய இலக்கியத்திற்கு தமிழில் குறைவே இல்லை ஆயினும் இலக்கியத்தில் வரும் காதல் பெரும்பாலும் உலகில் நிகழ்வதன்று: நாடகவழக்கும் சேர்ந்தே அமைந்துள்ளது. ஆனால் நடோடி காதல்ப் பாடல்கள் காதல் உலகில் இயற்கையாக நடைபெறுவனவற்றை கூறுகின்றன. அதுவும் காதலன் காதலியைக் களவிற் கூடும்பகுதியே கூடுதலானது. காதலன் காதலியை தேடிவருதல், அவள் குறியிடம் கூறல், குறித்த இடத்தில் குறித்த காலத்தில் காணயியலாது. துத்தலித்தல் முதலிய பகுதிகள் உணர்ச்சிவாய்ந்தனவாக இருக்கும்.

அந்தி விடிந்து
சந்தையாற் போறமச்சான்
நேரத்துக்கு கோருடுப்பு
நெய்கிறதோ வாங்கிறதோ

மாசம் பதினாறு
வளவு நிறைந்தநிலா
சிற்றொழுங்கைக் குள்ளாலே - இரண்டு
செருப்பழுது பேகுதுகா.

சந்தன மரத்தைச்
சந்திக்க வேன்டும்மென்றால்
பூவலடிக்குப்
பொழுதுபட வாமயிலார்.

கடித்தநுளம்பு - நான்
கத்திருந்த முளையும்
அடித்தமழையும் -எனக்கொரு
ஆள்வேனும் சொல்லியழ

தாயாரும்மில்லை மச்சான்
தகப்பன் வெடிகாட்ட
அண்ணன் தினைக்காவல்- என்
ஆணிமுத்தே வாமயிலார்.

போன்ற பாடல்கள் நாட்டுப்பாடல்களின் அகப்பொருளை நன்கு விளக்க வல்லன.

நாடோடிப்பாடல்களுக்கு முன்னோடியாக பழைய தமிழ் இலக்கியத்துக்கு சில பகுதிகளைக்;காணலாம். இளங்கோவடிகள் பாடியசிலப்பதிகாரத்தில் அம்மனைவரிகந்துக வரி என்று வருபவை நாட்டுப் பெண்கள் அம்மானை ஆடும்போது பாடும் பாட்டுக்களை ஒத்திருக்கின்றன. மணிக்கவாசக சுவாமிகள் திருவாசகத்திற்பாடிய தோள் நோக்கம் சாழல் திருவுந்தி என்பன உருவத்திலும் ஓசையிலும் நாட்டுப்பாடல் உலகத்திற்குரியன. குறவஞ்சி, பள்ளு முதலிய இலக்கியவகைகளும் நாடோடி இலக்கியங்களே. பொதுமக்களுடைய வழ்க்கையையும் இன்ப துன்பங்களையும் படைத்துக்காட்டும் இப்பிரபந்தங்கள் நாட்டுப்பாடல் இலக்கியத்தைச் சேர்ந்தவையே.


தொல்காப்பியர் தமிழிலுள்ள செய்யுள் வகைகளைக் குறிப்பிடும்மிடத்து பண்ணத்திச்செய்யுள் என்ற ஒருவகை இலக்கியத்தையும் தருகின்றார்.

பாட்டிடைக் கலந்த பொருள் வாகிப்
பாட்டினியல பண்ணத்தி யியல்பே
( செய்யுளியல் 180 )

என்பது அதன் இலக்கணம்.

பழம்பாட்டினூடும் கலந்த பொருளே தனக்குப் பொருளாகப் பாட்டும் உரையும் போலச் செய்யப்படுவன பண்ணத்தி என உரை கூறுவார் பேராசிரியர். எழுதும் பயிற்சியில்லாத புறவுறுப்புப் பொருள்களை உடையது பண்ணத்தியென்றும் அதற்கு உதாரணமாக வஞ்சிப்பாட்டு, மோதிரப்பாட்டு, கடகண்டு முதலியவற்றைக் கொள்ளலாமென்றும் அவர் மேலும் கூறுவர். பண்ணத்தி என்று அக்காலத்தில் வழங்கியவையே நாட்டுப்பாடல்கள். எனவே நூல்வடிவில் இல்லாது வாய்மொழியாகப் பரம்பரை பரம்பரையாக வழங்கிவரும் நாட்டுப்பாடல்கள் அக்காலத்திலிருந்தே வந்தவை.

தொல்காப்பியர் காலத்திலிருந்து பாரதி காலம்வரை பள்ளு குறவஞ்சி ஏசல் சிந்து கும்மி முதலிய செய்யுள் வகைகளைப் புலவர் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். பாரதி பல இடங்களில் நாட்டுப் பாடல் மெட்டிற் பல பாடல்கள் இயற்றி உள்ளார். புயற்காற்று புதியகோணங்கி போன்ற பாடற்பகுதிகளில் வரும் பாடல்கள் இதற்குச்சன்றாகும் புயற் காற்றில்வரும்

காற்றடிக்குது கடல் குமுறுது
கண்ணை விழிப்பாய் நாயகநே
துற்றல் கதவு சாளர மெல்லாங்
தோலைத் தடிக்குது பள்ளியிலே

வானஞ் சிவந்தது வைய நடுங்குது
வாழி பராசக்கி காத்திடவே
தீனக் குழந்தைகள் துன்பப்படாதிங்கு
தேவி அருள் செய்ய வேண்டுகின்றோம்

என்னும் பாடல்களும் புதியகோணங்கி என்னும் பகுதியில் வரும்

குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு
நல்லகாலம் வருகுது நல்லகாலம் வருகுது
சாதிகள் சேருது சண்டைகள் தொலையுது
செல்லடி சக்தி மாகாளீ
வேதபுரத்தாருக்கு நல்லகுறி சொல்லு

என்னும் பாடலும் போதிய எடுத்துக்காட்டுக்;களாம்.

ஈழ நாட்டிலே கிராமியக் கவிதை நலம் நிறைந்துள்ள பகுதி மட்டக்களப்பு. தேனுக்கும் பாலுக்கும் தழிழர் வீரத்திற்கும் பெயர் பெற்ற மட்டக்களப்பு மக்கள் கலைகளைபேணி வளர்பதிலும் தலைசிறந்து விளங்குகின்றது. உணர்ச்சி கவிதை நிறைந்த மட்டக்களப்பு நட்டுப் பாடல்கள் பல்வேறு துறைப்பாட்டு, நிறைந்து வழங்குகின்றன. கிழக்கிலங்கையின் மூலை முடுக்குகளிலும் வயல்வெளிகளிலும் வீடுகளிலும் வீதியிலும் உலவும் இப்பாடல்களை தொகுத்து வகைப்படுத்தி வெளியிடுவதில் ஒருவரும் பெரிது கவனம் செலுத்தவில்லை. இயற்கை வழ்வில் நின்று விலகி நிற்கும் நாகரிகத்தில் திளைத்து நிற்கும் பலருக்கு இப்பாடல்களின் அருமை தெரியாது. நாட்டுப்புற பாமரமக்களுக்கும் நகரமக்களுக்கும் வாழ்க்கை முறையிலும் உள்ளப்பாங்கிலும் வேறுபாடு வளர்ந்துகொண்டே வருவதனால்

பாமரமக்கள் பாடும் பாட்டை கேட்டு மகிழ்கிற மனநிலை படித்தமக்களைவிட்டு ஒரளவிற்கு நீங்கிவிட்டது என்று கூறலாம். நாட்டுப்பாடல்களை படுவோரின் தொகையும் நளுக்குநாள் குறைந்து கொண்டேவருகின்றது. நாளடைவில் நாட்டுப்பாடல்கள் மறைந்து விடக்கூடும்.

இந்நிலையை மாற்றி அமைக்கும் நோக்கத்துடநேயே இந்நூல் வெளியிடப்படுகின்றது. எமது நட்டில் பாமரமக்களே பெரும் பகுதியினர். அவர்களுடைய பாடல்களை பயிலுவதே தக்கவழி. இக்கவிகளை அவர்கள் நாள்தோறும் தாமேபாடித் தமேகேட்டு உள்ளத்தில் அமைத்து வளர்த்து வந்திருக்கின்றனர். அவர்களுடைய கவிதைப் பெருக்கிலே ஓசை இன்பத்தையும் தாளக்கட்டையும் சொல்லாட்சியையும் காணலாம். உணர்ச்சி பெருக்கொண்றை அடிப்படையாகக்கொண்டு இப்பாடல்கள் இயங்குகின்றன. உணர்ச்சியே இப்பாடல்களுக்கு உயிர் எனலாம்.

இத்தகைய உணர்ச்சிக் கவிதைகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடநேயே இலங்கைக் கலைக்கழக நாடக நடனக்குழு இந் நூலை வெளியிடுகின்றது. கிராமியப்பாடல்களையும் கூத்துவகைகளையும பேணி வளர்ப்பது இக்குழுவின் முக்கிய நோக்கங்களுல் ஒன்றாகும். இப்பாடல்களை ஒன்றுசேர்த்துத்துறைப்படுத்தி எமக்கு உதவியவர் பண்டிதர் வி .சீ. கந்தையா அவர்கள். அவர்களின் தழிழ்த் தொண்டுக்காக நாம் அவரை வழ்த்துகின்றோம். பாடல்களை சேகரிப்பதில் திருவாளர்கள் ஏறாவூர் எம். ஏம் சாலி அக் கரைப்பற்று எஸ். அப்துல் ஸமது மண்டூர் வி.விசுவலிங்கம் காரைதீவு வே. தம்பிராசா ஆகியோர் அவருக்கு துனையாக இருந்தனர் அவர்களுக்கு எமது நன்றி உரியது.

இந்நூலில் ஜஞ்நூறு பாடல்கள் வரை இடம்பெற்றுள்ளன அவை கவிகள் பொதுப்பாடல்கள் தொழில் முறைப்பாடல்கள் கொம்பு விளையாட்டுப்பாடல்கள் என்ற நான்கு பெருந்துறைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. மட்டகளப்புபகுதியில் வழங்கும் நாட்டுப் பாடல்களில் பெரும்பாலான அகத்தினையைச் சார்ந்தவையே. எல்லோருடைய காதல் நிகழ்ச்சிகளையும் உணர்ச்சியுறக்காட்டும்

இவ்வகத்தினைப் பாடல்கள் மட்டக்களப்பிற் கவிகள் என வழங்குகின்றன. பாடல் அனைத்தையும் குறிக்கும் கவி என்னும் சொல் மட்டகளப்பிலே அகத்தினை நாட்டுப்பாடல்களைக்குறிக்கும் சிறப்புசொல்லாக வழங்குகின்றது. இக்கவிகளில் அதிகம் ஈடுபாடுடையவர் மட்டக்களப்பு இஸ்லாமிய மக்களே. சிறந்த கவிவளைப்பாடவல்லவர் இவர்களிடையே இன்றும் பலர் உளர்.

இத்தகைய உணர்ச்சிமிக்க காதற்பாடல்களாகிய கவிகள் கூற்றுக்குரியோர் பெயராற் காதலன் கூற்றாய் உள்ளவை, காதலி கூற்றாய் உள்ளவை, தோழி கூற்றாய் உள்ளவை, தாயார் கூற்றாய் உள்ளவை, என நான்கு பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளன. இக்காதற்கவிகள் தமிழிலுள்ள அகப்பொருள் மரபுக்கு மாறாகஇருக்ககூடும் உதாரணமாகத் தமிழ் இலக்கியத்திற் களவு ஒழுக்கம் பெரும்பாலும் தோழிதுணை கொண்டே நடக்கும். தலைவி ஒருபோதும் குறியிடம் கூறமாட்டாள். ஆனால் நாட்டுப்பாடலில் தலைவி தானே தலைவனிடம் குறியிடம் கூறும்வழக்கைகாணலாம்.

சந்தன மரத்தை மச்சான்
சந்திக்க வேன்டுமென்றால்
பூவலடிக்கு மச்சான்
பொழுதுபட வந்திடுங்கோ.

கடப்படியில் வந்து நின்று
காளை கனைக்கும் மென்றால்
எங்கிருந்த போதும் நாகு
எழுந்துவர மாட்டாதோ

போன்ற பாடல்கள் தலைவி தலைவனிடம் குறியிடம் கூறுவதைக்குறிக்கின்றன. மட்டக்களப்புக் கவிகள் இவ்வாறு பழைய அகப்பொருள் மரபுக்கு முறண்பட அமைந்தபோதும், அவை பொதுமக்கள் வழ்க்கையிலே இயற்கையாய் நடைபெறும் ஒழுக்கங்களை எடுத்துக் கூறுவதால் மிகவும் நயம்பட அமைந்துள்ளன.

பொதுப்பாடல்கள் என்ற பகுதியிற் கண்டோர் கூற்று அயலார் கூற்றுப் போன்ற பொதுக்கவிகளும், புறச்சுவை கலந்து பொதுவே வழங்கும் நாடோடிப்பாடல்களும் இடம்பெறுகின்றன.

இதில் வரும் முதல் 31 கவிகள் அகத்தினைச்சான்றவை 32-ம் பாடல் தொடங்கி 56 ம் பாடல்வரையுள்ளவை புறத்தினைச்சான்றவை.

தொழில்முறைப்பாடல்கள் என்பது இன்நூலின் மூன்றாம் பகுதி, இதில் வயற்களத்துப் பாடல்களாகிய பொலிப்பாட்டும் ஏர் பாட்டும் இடம் பெறுகின்றன. வயல் தொழில்களோடு நேரடியாக தொடர்பு கொள்ளாமையால் இவ்வாறு வகுக்கப்பட்டுள்ளன. சூடுபோடும் களத்திலே பாடப்படுபவை பொலிப்பாடல்கள், பொலி என்று சொல் நெல்லை தனியாகவும் தொகையாகவும் குறிக்கும். பொலியின் வளம்பெருகவேண்டி இரவிலே சூடு போடும்போது இப்பாடல்கள் பாடப்படுகின்றன. வயற்களங்களிற் உழவுமிதிப்புப்போன்ற தொழில்கள் செய்யுங் காலங்களில் மாடுகளைக்கொண்டு வேலை செய்வோர் பாடும்பாடல்களே ஏர்ப்படலாகும்..

கொம்பு விளையாட்டுப் பாடல்கள் நன்காவது பகுதியாக அமைந்துள்ளன. தன் கணவனை கள்வனெக் கொன்ற பான்டிய மன்னனின் தலைநகரமாகிய மதுரையைத் தீக்கிரையாக்கிய பின்னரும் சீற்றம் தணியாது வந்து கண்ணகி முன்னிலையில், இடையர்கள் காதல் கலந்த விளையாட்டு விழாவாக கொம்பு விளையாடலைச் செய்து அவளை குளிர்வித்தனர் என்றும், அதன் தொடர்பாக எழுந்ததே இன்று மட்டகளப்பில் வளங்கும் கொம்புவிளையாட்டு என்றும் கூறுவர் கோவலன் கட்சியாரும் கண்ணகி கட்சியாருமாக மக்கள் பிரிந்து, இரு வேறு வளைந்த தடிகளை ஒன்றொடு ஒன்று கொழுவி இழுத்து கோவலன் அதை முறித்து கண்ணகிக்கு வெற்றி காட்டி மகிழ்வித்தபோது, பத்தினி தெய்வம் சீற்றம் தணிந்து வழ்த்திசென்ற தென்றும், கொம்பு விளையாடி கண்ணகி அம்மனுக்கு குளுத்தி செய்து வரம் பெற்றனர் என்று கூறுவர்.

மட்டகளப்பில் - மழைவளம் குறைந்து பசியும் பிணியும் பெருகும் காலத்து கண்ணகி தேவிக்குச் சாந்தி செய்யும் போது கொம்புவிளையாட்டு நடத்தி மகிழ்வர். கொம்புவிளையாட்டில் ஊர் முழுவதும் இருகட்சியாகப் பிரியும். ஒன்று கோவலன் கட்சி, மற்றது கண்ணகி கட்சி. இக்கட்சிகள் வடசேரி தென்சேரி என்ற பெயர் பெறும். இவ்வாறாக பிரிந்து, போட்டியாக ஒரு சேரியார் இன்னொரு சேரைப்பழித்து வசைப் பாடல்கள் பாடுவர்.

பால்போல்நிலவெறிக்கப் படலை திறந்தவன ஆர்தோழி
நான்தாண்;டிவடசேரியான் உனக்கு நழிப்பணம் கொண்டுலாவுகிறேன்.

என்பன போன்ற தனி வசைப்பாடல்களும் பல உள. இப்பாடல் இப்பொழுது மண்டூர் தமபிலுவில் காரைதீவு வந்தாறுமூலை போன்ற ஊர்களில் மட்டும் ஆடப்படுகின்றது. துன்பத்தைப்போக்கி இன்பத்தை பெருக்கப் பாடப்படும் இப்பாடல்கள் அழியாமற் காக்கப்படவேண்;டியவை.

இந்நுலின் இந்நான்கு பகுதியிலும் தரப்பட்ட பாடல்களேயன்றி இன்னும் பல ஆயிரக்கணக்கான நாட்டுப்பாடல்கள் பலதுறைப்பட்டு விளங்குகின்றன. அவற்றை அறிஞ்ஞர்கள் சேர்த்து அனுப்பிவைப்பின் இன்னொரு நூலாக அவற்றை வெளியிடுவோம். நாட்டுப்பாடல்களை இறவாமல் காப்பது எல்லோருடைய கடமையாகும் தமிழரின் இலக்கிய செல்வத்திலே இப்பாடல்களுக்கு சிறந்த இடம்முண்டு. தமிழில் எத்தனை யோ இலக்கிய நூல்களும் இலக்கண நூல்களும் இறந்து போய்விட்டன என்று வரலாறு கூறுகின்றது. நாட்டுப்பாடல்களிலும் பலஅவ்வறே மறைந்து விட்டன. எஞ்சியுள்ள சிலவற்றை யேனும் பாதுகாத்து, நூல்வடிவில் வெளியிட உதவுதல் தமிழ் மொழிக்குத் தமிழர்இன்று எளிதிலே செய்யதக்க சிறந்த தொண்டாகும்.

இந்நூலை நல்ல முறையில் மிக விரைவில் அச்சிட்டுதவிய கிங்ஸ்லி அச்சகத்திற்கு எமது உளம் நிறைந்த நன்றி. இவ்வச்சகத்தைசேர்ந்த திரு. ஜே . ஜார்ஜ் ரொட்ரிகஸ் அவர்களும் திரு. சா. தர்மசீலன் அவர்களும் குறிப்பிட்ட சிறுகால எல்லையுள் இதனை வெளியிடுவதற்கு ஒத்துளைத்து ஊக்கம் அளித்தனர். ஆவர்களுக்குப்பெரிய கடமைப்பட்டுள்ளோம் .

வழ்க்கையின் நயத்தையும் அழகையும் அதிலே பொருந்தியுள்ள உண்மையான உணர்ச்சி பெருக்கையும் எடுத்துக்காட்டும் நாட்டுப்பாடல்களை கொண்ட இந்நுலை பெரியோர்கள் அன்புடன் ஏற்று இப்பனியினை தொடர்ந்தும் செய்வதற்கு ஆதரவும் ஊக்கமும் அளிப்பார்கள் என எதிர்பக்கின்றோம்.

சு.வித்தியானந்தன்

இரண்டாம் பதிப்புரை

இலங்கைக் கலை கழகத்தின் முதல் வெளியிடாக மட்டக்களப்பு நாட்டுப்பாடல்களின் முதற் பதிவு 1960 ம் ஆண்டில் வெளிவந்தது.. அதனை தொடர்ந்து இவ்வான்டில் சிலம்பு பிறந்தது அலங்கார ரூபன் நாடகம் ஆகிய இரு நூல்கள் வெளிவந்தன. மட்க்களப்பு நாட்டுப்பாடல்களின் முதற்பதிவு நூல் யாவும் மிகவிரைவில் விற்பனையாகிவிட்டன. புலரி வேண்;டுகோளுக்கு இணங்க இரண்டாம் பதிப்பினை எமது குழுவின் நான்காவது வெளியிடாக தமிழ் கூறும் நல்லுலகிற்குச் சமர்ப்;பிக்கின்றோம.;

இப்பதிப்பிற் சில மாற்றங்களை காணலாம். ஒன்றை ஒன்று ஒத்திருந்த சில பாக்கள் நீக்கப்பட்டுள்ளன. முதலிற் பாடல்களை துறைப்படுத்திய போது ஏற்பட்ட சில பிழைகளை இப்பதிப்பில் நீக்கியுள்ளோம் இரண்டாம் பதிப்பிற் பாக்கள் யாவும் உரிய துறைகளில் வகுக்கப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் ஒரு முன்னுரையும் இப்பதிப்பிற் சேர்க்கப்பட்டுள்ளது. கண்டி றோயல் அச்சகத்தார் இந்நூலை குறுகிய கால எல்லையில் வெளியிடப் பெரிதும் ஒத்துளைத்தள்ளார். அவ்வச்சக உரிமைக்காரன் திரு .ஜே. ஜார்ஜ் ரொட் ரிகஸ் அவர்களுக்கும் அச்சகத்தை சேர்ந்த திரு .சா. தர்மசீலன் அவர்களுக்கு பெரிதும் கடமைப்பட்டுள்ளோம்.

மக்கள் கலைகளிற் கவனம் செலுத்த முயற்சி அண்மையில் ஏற்பட்டபோதும் நாட்டுப்பாடல்களை சேர்க்கும் முயற்சி சிலகாலமாக இருந்து வந்திருக்கின்றது. ஈழத்திலுள்ள அறிஞ்ஞர் பலர் ஈழத்து நாடோடிபாடல்களை அவ்வப்போது சேர்த்துப்பத்திரிகைகளிலும,; துண்டு பிரசுரங்களிலும் வெளியிட்டு வந்துள்ளனர். இவர்களுள் திரு. மு. இராமலிங்கம் அவர்களின் சேவை பாராட்டுக்குரியது.

இச்சு10ழ்நிலையிலேயே கலைக்கழக நாடகக்குழு பணியாற்ற தொடங்கி மட்டக்களப்பு நாட்டுப்பாடல் என்னும் பெயரில் ஈழத்தில் வழங்கும் நட்டுப்பாடல்கள் சிலவற்றை துறைப்படுத்தி முன்னுரையுடன் நூல்வடிவில் முதன் முதல் 1960 ம் ஆண்டில் வெளியிட்டது.

இம்முதல் முயற்சியின் விளைவாக வாய்மொழி இலக்கியம், வட இலங்கையர் போற்றும் நாட்டார் பாடல்கள், ஈழத்து நாடோடிப்பாடல்கள், ஆகிய நூல்கள் ஈராண்டுகளுக்கு பின்பு வெளியாகியுள்ளன. மக்கள் கலையாகிய நாட்டு கூத்திலும் கவனம் செலுத்தி, அலங்கார ரூபன் எனப் பெயரிய தென்மோடிக்கூத்து நூலையும் வெளியிட்டுள்ளோம். இதனை தொடர்ந்து பல கூத்து நூல்கள் வெளிவரும் என எதிர்பாக்கின்றோம்.

மக்கள் கலையில் உள்ள ஆர்வம் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டு வருகின்றது. கலை வளர்ச்சியிலும் எழுத்துத்துறையிலும் விளிப்பெற்பட்டுள்ள இக்காலத்தில், மக்கள் கலைஇயக்கத்தை நல் வழியில் அமைக்க மக்கள் கலைக்கழகம் ஒன்று அமைப்பது அவசியமாகின்றது. பிற நாடுகளில் இத்தகைய கழகங்களே மக்கள் கலைகளை வளர்ப்பதில் முன்னணியில் நிற்கின்றன. தனிப்பட்ட முறையில் இயங்காது கூட்டாக உழைக்கமுயன்றால் இத்துறையில் பயனளிக்ககூடிய பணிகள் செய்யலாம். நாட்டின் பலபாகங்களில் இத்துறையில் ஆர்வமுள்ளோர் மக்கள் கலைக்கழகம் ஒன்றினை அமைத்து, அதன் மூலம் இம்முயற்சிகளை நல்வளிப்படுத்தும் நாளை எதிர்பாக்கின்றோம்.

சு.வித்தியானந்தன்
பல்கலைக் கழகம்
பேராதனை
5-11-62

---------------------------------------------

INTRODUCTION

The panel for Tamil Drama of the Arts Council of Ceylon took up for consideration the question of publication of Folklore in various parts of the Island from the very outset of its inception in 1958. Thiugh interest in Ceylon Tamil folklore as such is of rather recent has been sporadic attempts to collect folk poems in Batticaloa and jaffna from the beginning of the twenties. There has been more or lessa a parallel move ment in south India too. The start was made by literary men who brought the world Nattu patal into active usage, in literary appreciation. With the beginning of such an interest in folk poetry. Folk song movement can be said to have been under way. At the early period the interest in folk poetry received an added impetuss from persong like swami vipulananda, who in his researches into the origin and development of tmi music (Tal Nul) drew attention both in his speeches and writings to the dynamic contribution of folk music to classical music and also to the pans of the devotional poetry of the pallava period such observations were essentially made from the literary point of view and did not evolve the collection and study of folklore as a separate branch of sociological discipline.


The intial interest taken in this field by pure litterateur led to the development of one particalar trend which did not help to make the study of folk poetry separate and understand folk poetry a separate and specific field of research. The Traditionalists tride to interpret and understand folk poetry in terms of classical literature and laboured to discover similarities bet been the two rather than the peculiar characteristic and features of folk poetry. For example, a few folk song enthusiaststried to modif the words of their collected material according to some metrical cxactness which


They imposed on the words of folk songs destroyed something of their spontaneity and simplicity. Perhaps, these lovers of country men ‘ s songs” did not really appreciate the simple art of the traditional bards who fit a tune to the words and were indifferent to classical prosody or metrical regularities and requirements. This resulted in these studies becoming a sort of belles- letters.

Nevertheless, there have been a few collections both in south India and in Ceylon which aimed at placing folk poetry in a distinct perspective Mr. M. ramalingam and Mr. N. vanamamalai have been prominent in this field. It was in this context that the panel for tamil drama took up the question of publication of folk lore , and naturally the first choice fell on folk poetry.

The present volume is an anthology of selected folk poems collected in the villages of Batticaloa. The book is divided into two broad sections: one dealing with love themes, and the other consisting of labour songs arising out of games among the folk. The poems are printed as they were recorderv and have been given the minimum notes and explanations. The editors have thereby endeavoured to capture the true spirit of the folk poetry.

A problem which the editor had to face was the question of obscienity in folk poetry. The problem is certainly neither peculiar nor new . most serious students of folk poetry have been best at some stage or other with this problem of objection-able words and setiments in folk poetry. But following the truism that has now come to be accepted the word over in dealing with this problem, the editor was convinced that in most cases where such a problem arose, the poems in question were not communal productions, but were the creations of individuals. That being the case they were not considered genuine folk poems. But the problem is not that simple. It has been discussed at length by cecil sharp in his book, English folk songs, some conclusions.

But there also latge number of folk songs, which trans gress the accepted conventions of the present age, and which would shock the sus ceptibities of those who rank reticence and reserve amongst the noblest of the virtues. These are not, strictly speaking, bad songs; they contain nothing that is really wrong or unwholesome. And they do not violate the communal sense of what is right and proper. They are sung freely and openly by peasant singers, in entire innocence of heart and without the shadow of a thought that they themselves are without the shadow of a thought that they themselves are committing any offence against propriety in singing them.

The question comes especially to the fore when the most universal and elemental of all subjects is treated, that of love and the relations of man to woman is very intimacy and mystery cause many minds to shrink from expressing themselves openly on the subject as they would shrink from desecrating a shrine. The ballad-maker has no such feeling. He has none of that delicacy which, as often as not, degenerates into pruriency. Consequently he treats the way of a man with a maid simply and directly, just as he treats every other subject. Those, therefore, who would study ballad literature, must realize that they will find in it, none of those feelings and unuttered thoughts, which are characteristic of a more self conscious but by no means more pure minded age.

While preparing this edition it was noted that a few poems that were collected in battical with certain poems prevalent not only in jaffna but also in south India . doubtless, there is a universality about folk expressions and rhyme. But it there little differences and variations from district to district and locale to locale that gives the folk literature their peculiar characteristics and vividly portrays the power of improvisation of the rural bards. This being the case, the editor felt that to start with, the best method would be to bring out anthologies pertaining to particular geographical areas. For example of Muslims authorship and social life and that is a distinguishing feature of it in contrast to that of jaffna.

The fist edition of this volume was pulished in 1960 and the copies were sold out faster than all expectations. A second edition has now been called for. Consequent to the publication of the fist edition a few anthologies of Ceylon tamil folk poems have been brought out bay a few induals and it can be said that the time is very ripe to start a folkore movement. The formation of a folklore society is in in much ned of and only a spirited attempt can save the folk lore from extinction. The folklore of jaffna, batticaloa and other places like mannar and chillaw abound with all soart of forms and could be rich fields for collectors and exponents. The folk drama has also attracted attention in recent years with a revival in the traditional theatres and a themodif style folk play - alankararupan natakam. Has been published as a companion valume in this series. In this field too the present series have created an interest and a few folk plays from the north westen province are currently being published by certain individual lovers of folk art.

There are many folk song collectors in the country and a co-ordinated effory of these enthusiasts can certainly lead to good results. At a time when the development of the arts and letters of the people of this country has becom a conscious aim and the pride of past heritage has come to mould contemporary creations, a folk iore movement is in fact long overdue.

But irrespective of that, the collections of folk poetry and drama must be carried on with great speed. For as frank kidson one of the pioneers of English folk music said in1891, the old traditional songs are fast dying out never to be recalled. They are now seldom or never sung, but rather remembered by old people.

S.VATHIANANTHAN

University of Ceylon,
Peradeniya. 5-11-1962

------------------------------------------------

காதற் பாடல்கள்

(அ) காதலன் கூற்றாய் உள்ளவை

(ஆ) காதலி கூற்றாய் உள்ளவை

(இ) தோழி கூற்றாய் உள்ளவை

(ஈ) தாயார் கூற்றாய் உள்ளவை

(அ) காதலன் கூற்றாய் உள்ளவை

1. பூவலைக் கிண்டி
புதுக்குடத்தைக் கிட்டவைச்சி
ஆரம் விழுந்தகிளி
அள்ளுதுகா நல்லதண்ணி.
2. தண்ணிக் குடமெடுத்து
தனிவழியே போறபெண்ணே
தண்ணி குடத்தினுள்ளே
தளம்புதடி என்மனசு.

3. சன்டைபோட்டு மார்பிறுக்கித்
தண்ணி சுமக்கும்மச்சி- உன்
சண்டை போட்ட கையாலே கொஞ்சம்
தண்ணிதந்தா லாகாதோ?

4. சண்டைபோட்டுப் பொட்டெழுதி
தண்ணிஎடுத்துப் போறமச்சி
சன்டைபோட்ட கையாலே- கொஞ்சம்
தண்ணியைத்தா கண்மணியே.

5. புல்லுச் சவன்டிருக்கு
போனதடம் தானிருக்கு
தண்டை பதிந்திருக்கு- என்ர
தங்கவண்டார் போனதெங்கோ?

6. அக்கரையில் கொக்கே
அணில்கோதா மாம்பழமே
இக்கரைக்கு வந்தியண்டா-ஒரு
இனித்தகனி நான்தருவேன்.

7. சுற்றிவர வேலி
சுழலவர முள்வேலி
எங்கு மொரு வேலி
ஏதால்புள்ள நான்வரட்டும்.

8. தெருவால போகவொண்ணா
தேன்போல் மணக்கிறது
கனியருந்த நான்வருவேன் -உன்ர
காக்காமார் காவலுகா.

9. கண்டுக் கிளியாருக்குக்
கலியாணம் என்று சொல்லி
குண்டுமணி தேடி- நான்
குந்தாத பத்தையில்லை.

10. என்னத்தைச் சொன்னாலம்
ஏற்குதில்லை என் மனசு
சடலம் மறியவொரு
சத்தியந்தா கண்மணியே.

11. நடையழகி நளினச்
சித்திர வாயழகி
இடையழகி கதிஜா-ஒரு
இன்பமுத்தந் தாகிளியே.

12. வாழைப் பழமேஎன்ர
வலதுகையிற் சர்க்கரையே.
ஏலக் கிராம்பேஉன்னை
என்னசொல்லி கூப்பிடட்டும்.

13. மாமி மகளேஎன்ர
மருதங்கிளி வங்கிசமே
ஏலங் கிராம்போ உன்னை
என்னசொல்லி கூப்பிடட்டும்.

14. வாய்பழமே என்ர
வலதுகையிற் சர்கரையே
உள்ளங்கைத் தேனே- நான்
உருகிறண்டி உன்னாலே.

15. ஒண்;டுக்கு மில்லகிளி
உன்னைநான் விரும்புறது
சங்குச் சட்டைக்கும்- உன்ர
சரிஞ்சநல்ல தேமலுக்கும்.

16. பொடுபொடென்ற மழைத்தூற்றல்
பூங்கார மானநிலா
சுடமிருட்டு மாலைவெள்ளி- நீ
கதவுதிற கண்மணியே.

17. வங்காளம் போறனென்று
மனக்கவலை வையாதே
சிங்காரக் கொண்டைக்கு-இரண்டு
சின்னச்சீப்பு வாங்கிவாறன்.

18. கொச்சிப் பழத்தைக்
குறுக்கால வெட்டினாற்போல்
பச்சவடச்சேலை- உன்ர
பால்முலைக்கு எற்றதுதான்.

19. சாயக்கொண்டை கட்டுறதும்
சளிக்கஎண்னை பூசுறதும்
ஏவிஏவி நடக்கிறதும் -எந்த
இளந்தாரிக்கு வாழவென்றோ.

20. ஓமணாப் பொண்டுகளே
உசந்தகொண்டைக் காறிகளே
மன்னாரான் வாறானென்று
வழிமறிச்சி நில்லாதீங்க.

21. கண்டி கொழும்புமில்லை
கண்காணா இடமுமில்லை
கீழக் கரையுமில்லை- உங்க
கிளி இருந்து போகிறது.

22. ஆசைக் கிளியேஎன்ர
ஆசிபத்து உம்மாவே
ஓசைக் குரலாலே- உங்க
உம்மாவைக் கூப்பிடுகா.

23. கடலே இரையாதே
காற்றே நீ வீசாதே
நிலவே எறியாதே- என்ர
நீலவண்டு போய்ச்சேருமட்டும்.

24. மானமென்னுங் கண்ணாடி
மங்கிறல்ல ஒரு போதும்
பூவிருக்கும் அல்லசெல்கு
பூச்சி எங்கிருந்தும் தங்கவரும்.

25. தாலிக் கொடியே- என்ர
தாய்மாமன் ஈண்டகண்டே
மாமிக் கொருமகளே- மச்சி
மறுதலை பண்ணுதகா.

26. குஞ்சி முகமும் - உன்ர
கூர்விழுந்த மூக்கழகும்
நெற்றி இளம்பிறையும்- என்ர
நித்திரையில் தோணுதுகா

27. வட்டமுகமும் உன்ர
வடிவிலுயர் மூக்கழகும்
கட்டு உடலும்என்னைக்
கனவிலும் வாட்டுதுகா.

28. இஞ்சிகல்லப் போனஎன்ர
இளமையிலே தாரவே
கண்கள் சிவந்து- நீ
கடுங் கோபம மானதென்ன.

29. இஞ்சி மணங்காபுள்ள
இலாமிச்ச வேர்மணங்கா
மஞ்சள் மணங்காபுள்ள- உன்
மார்மூலையின் சோடிரண்டும்.

30. திண்ணைக்குள் படுக்கவொண்ணு
தௌ;ளுக்கடி பொறுக்கவொண்ணு
கதவுதிற கண்மணியே
கலசமறிக் கதைச்சிருப்போம்..

31. மூணுநாள் மட்டிலேயும்
மூலையிலே வந்துநின்று
மண்ணுல் எறிஞ்சேன்- உன்ர
மனசறிய வேண்டுமென்று.

32. காமக் கடலிலே
கைத்தோணி உண்டுமென்றால்
சாமத்திற்கு சாமாம்
சாலமுறைப்பேன் காலடியில்.

33. பாலென்றால் குடித்திடுவேன்
பழமென்றால் தின்றிடுவேன்
நூலென்றால் நெய்திடுவேன்- உன்னை
நோய்யவிளை யாடுவேனா.

34. என்ர கிளிக்கு
என்னோட இரக்கம்மென்றால்
படுக்கும் தலமறிந்து- ஒரு
பாய்போட்டு வையாதோ.

35. என்ர கிளிக்கு
என்னோடிரக்க மெண்டால்
இளனி வெட்டி மூள்திறந்து
இடைவழிக்குக் கொண்டருமாம்.

36. மாமிமகள் மச்சிஎன்றால்
மனசறிஞ்சு பாய்தருவாள்
மாவுலாப் பொடிச்சி என்ர
மனமறியப் போறதில்லை.

37. மனசை மனசறியும்
வஞ்சகத்தை நெஞ்சறியும்
நெஞ்சிலுள்ள பூங்காரத்தை
யார்ரரியப் போறார்களோ.

38. வட்டாப் படிக்கம்
வளைந்திருந்து என்னசெய்ய-என்ர
செம்பகிளி வாயாலே
சிரிச்சிருந்தாப் போதாதோ.

39. தங்கத் தகடே- என்ர
தகதகத்த பொன் தகடே
வெள்ளித் தகடே- உன்னை
விலைமதிக்கக் கூடுதில்லை.

40. வஞ்சிக் கிளியே- உன்ர
வயிற்றிலையும் ஒன்றுமில்லை
ஈரலிலே பாதி - நான்
ஈந்துதாறன் உண்ணுறியோ.

41. வாழையிலே குழையிருக்க
வாழ்மையிலாள் சிறையிருக்கச்
சேனையிலே நானிருக்க- உங்களுக்குச்
சென்பெடுக்க சம்மதமே.

42. மூணுநாள் மட்டிலேயும்
மூலையிலே ஓடுவெச்சி
சோளன் வறுத்து- என்ர
தோகை பசியாறினம்கா.

43. கொட்டை வறுத்துக்
கொண்டு வந்தேன் தட்டிலே
கொட்டுண்டு போச்சுதென்று
கூக்குரலும் சத்தமுமாம்.

44. முந்திரியம் பழமும்
மூணுவகை முட்டாசியும்
கல்கண்டும் தாறன்- நீ
கதவுதிற கண்மணியே.

45. கோடி உடுத்துக்
குளத்தோறம் போறபெண்ணே- உன்ர
கோடிப்புடவையிலே
கொக்கு ரத்தம் பட்டதென்ன.

46. முத்தலா முத்துரள
முகத்தாலே வேர்வை சிந்த
தங்ரெட்ண மார்குலங்கத்
தனித்துலக்கை ஏனெறிங்சாய்.

47. இடுப்புச் சிறுத்தபொட்ட
இருதடையும் நொந்தபொட்ட
கொக்கிச்சான பொட்ட-உனக்கு
கோபம்மென்ன என்னோட..

48. கல்லோடு கல்லனையக்
கடலோடு திடலனைய
உன்னோடு நானணைய- எனக்
குற்றவரம் தாமதினி.

49. அன்னப் பசுங்கிளியே-நீ
ஆக்கிவைத்த சோறுகறி
சூத்திரத்து நூல்போல
சுத்துதடி நாவினிலே.

50. கோமெதகமே புள்ள- என்ர
குளிர்ந்த வயிடூரியமே
முலகதமே நீலவண்டே
முரவச்சிரமோ உன்கண்புருவம்.

51. தங்கச் சிலையே- மச்சி
தாமரை முகநிலவே
செங்கல் வடிவே- நாங்க
சேருவது எப்பகிளி.

52. கைவிடுவேன் என்றுஎண்ணிக்
கவலைப்படாதே கண்ணார்
அல்லா மேல்ஆனை- உன்னை
அடையாட்டி காட்டுப்பள்ளி.

53. வீடிஞ்சி பொலியுமட்டும்
விறாந்தையிலே காத்திருந்தேன்
புடையன் கடிச்சதுபோல்- என்ர
புடவையெல்லாம் ஆழததுக.

54. சீனத்துச் செப்பே- என்ர
சங்காரப் பூநிலவே
வனத்தைப்பார்த்து- மச்சி
வாடுவது என்னத்திற்கோ.

55. ஓதிப் படிச்சி
ஊர்புகழ வாழ்ந்தலும்
ஏழைக்கு செய்ததீங்கை- அல்லா
ஏள்ளவும் ஏற்கமாட்டான்.

56. வட்ட மதிமுகமும்
வடிவில் உயர்மூக்கும்
நெட்டை யழகும்- என்ர
நித்திலையில் தோணுதுகா.

57. காத்தான் குடியிருந்து- ஒரு
கன்னிநாகு வந்திருக்கு
காசைத்தா வாப்பா- நம்மட
கைமுதலாய் வாங்கிடுவோம்.

58. புலலைப் புடுங்கிவைச்சேன்
புறவளைத் தூத்துவெச்சேன்
அன்னப் பசுங்கிளியின்
அடியழகைப் பார்ப்பதற்கு.

59. வஞ்சி கொடியே
மனதுமெத்த உன்னோட
பொழுதுதங்கி விளையாட-உங்கட
புருசன் எங்க போனதுகா.

60. கண்டுவம்மிப் பூநிறத்தாள்
கவரிபுள்ளி மான்குயிலாள்
அரும்புகசு பூமுலையாள்
ஆசைனையில் நித்திரையோ.

61. அட்டாலைக் காலி
அடுத்துக்கடுத்த முக்காலி
பாக்குவெட்டிக்காலி- உன்னைப்
பார்க்கவர நேரமில்லை.

62. மான்போல் நடைநடந்து
மயில்போல் சிறகொதுக்கித்
தேன்போல் குடிகிளம்பி- என்ர
சின்னவண்டு போறதெங்கே.

63. அரிஞ்சரிஞ்சி நிலவெறிக்க
அவளிருந்து பாயிழைக்க
துண்டுடுத்துத் துடைதெரிய
துடரமனம் தூண்டுதல்லா.

64. பூசின செம்பே- என்ர
புழதிபடா வெண்கலமே
ஆசைக்கிளி விளக்கே- உன்னை
ஆருவெச்சி ஆளவரோ?

65. காப்பெங்க கண்டார்- உன்ர
காதிலிடும் தோடுமெங்கே
மலைபதைக்க மெங்கே- கண்டார்
மான்விரட்டிப் பார்வைஎங்கே?

66. ஆசான் குழலை
ஆழகாச் சமைத்ததுபோல்
வாசினைக்கு உன்குரலை
வளர்த்தாரடி என்மதனி.

67. ஒண்டாய் இருந்தோம்
ஒருகல்லையிலே சோறுதின்றோம்
ஆகாத காலம்வந்து-இப்ப
ஆளுக்கொரு திக்கிலையாம்.

68. கண்டுக் கிளியே -என்ர
கதைபழகா நங்கணமே
கும்ப குலமே- உன்ர
குரல்மதிக்கக் கூடுதில்லை.

69. என்ர கிளியும்
இன்னும்சில பெண்டுகளும்
பாலாபழுத்த தெண்டு
பழமருந்தப் போகினமாம்.

70. கல்லால ஊடுகட்டி
காசால ஓடுபோட்டு
அறைக்குள் ளிருந்தாலும்
அணில்போல நான்வருவேன்.

71. கல்லால வேலிகட்டி
கதவுநிலை போட்டாலும்
பொல்லாத நாகம்
போரறிஞ்சி முட்டையிடும்.

72. கடலை வளைத்துஒரு
கறுத்தவில்லுப் போட்டதுபோல்-உன்ர
மார வளைச்சி-ஒரு
மஞ்சள்வில்லுப் போட்டதென்ன?

73. மண்ணைக் குமிச்சிவெச்சி
மாங்கொட்டை நாட்டிவெச்சி
தேங்காய் உருவேற்றி- உன்னைத்
தேடிவர வெச்சிடுவேன்.

74. பூட்டுப் பெலமோ
புர~னிடம் தத்துவமோ
தாப்பாழ் பெலமோ- என்னைத்
தள்ளிவிட்டுக்கதவடைக்க.

75. போட்டு மயிலே- என்ர
போலிசையிட நங்கணமோ
காட்டுவழி நடக்க- உங்க
காக்காமார் காவலாமோ.

76. கோடாலி கொண்டு
கொள்ளிக்கு போறபெண்ணே
ஓடாவி வேலை
உனக்கும் தெரியுமாகா.

77. கட்டை விரலழகி- என்ர
கமுகம்பூ மார்அழகி
ஈச்சம் குரத்தழகி- நீ
இருந்துபொனால் என்னவரும்.

78. ஈச்சம் குரத்துப்போல்
இனித்துவந்த பெண்மயிலார்
எலும்புருக்கிச் சதைகரைக்க- நீ
என்னநோய் கொண்டாய்கா.

79. மாரெல்லாம் தேமல்
மடியெல்லாம் துள்ளுமஞ்சள்
ராவெல்லாம் தூக்கமில்லை- என்ர
ராசதுரை பெண்மயிலால்.

80. ஆறாயம் வெள்ளி
அசறாலே சாயுமட்டும்
காத்திருந்தேன் பெண்ணே- உன்ர
கதவுநிலை சாட்சிசொல்லும்.

81. பச்சை மரகதமே
பலகாரம் மென்றாலும்
கல்பு பொருத்தாமல்- நான்
கைநீட்டி வங்குவேனோ.

82. அன்புக் களஞ்சியமே
அழகொழுகும் சித்திரமே
கற்புக் கணிகலமே - உன்னைச்
சந்திக்க ஓடிவந்தேன்.

83. அன்புக் கழிவுமுண்டோ
ஆசைக்கோர் எல்லையுண்டோ
பருவம் முதிர்ந்தாலும்
பற்றுத்தான் தீர்ந்திடுமோ.

84. தேகம்அன்பை அறியாது
தெவிட்டுவதும் இல்லையது
உள்ள மறியுமதை
ஒதுக்கிவிட முடியாது.

85. அன்று முளைத்துநாளை
அழிந்துவிடும் பூண்டோதான்
என்றும் நிலைத்திருக்கும் -நல்ல
இன்பம்உண்மை அன்பாகும்.

86. ஆலையடி வரவை
அதற்குகடுத்த நீள்வரவை
கதிர்விளைந்து நெல்விளைவு
காவலுக்குப் போய்வாறேன்.

87. கொச்சிப் பழம்போலக்
கோழித்தலைப் பூப்போலே
பச்சைவடச் சேலை- மச்சிஉன்
பால்முலைக்கு ஏற்றதுதான்.

88. குறுக்கால் பிளந்த
கோவம் பழ மொன்றை
நறுக்கென்று கடித்துஉண்ண
நான்கனவு கண்டேனே.

89. மச்சி மனதுமெச்ச
மதிப்பான பால்சோமன்
கச்சிக்கு வாங்கிவறன்
கவலைஎன்ன வேறுனக்கு.

90. மாடப்புறாவே- என்ர
மலைநாட்டு நங்கணமே
மாமிக்கொரு மகளே- என்னை
மறந்துவிட எண்ணாதே.

91. ஆளரவங் கண்டு
ஆக்காண்டி கத்துதையோ
ஆராலுங்கண்டு கொண்டால்- என்
அன்புகிளி என்னசெய்யும்.

92. நடவாக் கிடாமாடும்
நானும்இந்தப் பாடுபட்டால்
காயாப் புழங்கலும்- என்
கண்மணியும் என்னபாடோ.

93. காவற் பரணிற்
கண்ணுறங்கும் வேளையிலே
கண்ணான மச்சிவந்தென்
காலுன்றக் கண்டேனே.

94. முல்லைச் சிரிப்பழகும்
முகத்தழகும் கண்ணழகும்
வல்லி இடையழகும்- என்
மனத்தைவிட்டுச் செல்வதெங்கே.

95. ஆசைக்கிளி வளர்த்து
அக்கரையில் கொண்டுவைத்துப்
பேசிப் பழகமுதல்- அதை
பிரிந்துவிட்டு வந்தேனே.

96. உனக்கும் கூவவில்லை- உன்ர
கள்ளனுக்கும் கூவவில்லை
குமருப் பெண்களுக்குக்
குடமெடுக்கக் கூவுறண்டி.

97. காசி தரட்டோமச்சி
கதைத்திருக்க நான்வரட்டோ
தூதுவரக் காட்டிடட்டோ- இப்போ
சொல்கிளியேஉன் சம்மதத்தை.

98. போட்டா வலம்பாலே
புறமேய்ந்து போவதுபோல்
நாட்டவருக் கெல்லாம்- மச்சி
நடைவரம்போ உன்வாசல்.

99. வண்ணான்ர கல்லோ
வடக்கத்திக் களைமாடோ
சாராயக் குத்தகையோ- மச்சி
தவறணையோ உன்வீடு.

100. வானத்து வெள்ளியோ
மலைநாட்டுச் சாம்பிறாணியோ
சீனத்துக் கண்ணாடியோ- என்
சீமாட்டி உன்னழகு.

101. மண்ணால்எறியவில்லை மச்சிஎன்னை
மாறாக எண்ணாதே
மருதாணி தானுமச்சி- உன்
மலர்மேனி தாங்காதே.

102. விடியா விடியளவும்
விடிஞ்சந்த நேரமட்டும்
காத்திருந்து போனேனென்று- அந்தக்
கதவுநிலை சாட்சிசொல்லும.;

103. வெள்ளைப் பொடிச்சி
வெள்ளிநகை பூண்டபுள்ள
கொள்ளிக்குப் போனாயென்டா- உன்னைக்
கொடுங்கையில் தூக்குடுவேன்.

104. அக்கரைப் பற்றிலையோ
அங்குகரை வாகிலையோ
சம்மாந் துறையிலையோ- என்ர
தங்கவண்டாhர் தங்கிறது.

105. காலிவிளை பாக்கிற்கும்
களுதாவலை வெற்றிலைக்கும்
ஏலங் கராம்பிற்கும்
ஏற்றதுதான் உன்னெழில்வாய்.

106. நாவற் பழத்திலேயும்
நாற்காயம் பூவிலேயும்
காகச்சிறகிலேயும்- பெண்ணார் நீ
கடுங்கறுப்பாய் ஆனதென்ன

107. கொண்டை அழகும்
கூர்விழுந்த மூக்கழகும்
நெற்றி அழகும் பெண்ணார்- என்
நெஞ்சைவிட்டு மாறிடுமோ.

108. ஆறு கடந்து
அயலூருக்கு போகவேண்டாம்
அடுத்தவீட்டில் நீயிருக்க
அனியாயம் செய்துவிட்டார்.

109. ஆழிக் கடலினிலே
அலைக்குஅலை மீனெடுத்து
தீத்தி வளர்த்தேன்மச்சி- என்ர
சீவனுக்குக் கூடாதென்று.

110. நாகம் படம்மெடுக்க
நல்லமுத்தாள் வாய்பிளக்க
அன்னம் சிறகெடுக்க- நான்
அஞ்சுவேனோ பூத்தொடுக்க.

111. கண்டுக்கிளி யாரைக்
கண்டுகதை பேசாமல்
உண்ணுகிற சோறும்
உறங்கில்லை இப்பொழுது.

112. பாலைப்பழமே என்ர
பகலெறிக்கும் செண்பகமே
கண்டுவம்பிப் பழமே- உன்னைக்
கண்டுகன காலமச்சே.

113. பாலைப்பழமே என்ர
பகலெறிக்கும் செண்பகமே
நீலக்கடலே உன்ர
நினைவென்றும் மாறாதே.

114. கட்டிக் கறந்த நாகு
கணுவடிக்கு வந்த நாகு
தட்டிச் செறிந்த நாகு
இப்போ தலைகிளப்பி பார்க்குதில்லை.

115. வழைப்பழ மெடுகா
வம்பரையில் தேனெடுகா
சாவால் வடிவெடுகா- உன்ர
தாயாருட்டப் போறதற்கு.

116. பட்டியிலே நிற்குமந்த
பார்வைக்கு ஏற்றநாகைக்
கட்டிஎனக்குத் தந்தால்
கையேடுத்துக் கும்பிடுவேன்.

117. குளத்தைக் குறுக்கக்கட்டிக்
கொத்தமல்லி நான்விதைக்க
குளத்துதண்ணிர் வற்றவற்ற- உங்கட
கொத்தமல்லி வாடுதுகா.

118. ஆத்தைக் குறுக்ககட்டி
அழகுசம்பா நான்விதைக்க
ஆத்துத்தண்ணி வற்றவற்ற- என்ர
அழகுசம்பா வாடுதகா.

119. ஒண்டுமில்லைகா இங்கு
உன்னுடைய மளிகைக்கு
கலிமாப்படித் துரைக்கக்
கருக்காக வந்தேன்கா.

120. பொடியன் பொடியனென்று
புறகுதலை பேசாதே
சித்தலியன் குட்டிஇது
சீக்கிரமாய் கைஎறியும்.

121. கத்தி எடுத்துக்
கதிர்அரியும் வேளையிலே
கள்ளஎண்ணம் வந்து-என்ர
கையறுத்துப் போட்டுதடி.

122. பற்றை இடறிப்
பசுமாட்டிற் கொண்;ழுந்து
இருட்டில் வழிநடந்தேன்- என்ர
இளவயதுப் புத்தியாலே.

123. அஞ்சிலே பிங்சிலே
அறியாத நளையிலே
தொட்டிலாட்டி நான்வளர்த்த- என்ர
தோகைமயில் எங்கமாமி.

124. ஓடிஓடிக் காசுழைப்பேன்
ஓலைமட்டை நான் இழைப்பேன்
சேனைவெட்டிச் சோறுகொடுப்பேன்
செல்லவண்டைத் தாமாமி.

125. அரிகடலே திரவியமே
ஆணிமுத்தே அருந்தவமே
குரலின் சிரக்கொழுந்தே- என்
குரல்மதிக்க கூடாதோ.

126. குடிக்கு தலையாரி
கொம்பான்யானை இரண்டு
கடலுக்குப் போனாலல்லோ
கலக்கமது வந்துவிடும்.

127. கடலில் மடவழகி
கஸ்தூரி பொட்டழகி
வாழைமடலழகி- உந்தன்
வாழ்வுகலி யாணமெப்போ.

128. கூண்டுக் கிளியாளே
கோலம்செய் மச்சாளே
ஆசைக் கிளியே
அடுத்தநிலவில் நம்கல்யாணம.;

129. காட்டுக் கிளியே- என்
கதைபழகும் நங்கணமே
கூண்டுக் கிளியே- நீ
சொல்மதனி சம்மதத்தை.

130. காட்டுக் கிளிஎன்றால்
காட்டிலே தங்கும்
கூண்டுக் கிளியே- நீ
கொப்பிலேன் தங்குவது.

131. கண்டுக் கிளியைக்
கண்டுவெகுநா ளனதினால்
உண்ணுகிற சோறு- என்
உடலில் ஒட்டுதில்லை.

132. சோலைக் கிளியாளே
சுந்தரம்சேர் மச்சாளே
ஆசைக்கிளியே- நான்
வந்துவிட்டேன் உன்னருகே.

133. பூவையரே மச்சி
போரிச்சரிசி நிறத்தாளே- உனது
சிரிச்சமுகம் காணாமல்
தியங்கித் தவித்தேனே.

134. சந்து சவ்வாதோ
சரியான பன்னீரோ
குங்குமப் பூவே- உன்
கூந்தலிலே வீசுவது.

135. கொஞ்சினால் இஞ்சிமணம்
கோவைசெய்தால் பால்மணம்
அள்ளி அணைத்தாலும்- உன்னை
ஆசைதீருதில்லை மயிலே.

136. பழிகள் வந்தாலும்
பத்தெட் டிறுத்தாலும்
காப்பேனே நானும்
கவலைவிடு கண்மணியே.

137. அன்ன நடைதானோ இது
அவள் நடைதானோ
என்ன நடையென்று
எடுத்தியம்பக் கூடுதில்லை.

138. சட்டைக்குமேல் சட்டைநான்
தைச்சு வரக்காட்டுவேன்
சாயங்கள் போனாமச்சி
சண்டைவரும் தப்பாமல்.

139. ஓடிவருவேன் கண்ணே
ஒழுங்கையிலே தங்கிநிற்பேன்
உன்னை நினைப்பேன்- பெண்ணே
உங்கவீட்டவர நாட்டமில்லை.

140. சீவன் கிடந்துஇந்தச்
சீமையிலே நான்கிடந்தால்
என்காயம் கிடக்குமென்றால்- உன்னைக்
கண்ணிகுத்தி நான்பிடிப்பேன்.

141. தோட்டுப்பாய் கொண்டுசெல்லும்
தோகை மயிலாலியிடம்
கேட்டுப் பாரண்ணநம்ம
கிறுகிறுப்பைத் தீர்த்துவைக்கும்.

142. ஒக்கட்டான் பூவே
உசக்கருக்கும் தாழம்பூவே
கண்டுவம்மிப் பூவே
உன்னைக் கண்டுவெகுநாளாச்சு.

143. பென்னைக் குவித்துப்
புதமரைக்கா லாலளந்து
மனமுருகித் தந்தாலும்- உன்ர
மாளிகைக்கு வாறதில்லை.

144. வேப்ப மரத்தில்
வேற்றிலையாற் கூடுகட்டித்
தங்க வருவேன்- உன்ர
தம்பிமாரும் காவலாமோ.

145. துவரம்பழமே- என்ர
தோட்டிகையிற் தேன்வதையே
இச்சைவைத்த கைப்பொருளே- நீ
இல்லையென்றால் என்ன செய்வேன்.

146. ஏறப் பழுத்த
இரு சிவப்பு மாம்பழத்தை
என்ன வந்தாலும்
எடுத்தருந்து என்கிளியே.

147. மருதவட்டான் குளத்தருகே
மாடுமேய்க்கும் தம்பிமாரே
மலைப் பசுநாகு
மறியலுக்கு வந்ததாமோ.

148. கட்டை விரலழகி
கமுகம்பூ மார்பழகி
வம்மிப்பூ மார்பழகி- உன்னை
மணம்முடிக்கக் காத்திருந்தேன்.

149. இலந்தம் பழமே- எந்தன்
இன்பமுள்ள தேன்வதையே
மருதங் கிளியே- மலை
நங்கணமே எங்கபோக.

150. வனத்தைப் பார்த்தேன்
வளர்த்தேன் பலாமரத்தை- என்ர
சீனிப் பலாவே- உன்னைத்
தின்னாமல் போகமாட்டேன்.

151. உன்னை மணந்து
உயர்ந்த கட்டில்மேல்வைத்து
கன்னந் திருப்பிக்
கதைக்க வெகுநாட்களில்லை.

152. ஓலையை வெட்டி
ஒழுங்கையிலே போட்டதுபோல்
வாடுகிறேன் கண்ணே- உன்ர
வண்ணமுகம் காணாமல்.

153. அக்கரையிற் கொக்கே
அள்ளவொண்ணுத் தாராவே
வெட்டையிற் கிளியே
விளையாட நல்லபிள்ளை.

(ஆ) காதலி கூற்றாய் உள்ளவை

1. ஓடையிலே போறதண்ணி
தும்பிவிழும் தூசிவிழும்
வீட்டுக்கு வாங்கமச்சான்
குளாந்தண்ணி நான்தாறேன்.

2. வாய்க்காலில் தண்ணி
வண்டுவிழும் தும்பிவிழும்
வீட்டுக்கு வாங்கமச்சான்
வெந்ததண்ணி நான்தாறேன்.

3. ஆதங்காக்கா ஆதங்காக்கா
அவரக்கண்டாற் சொல்லிவிடுங்க
பூவரசங் கன்னியொன்று
பூமலர்ந்து வாடுதென்று.

4. ஓடிஓடி வருவார்மச்சான்
ஒழுங்கையிலே வந்துநிற்பார்
என்னை நினைப்பார்மச்சான்- எங்க
வீட்டவர நாட்டமில்லை.

5. வெற்றிலையை கைபிடித்து
வெறும் புளகைவாயிலிட்டு
சுண்ணாம்பு தேடிநீங்க
சுற்றி வாங்கமச்சான்

6. காவல் அரணோமச்சான்
கள்ளனுக்கு முள்ளரணோ
வேலியரணோ மச்சான்
வேணுமென்ற கள்ளனுக்கு

7. கத்தாதே காகம்
கரையாதே புன்காகம்
எத்தாதே காகம்நான்
எறிஞ்சிடுவேன் கல்லாலே.

8. காகம் இருந்துநீ
கால்கடுக்க ஏனழுதாய்
மன்னன் சோதியைநீ
மனங்குளிரச் சொல்லாமல்.

9. என்னை என்னைப் பார்த்துநீங்க
ஏகாந்தம் பேசாதீங்க
சின்ன எசமான்கண்டால்- என்ர
சீட்டைக் கிளிச்சுவிடுவார்.

10. மச்சானே மாம்பழமே
மாமிபெத்த பாலகனே
ஏலங்கிரம்பே-உன்னை
என்ன சொல்லிக்கூப்பிடட்டும்.

11. பூத்து மலர்ந்து
பூவாசங் கொண்டிருக்கேன்
பூத்தமரம் காய்க்கும்மென்றால்
பூவலொன்றே கைதருகும்.

12. ஓதக்குர் ஆனிருக்க
ஒழு வெடுக்கச் செம்பிருக்க
வேதமும் இங்கிருக்க
வேறு ஹறாம் தின்னலாமோ.

13. சீப்பெடுத்துச் சிக்கொதுக்கிச்
சிமிள்ப்போல கொண்டைகட்டி
வார்ந்து முடிந்தகொண்டை
மகிழம்பூக் கொண்டையது
மார்பில் விழுகுது
மடியில் விழுகுது
புளுதி புரளுது
புருசன் முகம்காணாமல்.

14. ஆடு துடையிலே
அன்பான மேனியிலே
கட்டு வருத்தமொன்று-என்ர
கண்மணிக்குச் சொல்லிடுங்க.

15. கடலே இரையாதே
கற்கிணறே பொங்காதே
நிலயே எறியாதே- என்ர
நீலவண்டார் வருமளவும்.

16. தங்கமுலைக் கோட்டையில- மச்சான்
தானருந்தத் தந்தனென்றால்
மானம்மென்னும் கண்ணாடி
மங்கிடதோ நானறியேன.;

17. பூவிருக்கும் அல்லசல்கு
பூச்சி எங்கிருந்தும் தங்கவந்தால்
பூவிலேயும் பிஞ்சி- மச்சான்
புடிச்சிடாதோ நானறியேன்.

18. வாவென்று றழைப்பேன் மச்சான்
வாசலிலே பாய்தருவேன்
வாப்பா அறிஞ்சா ரேண்டால்
வாளெடுத்து விசிவிடுவார்.

19. நித்;திலை கண்ணிலேயும்
நினைவிலேயும் தோணுறது
“கலிமா” விரலும் மச்சான்
கல்பதித்த மோதிரமும்.

20. அம்மி யடியிலே
அருகுவளைத் தொங்கலிலே
திறப்புச் சொருகிருக்கும்
திறந்துவந்தாற் சம்மதந்தான்.

21. கோடியால வந்துநின்று
கோக்கட்டாம் பண்ணாதீங்க
ஊடு நிறைஞ்சசனம்- எங்க
உம்மாவும் திண்ணையிலே.

22. சாம மறிஞ்சி
தலைவாசலிலே வந்துநின்று
கோழிபோல் கூவுராசா- உன்ர
குரல்மதித்துக் கூப்பிடுவேன்.

23. பாலோடா நானுனக்கு
பழமோடா நானுனக்கு
நூலோடா மச்சான்- என்னை
நோய்ய விளையாடுறது.

24. வாவென் றழைப்பேன் பாலா
வட்டாவைக் கிட்டவைப்பேன்
தாகம் தணிப்பேன்- பாலா
தம்பியல்லோ ஒருமுறைக்கு.

25. வந்தாரெண்டா ஓரழகு
வாசலெல்லாம் தங்கநிறம்
போட்டுட்டுப் போனாரெண்டால்
பூப்பூத்து ஓய்ந்ததுபோல்.

26. குத்து விளக்கெரிய
குமாரன் குர் ஆன் ஒத
பாலன் விளையாட- ஒரு
பாக்கியம் தா ஆண்டவனே.

27. காற்றடிக்கத் தீப்பறக்க
கண்ணம் பூச்சோலையிலே
சாத்திவைச்சி சதிசெய்ய
சண்டாளன் போறானுகா.

28. அள்ளினாள் தங்கம்
அணைத்தெடுத்தால் அமிர்தகுணம்
கெஞ்சினால் இஞ்சிமணம்
கோவைசெய்தால் வேர்வைமணம்.

29. தங்கமுடி ராசாடா
தடமழிஞ்சி போகுமெண்டு
ஓட்டால மூடிவைச்சேன்- ராசா
உள்ளிரக்கம் வைப்பாரென்று..

30. குத்து விளக்காலே
குமிழ்நிறைய எண்ணைஊற்றி
பத்தி எரிஞ்சாலும்- என்ர
பாட்டொழியப் போறதில்லை.

31. பாட்டைப் படித்து
பழஞ்சாக்கில் கட்டிவைத்தேன்
எத்தனையோ பாட்டையெல்லாம்
எலியறுத்து போட்டுதடா.

32. நடுக்கடலில் புன்னைமரம்
நாலுதிக்கும் வேரோடி
பூத்து மலர்ந்தது போல்- உங்கள்
புத்திமங்கிப்போனதென்ன.

33. நெற்றிக்கு நேரே
நிலாக்கிளம்பி வாறதுபோல்
வேலிக்குமேலால- மச்சான்ர
வெள்ளைமுகம் காண்பதெப்போ.

34. தென்னைமரமே உங்க
சிரசில் எழுதினதோ
மார்க்கமழிக்க நாங்கள்
மட்டைதருவோமென்று.

35. கொக்குரெத்தம் மில்லைமச்சான்
குரவிரெத்தம் மில்லைஇது
சிறுக்கனிருந்த- ஒரு
சில்லிரத்தம் பட்டதுகா.

36. போட்டா வரம்பால
புறநடந்து போறதுபோல்
நாட்டாருக்கெல்லாம்- ஒரு
நடைவரம்போ என்சாPரம்.

37. பாலால் அரிசரிச்சிப்
பன்னீரால் உலைவாத்திருக்கு
நெய்யால் கறிசமைச்சி- என்ர
நேசக்கிளி ரெண்டுசொறருந்து.

38. கோரகல்லு மாடுவந்து
கூரைவைக்கல் மேயுதென்று
ஏசாதகா லாத்த- நம்மட
ஏருது வந்து போகுதுகா.

39. என்னதான் நித்திரையோ
இளராசா வன்னிமைக்கு
கண்ணை முழித்து இந்தக்
கற்கண்டைத் திண்டாலென்ன.

40. மச்சானே இன்பம்
மணக்கின்ற சீறாவே
உச்சால சாய- வாப்பா
உறுகாமம் போகின்றார்.

41. கலங்காத மச்சான்
காசுபணம் என்னசெய்யும்
குழலபோட்ட வாழைமரம்
கூடுமெண்டா சம்மதந்தான்.

42. காட்டுப்பள்ளி அவுலியாட
காரணங்கள் உண்டுமானால்
மாடுகொல்லி இசுமானுக்கு- ஒரு
மானபங்கம் உண்டாகணும்

43. சரிசாமம் ஆகுமட்டும்- உங்க
செருமுதலைக் கேட்டிருந்தேன்
வந்துபேச வழியில்லாமல்- உம்மா
வழிப்பாட்டில் படுத்திருந்தா.

44. சுட்டகட்டை போல நீ
சுடுகாட்டுப் பேய்போல
அட்டை முகறா நீ
அடுப்படிக்கு மாகுமாடா.

45. எச்சிமுள்ளும் சொத்தைகாரா
இருபுறமும் நாய்முகறா
மங்குறட்டிச் சூத்துக்காரா- நீ
மாப்பிளைக்கு மாகுமாடா.

46. பள்ளத்து நிலவே என்ர
பிஞ்செழும்பும் சூரியனே
கொவ்வம்பழமே ராசா
கொடிநிழலில் போய்வாகா.

47. போPச்சம்பழமே என்ர
பேரியஇடத்துப் பொட்டகமே
சீறட்டுக்கும் செப்பே- உன்ர
சொல்லையுமோ நம்பிஇருந்தேன்.

48. கிண்ணியிலே சந்தணமாம்
கிளிமூக்கு வெற்றிலையாம்
தண்ணியிலே போறமச்சான்
தங்கமுகம் வாடினதென்ன.

49. காத்தான் குடிப்புக்குக்
கரத்தை கொண்டு போறமச்சான்
சீத்தை இரண்டுமுழம்- அந்தச்
சீமையிலே பஞ்சமோகா.

50. இந்தநேரம் வந்துராசா
எனக்கப் பசிக்குதென்ற- உன்ர
பசியறிந்து சோறுதர
பண்ணிவச்ச பெண்மணியோ.

51. கோட்டையிலே மூத்த என்ர
கொழும்பு மகராசாவே
வெள்ளிப் பிரம்பே- ராசா
விடியுமோகா இன்றிரவு.

52. இரத்தக் கடலிலே
இரணவில்லுப் போட்டதுபோல்
மரணவில்லுச் சிங்களவா- உன்ர
மகரிழந்தேன் வார்த்தைசொல்லு.

53. சாமம் ஒருத்துச்
சரிசாமம் ஆனபின்பு
வாப்பா படுத்தபின்னர்
வந்தழைத்தால் நான்வருவேன்.

54. மானகம் வட்டைக்கு
மாடுதேடிப் போறமச்சான்
காரைமுள்ளுத் தைத்திடாமற்
கலந்தலப்பா உன்காவல்.

55. வந்துவழி பண்ணிடுங்கோ
வம்புக்கிடம் வையாதிங்கோ- இந்தப்
பூத்தமரம் காய்க்குமென்றால்
பூவலொன்றே கைதரும்.

56. வேலியிலே வந்துநின்று
வேற்றுக் குரலெழுப்பி
விதியிலே போறமாட்டை
விரசிடுகா நான்வருவேன்.

57. நன்றாகச் சொன்னீர்கள்
நான்பட்ட கயட்டமெல்லாம்
ஒன்றா இரண்டா நான்
உங்களுக்குச் சொல்லிவிட.

58. கஞ்சா உதிர்த்திக்
கறிசமைத்து உண்ணவைத்து
பஞ்சுத் தலையணைமேல்
படுக்கைவைத்து நான்வந்தேன்.

59. ஆண்மைக் கரசே
அருளுக் கிருப்பிடமே
தருமத்திருவுருவே- உன்னைச்
சந்திக்க ஓடிவந்தேன்.

60. மலை விளக்கெரிய
மணவாளன் சோறுதின்னப்
பாலன் விளையாட- ஒரு
பாக்கியம்தா ஆண்டவனே.

61. இரவிலே வீசும்
இளங்காற்றும் சந்திரனும்
அரவாத வாள்போல்- இப்போ
அறுக்குதே என்மனசை.

62. வெள்ளி விடிவெள்ளி
வெள்ளாப்பில் மறையுமட்டும்
சொன்ன கதைகளெல்லாம்
சொப்பனமாய் மறந்தாரோ.

63. வயிருந்தால் இந்த
வயதுவந்த புளியமரம்
சொல்லாதோ எந்தன்
துரைசொன்ன உறுதிமொழி.

64. ஊரும் அடங்கினபின்
ஒருசாம மாயினபின்
வாப்பா உறங்கினபின்
வந்தளைத்தால் நான்வருவேன்.

65. கடப்பலில் வந்துநின்று
களை கனைக்குமென்றால்
எங்கிருந்த போதும்நாகு
எழுந்துவர மாட்டாதோ.

66. கதைப்பார் கதையெல்லாம்
கல்லுருகி நெல்விளையச்
சிரிப்பார் கொடுப்பால்- உங்கள்
சொல்லையுமா நம்புறது.

67. சந்தனமரத்தை மச்சான்
சந்திக்க வேண்டுமென்றால்
பூவலடிக்கு மச்சான்- இன்று
போழுதுபட வந்துபோங்க.

68. வாண்டதெல்லாம் இந்த
வயிற்று கொடுமையினால்
இருமல் தலைவலியாம்- கிழவனிடம்
என்னசுகம் எந்தனுக்கு.

69. கல்லாள் எறிஞ்சாள் மச்சான்
காயம்வரும் என்றுசொல்லி
மண்ணால் எறிஞ்சி மச்சான்
மச்சிமுறைகொண் டாமுகிறார்.

70. ஒரு போக வேளாண்மைக்கு
உயர்வனைப் பார்ப்பதுபோல்
இருகண்ணும் சோர- எந்தன்
இராசாவைப் பார்த்திருக்கேன்.

71. கோளாவில் மாடுவந்து
கூரையை இழுக்குதென்று
ஏசாத காராத்தா- நம்மட
ஏருதுவந்து போகுதுகா.

72. பட்ச மிருக்கும்
பறக்கச் சிறகிருக்கும்
எண்ணமிருக்கும் ராசா- நம்மட
எழுத்துவண்ணம் எப்படியோ.

73. அறையறையாய் வேலிகட்டி
அதன் நடுவேகிளிவளர்த்தேன்
பூனைபதுங்கிவந்து
போலியெடுத்துப் போட்டுதுகா.

74. ஓடிவருவார் வந்து
ஒழுங்கையிலே தங்கிநிற்பார்
நாடிவருவார் உள்ளே
நாணம் கொண்டார் கிட்டவர.

75. வெள்ளி வெலுட்டும்
விரல்நிறைய மோதிரமும்
எங்கும் பொழுபொழுப்பு
எங்கமச்சான் வாறசெப்பம்.

76. காற்றுக்கு காற்று
கமழும் மகிழமணம்
மூச்சிட்டுப் பார்த்தேன்- அவர்
முண்டிலுள்ள பூமணந்தான்.

77. தம்பி கடையினிலே
தாடிபட்டி மோட்டினிலே
வாறேனென்று சொன்னியண்டா
வந்து நிற்பேன் வாசலிலே.

78. உன்னை மறப்பதுஎன்றால்
உயிரோட ஆகாது
மாண்டு மடிவதுதான்
மறப்பதற்கு மாறுவழி.

79. கோழியடைத்து வைத்தேன்
கோழியரிசி குத்திவைத்தேன்
தூழத்துலாத் தாழ்த்தி
தண்ணீர் நிறைத்துவைத்தேன்.

80. தேங்காய் துருவிவைத்தேன்
தேவைக்கு அரைத்துவைத்தேன்
பாங்காய்ச் சமைப்பதற்கு
பட்டகஸ்ரம் இவ்வளவோ.

81. ஆளுக்கொரு துணியாய்
அவர்வாங்கி வந்திருக்கார்
நாளுக்கு உடுத்துனக்கு
நானழகு பார்ப்பனம்மா.

82. மாதாளங் காயுமல்ல
மருக்காலம் காயுமல்ல
பாலன் குடிக்கும்- என்ர
பால்முலைடா சண்டாளா.

83. மண்டூருக் கந்த- என்ர
மனக்கவலை தீர்ப்பையெண்டால்
சாகுமளவு முன்னைச்
சாமிஎன்று கையெடுப்பேன்.

84. கச்சான் அடிக்கக்
கயல்மீன் குதிபாய
மச்சானுக் கென்றே
வளர்த்தேன் குரும்பமுலை.

85. வில்லுக் கரத்தையிலே
வெள்ளைமாடு ரண்டுகட்டித்
தட்டிவிடுகா மச்சான்- நாங்கள்
சம்மாந்துறை போய்வருவேம்.

86. கன்னிக் கிரான்குரவி
கடுமழைக்கு ஆற்றாமல்
மின்னிமின்னிப் பூச்சாலே
விளக்கெடுக்கும் கார்காலம்.

87. இந்த மழைக்கும்
இனிவாற கூதலுக்கும்
சொந்தப் புருசனென்றால்
சுணங்குவாரோ முன்மாரியில்.

88. கண்ணன மச்சானுக்கு
காச்சல்விட்டுப் போகுமெண்டால்
பொன்னாலே நூலிழுத்துப்
போய்வருவேன் சன்னிதிக்கு.

89. ஒண்ணரைச்சாண் கட்டிலிலே
இரண்டரைச்சாண் மெத்தையிலே
தள்ளிப்படுமச்சான் மற்றோர்
சள்ளுக்கிடம் வையாமல்.

90. எல்லாரிட கப்பலிலும்
எள்ளுவரும் கொள்ளுவரும்
எங்கமச்சான் கப்பலிலே
ஏலங்கராம்பு வரும்.

91. சினட்டி நெல்லரிசும்
சிவந்தஇறால் ஆணமதும்
பொத்துவில் ஊரும்
பொருந்தினதோ உந்தனுக்கு.

92. போறாரு வன்னியனார்
போத்துவிலைப் பார்ப்பமெண்டு- என்ன
மருந்துகளைப் போட்டு
மயக்குறாளோ தேவடியாள்.

93. இந்தநேரம் வன்னியானார்
என்னநிறம் கொண்டிருப்பர்
ஈச்சோலைக் கொத்துப்போல்
இருண்டநிறம் கொண்டிருப்பர்.

94. சோழன் விதைக்கக்குள்ள
சோல்லிற்று போனதுபோல்
சோழன் பயிராச்சேமச்சான்- நீ
சொன்னகதை பொய்யாச்சே.

95. அல்லைசுத்திப் பன்பிடுங்கி
ஆவரணப் பாயிழைத்துப்
போட்டுப்படுக்க ஒரு
போடிமகன் தஞ்சமடி.

96. கல்லாத்து நாவலிலே
கண்ணிகட்டிப் பூத்ததுபோல்
கன்னத்து மீகைரண்டும்
கண்ணுக்குள் நிற்குதுகா

97. வாழைப்பழம் தாறன்
எங்கவாப்பாட்டச் சொல்லிவிடுங்க
சீனிவெள்ளி நாகு
சீர்குலைந்து போகுதென்று.

98. மாலை சுழற்ற
மணிவிளக்கு நின்றெரியப்
பவுடர் மணக்க மச்சான்
படுத்தெழும்பிப் போனாரோ.

99. கண்டங்கா உம்மா
களியோடைப் பாலத்திலே
வாளால் அறுத்த மரவண்டிலில்
மச்சான் போறாருகா.

100. காலமில்லாக் காலம்
கண்டதில்லை ஒருநாளும்
இன்றைக்கு வந்ததென்ன
காரியமோ நானறியேன்.

101. பொழுது கிளம்பிப்
பூமிஇந்தச் சூடுசுட்டால்
தட்டாத் தரையில் அவர்
தங்கமேனி எப்படியோ.

102. நிலவும் எழும்பாட்டும்
நிக்கசனம் போகட்டும்
வாப்பா உறங்கட்டும்
வாறதெண்டால் சம்மதந்தான்.

103. கூப்பிட்ட சத்தமெல்லாம்
குயிற்சத்தம் என்றிருந்தேன்
மச்சான்ர சத்தமெண்டால்
வந்திருப்பேன் குரல்வழியே.

104. வருவார் வருவார்ரென்று
வழி பார்த்திருந்து
குறிபார்த்த நெல்லுக்கு
குடமும் பயிராச்சே.

105. வந்துவந்து போகிறது
வயிற்றெரிச்ச லாயிருக்கு- என்னைச்
சந்திக்க வேண்டுமென்றால்
சரிமதியம் வாராசா.

106. கடலுக்கு அங்கால
கறுத்த மணற்றிட்டியிலே
தனிக்கரும்புப் பற்றையொன்று
சாறுமுத்திச் சாகுதுகா.

107. மச்சானே மாம்பழமே
மாமிபெத்த ஒவியமே
எட்டாத பழத்திற்கு- நீ
கொட்டாவி விட்டதென்ன.

108. அக்கரையில் நின்று
ஆசைக்குழல் ஊதுகிறான்
தாங்குதில்லை உம்மா- நான்
தண்ணீருக்கு போய்வரட்டா.

109. பாசிபடர்ந்த தண்ணீர்
பலபேரும் அள்ளும் தண்ணீர்
தட்டித்தடாவி அள்ள
தாமதங்கள் சொல்லாதோ.

110. வலது புறத்தே
வப்புள் மரத்தடியில்
கடவுள்ஒன்று வைத்திருக்கேன்
கண்டுவந்தால் சம்மதந்தான்.

111. குஞ்சூடு கட்டி
குடில்மெழுகித் தீத்திருக்கும்
வெஞ்சா இருக்குஎன்ர
வீரக்கிளி வாறதெப்போ.

112. நில்லும்மா என்று
நெடியமடியை இழுத்துக்
கட்டிவிட்டா மாமி
காலிழக்க மாட்னென்று.

113. உச்சாரக் கொப்பிலே
ஊஞ்சல்ஒன்று போட்டிருக்கு
வெச்சாட்டப் பிள்ளை
விலைகொடுத்தா வாங்கிறது.

114. கதைபரவி இப்பொழுது
கருங்கொடி எல்லாம்பரந்து
நிரம்பி இருக்குதென்று- என்ர
நேசரறி யாதென்ன.

115. மாமி வளர்த்த ஒரு
மான்புள்ளிச் சாவலொன்று
தேத்தாவின் கீழேநின்று
சிறகடித்துக் கூவுதுகா.

116. வாழைப் பழத்தை
வாங்கிவந்தேன் தின்பமென்று
ஊரிலொரு தூறெழும்ப- மச்சான்
உட்டெறிஞ்சேன் குப்பையிலே.

117. நானறியேன் தோழி- எனக்கு
நடக்கப் பரிமாறஒண்ணா
சோக இளைப்பெனக்குச்
சும்மாஓரு மண்ணுனவு.

118. திங்கட்கிழமையிலே
திறமான நாளையிலே
திசைதெரியாக் கப்பலது
திரும்பினதாங்க கிளியே.

119. கடலுக்கு அங்கால
காய்க்கிறதும் பூக்கிறதும்
இந்தப்பாவி வயிற்றிலொரு
காயுமில்லை பூவுமில்லை.

120. ஆழிக் கடலிலே
அடிஇறந்த கப்பலைப்போல்
உக்கிறேனே என்பிறவி
ஊழிஉள்ள காலமட்டும்.

121. சோலை இளங்கமுகே
திறக்கவொண்ணு என்கதவு
இறப்பால பாய்தருவேன்
இளைப்பாறிப் போஇருந்தே.

122.. விளக்கேற்றி இருசாமம்
வெள்ளி நிலாவேளையிலே
குளத்தோரம் வந்திடுங்கோ
கூடி கதைத்திடலாம்.

123. கத்தாத காக்காய்
கதறாத என்வாசலிலே
எத்தாத காக்காய்
எசமான்வந்து போகுமட்டும்.

124. காசிவரக் காட்டவேண்டாம்
கனதூரம் நடக்கவேண்டாம்
தூதுவரக் காட்டவேண்டாம்- அந்தத்
துரையைவந்து போகச்சொல்லு.

125. வாப்பாருக்கார் பன் அறுக்க
உம்மாருக்கா பாய்இழைக்க
காக்காருக்கார் விற்றுவர- இந்தக்
கரவாகான் வேணுங்கா.

126. வெள்ளியினாற் கப்பல்
விலாசம் வலதுபுறம்
சுக்கான் திருப்பிக்கப்பல்
துறைக்குவர நாள்படுமோ.

127. தேங்காய் போலத்
தொண்டையிலே கட்டிடுவான்- என்ர
பால்போல மனசை
பதறவைச்சிப் போட்டானுகா.

(இ) தோழி கூற்றாய் உள்ளவை

1. வாசற் பலாவே- என்ர
வழிபாட்டுக்கும் முளையே
பூசாந்த நிலாவே- நீங்க
முகமுறங்கிப் போனதென்ன.

2. தம்மாங் கடையாரின்
சாதிப்பரவணி என்னவென்றால்
கூடை யெடுத்துக்
குரவரைப்போல் மீன்பிடிப்பார்.

3. அக்கரை பற்றே
அவருங் கரவாகூரோ
சாய்ந்த மருதூரில்
சாதிசனம் உண்டாமோ.

4. கண்டி கொழும்போ
கண்காணா ராச்சியமோ
கீழ்க் கரையோ- உங்கட
கிளியிருந்துபோகிறது.

5. குந்தி இருந்து
கோர்வைசெய்யும் வேளையிலே
குண்டுதான் வந்தாலும்
கூசுமடா என்சாPரம்.

6. தங்கத்தை உருக்கித்
தனிஇரும்பால் வேலைசெய்ய
பொட்டகத்துக் குள்ளிருக்கும்- என்ர
தாள் விளக்கே தாமதிகா.

7. காக்கொத் தரிசியாம்
கண்ணுழுந்த செத்தமீனும்
போக்கத்த மீரானுக்கு
போண்ணுமாகா வேணுமாம்.

8. ஊரான ஊர் இழந்து
ஊசந்த கறி சோறிழந்து
இறைச்செலும்பு மில்லாமல்- மீரான்
ஏன்கிடக்கான் தீவினிலே.

9. குடத்தடி வழை
குடலழுகிச் செத்ததுபோல்
ஈரல் அழுகிடுவாய்- நீ
என்னகதை சொன்னாயடா.

10. மாசம் பதினாறு
வளவு நிறைஞ்சநிலா
சிற்றொழுங்கைக் குள்ளால்
செருப்பழுது போறசெப்பம்.

11. பகுதி உடையாருக்கு
பகலையிலே வேலையென்றால்
லாந்தர் கொளுத்தி- அவர்
இராப்பயணம் வந்தாலென்ன.

12. ஏத்தால வெள்ளாமை
இளங்குடலை பூங்கதிரு
மட்டா லழியுதென்று- எங்கட
மன்னருக்கு சொல்லிடுங்கோ.

13. வயிற்றுப் பசியால
வம்மிக்காய் போல்திரண்டு
குன்மம் திரட்டி- நாங்கள்
கோண்டுழுதோம் வன்னிமையே.

14. கொப்புக்குழை தின்கிறல்ல- கொம்பன்
கோமரசை தின்பில்லை
வெள்ளரசைத் தேடி- கொம்பன்
வீதிசுற்றித் திரியுதாமோ.

15. அப்பவென்றால் மச்சான்
அடியக்கண்டால் ஆதரிப்பாய்
இப்பவென்றால் மச்சான்
இருபறமும் கச்சதென்ன.

16. வில்லுக்கு வந்துநின்று- கொம்பன்
விடியுமட்டும் புல்லருந்திக்
கல்லிலே முதுகுரஞ்சி- கொம்பன்
காடேறிப் போகுதுகா.

17. வில்லெல்லாம் தண்ணி
விளையாட நல்லவெட்டை
காடெல்லாம் கொள்ளி
கட்டவம் புல்ஊராளுக்கு.

18. கறுத்த உடம்பசையக்
கன்னத்தால் வேர்வைசிந்தப்
பொறுத்தவேளை செய்யாதகா
பொற்கொடியே காய்ச்சல் வரும்.

19. குஞ்சிப் பயிரிலே
கூச்சம் தெளிவிச்சமச்சான்
கதிரு குடலையிலே
கைபறிய விட்டதென்ன.

20. பால மரத்திலே
பதினாறு காய்காய்ச்சி
எல்லாம் விலைபெயித்து
ஏனிருக்கா போகிளியே.

21. சின்னச்சின்ன மாடுகட்டி
சிலைமாடு ரெண்டுகட்டி
வண்டிமுட்டப் பாரமேத்தி
வறான்டி உன்புருசன்.

22. கச்சான் அடித்தபின்பு
காட்டில்மரம் நின்றதுபோல்
உச்சியில் நாலுமயிர்
ஒரமெல்லாம் தான்வழுக்கை.

23. கண்ணுமொரு பொட்டை
காதுஞ் செவிடாகும்
குரத்தெடுத்த வாழைபோலே- அவர்
கூனி வளைந்திருப்பார்.

24. முப்பத்தி ரெண்டிலே
மூணுபல்லுத் தான்மீதி
காகக் கறுப்புநிறம்- ஓரு
காலுமல்லோ முடவர்க்கு.

25. பாலைப் பழம்போலே
பச்சைக் கிளிமொழியாள்
வாலைக் குமரியாட்கு- இந்த
வங்கணமோ கிட்டிறது.

26. நாணற் பூப்போல
நரைத்த கிழவனுக்கு
கும்மாளம் பூப்போல்- இந்தக்
குமர்தானோ வாழுறது.

27. காலக் கொடுமையிது
கலிபுரண்டு போச்சுதடி
நாலு துட்டுகாசு- இப்போ
ஞாயமெல்லாம் பேசுதடி.

28. தங்கத்தாற் சங்கிலியும்
தகதகென்ற பட்டுடையும்
பட்டணத்துச் செப்புமிட்டுப்
பகல்முழுதுஞ் சுற்றிவாறான்.

29. அத்தர் புனுகுகளாம்
அழகான பவுடர்மணம்
இஞ்சிதின்ற குரங்குபோல
இவருக்கேனோ இச்சொகுசு.

30. காலையில்லை மாலையில்லை
கடும்பகலும் சாமமில்லை
வயில்வெள்ளை சுருட்டுடனே- இந்த
வளவைச்சுற்றி திரிகின்றாண்டி.

31. பட்டுடுத்துச் சட்டையிட்டுப்
பவுசாக நடந்திட்டாலும்
அரைச்சல்லி காசுமில்லை
ஆறுநாட் பட்டினியாம்..

32. சங்கிலியும் தங்கமில்லை
சரியான பித்தளையாம்
இடுப்பிலேயும் வாயிலேயும்
இருக்கிறது இரவல்தானாம்.

33. ஏத்தாலை வேளாண்மை
இளங்குடலை பூஞ்சோலை
மாட்டா லழியுதென்று- எங்கள்
மன்னனுக்குச் சொல்லிடுங்கோ.

34. ஒய்யார நடையழகன்
ஒருவர்க்கும் சொல்லாமல்
நையாமல் போனார்
நைந்ததடி உன்மனசு.

35. கூறும் பருவமில்லை
குங்சுவிடை கொள்ளுதில்லை
பூமுளையாச் சேவலிது- கொஞ்சம்
பொறுதிசெய்கா மாமிகள்.

36. மாமி மயில்போல
மச்சினமார் கிளிபோல
பொண்ணு புறாப்போல- மச்சான்
பேசிவரச் சம்மதமோ.

37. வேலிக்கு மேலால
வேணுமென்றே பார்க்கிறாய் நீ
புடரி கடுக்கும்- நீ
போயிருகா திண்னையிலே.


38. காப்போடு சேத்துவைச்சி
கண்டு மச்சான் அறைஞ்சஅறை
கொப்போடு வாழி
குமிழ் பறந்துபோச்சுதுக

39. திடுதிடென் மழையடிக்கத்
திட்டியெல்லாம் வார்ந்தோட
மதுரையடி நாய்குலைச்சு- இங்கு
வந்தகள்வன் ஆரொடி.

40. பச்சைத்தாளை வேலிகட்டிப்
பலவிதமாய் முள்ளடுக்கிப்
புத்தரவாய்க் காக்கையிலே
புதையல்கொள்ள முடியுமோகா.


(ஈ) தாயார் கூற்றாய் உள்ளவை

1. கிள்ளக்கிள்ளிக் கொசுவத்திற்கும்
கீழ்மடியில் வெத்திலைக்கும்
அள்ளிவிட்ட தேமலுக்கும்
ஆசைகொண்டார் உன்மகனார்.

2. எண்ணங்கவலை- புள்ள
எல்லாருக்கும் உள்ளதுதான்
பையநட கண்டே- உன்ர
பால் அமுதம்சிந்திடாமல்.

3. மாடத்தைக் கட்டி
மயிலைப் புடிச்சிவைக்க
மாட மிருக்கு- அந்த
மயில்பறந்த மாயமென்ன.

4. காட்டுப்பள்ளி அவுலியாவே
கருனையுள்ள சீமானே
பூட்டுடைச்ச மீரானுக்கு- ஒரு
புடையன் கொத்த உதவிசெய்யும்.

5. பாவற் கொடிநாட்டி
படர மிலாறுகுத்தி- அது
பட்டழிஞ்சி போனாலும்-என்ர
பாட்டழிஞ்சி போகாது.

6. துக்கச் சிறுக்கியவர்
துடிப்பாரோ என்பொடிச்சி
தர்க்கமென்ன உங்களுக்கு
தயவாய் அவரோடு
பக்குவமாய் நீ இருந்து- என்ர
பைங்கிளியே சோறருந்து.

7. போறாய்மகளே உனக்குப்
புத்திசொல்ல தேவையில்லை
ஊரார் கரசல்மணி
உடைஞ்சால் வந்திவரும்.

8. கடப்பைக் கடந்துநீ
காலெடுத்துவைத்தாய்என்றால்
இடுப்பை முறித்து- அந்த
இலுப்பையின் கீழ்போட்டுடுவேன்

9. தோட்டம் துரவும்மில்லை
தொகையான காசுமில்லை
சீதனமாய் கொடுத்து- மகளே
சீராக மணம்முடிக்க.

10. அட்டியலும் மோதிரமும்
அழகான றவுக்கைகளும்
வாங்கித் தருவருனக்கு- அவருக்கு
வயதுமோர் அறுபதுதான்.

11. பச்சைதாழை வேலிகட்டிப்
பலவிதமாய் முள்ளடுக்கிப்
புற்றரவாய்க் காக்கையிலே
புதையல் கொள்ளமுடியுமோகா.

12. சீப்பெடுத்துச் சிக்கொதுக்கி
சிமிழ்ப்போல கொண்டைகட்டி
பூப்பொருத்திப் பொட்டுமிட்டு
பொன்திருத்தி மாலையிட்டேன்.

13. வார்ந்து முடிந்தகொண்டை
மகிழம்பூக் கமழும்கொண்டை
சீர்குலைந்து வேர்வைசிந்தச்
செய்தகடும் வேலையென்ன.

14. பொட்டுக் கரையை
பிறைநெற்றி நீர்துளிக்கக்
கட்டு துகில்களையக்
கழுத்துவட்டம் பரிபுரள
மார்பு பதைத்ததென்ன
மலர்கண்கள் சுரப்பதென்ன
சோர்வு கதிப்பதென்ன
சொல்லிடுகா என்மகளே.

15. வாறார் மலக்கு என்ரார்
வாசமுள்ள பூமலக்கு
போறார் மலக்குஎன்ர
புள்ளையிர றோ வாங்க.

16. கட்டிலிலே நீ படுக்க
கையாட்கள் வேலைசெய்ய
பட்டெடுத்து முகம்துடைக்க- இப்போ
பருவமில்லை மருமகனே.

17. மண்ணாசை நீ அறியாய்
மரத்தாசை நீ அறியாய்
பொன்னாசை நீ அறியாய்
போபொடியா மாட்டடிக்கு.

18. எழவணநெல்லும் எருமைகண்டுமாடுகளும்
தாறதுதான்உங்களுக்குச் சம்மதமோசொல்பொடியா.

19. தண்ணீருக்குப்போமகளே தரியாமல்வாமகளே
கன்னங்கரியவனைக் கடைக்கண்ணுலும்பாராதே.

20. பாவயாரேபசுங்கிளியே பாலமுதந்தந்தவளே
பாவற்கொடிபத்தையிலே வாளிபழுத்தவகைஅறியாயோ.

21 வட்டமிட்டு வட்டமிட்டு
வாசலுக்கு வாறவர்க்குத்
திட்டமொன்று சொல்ல
திறம்போதா தென்கிளிக்கு.

22. தட்டார அண்ணே
தருமம் கிடைக்குமெண்டா
கதிசாட பல்லறுத்து- ஓரு
காக்களஞ்சிப் பொன்னிறுடா.


பொதுப் பாடல்கள்

1. சோத்தால சோறு
குணைஅழிந்து போனாலும்
ஏத்தாகல சோறு
இனிஎனக்கு வேணுங்கா.

2. ஊருக்கு ஹகஜி
ஓதுவது தீன்சறகு
யாருக்கு தெரியும் - அந்த
வஞ்சகனின் உள்நடத்தை

3. ஏறா வூரானென்று
ஏளனமாய் பேசாதடா
மோறா போட்டகத்தி- உன்ர
மூர்க்கத்திற்கு மருந்துகட்டும்.

4. கண்டுவம்மிக்குக் கீழேநின்று
கண்கசக்கி ஏனழுதாய்
நெருக்கம் பொறுக்கஒண்ணா
நின்றழுதேன் கண்மணியே.

5. கடலால் பொழுதெழும்பி
கலைவரும் வேளையிலே
மடையால் உருப்பண்ணி
வரவைப்பேன் காலடிக்கு.

6. கோட்டானைக் கொம்பன்
கோடுதப்பி வந்ததென்று
சுண்டாளப் பாதகத்தி
சுதி நினைச்சிப் போட்டியடி.

7. வல்லிலே நெல்லவச்சி
வெட்டையிலே காயவச்சி
கூட்டிக் குலவையிட்டு
குத்துறங்க சுத்த நெல்லு

8. நிலத்துக்கு கிழால
நீர் மூழ்கிக் கப்பல்வந்து
நாட்டு குடிசனத்தை- யப்பான்
நாசமாக்கி போட்டாண்டி.

9. அஞ்சூறாத் தட்டானும்
அகத்திப் பிராமணனும்
சங்கூதி சமைத்த- என்ர
தாலி பறிபோச்சு அல்லா.

10. அடையாள மாட்டினிலே
அவர்தெரிஞ்சி கேட்காரு
குடுப்பனகா ராத்தா- நம்மட
குமர்அழிஞ்சி போனாலும்.

11. அரிசி சமைத்திருக்கும்
ஆட்டிறைச்சி ஆக்கிருக்கும்
வடிவாய் பொரிச்சிருக்கு
வழுதிலாங்காய் சுண்டிருக்கு.

12. கடிய புளிஇருக்கு
கடல் மீனும் தீச்சிருக்கு- என்ர
கண்டு மகள்- சோறு
கொண்டு போகா.

13. பொட்டகத்துக்குள் இருக்கும்
பொன்னகை தான்போனாலும்
பன்னீர் அடைச்சபோத்தல்
பவுத்திரண்டா ஆண்டவனே.

14. ஆத்தோரம் போறஎன்ர
ஆழகு புறச்சோடினங்கள்
சோத்துக்கு நெல்லுதாறேன்
சேர்த்தெடுக்க மாட்டீர்களோ.

15. பிசலெழும்பிக் காத்தடித்துக்
கிளிநடுங்கிக் கீழ்உழுந்து
பழமருந்தாமல்- எங்கள்
பழிகதைச்சா போகிறாய்.

16. பட்ட மரத்தில்
பழமிருந்து என்னசெய்ய
கலையிலுந்து காத்தடிச்சா- கிளி
எங்கிருந்தும் தங்கவரும்.

17. சாராயக்காரா இந்தத்
தவறனையிற் சிங்களவா
நீதந்த சாராயம் என்
நினைவுதடு மாறுதடா.

18. ஊராண்ட வள்ளத்தில்
ஊப்பேற்றிப் போறமச்சான்
கல்லாற்று விரிச்சலில்- உன்னைக்
கவிழ்த்து வள்ளம்கொட்டிடாதோ.

19. கல்லிலே கரடிகத்தக்
கரைச்சயில திராய்முளைக்க
வில்லுக்குப் போறமச்சான்
விரிபுடையன் தீண்டாதோ

20. ஆமைதின்னி தூமைதின்னி
அடைக்கோழி முட்டைதின்னி
சங்கு வலளைதின்னி- இப்போ
சருவாதடா என்னோட.

21. அல்லாட பள்ளியிலே
அனுதினமும் வாங்குசொல்ல
மோதின் களவெடுத்தல்
முறைதானோ ஊரவரே.

22. கல்லாத்து விரிச்சலில
கறுப்பனென்று ஒர்முதலை
மல்லாத்தி போட்டு- மச்சான்ர
மணிக்குடலை வாங்குதுக.

23. ஒத்தக் கரத்தவண்டில்
ஒருகால் முறிஞ்சவண்டில்
பட்டம் கழன்ற வண்டில்- எனக்குத்
தள்ளவொண்ணு சங்கரரோ

24. மாலைப்பசு நாம்பன்
மறியலுக்கு வந்ததென்று
கட்டிப் பினைந்து- அதைக்
களைபோட் டிருக்காமே.

25. வெள்ளைக்கிடா நாம்பன்
வீசுகொம்பன் தாமரையான்
பள்ளத்து வெள்ளாமையைப்
பால்பறக்கத் தின்னுதல்லோ.

26. தொங்க லழகா
துயிலழகா பாண்டியனே
தொங்கலிலே வாழி
துவண்டவகை அறியாயோ.

27. ஆக்காண்டி கத்துதுகா
ஆளவரங் கேட்குதுகா
காக்கை கரவுதுகா- நம்மட
காக்கா பெண்டில்வாசலிலே.

28. ஆண்டாரோ ஆண்டாரோ எங்கெங்கபோறாய்?
கொல்லனிடம் போறேன்
கொல்லன் என்னத்திற்கு?
கத்தியடிக்க. கத்தி என்னத்திற்கு?
கம்பு வெட்ட. கம்பென்னத்துக்கு?
மாடு அடைக்கமாடுஎன்னத்திற்கு?
சாணிபோட. சாணி என்னத்திற்கு?
வீடு மெழுக வீடென்னத்துக்கு?
பிள்ளைப்பெற பிள்ளைஎன்னத்திற்கு?
என்னைக்குடத்திற்குள் துள்ளிதுள்ளிப்பாய.

29. இஞ்சிக்கு ஏலம்கொண்டாட்டம்
அந்த எலும்பிச்சம்பழத்திற்கு புளிப்புக்கொண்டாட்டம்
கஞ்சிக்கு களனி கொண்டாட்டம்
அந்தக்கடை செட்டமூளிக்குக் கோபம்கொண்டாட்டம்.

30. சுட்டகருவாடாம் பறங்கிக்குச் சோறுமிறங்காதாம்
சூரப்பத்தைக்குள்ளே பறங்கிசுங்கானைமாட்டிக்
இழுக்க இயலாமல்பறங்கி
ஏலெலம் சொல்லுறான்டி.

31. கடலை கடலை என்ன கடலை உருண்டைக் கடலை
என்னவுருன்டை மாவுருண்டை:
என்னம்மா: வாழைப்பழம்: என்னவாழை:
கப்பல்வாழை: என்னகப்பல்: பாய்க்கப்பல்:
என்னபாய்: பன்பாய்:என்னபன்:
குளத்துபன்: என்னகுளம்: கிரான்குளம்.

32. கொக்குபறக்குது கொக்குபறக்குது
கோவிலின் வாசலிலே
எட்டுச்சலங்கையும் கட்டிப்பறக்குது
எங்கட வாசலிலே.

33. பட்டமரத்திலே தொட்டில்போட்டு
பாலகனைபோட்டு தாலாட்டி- பச்சைக்
கிளிவந்து கிச்சிக்கிச்சென்ன தங்கமே
ஆரா ரா ரோ.

34. கதைகதையாம் காரணமாம்
காரணச்செட்டிமகன் பூரனியாம்
முட்டிப் புக்கையாம்
சுட்டகருவாடாம்
வட்டி கலகலக்குமென்று
சுரையிலையில் தின்றவளே
பேசாமல் படுமடி.

35. ஊரான் ஊரான் தோட்டத்திலே
ஒருவன் போட்டொரு வெள்ளரிக்காயை
காசிக்கு ரெண்டாய் விற்கசொல்லி
காகிதம் போட்டானாம் வெள்ளைக்காரன்.

36. சுண்டெலிராசனுக்குக் கலியாணமாம்
சோழன்கொட்டைப் பல்லைக்காட்டிசிரித்தார்
இரண்டெலிகூடிக்கொண்டு முக்காலிவைக்குதாம்
நாலெலிகூடிக்கொண்டு முக்காலிவைக்குதாம்
ஜந்தெலிகூடிக்கொண்டு மஞ்சள்அரைக்குதாம்.
ஆறெலிகூடிக்கொண்டு அரிசிஅரிக்குதாம்
ஏழெலிகூடிக்கொண்டு எள்ளுவிளக்குதாம்
எட்டெலிகூடிக்கொண்டு வட்டாரம்போடுதாம்
அதில் ஒரு கிழட்டெலிஒடிவந்து பெண்னை தூக்கிற்றுப்போகுதாம்.

37. தூது தூது துப்பட்டி
தூதுவிளக்காய் நற்சட்டி
யானைத்தும்பி மூக்குத்தி
ஆறுபணத்துச் சாராயம்
நெல்லுகுத்தப் போனஇடத்தில்
நெஞ்சடைத்துச் செத்தாளாம்.

38. கடலுக்கு அங்கால கடன்வாங்கிவதைத்து
கருங்குரங்கு தின்னாமல் காவலும்வைக்க
யாரைவைப்போம் என்றுமனதிலேஎண்ணி
போடியார்வள்ளியம்மை காவலுமாமே.

39. மாமணக்குது பூமணக்குது
மயிலைக்கண்னாடி- அந்த
மாமி பெத்த வடுவாவுக்கு
நானோ பெண்டாட்டி.

40. பூனைமத்தளம் கொட்ட
புலிமன்னன் கவிபாட
ஏலிமன்னன் கொலுவில்வந்தான்.

41. சந்திரமதியோ பெண்ணே
சந்தையில் கறிதான் என்னே
சத்திய மாகத்தானே
சள்ளல்மீன் குஞ்சுதானே.

42. கண்டங்கத்திரிவோர்பிடுங்கிப்போனது போலேயும் போனேன்
களியம்மையைக் கண்டதுபோலேயும் கண்டேன்.

43. செத்தல்மீன் தலையேபோற்றி
செங்கணன்மீன் உடலேபோற்றி
எப்பத்தான் காணப்போறேன்
இறால்குஞ்சுத் தலையேபோற்றி.

44. பண்டி இறைச்சிதின்னி
பறங்கிவீட்ட சோறுதின்னி
பீங்கான் வழிச்சிநக்கி- உன்ர
பெருமையாடா காட்டவந்தாய்.

45. ஆக்காண்டி ஆக்காண்டி எங்கெங்கமுட்டை வைத்தாய்
கல்லைபிளந்து கடலருகேமுட்டைவைத்தேன்
வைத்ததுமோ மூண்டுமுட்டை பொரித்ததுமோ ரெண்டுகுஞ்சு
மூத்தகுஞ்சுக்கிரைதேடி மூனுமலைசுற்றிவந்தேன்.
இளையகுஞ்சுக்கு இரைதேடி ஏழமலைசுற்றிவந்தேன்.

46. முந்திரியமரத்தில் முத்துப்பதித்தது போல்
கந்திலிருக்கும் கருங்குரங்கு பாடினதோ.

47. காக்காச்சி மூக்காச்சி கறுத்தபென்டாட்டி
காகிதம்வருமென்றால் தெத்திக்காட்டு.

48. ஆக்காண்டி ஆக்காண்டி எங்கெங்கமுட்டை வைத்தாய்
கல்லைபிளந்து கடலருகேமுட்டைவைத்தேன்
வைத்ததுமோ மூண்டுமுட்டை பொரித்ததுமோ ரெண்டுகுஞ்சு
மூத்தகுஞ்சுக்கிரைதேடி மூனுமலைசுற்றிவந்தேன்.
இளையகுஞ்சுக்கு இரைதேடி ஏழமலைசுற்றிவந்தேன்.

49. ஆலையிலே சோலையிலே
ஆலம்பாடிச் சந்தையிலே
கிட்டிப்புள்ளும் பம்பரமும்
கிறுகிஅடிக்கப் பாலாறுபாலாறு.

50. நத்தங்காய் புல்லுதின்கிற
நரிபுலி செம்புவி வாபுலியே.

51. ஒரு கொத்து ஈச்ங்கொட்டை வறுத்துகொட்டி
ஒன்பதுபேராகக் கூடிகுத்தி
கல்லடிநச்சிக்குக் கல்யாணமாம்
கருகப்பிலையால் தாலிகட்டி.

52. என்னதாலி- பொன்தாலி-
என்னபொன்- காக்காப்பொன்
என்னகாக்கா-அண்டங்காக்கா
என்னஅண்டம-;பனையண்டம்
என்னபனை-ஓட்டுப்பனை
என்னஓடு-ஆமைஓடு
என்னஆமை-பாலாமை
என்னபால-;கள்ளிப்பால்
என்னகள்ளி-சதுரக்கள்ளி
என்னசதுரம-;நாய்ச்சதுரம்
என்னநாய-;வேட்டைநாய்
என்ன வேட்டை-பன்றிவேட்டை
என்னபன்றி-ஊர்பன்றி
என்னஊh-;கீரையூர்
என்னகீரை-மண்டூர்க்கீரை
என்னமண்டூh-;தில்லைமண்டூர்
தில்லைமண்டூருக்குப் போவோமடி.

தொழில்முறைப் பாடல்கள்

(அ) பொலிப்பாட்டு

(ஆ) ஏர்ப்பாட்டு

(அ) பொலிப் பாட்டு

1. பொலிபொலிதாயே பொலிதம்பிரானேபொலி
பூமி பொலி பூமாதேவித்தாயே
மண்ணின்களமே மாதாவே நிறைகளமே
பொன்னின்களமே பூமாதேவியம்மா பொலிபொலிபொலியே

2. நாளதுகேட்டு நார்க்கம்புவெட்டி
நல்லகடாக்கள் தெரிந்துபினைந்து
ஏரது பூட்டி இடம்படஉழுது
எல்லையில்லாத செந்நெல்விதைத்துச்
சோழன் எருதுகள் பன்னீராயிரம்
இரவும்பகலும் ஏற்றிஇழுக்கப்
பொலிவளராய் பொலிபொலிபொலியோ.

3. கணபதியே கரிமுகனே பொலிபொலி
கந்தருக்குமூத்தோனே பொலிபொலிபொலியோ

4. பானைவயிற்றோனே பொலிபொலி
பழமேந்துகையோனே பொலிபொலிபொலியோ.

5. பேழைவயிற்றோனே பொலிபொலி
பெருச்சாலிவாகனமே பொலிபொலிபொலியோ

6. வாட்டிவலமாகப் பொலிதன்மதாயே
வலம்புரிச்சங்காக பொலிபொலிபொலியோ

7. நாலுமுலைச்சக்கரமாம் பொலிதன்மதாயே
நமுவேசிதம்பரமாம் பொலிபொலிபொலியோ

8. வடபுறத்துவாட்டியிலே பொலிதன்மதாயே
வாசுதேவர் அட்சரமாம் பொலிபொலிபொலியோ

9. தென்புறத்துவாட்டியிலே பொலிதன்மதாயே
ஸ்ரீராமஅட்சரமாம் பொலிபொலிபொலியோ

10. எழுவான்புறத்துவாட்டியிலே பொலிதன்மதாயே
ஈஸ்வரனார் அட்சரமாம் பொலிபொலிபொலியோ

11. பாடுவான்புறவாட்டிலே பொலிதன்மதாயே
பரமசிவன் அட்சரமாம் பொலிபொலிபொலியோ

12. சங்கோசமுத்திரமோ பொலிதன்மதாயே
சமுத்திரத்தி ஆனிமுத்தே பொலிபொலிபொலியோ

13. முத்தோபவளமே- பொலிதன்மதாயே
முதற்தரத்து ஆனிமுத்தே பொலிபொலிபொலியோ

14. வெள்ளிவெளிச்சத்திலே- பொலிதன்மதாயே
விளையாடிவருமாம் பொலிபொலிபொலியோ

15. வாரிகளந் தேடிப் பொலிபொலிபொலியே நீ
வருவாய் சீதேவி பொலிபொலிபொலியோ

16. சங்கு முலங்குதல்லோ பொலிதன்மதாயே
சங்கரனார் கோயிலிலே பொலிபொலிபொலியோ

17. வேடர் வனந்தனிலே பொலிதன்மதாயே- கந்தர்
வேங்கைமரமானாராம் பொலிபொலிபொலியோ

18. குறவர்வனந்தனிலே பொலிதன்மதாயே- கந்தர்
கோலுன்றி நின்ராராம்; பொலிபொலிபொலியோ

19. பொன்னால அவுரிகட்டிப் பொலிதன்மதாயே
புத்தகத்தின்நாள் பொலிபொலிபொலியோ

20. பொன் அவுரிமேலிருந்து பொலிதன்மதாயே
பொழியழகுபாராய் பொலிபொலிபொலியோ
21. முன்னங்கால் வெள்ளையல்லோ பொலிதன்மதாயே
முகம்நிறைந்த சீதேவி பொலிபொலிபொலியோ

22. வாரிச்சொரிய பொலிதன்மதாயே- இந்த
வளநாடுபொன்சொரிய பொலிபொலிபொலியோ

23. கந்துநெறுநெறுஎன்னப் பொலிதன்மதாயே
களத்தில் நெல்லுத்தான்பொலியப் பொலிபொலிபொலியோ

24. கந்தாடக் களம்நிறைய- எங்கும்
கருங்களங்கள் தானிறையப் பொலிபொலிபொலியோ

25. போறேரப்பொலிவளரப் பொலிதன்மதயே
புவியிலுள்ளோர் ஈடேறப் பொலிபொலிபொலியோ

26. வாரிகளம்தேடிப்- பொலிதன்மதயே
வருவருவாராம் சீதேவியார் பொலிபொலிபொலியோ

27. வானம்குடையாமோ - பொலிதன்மதாயே
உந்தனுக்கு மல்லிகைப்பூ தாண்டமோ பொலிபொலிபொலியோ

28. ஆலடிப்பிள்ளையாரோ- பொலிதன்மதயே
அரசடியில் ஜங்கரனெ பொலிபொலிபொலியோ

29. கந்தர்தேருர பொலிதன்மதயோ
கனபதி தேர்முன்னடக்கப் பொலிபொலிபொலியோ

30. கந்தசுவாமியாரே பொலிதன்மதாயோ
கருணைதரவேனுமையா பொலிபொலிபொலியோ

31. மாவிலுப்பை தோணி வெட்டிக்கந்தர்
மாமாங்கம்போறாராம் பொலிபொலிபொலியோ

32. மாசிக்கடலோட்டம் கந்தருக்கு
மாமாங்கதேரோட்டம் பொலிபொலிபொலியோ

33. ஏழைக்கிரங்குமம்மே பொலிதன்மதாயோ
இரக்கமுள்ள மாதாவே பொலிபொலிபொலியோ

34. ஏளைதுயர்கன்டு மல்லோ- பொலிதன்மதாயோ
இவ்வேளைவருமாம்மா பொலிபொலிபொலியோ

35. சின்னஞ்சிறுகுருவி- பொலிதன்மதாயோ
உன்றன்சிறகிரண்டும் பொன்னாலே.

36. சங்குசரடீனப் பொலிதன்மதாயோ
தூமரையாள்முத்தீனப் பொலிபொலிபொலியோ

37. பொன்னின்களத்திலே சூட்டையும்hதள்ளி
மட்டையும் ஏற்றி மாதாவைப்புகள்பாடுவேனோ பொலிபொலிபொலியோ

38. கண்டு பனையோலை- பொலிதன்மதாயே
கணக்கெழுதநல்லோலை பொலிபொலிபொலியோ

39. சங்கீன்றமுத்தோ- பொலிதன்மதாயே
சமுத்திரத்தில்ஆணிமுத்தோ பொலிபொலிபொலியோ

40. ஓடிநடகண்டேதாயே பொலிஉன்
ஊறுதியுள்ள காலாலே பொலிபொலிபொலியோ

61. வண்டாடும் பூஞ்சோலைதாயேபொலி
மயிலாடும்காலகண்டார் பொலிபொலிபொலியோ


(ஆ) ஏர்ப் பாட்டு

1. சார்பாந்த கள்ளனடா-செல்வன்
தாய்வார்த்தைகேளான்டா

2. பாரக்கலப்பையடா செல்வனுக்கு
பாரமெத்த தோனுதடா.

3. வரம்போ தலைகாணி- செல்வனுக்கு
வாய்காலோ பஞ்சுமெத்தை

4. செல்லன் நடந்தநடைஇன்று
சொல்லவெண்ணா அன்னநடை

5. இந்தநடைதானோ- செல்வனுக்கு
இன்னுமுன்டோ அன்னநநை

6. இந்தநடை நடந்து- செல்லாநாம்
எப்போகரை சேர்வமடா.

7. வெள்ளிமதியானி செல்வனுக்கு
வென்கலத்தால் சுள்ளாணி.

8. வெள்ளியினாற் சுள்ளாணி -என்தம்பிசெல்வா
ஊந்தனுக்கு வென்கலத்தால் மதியாணி.

9. சுள்ளாணிக்குள்ளே- செல்லாஒரு
சூத்திரத்தை வைத்தான்டா.

• சேல்வன் என்றசொல் இங்கு உழவு எருதுகளையும்
ஊழவு எருமைக்காடாக்களையும் குறிக்கின்றது.

10. சாரை அறிவாண்டா- செல்லன்
சார்ப்பலகை தாப்பாண்டா.

11. மூலைவரம்போரம்- செல்லா நீ
முடுகிவளை நல்லகண்டே.

12. ஓடி நடகண்டே- செல்லா நீ
உறுதியுள்ள காலாலே.

13. தள்ளாடித்தள்ளாடி- செல்வன்
சாய்ந்தாடிப் போறான்டா

14. தள்ளாதே கண்டே-நீ
சலியாதே நல்ல கண்டே

15. முன்னங்கால் வெள்ளையல்லோ- செல்லனுக்கு
முகம்நிறைந்த சீதேவி

16. ஏட்டுக்காலோடே- செல்வாநமக்கு
இருகால் தலைமுண்றும்.

17. வானங்குடையாமோ- செல்லனுக்கு
மல்லிகைப்பூச் செண்டாமோ.

18. ஆழியிலே போய்முழகி- செல்லா நீ
ஆண்டி வந்ததீரனடா.

19. கறுப்பாய் இருண்டமழை- தம்பிசெல்லா அங்கே
காலுழுந்து போகுதடா.

கொம்பு விளையாட்டுப் பாடல்கள்

1. கோலாப்பணிச்சோலை கொய்துடுத்துக்
கோம்புவிளையாட்டுக்குப்போகையிலே
வேலப்பர் வந்துமடிபிடித்து
மேத்தவுஞ்சிக்கொண்டார்தோழி.

2. காப்பணிமங்கையார் மன்மதவேள்
கந்தன் குமரன் அருள்வேலன்
சீப்புடன் மல்லிகைப்பூ மாலைதந்து
சேர்வமென்றாடி தோழியரே.

வேறு

3. தோழியொரு வசனம்
சொல்கிறேன் கேளடிநாற்றோழி
வாளி தந்தென்னையும் மேயிங்கு
வரச்சொன்னாரடி மானாரே.

4. மஞ்சள்குரவிபோல மடிநிறைந்தோர் மல்லிகைப்பூ
சிந்தித் தெருவில்வாற சிறுக்கனல்லோடி தென்சேரியான்.

5. முலைகுறத்திக்கு மையல்கொண்டு
மணிப்பவளம் வளையல்விற்றுத்
தினைப்புணத்திலே கண்டவுடன் கந்தர்
வேங்கைமரமானார் தோழியரே

6. ஆற்றோறம் போறமயில்
ஆண்மையிலோ அதுபெண்மயிலோ
பார்த்துவாடா வடசேரியாhன்
பாhவற்பழம்போல மாலைதாறேன்.

7. ஆற்றோரம் சிறாம்பிகட்டி
ஆங்குநின்று படைபொருது
வேர்த்துவாறான் வடசேரியான்- நல்ல
வெள்ளி மடல்கொண்டுவீசுங்கடி


8. ஆற்றோரம் சிறாம்பிகட்டி
ஆங்குநின்று பனைபொருது
தேர்ற்றுவாறான் வடசேரியான்
துடைப்பங்கட்டா வடியுங்கடி.

9. வடசேரியான் கொம்பு எங்கேஎங்கே
மணமுள்ளதாளையின் மேலேமேலே
தென்சேரியான் கொம்பு எங்கேஎங்கே
செம்பரப்பற்றைக்கு உள்ளேஉள்ளே.

10. தென்சேரியான் கொம்பு எங்கேஎங்கே
சித்திரத்தேருக்கு மேலேமேலே
வடசேரியான் கொம்பு எங்கேஎங்கே
வண்ணாண்டசாடிக்கு உள்ளேஉள்ளே

11. தவிட்டங்காயான் தென்சேரியான்
தன்மானம்சற்றும் இல்லாண்டி
அவிட்டுத்தலைப்பாகை கையில்எடுத்து
அஞ்சிஅதோஓடிப்போறாண்டி

12. வாழைக்காயான் வடசேரியான்
மானஈனம் கெட்டவண்டி
பெண்பிள்ளைப்பேச்சுக்கு ஆற்றாமலே அவன்
பேரழிந்தே வெட்கிப்போறாண்டி

13. பால்போல் நிலவெறிக்கப்
படலைத்திறந்தவன் ஆர்தோழி
நான் தான்டி வடசேரியான்
உனக்கு நாழிப்பணம் கொண்டுலாவுகின்றேன்

14. மலையோரம் வேட்டைக்குப்போய்
மானடி பார்த்துவருகையிலே
கலையோ கலைமானோ
காடேறிமேய்ந்ததோர் பெண்மானோ

15. புல்லாந்திப் பற்றைக்குள்ளே
புலிகிடந்து உறுமுகுது
ஒக்கமதிப்பாய் புல்லாந்தி
ஒருகுத்தாய்க்குத்தாய் புல்லாந்தி.

16. கப்புகனார்நிதம் அர்ச்சனைசெய்ய
கரிமிசைவாறவர் ஆர்தோழி
செப்புமுலைக்குறத்தி பங்கன்- அந்தச்
செவ்வேல்முரகனடிமானே.

மட்டக்களப்பு மான்மியம்



மட்டக்களப்பு மான்மியம்



பதிப்பாசிரியர் :-
வித்துவான் F. X. C. நடராசா.
மட்டுநகர்.




கலா நிலையம்
175, செட்டியார் தெரு,
கொழும்பு,





உரிமைபதிவு. 1962. விலை ரூ. 1-50

----------------------------------------------------------

Tamil
First Edition 2000.
August 1962.



MATTAKALAPPU MANMIYAM
(The Glory of Batticaloa)




Edited by :-
VIDHWAN. F. X. C. NADARAJAH.



Published by :-
KALANILAYAM
175, Sea Street,
COLOMBO - 11




Copyright : Price Rs.1-50




Printed at :-
STANGARD PRINTERS LTD.
196, Sea Street,
COLOMBO - 11

-----------------------------------------------------------

மட்டக்களப்பு மாவட்டத்தின் சரித்திரத்தை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்ட


முதலியார் திரு. S. O கனகரத்தினம் M. S. C
அவர்களின் நற்பணிக்கு இந்நூலை
உரிமையாக்குகின்றேன்


--------------------------------------------------------


முன்னுரை

“மட்டக்களப்பு மான்மியம்” என்னும் இந்நூலை மட்டக்களப்பின் பண்டைய சரித்திரத்தைக் கூறுகின்றது. ஒல்லாந்தர் காலவரையுமுள்ள மட்டக்களப்பின் சரித்திரம் இந்நூலில் வந்தடைகின்றது. ஈழவள நாட்டின் வடபாலுள்ள யாழ்ப்பாண மாவட்டத்திற்கு “யாழ்ப்பாண வைபவமாலை” என்னும் சரித்திர நூல் அமைந்துகிடப்பது போல் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் “மட்டக்களப்பு மான்மியம்” என்னும் இந்நூல் சரித்திர நூலாக அமைந்துகிடக்கின்றது. இந்நூலில் இடையிடையே வரலாறுகளும் பொதிந்து கிடக்கின்றன. இதுவரை இந்நூல் ஏட்டு வடிவத்தில் அடங்கிக் கிடந்ததுண்டு. ஏடுகளும் கோயில்களில் அடங்கிக் கிடந்தன.

சென்ற சில ஆண்டுகளாக இந்நூலின் சில பாகங்களைத் “தினகரன்” பத்திரிகையிலும் “ஸ்ரீலங்கா” சஞ்சிகையிலும் வெளியிட்டு வந்தேன். கொக்கட்டிச்சோலை தான் தோன்றீசுபரன் கோயிலிலுள்ள ஏட்டின் அங்கொன்றும் இங்கொன்றுமான பிரதிகள், மேலேகாட்டிய பத்திரிகையில் எழுத உதவியாக இருந்தன. இவ்வித பிரதிகளை அம்பாலன்துறைபாலிப்போடி ஆசிரியர் பல வருடங்களுக்கு முன் தந்து உதவினார்.

செட்டிபாளையம் கணபதிப்பிள்ளைப் புலவர் அவர்கள் தம்மிடமுள்ள ஏடு ஒன்றினைத் தந்து உதவினார். இந்த ஏடு “மட்டக்களப்பு மான்மியம்” முழுமையும் உடைத்தாயிருந்தது.

இவ்விரு ஏடுகளின் பிரதிகளையும் வைத்து ஒப்புநோக்கிச் சிறப்புடையதெனக் கண்ட வடிவத்தில் இந்நூல் வெளி வருகின்றது. இது பதிப்பிற் பல தவறுகளிருக்கலாம்@ எடுத்துக் காட்டினால் ஏற்றுக் கொள்ளப்படும்.

இந்நூலினை அச்சேற்றி வெளியிட உபகாரமாக இருந்த நண்பர்கள் யாவருக்கும் நன்றி பாராட்டுகின்றேன்.

போற்றும் முறையில் ஏற்ற காலத்தில் அச்சேற்றித் தந்தனர் கொழும்பு கலாநிலைய முகாமையாளர் சி. பத்மநாப ஐயர். அவர்கள் பெருந்தன்மையை என்றும் போற்றி மகிழ்வேன்.

அழகுற அச்சேற்றித்தந்த ஸ்டான்காட் அழுத்தகத்தார் அவர்களுக்கும் நன்றியுடையேன்.

F. X. C. நடராசா,
53, மத்திய வீதி,
மட்டக்களப்பு,
15-8-62

--------------------------------------------------------

மட்டக்களப்பு மான்மியம்

நூல் வரலாறு

மட்டக்களப்பின் சரித்திரத்தைக் கூறும் இந்நூல் யாரால் எந்த ஆண்டில் எழுதப்பட்டதென்ற விபரங்களை நூன்முகத்தானும், மறுமுகத்தானும் அறிந்து கொள்ள முடியவில்லை. நூலின் போக்கினையும் வாக்கினையும் நோக்குமிடத்து இது பல்;லோரால் பற்;பல காலங்களில் எழுதிச் சோக்கப்பட்டதென்பது புலனாகின்றது.

மட்டக்களப்பிலே பல தேவாலயங்களிருக்கின்றன. இவற்றுட் பல காலத்தாற் பழைமையானவை. கொக்கட்டிச்சோலை, மாமாங்கம், மண்டூர், திருக்கோயில், சித்தாண்டி, வெருகல் முதலாம் இடங்களிற் காணப்படும் கோயில்கள் காலத்தாற் பெருமை வாய்ந்தவை. திவ்விய தலங்களாகவும் போற்றப்படுகின்றன. இவை கோவில்களிற் செப்பேடுகள் பல இருக்கின்றன. செப்புத் தகடுகளில் கோயில் வரலாறு, பத்ததி நடைமுறை முதலியவற்றை அக்காலத்துப் பெரியார்கள் எழுதி வைப்பது வழக்கம்.

கோயில் வரலாறுகளும், வழமைகளும், பத்ததி நடைமுறைகளும் பெருகப் பெருகப் புதுப்புது மாற்றங்களும் வந்தடையலாயின. பெருகிய வரலாறுகளைச் சிறிய தகடுகளில் எழுதிவைக்க முடியாமை கண்டு அவற்றை ஏடுகளில் எழுதிவைப்பராயினர். இவ்வகை ஏடுகள் கோயிலுக்குக் கோயிலுள. இவற்றை வெளியெடுப்பது சாலாக்காரியம்

ஏட்டு வடிவத்தில் மட்டக்களப்புச் சரித்திரம் இதுவரை அடங்கிக் கிடந்தது. ஏடுகளும் கோயில்களில் அடங்கிக் கிடந்தன. ஒருசில விடயங்கள் வெளிவந்தன. ஆங்கிலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் சரித்திரம் எழுதிய முதலியார் திரு ளு. ழு. கனகரத்தினம் ஆ. ளு. ஊ அவர்கள் இவ்வகை ஏடுகளிலிருந்து சிலதும் பலதுமான விடயங்களை எழுதிக்காட்டியுள்ளார். வேறு எவரேனும் இதுவரை நூல்வடிவில் மட்டக்களப்புச் சரித்திரம் எழுதினாரல்லர்.

மட்டக்களப்பு மான்மியம் என்ற இந்த ஏட்டு வடிவநூல் இதுவரை அச்சேறவில்லை. ஏட்டுவடிவமும் பலருக்குக் கிடைத்தபாடில்லை. ஆகவே இவ்வகை நூலொன்று இருப்பதாகப் பலருக்குத் தெரியாது.

மயில்வாகனப் புலவரால் எழுதப்பட்ட யாழ்ப்பாண வைபவமாலை எழுந்தகாலத்தே இந்நூலின் ஒரு சில பகுதி எழுதப்பட்டிருக்கலாம் என்று கருத நூலிற் சில பகுதிகள் சான்றுபகருக்கின்றன. இந்நூலில் ஆதி காலந்தொட்டு ஒல்லாந்தர் காலம்வரையுள்ள சரித்திரம் கூறப்பட்டிருக்கிறது. ஆங்கிலேயரின் ஆட்சித் தொடக்கமும் ஓதப்பட்டிருக்கிறது.

மகாவம்சத்திற் கூறுப்பட்ட பல சங்கதிகள் இந்நூலில் ஒத்திருக்கின்றன. பாலிமொழியிலடங்கிக் கிடந்த மகாவம்சக் கதைகள் பல இந்நூலகத்தே இருக்கின்றன. மகாவம்சத்துடன் ஒத்துப்போகாத விடயங்களுமிருக்கின்றன. ஆகவே இந்நூல் மகாவம்சத்தைத் தழுவி எழுதப்பட்டதென்பதற்கு ஆதாரமில்லை. மகாவம்சத்திலுள்ள சரித்திரம் அறிந்தபின்ரே எழுதப்பட்டிருக்குமாயின் முன்பின் முரணின்றி முடிந்திருக்கும்.

விசயனும், அவன்தோழர்களும் தென்மதுரையிலிருந்து பெண்கள் பெற்றனரென்று மகாவம்சம் கூறுகின்றது. இந்நூலோ வடமதுரையிலிருந்து பெற்றதாக நவில்கின்றது.

மகாவம்சத்திற் கூறப்படும் பேரரசர்கள் பற்றியும் இந்நூல் எழுத்துரைக்கின்றிலது. பொல்லநறுவையில் ஆண்ட வேறு அரசர்களை எடுத்துரைக்கும் இந்நூலில் பராக்கிரமபாகுவைப்பற்றி ஒருவசனமுமில்லை.

ஆடகசவுந்தரியின் சரித்திரம் இந்நூலில் வேறோர் முறையிற் கூறப்பட்டிருக்கிறது. குளக்கோட்டன் கதை எதுவுமில்லை.

யாழ்ப்பாணப் பகுதியை இந்நூல் நாகதீபம், மணற்றி, மணற்றிடர், மணிபுரம் என்ற பல பண்டைப் பெயர்களால் விரித்துரைக்கின்றது.

இடப்பெயர் வரலாறுகளும் இந்நூலிற் காணப்படுகின்றன. பண்டை நூல்களில் இவ்வகை விபரம் காணுமாறில்லை.

போர்த்துக்கீசர், ஒல்லாந்தர் இவர்களின் வரலாறுகள் வேண்டிய வேண்டிய இடத்திற் காட்டப்பட்டிருக்கின்றன. சில ஆண்டுகள் அரசர்களின் நாமங்கள் மாறுபட்டுமிருக்கின்றன.

பஸ்கோல் முதலியின் சரித்திரம் மட்டக்களப்புப் பகுதியில் பேசப்பட்டுவருகின்றது. இவனின் சரித்திரம் வேறு நூல்களில் இல்லை.

கண்டி அரசர்களைப்பற்றியும் விரி;த்துரைக்கின்றது. காலவரையறை புரியாது அரசர்களை மாறுபடவுங் கூறியுண்டு.

இவ்வகைக் காரணங்களை மனதிற் கொண்டு ஆராயுமிடத்து இந்நூல் வேறோர் நூல்வழி வந்ததன்று என்பது புலனாகும். ஆகவே இந்நூல் மற்ற சரித்திர முதநூல்கள் போல் விளங்குகின்றது எனலாம்.

இந்த நூலில் பண்டைச்சரித்திரமும் உண்டு@ ஒல்லாந்தர் வரையுள்ள இக்கால சரித்திரமுண்டு. ஆகவே இது பழைமையானது@ புதுமையானது.

மகாவம்சம் கூறுவதுபோல் சிங்கத்தின் கதையைத் தழுவாது சிங்ககுல இளவரசன் வங்கதேசத்துப் பெண்ணைத் தூக்கிச்சென்ற மணமுடித்துப் பிள்ளைகள் பெற்றதாக இந்நூல் விரித்துரைக்கின்றது. ஆகவே விசயனின் மூதாதைகள் சரித்திரம் n;தளிவாக இந்நூலில் எழுதப்பட்டுண்டு.

கலியுக ஆண்டுகளையே இந்நூல் கையாண்டு வந்திருக்கிறது. பழைய நூல்களிலேதான் இவ்வகை ஆண்டுமுறை கையாளப்படும்.

பண்டைக்காலத்தில் இலங்கை திரிசிங்கள நாடாகப் பிரிக்கப்பட்ட வரலாறு நவமான முறையிற் தரப்பட்டிருக்கிறது. எல்லாளனும் இவ்வகைப்பிரிவிற் பங்கு கொள்ளுகின்றான்.

ஆடகசவுந்தரியின் ஆட்சியோடு உன்னரசுகிரி என்ற தலை நகரம் தோன்றுகின்றது. இது எங்கே இருந்தது என்பது தெளிவாகவில்லை. சதாதீசன் கட்டியதாகக் கூறப்படும் தீர்க்கவாவி (மகாகந்தக்குளம்)யின் பக்கலில் இருந்ததாக அனுமானிப்பர் சிலர்@ அனுரதபுரி என்பார் மற்றுஞ்சிலர்@ கண்டிப்பக்கத்திலுள்ள தென்பார் வேறு சிலர்.

ஆடகசவுந்தரியை மகாவம்சக் கடைசி அரசனான மகாசேனன் மணம் முடித்தான் என்று இந்நூல் கூறுகின்றது. இவனே கந்தளாய், மின்னேரிக்குளங்களைக் கட்டியவன். யாழ்ப்பாண வைபவமாலையிலும், கோணேசர் கல்வெட்டிலும் கூறப்படும் குளக்கோட்டன் இவன் போலும். இது ஆராய்ச்சிக்குரியது.

பொல்லநறுவைக்கு இந்நூல் புதுமையான பெயரை வழங்கியிருக்கிறது. தோப்பாவை என்கின்றது. இப்பெயர் எவ்வாறாயிற்றோ என்று புலனாகவில்லை.

இந்திய சரித்திரங்கூட இங்கு காட்டப்பட்டிருக்கின்றது. மகமது சூசினி என்பானின் நிர்ப்பாக்கியத்தால் முற்குகக் குடிகள் மூன்று படகுகளில் மட்டக்களப்பில் வந்து குடியேறினதாக எழுதப்பட்டிருக்கிறது.

கோவிலார் என்ற சாதிமக்களே பின்னர் கோவியர் எனப்படலாயினர் என்பதற்கு இந்நூல் சான்று பகருகின்றது.

இந்நூலின் வசனநடை, சொற்பிரயோகம் இவற்றை நோக்கும்போது பழைமைக்கும், புதுமைக்கும் இடனாக அமைகின்றது. வசனநடை பலபடியாக வளர்ந்து வந்திருக்கின்றது. கதை சொல்லுவது போல நீண்ட வசனங்களும், விளக்கிக் காட்டுவது போல் சிறு சிறு வசனங்களும் காணப்படுகின்றன. யாழ்ப்பாண வைபவமாலையின் வசனநடைவேறு@ இதன் வசன நடைவேறு. வகுத்தும் தொகுத்தும் காட்டுவது போன்று நூல் நடந்து செல்கின்றது. சொற்பிரயோகங்களும் விசித்திரமானவை. இக்காலத்து வழங்கும் சங்கதச் சொற்களுமுள.

இவையெல்லாவற்றையும் நோக்குமிடத்து இந்நூல் யாரோ ஒருவரால் மாத்திரம் செய்யப்பட்ட தென்று துணிவதற்கில்லை. பல்லோராற் பற்பல காலங்களிற் செய்யப்பட்ட தென்பதே புலனாகின்றது.

இதனை எழுதியவர்கள் யாவரும் உண்மை வரலாறு அறிந்தவர்களாகவே தோற்றப்படுகின்றனர். பண்டைய வரலாறுகளில் அபிப்பிராயபேதம் இருப்பதால் அவைபற்றி உறுதியாக எதுவுஞ் சொல்லமுடியாது.

மாகோன் படையெடுத்து வந்து இலங்கையை வென்றமை யாவராலும் ஒப்புக் கொள்ளப்படுகின்றது. இவனின் சரித்திரம் ஆதியோடந்தமாக விரித்துரைக்கப்பட்டிருக்கின்றது.

போர்த்துக்கீசருக்கு எதிராக, அவர்கள் கோட்டை கட்டும் மட்டக்களப்பில் மூவர் சாதியினரான சோன்கரைக் கண்டி அரசனான செனரதன் குடியேற்றினன். நூலின்படி விமலதர்மன் இதனைச் செய்தான் என்றிருக்கிறது. சங்கதி சரி@ அரசனின் நாமம் தவறானது.

1640-ல் போர்த்துக்காலுக்;கும் ஒல்லாந்துக்குமிடையில் உண்டாய சமாதானம் இந்நூலிற் பேசப்படுகின்றது. நூலின் பக்கம் 63-ல் இது விரித்துரைக்கப்பட்டிருக்கிறது.

ஒல்லாந்தர் மட்டக்களப்பை ஆளும்போது அங்கு போடிகளாக நியமிக்கப்பட்ட இருவர் பெயர் கூறப்பட்டிருக்கிறது. இவர்களுக்குக் கொடுத்த ஆக்கொத்தின் விபரங்கூட வரையப்பட்டிருக்கிறது. அனுபந்தத்திலுள்ள ஆக்கொத்துடன் ஒப்புநோக்குக. போடிகள் கல்வெட்டும் நோக்குக.

பெரிய கல்வெட்டின் ஈற்றடிகள் குகன் குலத் தோர் தங்கள் குலவரிசையை எடுத்துரைப்பது போல் எழுதப்பட்டிருக்கிறது.

“மதி நுதல் ஒல்லாந்த மன்னனே கேளும்
இதுவே குகன் குகன் குலமென அறிவாய்”
என்கின்றது.

ஆகவே இந்நூலும் யாழ்ப்பாண வைபவமாலை நவில்வது போல் ஒல்லாந்தரின் தூண்டுதலால் எழுதப்பட்டிருக்கலாமோ என்று நினைக்கவும் இக்குறிப்பு இடந்தருக்கின்றது.

பெரிய கல்வெட்டு, தாதன் கல்வெட்டு, போடி கல்வெட்டு இவையெல்லாம் அகவற்பாவாலானவை. இவையும் வரலாறு கூறுவன. வசனப்பகுதியிலுள்ள சில சம்பவங்கள் செய்யுள்; நடையிற் தரப்பட்டிருக்கின்றன. ஆகவே நூல்வசனமும், செய்யுளுமாகச் செய்யப்பட்டிருக்கிறது எனலாம்

இவ்வண்ணம் பல்லாற்றானுஞ் சிறந்து விளங்கும் இந்நூலை வெளியிட்டுவைக்கும் வாய்ப்புக் கிடைத்தமையிட்டுப் பெரிதும் மனமகிழ்ச்சியடைகின்றேன். மட்டக்களப்பு மக்கள் இதனை ஏற்று மேலும் ஆவன ஆராய்ச்சிகள் செய்து தி;ருத்திக்கொள்ள உறுதுணையாக இருப்பார்கள் என்றும் நினைக்கின்றேன்.

இந்நூலை, மட்டக்களப்பு மாவட்டத்தின் சரித்திரத்தை ஆங்கிலத்தில் எழுதிக்காட்டிய பெருமகனார் திரு. சின்னத்தம்பி உடையார் கனகரத்தினம் ஆ. ளு. ஊ அவர்களுக்கு உரிமை செய்கின்றேன்.

கு. ஓ. ஊ. நடராசா.

மட்டக்களப்பு மான்மியம்

“இது மட்டும் மட்டடா மட்டக்களப்படா!”

பண்டைக்காலத்துப் பல்லாற்றானும் நாகரிகத்தில் மிக்கு விளங்கியது ஆசியாக்கண்டமேயாகும். அக்கண்டத்தின் தென்திசையிற் சீர்திகழ நிற்பது பரதகண்டம். அப்பரதகண்டத்தின் தென்கீழ்ப்பாகத்தே உலகெங்கணும் புகழ்மணக்க இருக்கும் இலங்கைத் தீவானது அதன்வளப்பம் நோக்கி ஆதிநாளில் நாகதீபம்; எனவும், இலங்காபுரி எனவும், இலங்கா துவீபம் எனவும் பல நாமகரணங்களாலும் வழங்கப்பட்டு வந்தது. அத்துணைப் பெருமைசான்ற இத்தீவை இராக்கதவம்சத்தினனான இராவணன் கொடுங்கோல் செலுத்தினானெனவும், அவனை, அயோத்தியாபுரியை அரசுபுரிந்த தசரதச் சக்கரவர்த்தியின் குமாரராகிய ஸ்ரீஇராமன், தனது தம்பியாகிய இலட்சுமணனுடன் வானரவீரரைத் திரட்டிவந்து இராவணனைச் சங்கனாக்கி இந்தியா திரும்பினாரெனவும் கவிச்சக்கரவர்த்தியாகிய கம்பர் இயற்றிய இராமாயணமென்னும் இதிகாச காவியத்தினால் அறிகின்றோம்.

வீபீஷணன் இலங்கையை எப்படி அரசுபுரிந்தானென்றும், இவன் வம்சத்தினரின்பின் இந்த இயக்கர் நாகர் தாமாகச் சுயஅரசு புரிந்தாரென்பதற்கும் தக்க ஆதாரம் யாதுமில்லை. அதன்பிறகு கி. மு. 543-ம் ஆண்டில் இந்தியாவில் லாலா நாட்டிலிருந்து இலங்கையை அடைந்த விசயன் முதல் ஆங்கிலேயரின் காலவரையுமுள்ள அரசியல் முறையைப் பற்றித் தற்காலம் கலைபயிலும் மாணாக்கர் இலங்கைச் சரித்திரவாயிலாக நன்கறிவர். யாழ்ப்பாண நாட்டின் சரித்திரத்தை “யாழ்ப்பாண வைபவமாலை” என்னும் நூலாலும் விளக்கக்கிடக்கின்றது.

இலங்கை ஒரே அரசியலில் அமைந்திருந்தது என்று சொல்வதற்கிடமில்லை. ஏனெனில்:-

1. இலங்கையை வழிநடத்திய கட்டளைச் சட்டங்கள். நாடேற்பனைகளைப் பகுத்துக்கூறுவதாலும், கண்டி நாட்டார் கண்டிக்கட்டடளைச் சட்டத்தையும், யாழ்ப்பாணத்தார் தேசவழமை என்னும் கட்டளைச் சட்டத்தையும். மட்டக்களப்பு முற்குகர் ஏற்பாடு என்னும் சட்டத்தையும் கையாண்டு வந்த தென்றும் மறுக்கொணா உண்மை.
2. மட்டக்களப்பை அரசுபுரிந்த அரசர்களின் ஆளுகைக்கு மாறாகக் கண்டியரசர்கள் இடையிடையே சண்டைகள் செய்து சமாதான உடன்படிக்கை செய்து போனார்கள் என்பதாலும்
3. இன்றும் எக்கிராமங்களும், எக்கோயில் நிபந்தனைகளும் முந்திய அரசர்களின் ஏற்பாட்டில் அமைந்து கிடப்பதாலும் என்க.

இவைகளில் கண்டி, யாழ்ப்பாணம் என்பன ஓரோர் காலத்து ஓரோர் சாதியினரால் ஆளப்பட்டிருந்தது போல மட்டக்களப்பையும் அக்காலத்தே தனித்த சாகியத்தாரொருவர் ஆண்டிருத்தல் வேண்டுமென ஊகித்தற் கிடனுண்டு. இந்நகரின் சரித்திரத்தை விளக்குதற்கு தெட்சண கயிலாய புராணம், குளக்கோட்டன் கல்வெட்டு, திருக்கோயில் சித்திர வேலாயுதசுவாமி கோயில்;, கொக்கட்டிச்சோலைத்தான் தோன்றீஸ்வரர் கோயில் செப்பேடு- கல்வெட்டுக்களால் அக்கால அரசர்களின் ஏற்பாடுகள் அனைத்தும் இன்றும் நடந்துவருவதாகப் பல ஆதாரங்கள் ததும்பிக்கிடக்கவும், கயவாகு மகாராசா, ஜெயதுங்க பரராசிங்கனென்னும் பெயர்பூண்ட வாலசிங்க மகாராசா, மும்முலைத்தாடகை, கலிங்கவில்லவ தனஞ்செறி படையாண்ட வரசர்களின் படையெழுச்சி, அரசாட்சியை மறுக்கொணாநியாயங்களிலிருந்து “மட்டக்களப்பு மான்;மியம்” எனப் பெயர் நறீஇ எழுதுவோமாயினும் இப்பகுதியில் விழுமிய சிறப்புக்களையும், அதன் வரலாற்றினையும் தொகுத்தும் விரித்தும் நாமவியல், சரித்திரவியல், சாதியியல், ஆலயவியல், ஒழிபியல் என ஐந்தியலான் வகுத்துரைப்பாம்.

1.நாமவியல்

நாம்வசிக்கும் மிவ்விலங்காதுவீபத்தின் கீழ்க்கரையில் பல சேத்திரங்களிருந்தன. அவையனைத்திலும் தலைசிறந்து விளங்கியது தட்சண கைலாயமாகும். அஃது இப்போது திரிகோணமலையென வழங்கப்படுகின்றது. அஃது தேவாரம்பெற்ற தலங்களிலொன்று. எனவே தொன்மையில் அஃது தமிழகம் எங்கணும் புகழ்மணங்கமழ நின்றது. சேத்திர யாத்திரிகர் பலர் பல திசைகளினின்றும் வந்து அதனைத் தரிசித்து மீள்வதுண்டு. இதனைத் தட்சண கைலாசபுராணத்திற் கண்டு தெளிக. புராணம் என்பது பழமையென்னும் பொருள். இதனால் அத்தலமே புராதனம் பெற்ற தென்பது போதரும்.

பாரத காவியமாகிய இராமாயணம் என்னும் இதிகாச காவியத்திலே இத்தீவின் கீழ்ப்பாகத்திருந்த இலங்காபுரியென்னும் நகர் வர்ணிக்கப்படுகின்றது. அஃதும் தொன்மையானதேயாகும். அதனை இராட்சத வம்சத்தவனாகிய இராவணன் என்பான் தலைநகராகக் கொண்டனன். அவன் அளப்பரும் தவமாற்றி இறைவனருள் பெற்றுப் பெருவீரமடைந்து தன்னை ஒப்பாரும் மிக்காருமில்லாது தனிக்கோலோச்சிய காலத்தே அவனால் சிறைப்படுத்தப்பட்ட தேவரும் தம் மனைவியருடன் வந்து விதியும் பெருமையை அப்பதி பெற்றதெனின் அக்காலத்திய அந்நகரைச் சிறப்பினை அளவிட்டுரைக்க வேண்டா. அத்துணை விழுத்தகு நகர் பிற்காலத்தே கடல்கோட்பட்ட தென்ப. அந்நகரின் மாடங்கள் சலமட்டத்திலிருந்து மிக ஆழத்திலில்லாமையின் அங்கிலேயர் ஆண்டுக் கலங்கரை விளக்கம் இரண்டினை நிறுவினர். அவை இப்போதும் மட்டக்களப்பின் தென்பாகத்துள்ள திருக்கோவிலுக்கெதிரே கடற்புறத்துத் தோன்றுகின்றன. அக்குறியொன்றினாலே இன்றும் யாம் இலங்காபுரி இருந்ததென்பதை உணருகின்றோம்.

கலியுக சகாப்தம் அசுரனை அழிப்பதற்காகச் சுப்பிரமணியர் அனுப்பிய வேலானது உக்கிரம் சகிக்க வொண்ணாது கடல்நோக்கி வரும்வழியில் மூன்று தடாகங்களை ஏற்படுத்தி வாகூரமலையை இரண்டுபிளவாக்கி சமுத்திரத்தில் மூழ்கி வெள்ளைநாவலில் ஆறியிருந்ததெனவும், அந்தக்காலத்தே வனவாசிகளான வேட்டுவர் அதனைக்கண்டு ஆராதித்தார்களெனவும், தமிழரின் இரண்டாம் படையெழுச்சிக்காலத்தில் (அதாவது கி. மு. 103-ல்) வந்த சோழநாட்டு மன்னர் எழுவர் திருக்கோவிலைக் கட்டிமுடிப்பதற்கு இந்தியாவினின்றும் கல் முதலியன கொண்ர்ந்து கட்டிமுடித்துத் திருப்பணியைப் பூர்த்தி செய்தார்களெனவும், அத்தினத்து வடமுகமாயிருந்த வேல் கிழக்குமுகமானதினால் “திருக்கோவில்” என அழைக்கப்பட்டதெனவும் கோயிற்பதிக மொன்றினால் உணரக்கிடக்கின்றது.

தான்தோன்றிஸ்பரர்.

பண்டைக்காலத்தில கதிரமலையைத் தரிசிக்க முத்துலிங்கர், கொக்கட்டியார் என இரு தபோநிதிகள் புறப்பட்டனர். கொக்கட்டியார் சிவபதமடைய அவரை சமாதியிருத்தி முத்துலிங்கர் கதிரமலையைத் தரிசிக்கச் சென்றனர். அச்சமாதியிலிருந்து ஓர் ‘லிங்கம்’ உண்டாகி ஒரு கொக்குநெட்டி மரத்தினால் மறைபட்டிருந்தது. தேன்பெறச் சென்ற எயினர் அம்மரத்திற் தேன் எடுப்பதற்காக மரத்தை வெட்ட இரத்தம் சிந்தியது. இதைச் சொர்ப்பனத்தினாலறிந்த கதிர்காம யாத்திரிகர்களிலொருவரான செட்டியார் கோயிற்றிருப்பணியைப் பூர்த்திசெய்தனர். இஃது கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் கோயிலென அழைக்கப்படுகின்றது. (திருவேட்;டைக்காவியம்) இந்தியாவினின்று வரும் கதிர்காமயாத்திரைக்காரர் தரிசித்துச்செல்வது வழக்கமாயிற்றும். இவைகளில் வேடர் பூசனையே நிகழ்ந்ததாகும்.

இஃதிவ்வாறான பண்டைக்காலந்தொட்டே பாரத நாட்டிற்கும், இலங்கைத்தீவிற்கும் மிக நெருங்கிய தொடர்பிருந்து வருகின்றது. ஆதியில் தென்னி;ந்தியாவில் திமிலர் என்னும் ஒரு சாதியினர் வாழ்ந்துவந்தனர். அவர் தம் தொழிலில் மீன்பிடித்தலாகும். அவர் இலங்கையிற் குடியேறி மட்டக்களப்பையடைந்த போது அஃது தம்தொழிலுக்கு வாய்ப்புடைத்ததெனக் கண்டு ஒரிடத்தைத் தம் உறைவிடமாக்கியதனை அரண் செய்து தம் தொழிலைச் செவ்வனே புரிந்துவந்தனர். அவரிடங்கோலிய இடம் இன்றும் திமிலதீவென வழங்கப்பட்டு வருகின்றது. அவ்விடச் சார்பில் வலைகட்டி மீனகப்படுத்திய காரணத்தினால் வலையிற வென்னும் பெயரமைந்தது. இவர்கள் தாம் பிடித்த மீனை வற்றலாக்கி அவற்றினை அனுராதபுரி முதலாமிடங்களிற் கொண்டு சென்று விலைப்படுத்தி வந்தனர் என்ப.

“மட்டக்களப்படா”

மட்டக்களப்பு என்னும் பெயர் தொன்றுதொட்டு ஏற்பட்டதாகச் சாசனங்களிலும் காணப்படவில்லை. அக்காலம் இஃது காடடர்ந்த வனாந்தரமாகவிருந்ததாகவே எண்ண இடமுண்டு. அந்நிய தேசவாசிகள் மரமேற்றியகாலம் இங்குள்ள கண்டபாணத் துறையிற் றங்குவதுண்டாம். இஃதிவ்வாறாக இலங்கையின் வனப்பைக் கேள்வியுற்று வடஇந்தியாவிலே அயோத்தியினின்றும் முற்குகர் இலங்கைக்குப் படையெடுத்து வந்தனர். அவர்கள் இலங்கையின் கீழ்ப்பாகம் வந்த போது ஒரு சதுப்பேரி காணப்பட்டது. அச்சதுப்பேரியினூடே தமது ஓடத்தைச் செலுத்தினர். அப்போது வழியில் மண்செறிந்த ஓர் முனை எனும் குறுகலாகவிருந்தமையால் அதற்கு மண்முனை எனும் பெயரிட்டனர். அப்பாற் தென்திசைநோக்கிப் புறப்பட்டனர். வாவி எல்லையில் ஓடம் சென்றதும் அப்பாற்செல்ல வழியில்லாமைகண்டு “இதுமட்டும மட்டடாமட்டக்களப்படா” (இந்தக் களப்பு இதுவரையுந்தான்) எனப் பகர்ந்து அந்தத்திலே மட்டக்களப்பென்னும் நாமத்தைச் சூட்டி ஒரு கிராமத்தை அரணாக்கினர். ஒல்லாந்தர் காலம் வரை வாவியின் தென் எல்லையே மட்டக்களப்பு என்னும் பெயரைப் பெற்றிருந்தது. ஒல்லாந்தர் தங்களுக்குக் கோட்டைகட்டுவதற்கு வசதியான ஒரு இடத்தைத் தெரிந்து 16-ம் நூற்றாண்டில் கட்டினர். அது தொடக்கமே வாவியின் வடபுறம் மட்டக்களப்பு என்னும் பெயராயிற்று.

பத்தி

அங்குவந்த ஏழு அரசரும் ஏழு கோயில், ஏழு அரண்மனை என்பவற்றை இயற்றி இடங்களை வகுத்தாளுகை செய்தனர். தமக்கு வேண்டிய குடிமைகளை இந்தியாவினின்றுங் கொணர்ந்தனர். எனினுமிவர்கள் இடையிடையே திமிலரால் துன்புறுத்தப்பட்டனர். பன் முறைகளிற் போரிட்டும் அபஜெயமடைந்தனர். பின்னர் ஆபுகானிஸ்தானத்திலிருந்து பட்டாணிகள் பட்டு, குதிரை என்பவற்றைக் கொண்டு இலங்கையில் வியாபாரஞ் செய்தனர். முற்குகர் பட்டாணிகளுடைய உதவியைக் கொண்டு திமிலரை வெட்டித்துரத்தி வெருகலுக்கப்பாலுள்ள வாகரைக்களப்பில் ஓர் கல்நட்டு இவ்வெல்லையினுள் வருதல் கூடாதென ஆக்ஞை செய்து திரும்பினர். இதனையறியாத கருப்பவியான பத்தி என்னும் பெயர்பூண்டதிமிலப்பெண் சென்ற இரவு நடந்த கலகத்தில் விரைந்து நடக்கவியலாது. எதிர்த்து வருதல் கண்ட முற்குகர் தம் பிரமாணத்தை மீறினாள் என்னும் குற்றத்தினால் ஓர் பாலைமரத்திற் தூக்கிக் கொன்றனர். அவ்விடச்சார்பிலுள்ள மரம் பத்தியைத் தூக்கிய பாலைமரமென வழங்கப்படுகின்றது.

திமிலரைத் துரத்தித் திரும்பிவரும்போது பல திக்காகவும் துரத்திச் சென்றவர்கள் வந்து சந்தித்த விடம் சந்திவெளியாயிற்று.

அவர்களனைவரும் வந்தேறிய இடம் வந்தாறுமுலை என்றாயிற்று.

பதுங்கியிருந்த சந்துருக்களைக் கொன்றவிடம் சத்துருகொண்டான் என வழங்கலாயிற்று.

சத்துருக்களைக் கொல்ல உதவிபுரிந்த பட்டாணிகளைக் குடியேற்றிய இடம் (முன்குடி ஏறாவூர்) ஏறாவ10ர் என்றாயிற்று.

இவ்வித நாமகரணங்களைச்சூட்டி இந்தியர் வியாபாரஞ் செய்யத் தலைப்பட்டனர். அவர்களில் மட்டக்களப்பைத் தரிசிக்க வந்த செட்டிகுல வணிகரொருவர் ஓடமீது வரும்வழியில் தண்ணீர் ஆழம் போதாமையால் ஓடம் தட்டிநிற்கத் தரையிலிறங்கி நின்ற இடம் செட்டிபாளையமாகும். இவற்றை விளக்கச் சாதனங்கள் பலவுள

மட்டக்களப்பு பூர்வ சரித்திரம்

திருவளரிலங்கை தன்னில் திகழ் மட்டக்களப்பின் செய்தி
இருபரன் றன்னை போற்றிக் கூறுமிச் சரித்திரத்தை
வருபொருளாக வாழ்த்தி மானிலத் தேவரு மோத
மருமலர் கரத்தான் யானை மாமுகன் காப்பதாமே.

1 பருதி நேருதயங் செய்யப் பன்னவர்க் கரசனாகக்
கருதி சூழ்ந்திலங்கிச் சாரக் குபேரனுஞ் செங்கோலோச்ச
கருதிய இலங்கையென்று புலவர்கள் சிந்துபாட
முருக வேN;லாந்து கின்னர் பிரானவர் முறைமை ஓங்க.

2. ஓங்கு நாளரக்காரன ராவண உருத்திரன்றன்
பாங்கு வெண்கிரியைத் தூக்கிப் பரமனால் வரத்தைப் பெற்று
நீங்கிவந்திலங்கை சேர்ந்து குபேரனை அரசால் நீக்கி
பூங்கமழ் அரசியற்றிப் பூதலம் புகழ வாழ்ந்தான்

3. தானவன் செங்கோலாச்சச் சைவமே தழைத்து ஓங்க
வானவர் சிறையைத் தூக்க மாயனும் ராமனாகிக்
கானக மனைவிதம்பி யிருவரோடேகிக் கங்கை
மாநகர் தன்னில் வாழ் ராவணன் மாயையாலே.

4. மாயையா ராவணன்றான் சீதையை யிலங்கைதன்னில்
சாயலாய்ச் சிறையில் வைக்கத் தாமனுங் கோபங் கொண்டு
தீயென இலங்கைசென்று தீததகன்றிடவே நின்று
தூயவன் கிளைகளோடு மவனையுந் தொலைத்துச் சென்றான்.

5. சென்றபின்னி லங்கை முற்றும் செழிப்பெல்லாம் நீங்கி நீரால்
குன்றியோரு கங்கள் முற்றும் பாழ்படக் குருகுலத்து
அன்றிய நாகர் கூடி அத்தி நாடதனால் மீண்டு
வன்றிற விலங்கை சேர்ந்து வாழ்ந்தனர் கலி எண்ணூறில்.

6. கலிபிறந்தெண்ணூறாண்டில் கருதிய இலங்கைதன்னில்
வலியவரியக் கரோடு கலந்தனர் மாவொன்றாகி
ஒலிவளருகந் தமென்னும் நகரத்திலுறைந் துவாழ்ந்து
வலியராயரசு செய்து மறைமுறை வளர்த்தார் நாகர்.

7 நாகரே ஆயிரத்து நானூறு ஆண்டு மட்டும்
பாகமா யிலங்கை யாள பரு நேர்குலத் துச்சிங்க
வாகுவிதவத் தாய|Pன்ற மகவெனும் விசயன் தந்தை
வேகமே கண்டு நொந்து விறல் நகர் மறைந் தொளித்தான்.

8. ஒளித்தெழு நூறுபேரை தோளராய் உறவுண்டாகி
களிப்பொடு சிங்கன் நாட்டில் கலகங்கள் கடிந்து செய்ய
செழிப்பொடு செங்கோலாச்சும் சி;ங்கவாகுவும் சினந்தெழுந்து
விளித்தெரிபறக்க மைந்தன் றன்கரம் விலங்கு போட்டான்.

9. போட்டபின் மனங்கசிந்து பூட்டிய விலங்கால் நீக்கி
சூட்டிய தோளரோடு சுதனையும் படகிலேற்றி
மீட்டிய கடலில் தள்ளிவிட்டபின் துங்கவேந்தன்
நாட்டுயர் செங்கோ லோச்சி நரபதி வாழ்ந்தானன்னாள்.

10. அன்னவன் விசயன் தோளர் மாரொடு படகை நோக்கி
தன்னிலே அடையக்கண்டு தரித்திடத் துயருண்டாகி
என்னமோ வருமென்றெண்ணி யிருந்தீசர் பாதம் போற்றித்
தென்னகர் முகமாயத் தென்றல் படகினைத் திருப்பிப் பெய்தான்.

11. திரும்பியே படகு காற்றுச் சுவறலாலடைந்து தெற்கு
அரும்பெரு மிலங்கை நாட்டுக் கரையிலே அடைந்து நிற்க
விரும்பிய தோளரோடு விசையனு மிறங்கி முன்னாள்
பெரும் புகழிராவணன் றான்பேர் பெறு நகரமென்றான்.

12. என்றவன் விசயனென் போவிலங்கையி லிறங்குங் காலம்
கண்டவன் கலியுதித்து யீராயிரத் தெழுநூற்றாறில்
வன்றிறல் திங்கள் மேட மாதமும் வாரம்புந்தி
பண்டுநாள் விசயன் காலம் பாடினார் முன்னோர் தாமே.

இராவணன் காலத்தின் பின் ஒரு யுகம் வரையும் இலங்கை பாழடைந்து இருந்தது. பின்பு கலிபிறந்து எண்ணூற்றி ஆறாமாண்டில் அத்திபுரத்தால் நாகர் இலங்கைக்கு வந்தது.

விசயனுடைய மாதா கலிங்ககுலம்@ பிதா வணாகர் குலம்@ பிதா சிங்கர் குலத்தில் வந்தவர்..

2. சரித்திர இயல்

மட்டக்களப்பாவது இலங்கையின் ஒரு பகுதி. அது கண்டி நகரத்துக்கு நேர் கிழக்கும் மணற்றிடருக்குத் தென்கிழக்குமுள்ளது. இந்த மட்டக்களப்பு நீர்வளநிலவளங்களாலும் தீங்கனிச் சோலைகளாலும் பலவித பட்சிசாலங்களாலும் நான்குவித விலங்கீட்டங்களாலும் செழித்தோங்குங் கழனிகளாலும் புராதன சித்திர விசித்திரங்களாலும் உயர்ந்தோங்கும் மட்டக்களப்பின் சுகசெல்வங்களை நோக்கும்போது மது செரங்களை மதிள்களும்வாசனைதந்தும் மகிழ்ச்சியை ஊட்டும் மலர்களால் பாயும் விரிகடல் புவியென மேன்மை பெற்று வண்டுகள் புட்பத்தின் நறுக்களை வாரியுண்டு கீதநாத சங்கீதங்களை மீட்டித் தேன்களைச் சொரிந்தும் தேங்குகள் நிறைந்து முண்டகஞ் செவ்வந்தி, இருவாச்சி, மல்லிகை, தாழை, மகிளம், பூகம், பாதிரி, கோங்கு செண்பகமென்னும் நறுமலர்கள் அலந்து சூழப்பெற்று மாட்சிமை தங்கிய பல நாமங்கள் சூட்டப்பட்டிருக்கும். அவையாவன:- மலையாளஞ் மலையர்குக நாடென்றும், நாகர் இயக்கர் நாகமுனை என்றும், வங்கர் மட்டக்களப்பென்றும் கலிங்கர் உண்ணரசி சிரியென்றும் சிங்சர்மண்முனை என்றும் பல நாமங்கள் சூட்டப்பட்ட நாட்டின் விபரங்களைப் பின் கூறப்படும் மட்டக்களப்புப் புராதன சரித்திரங்கள் எல்லாவற்றையும் கூறுவோமாகில் விசயுனுடைய காலமும் அவர் முதாதை கலிங்கர். கங்கர். சிங்கர், மறவர் மறாட்டியர் என்னும் ஐந்து அரசர்களுடைய வம்சவழியும் அவரவர்கள் சந்ததிகள் இந்நாட்டில் கலிங்கதேசம் வங்கதேசம் சிங்கபுரம் அசோககிரி சோழநாடு இராமநாடு மலையாளம் இவையிலிருந்து குடியேறி அரசாண்டு முதன்மை பெற்றுச் சிறை தளங்களோடு வாழ்ந்து வந்த சரித்திரங்களையும் கூறவேண்டும். ஏனெனில் இவர்களே மட்டக்களப்பை மாட்சிமைப்படுத்தி வந்தவரென்பதற்கு ஏதொரு ஐயமுமில்லை.

விசயகுமாரன் வரவு விசயன் சரித்திரம்

கலிங்க தேசத்து விதிகுதி அரசனுடைய மகள் விடமணி என்பவளை சுங்கதேசத்துத் தாட்டிக அரசனுடைய புத்திரன் மதிலோகனுக்குப் பாணிக்கிரகணஞ் செய்துவைத்தனர். அவர்கள் ஒரு புத்திரியைப் பெற்றனர். அப்புத்திரியினுடைய நாமம்;சிறிமதி அவள் பருவகாலமான போது சிங்கனென்னும் நாமமுடைய வேட்டுவனை மணந்து சிங்கபாகுவையும், சிங்கவல்லியையும் இரட்டைப் பிள்ளைகளாய் பெற்றனள். சிங்கனென்பவன் பஞ்சவடியை அரசுசெய்யும் போது வேட்டை மார்க்கமாய் வர வங்கதேசத்துப் பூங்காவனத்தில் சிறிமதியைக் கண்டு தூக்கிக் கொண்டு போய் பஞ்சவடியில் கற்குகையில் ஒழித்து வைத்தான். வங்கதேசத்தை அரசுபுரியும் மதிலோகன் தனது புத்திரியைக் காணாதபடியாடில் தேடியுங் காணவில்லை. ஆனதால் மௌனத்துடனிருந்தான்.

இந்தச் சிறிமதி பஞ்சவடிதீரத்தில் உள்ள கற்குகையிலேதான் இந்தச் சிங்கபாகுவைப் பெற்றது. சிலகாலத்தின்பின் சிறிமதிக்கும் சிங்கன் என்பவனுக்கும் தர்க்க வாதம் வந்து சிங்கனைச் சிறிமதி விட்டுப் பிரிந்து தனது தந்தையிடம் இரண்டு புத்திரரோடு வந்து சேர்ந்தனள். மதிலோகனும் புத்திரியையும் அவள்புத்திரரிருவரையும் தாபரித்துப் பிள்ளைகளை வளர்த்துப் பருவகாலம் வரச் சிங்கனை வரவழைத்துச் சிங்கவல்லிக்குப் பஞ்சவடி தீரத்தைப்பட்டங்கட்டி தனக்குப் பட்டத்துக்குப் புத்திரனில்லாமையால் சிங்கவாகுவுக்குச் சிங்கபுரத்தைப் பட்டங்கட்டி வாழ்ந்தான். சிங்கவாகுவும் சிங்கனின் சகோதரியின் புத்திரி விரகமணி என்பவளைப் பாணிக்கிரகணம் செய்து வாழுங்காலம் சிங்கவாகுவின் மனைவி விரகமணி என்பவள் விசயன் சமித்து என்னுமிருவரையும் ஒருமுறையிலே இரட்டைப் பிள்ளையாய்ப் பெற்றனள். அதே போல மூன்று முறை இரட்டைகளாகப் பெற்றனள். விசயன் சமித்து முதல் புத்திரர்கள். விசயன் என்பவன் இளவரசுகாலத்தின் தந்தையினுடைய அமைச்சரால் நீங்கி ஏழுநூறு வீரியர்களையும் தன்னோட சேர்த்து யுத்தப்பரீட்சை பழகிச் சிங்கபுரத்தில் சில அட்டாதுட்டிகளைச் செய்து வந்தான். நகரத்துப் பிரசைகள் சிங்கவாகுவினிடம் விசயனுடைய நிர்ப்பாக்கியத்தைக் கூறினர். சிங்கபாகுவும் பட்டத்திற்குரிய புத்திரனான போதிலும் விசயன் பிரசைகளை வருத்தியதையிட்டு மனவருத்த முற்றுப் படகோட்டு மாலுமியை அழைத்து விசயனுடைய கெட்ட செய்கைகளை கூறிச் சுக்கான், பாய்மரம், தெண்டுதண்டு இல்லாத படகில் ஏற்றி அலை செறிந்த சமுத்திரத்தில் அலையவிடும்படி திட்டஞ் செய்தனன். அதனையுணர்ந்த மாலுமியும் சி;ங்கவாகுவின் கட்டளைப்படி விசயகுமாரனையும் அவன் தோழர் எழுநூறு பேரையும் ஒரு படகிலேற்றி வேறொரு படகில் அப்படகைப் பூட்டிப் பெருஞ் சமுத்திரத்தில் விட்டுத் தனது படகைக் கழற்றி எடுத்துக் கொண்டு கரைசேர்ந்து சிங்கவாகுவிடம் அறிவித்துத் தன்னிருப்பிடம் போனான்.

விசயனும் தோழர்களும் ஏறிய படகு காற்று மோதலாலடைந்து தென் சமுத்திரஞ் சார்ந்து மேட மாதம் புந்திவாரம் பரிதியின் சாயல் நேரத்தில் வடஇலங்கையின் மணற்றிடலில் அடைந்தது. விசயனும் தோழர்களும் கரையிலேற்றிப்பார்க்கும்போது நாகர் குலத்தவரைக் கண்ணுற்றனர். விசயனும் அக்குலத்தவரை நோக்கி அரசியற்றும் இராசனை வினவிய போது காளிசேனன் என அறிந்து தந்தையாற் கொடுத்த ஆகாரப்பொருட்கள் குறைந்தபடியால் அக்குலத்தவர் விசயனுக்குந் தோழர்களுக்கும் கனிவர்க்கங்களைக் கொடுத்துப் பசி ஆற்றிவிட விசயகுமாரனும் தோழர்களுடன் அரசனிருப்பிடந்தேடி முள்ளுத்தீவில் வந்து நாகர் குலத்துச் சிற்றரசனைக் கண்டு தனது சம்பவங்களைக் கூறி ஆகாரமுண்ட பரிசியிடத்தில் முதலரனை வினவியபோது முதலரசர் அயோத்தியாபுரியைப் பண்டைய நாளில் அரசுசெய்த பரிதிகுல இரகுவமிசத்தைச் சார்ந்த காளிசேனனென்பவர் என்றும், அவருடைய இராச்சிய இடம் தென்னிலங்கையில் காளிதேசம் என்றும் கூறினன்.

பரிசியின் துணைவரோடு நாகர் படகிலேறிக் காளிதேசம் வந்து காளிசேனனைக் கண்டு சினேகங் கொண்டாடி இயக்கர் குலத்துக் குவேனியை மணந்து காளிசேனனுக்கு விசயனும் தோழர்களும் படைவீரர்களாக இருந்து மண்ணினால் மாளிகையியற்றி வாழுங் காலம் காளிதேச பிரதானி வீட்டில் மணவிருந்துக்காகக் காளிசேனன் விசயன் குவேனி யாவரையும் விருந்துக்கழைக்க. விசயன் தோழர்களைப் பார்த்துச்சொல்லுவது:-

அச்சபையிலிருக்கப்பட்டகாளிசேனன். பிரதானிகள் படைவீரர் யாவரையும் குவேனியினுடை மாயச் சூழ்ச்சியினாலுறங்கச் செய்வேன். நீங்கள் முன்பின் யோசியாமல் எல்லோரையும் வெட்டிக் கொல்லுங்கள் என்று கூறி அச்சபைக்குச் சென்று விருந்துண்ண முன் குவேனியால் எல்லோரையும் உறங்கச் செய்தான். தோழர்கள் அனைவரையும் வெட்டிக் கொன்றனர். பின்பு இலங்கை முற்றுக்குங் கிரீடாதிபனாகினான்.

விசயனின் ஆட்சி

விசயன் தென் இலங்கையில் ஒரு மலை நாட்டைப் பட்டணமாக்கி விசயதுவீபமென நாமஞ்சூட்டி இலங்கை முற்றிலும் தந்தையினுடைய சிங்கக் கொடியை உயர்த்திப்பட்டத்துத் தேவியாக வடமதுரையை அரசுபுரியும் வீரசோகனுடைய புத்திரி விசாகியைப் பாணிக்கிரகணஞ் செய்து குவேனியை நீக்கி எழுநூறு தோழர்களைப் படைத் துணைவராகவும், பிரதானி, சிற்றரசராகவும் இலங்கை பல திக்கிலுமிருத்தி மணவாழ்வற்றவரா யிருக்கும்படி திட்டஞ்செய்து ஆண்டு வருங்காலம் அரசுக்கு வந்து 38ஆம் வருடம் தேகவியோகமடையுங் காலமறிந்து தந்தைக்குத் தம்பி சமித்துவை இலங்கைக்குப் பட்டங்கட்ட அனுப்பும்படி திருமுகமெழுதித் தனது தோழரில் உபத்தியன், அசயன். பந்துகாபயன். முத்தசிவன், உத்திகன், மாமகாசீலன், சூரத்தீசன், அலேசனன் என்ற ஒன்பது பேருடன் கொடுத்தனுப்பிவிட்டான்.

அவர்கள் திருமுகத்தைக் கொண்டு மண்ணாற்றுப்பதி சென்று வங்க தேசப்படகிலேறிச் சிங்கபுரம் போய் சிங்கவாகு தேகவியோகமான செய்தி அறிந்து அந்த நவ வீரர்கள் சமித்துவின் கையிற் கொடுத்தனர். சமித்து இருகரங்களாலும் வாங்கி வாசித்து அகமகிழ்ச்சி கொண்டு தந்தை மரணமடைந்ததும் சிங்கபுரத்தைத் தான் பரிபாலிக்கிறதாகவும் காலிங்கநகரத்தை அரசுபுரியும் சிறிகேசவ சந்திரருடைய இரண்டாம் புத்திரன் சிறிகுல சேனனுக்குப்பட்டங் கட்டும்படியும் தந்தையினுடைய ஆணையரசு தன் கரத்திலிருக்க வேண்டுமென்றும் பதில் திருமுகம் எழுதி வந்த வீரரின் கையிற் கொடுத்து அனுப்பிச் சிறிகுல சேனனுடன் தனது படைவீரரில் நூற்றறுபது போர் வீரரையும் உடன் கொடுத்தனுப்பிவைத்தான்.

சிறிகுல சேனன் கலிங்கரிற் கலந்த வங்க குலமானபடியால் வங்ககுலப் படகிலே அனைவருமேறிக் காளிதேசத்திலிறங்கி விசயதுவீபத்தை அணுகி விசயனிடம் போய்ப் பாதபந்தனஞ் செய்து திருமுகத்தை விசயன் கையிற் கொடுத்தனர். விசயன் வாசித்து தனது தந்தை மாண்டதையிட்டு விசனமுற்றுச் சிறிகுலசேனனை வாழ்த்தி அவன் தந்தை சிறிகேச வசந்திரருடைய சுகசெய்திகளை வினாவித் தந்தையின் துயரத்தை மாற்றிக் கலிங்கர். சிங்கர், வங்கர் என்னும் முக்குலத்தாரும் இலங்கையை எக்காலமும் அரசியற்றி வருவாரென நினைத்து உளங்கனிந்து சிறிசேனனைக் கமலங்களால் முழுக்காட்டிப் பட்டு வஸ்திரமுடுத்தி கரத்தில்தன்னுடைய செங்கோலைக் கொடுத்துச் சிரத்திலே நவரத்தினங்களால் இழைத்த முடியைத் தரித்து அரசாளும்படி திட்டப்படுத்திச் சில காலத்தின் பின் பரமபதம் அடைந்தான். விசயன் அரசியற்றிய காலம் 40 வருடம்.

திங்கள் வெண்குடை தவளச் சிறிகுல சேனன்றானும்
சிங்கனின் கொடி தளிர்க
திருவள ரிலங்கை நாட்டில்
வங்கரத்தின குலத்தோன் செங்கோலோச்சு நாள் கலி பிறந்து
அங்கு வீராயிரத்து எண்ணூற்றறுபதாண்டே.

இலங்கை திரிசிங்கள நாடாக்கப்பட்ட வரலாறு

சிறிகுலசேனனும் கலி உதித்து 2790 ஆம் ஆண்டில் இலங்கையை ஏற்றுப் பரிபாலனஞ் செய்து வருங் காலத்தில் வங்கர் குலத்து மாமணி என்பவளை மணம் புரிந்து சில காலத்தின்பின் இரண்டு புத்திரர்களைப் பெற்று வாழ்ந்துவரும் போது, முதற் புத்திரன் கூத்திகன் இளவரசுப்பட்டம் பெற்று நல்லரசு புரிந்து வருங்காலத்தில் சமித்துவின் மூன்றாம் புத்திரன் பந்துவாசன் என்பவன் வங்கர் குலத்து எல்லாளன் என்பவனையும் துணைசேர்த்துச் சிங்கபுரத்தைவிட்டு இலங்கையில் வந்து சிறிகுலசேனனை நோக்கி “என்னையும் எல்லாளனையும் இலங்கையை இரு பங்காக்கி ஆளப் பட்டங்கட்டு” என வாக்குவாதம் புரிந்தான். அப்போது சிறிகுலசேனனும் சமித்துவுக்கு வரைந்த திருமுகமாவது “உமது புத்திரன் பந்துவாசன் என்பவன் எல்லாளனையுந் துணைக் கொண்டு இலங்கையை இருவருக்கும் பட்டங் கட்டும் படி கேட்கின்றான். எனக்கும் இரு புத்திரர்கள் இருக்கின்றார்கள். இதனைத் தீர்த்து வைப்பீரா” என்பதே சமித்துவுக்குத் திருமுகஞ் சேர வாசித்துப்பார்த்து சிறிகுலசேனனே “இலங்கையை மூன்று பங்காகப் பிரித்து வங்க குலத்து எல்லாளனுக்கு ஒரு பங்கும் எனது புத்திரன் பந்துவாசனுக்கு ஒரு பங்கும் உமது புத்திரன் கூத்திகனுக்கு ஒரு பங்கும், பிதாவைப் போல் மூவரையுந் தாபரித்துப் பட்டங்கட்டு என பதில் திருமுகம் அனுப்பிவிட்டான். சிறிகுலசேனனும் வாசித்து மனமகிழ்ச்சி கொண்டு இலங்கையை மூன்றாகப் பிரித்து பந்துவாசனுக்கு விசயதவீபத்தையும் வடமேற்குத் தொடங்கி வடகிழக்குவரையுமுள்ள பங்கை எல்லாளனுக்கும் பட்டங்கட்டித் தனது புத்திரன் கூத்திகன் என்பவனுக்கு விசயதுவீபமிருந்து தென்மேற்குத் தொடங்கித் தென்கிழக்கு வரையும் பட்டங்கட்டி மூவரும் ஒரேகுலம்போல் பழிபங்கமில்லாமல் ஆண்டுவரும்படி திட்டஞ்செய்து சில காலத்தின் பின் பரமபதமடைந்தான்.

எல்லாளன் சமித்துமகன் பந்துவாசனிருவரோடு கூத்திகனென்றும் மூவருக்கும்
பல்லோர்கள் துதிபுரியச் சிறிசேனனும் இலங்கை தன்னைப் பகுத்து மூன்றாய்
நல்லோரா யிருந்தரசு செய்வீரென்று நரபதியும் சிரசில் மூடிசூட்டுங்காலம்
மல்லாருங் கலிபிறந்து ஈரா யிரத் தெண்ணூற்றாறும் ஆண்டு சிங்க திங்களாமே

சிறிகுலசேனன் இலங்கையை மூன்றாகப் பிரித்து மூவருக்கும் பட்டங்கட்டிய பின் கலிபிறந்து எண்ணூறாம் ஆண்டு சிறிகுலசேனனுடைய புத்திரன் கூத்திகன் என்பவன் தனது நகரத்தை மாட்சிமைப்படுத்தக் கருதி முன்னகரங்களுக்கெல்லாம் திக்காதி காரியங்கள் வகுத்து அரசுபுரியுங்காலம் நகர்வலம் வந்து இருந்து போவதற்காக ஒரு சிங்காசன மண்டபமியற்றி அதனருகில் வாசனைதரும் புட்பத் தோப்பொன்றை உண்டாக்கி அதிலிருந்து மகிழ்ச்சி கொண்டு வேட்டையாடி காளிதேசம்போய் அரசு செய்தான்.

அவ்விட மண்டபம் சிங்காரமண்டபம் என்றும் தோப்பு சிங்காரத்தோப்பு என்றும் நாமம் பெற்றன. அவற்றின் அருகுள்ள இடங்களைக் கிராமமாக்கக் கருதிச் சிங்காரத் தோப்பைச் செப்பனிட்டு அதற்குக் காளிநாட்டிலுள்ள குடிகள் 90 குடும்பங்களைக் குடியேற்றித் தங்கள் காலிங்க தேசமிருந்து தனது சந்ததிகளில் 96 குடும்பங்களும், காளி கட்டத்திலுள்ள படையாட்சித் தலைவர்களோடு பற்பல செந்நெல் தானியம் செய்யும் 60 குடும்பங்களும் வரவழைத்து, கழனிகள் திருத்தக் கருதி, படையாட்சித் தலைவர்களைக் காளி நாட்டால் வந்தவர்களை ஆதரிக்கும் தலைவர்களாக்கிச் சிங்காரத் தோப்புக்கு மேற்கிலிருந்த மட்டக்களப்பை மண்கல் மலையாயிருந் புட்டியை வெட்டிச் சுமந்து மூடும் படி காளிகட்டத்தால் வந்த குடிகளைத் திட்டப்படுத்தென அவர்கள் கூத்திகனுடைய கட்டளைப்படி புட்டியை வெட்டி மட்டமட்டமாய்வெட்டி மூடிக் கொடுக்ககூத்திகன் பார்த்து அளவற்ற ஆனந்தங் கொண்டு அந்த இடத்தில் மாளிகை உண்டாக்கிப் படைவீரரை அக்களப்பு முனையில் சாலைகளமைத்து இருத்தி அந்த இடத்திற்கு வீரர்முனை என நாமஞ்சூட்டித் தனது மாளிகை அமைத்த இடத்திற்கு மட்டக்களப்புஎன நாமஞ் சூட்டி, பின் அக்களப்பை மூட மண்கல் எடுத்த இடத்திற்கு மண்கல்புட்டி என நாமஞ்சூட்டி அந்த இடத்தை இராசதானமாக்கித் தனது வமிசத்தாரைச் சூழ இருத்தி சிங்கபுர பிரதானி குல ராமனுடைய புத்திரி மல்லிகாவல்லியைப் பாணிக்கிரணம் பண்ணி அரசியற்றி வருங்காலத்தில் தனது மனைவி மல்லிகா வயிற்றில் மூன்று புத்திரர்கள் பிறந்தார்கள். சேனன், தமனன், விடமதனன் என மூவர்க்கும் நாமஞ் சூட்டி இராசநூல், தேவநூல், வேதநூல், உலகநூல் யாவையும் கற்பித்து மனுமுறையின்படி அரசுசெய்து வருங்காலம் மூத்தபுத்திரனுக்கு இளவரசுகாலம் வர மட்டக்களப்பை இராசதானமாக்கி இலங்கை தென்திசையாயுள்ள மூன்றிலொரு பங்கைப் பட்டங்கட்டிச் சில காலத்தின் பின் தேகவியோகமடைந்தனன்.

சேனன் சரித்திரம்

மன்றம் புகழ்ச் சேனன் மட்டக்களப்பில் செங்கோல்
அண்டவர்கள் புகழோச்சும் நாளது கலியுதித்துச் சென்ற தோரீராயிரத்து
எண்ணூற்று அறுபத் தெட்டில்
தின்றிலம்பச் செங்கோல் செழித்துயர் தளைத்ததன்றே.

கூத்தகன் புதல்வனாகிய சேனன் தனது தம்பி மாரிருவரையும் மந்திரிகளாய் நியமித்து மட்டக்களப்பை இராசதானியாக்கி மனு நீதியின்படி அரசியற்றி வருங்காலம் கலிங்கதேச வங்கதேச சிங்கபுரமிருந்து தனது சந்ததியார்களில் அனேக குடும்பங்களை வரவழைத்து மட்டக்களப்புப் பலதிக்கிலும் குடியேற்றினன். இவரின் மனைவி நாகமணி. இவருடைய மகன், மகன், மகன், மகன், என்னும் நாலுதலைமுறையாக மட்டக்களப்பை இருநூற்று முப்பது வருடங்களாய் ஆண்டுவந்தனர். இவர்கள் காலத்திலே மாட்புட்டி மணற்புட்டி, நாப்புட்டி, மலகவத்தை உன்னாஞ்சை தம்புட்டி, பங்கிடான்வெளி, அம்பிலாந்துறை, கொங்கவாசி, அப்பன்புட்டி, அறுமனப்பூமனை இவ்வூரும் மட்டக்களப்பில் இராசாக்கள் கூடுமிடமாயிருந்து வந்தன. அதன்பிறகு சேனனுடைய வம்மிசம் அருகிப்போக நாகர் இயக்கர் என்னும் இரு குலத்தவர்கள் மேலெழுப்பி காலிங்க, வங்கா, சிங்கா என்னும் முக்குலத்தவரையும் அடக்கி முப்பது வருடங்களாக விண்டு-அணையை இராசதானியாக்கிக் கொண்டு எங்கள் தேவ வழிபாட்டை நிறுத்திப் பசாசு, பாம்புகளை வணங்கும்படி வகுத்து வருத்துகிறார்கள் என்று குறைகூறினர். அவர்கள் அசைவெடுக்கவில்லை. ஏனென்றால் அனுரதபுரியை அரசு செய்யும் சேரர் நாகர் இயக்கர் துணைவனானபடியினால் என்க. பின்பு இந்த நிதியத் தலைவர்கள் முற்சரித்திரங்களையும் இயக்கர் செய்த தீமைகளையும் ஒரு திருமுகம் வரைந்து கலிங்கதேசம் அனுப்பிவிட்டனர். அத்தேசத்தை அரசுபுரியும் மதமிவாகாகுணன்அத்திருமுகத்தை வாசித்துத் தனது மூன்றாம் புத்திரன் இரஞ்சலனை அழைத்து திருமுகத்தைக் காட்டி ஒரு சைனியவீரர் மூன்னூறு கொடுத்து நமது குலத்தவரை மேல் பதவியில் வைத்துவரும் திட்டம் செய்து இரஞ்சலனைப் படகிலேற்றிவிட்டனன். இரஞ்சலனும் கலிங்கன் படைத்துணைவரும் படகில் வந்து சிங்களத் தோப்பு அணையில் இறங்கி நாகரைச் சிநேகம் பிடித்து இயக்கரென்னும் திமிலரை வாளுக்கிரையாக்கி, விண்டு அணையிலுள்ள இராசமாளிகையை உடைத்து இயக்க அரசனையும் அவன் பிரதானிகளையும் வெட்டிக் கொன்று மேற்கு வடக்கு மாவலி கங்கையால் இயக்கர் குலத்திலுள்ள யாவரையும் துரத்தி எல்லைக் கல்லும் நாட்டி மட்டக்களப்புக் கூத்திகனுடைய மாளிகையில் இரஞ்சலனும் படைவீரரில் இருநூற்று ஆறுபேருமிருந்து வரும் போது தனது படைவீரரில் தொண்ணூற்றாறு பேர் இயக்கரால் மடிய அதில் படையாட்சி குலத்துப் பிரதான வீரியன் திகோன் என்பவன் இறந்ததால் அதிக துக்கமாயிருக்க அனுரதன் புரியை அரசுபுரியும் சோரநாகன் திறைகேட்டுப் பிரதானிகளை அனுப்பி விட்டான். அவர்கள் மட்டக்களப்பில் வந்து இரஞ்சலனைக் கண்டு சில நல்ல வசனங்கூறித் திறைபெற வந்தோமென்றனர். இரஞ்சலனும் அரசனை வினாவி அனுரதபுரிக்குச் சென்று சோரநாகனைக் கண்டு சில சங்கற்பங்கள் பேசிச் சினேகங்கொண்டாடி இருவரும் சமாதானப்பட்டு இலங்கையைப் பன்னிரண்டு பாகமாய்ப் பிரித்து எட்டுப்பங்கை விசயதுவீபத்தோடு சேர்த்து மண்ணாறு மணற்றிடரண்டையும் குருகுல நாகருக் கீந்து தெட்சணாபதியை இயக்கர் குலத்திமிலருக்கீந்து மட்டக்களப்பை இரஞ்சலனேற்று கொண்டு இனித் தங்கள்; இராச்சியமென்றும் திறையில்லை என்றும் இருவரும் சமாதானங் கொண்டு மட்டக்களப்பில் வந்து முற்குலத்தவரை அழைத்து இரஞ்சலன் சொல்வது:- நான் கலிங்கதேசம் போய்க் குடிகள் கொண்டு வந்து இயக்கரிருந்த விடமெல்லாம் குடியேற்ற வேண்டும். ஆகையினால் படையாட்சித் தலைவனுக்கு மட்டக்களப்பைப் பட்டங்கட்டப் போகிறேனென்று படையாட்சித் தலைவனுக்குப் பட்டங்கட்டி இரஞ்சலன் மட்டக்களப்பை விட்டுக் கலிங்கதேசம் போனான்.

சிறிகுலன் சரித்திரம்

காரென்னுமியக்கர் சேரர் மகாலிங்க குலத்து வேந்தன்
தூரணிபுகழ் மட்டக்களப்பினின் சார்ந்துநீக்கி
சீர்பெறு சிறிகுலர்க்கு சிரமுடி தரித்த அன்னாள்
தார்கவி உதித்த ஆண்டு மூவாயிரத்து இருபதாமே.

படையாட்சி குலத்துச் சிறிகுலன் மட்டக்களப்புக்குக் கலிபிறந்து மூவாயிரத்திருபதாம் வருஷம் அரசுக்கு வந்து தெற்கு மாணிக்க கங்கையும் எல்லையாக வைத்து அரசு புரியுங்காலம் அதிக கழனிகள் திருத்திச் செந்நெல் செழித்து ஓங்கிவரத் தனது மனைவி வயிற்றில் மூன்று புத்திரர்கள் பிறந்திருந்தார்கள். முதல் புத்திரன் வாகூர னென்பவனுக்குக் கலிபிறந்து மூவாயிரத்தெழுபதாம் வருஷம் மட்டக்களப்பைப் பட்டங்கட்டிச் சில காலத்தின் பின் பரமபதம் அடைந்தான். வாகூரனுடைய மாதா வங்கர் குலம். இந்த வாகூரன் மட்டக்களப்புக்கு அரசுக்கு வந்தபோது மாணிக்கக்கங்கையில் இருந்து வெட்டுவாய்க்கால் ஒன்றெடுத்து சமுத்திரக்கரைவரையும் கழனிகள் திருத்திச் செந்நெல் செழித்தோங்கும்படி செய்து வைத்து அரசாண்டான் இவன் வெட்டிய வாய்க்காலுக்கு முக்கனர் வாய்க்காலென்னும் நாமம் சூட்டியிருந்தனன் பின்பு நாற்பது வருஷம் அரசு செய்தபின் தனது புத்திரன் சிரசன்ன சித்துவுக்குப் பட்டங்கட்;டி தொண்ணூறு வயது ஆயுள்வரையுமிருந்து தேகவியோகமானான்.

பிரசன்னசித்து - சரித்திரம்

பிரசன்ன சித்து கலிபிறந்து மூவாயிரத்து நூற்றுப்பத்தாம் வருஷம் மட்டக்களப்புக்கு அரசுக்கு வந்த போது தேவர் சந்நிதியியற்ற விருப்புடையவனாக இருந்து வரும் காலம் புவனேயகயவாகு என்னுமொரு கலிங்ககுமாரன் சோழநாட்டிலரசியற்றி வரும் திருச்சோழனுடைய மகள் தம்பதிநல்லாள் என்பவளைப் பாணிக்கிரகணஞ் செய்து சில காலத்தின் பின்பு புத்திரனில்லாமையால் இராமேசுபரம் தரிசனை செய்து மண்டபமொன்றியற்றும்படி திரவியமுங் கொடுத்து திட்டஞ் செய்து இலங்கையில் வந்து திருக்கேதீஸ்வரம் தரிசனை செய்து தானம் தன் மனைவியும் சிறைதளங்களோடு கோணேஸ்வரர் தரிசனை செய்து நிற்கும் போது மணிபுரத்தை அரசுபுரியும் நாகர்குலத்துச் சிற்றரசனுடைய மந்திரி கொட்டாயனென்பவன் புவநேயகவாகுவை நோக்கி என்னுடைய உத்தரவில்லாமல் நீயிங்கு வரப்படாதென விளம்பினன். அதனைக் கேட்ட புவனேயகயவாகுவும் தன்னோடு வந்து சோழவீரியர்களை ஏவிக் கொட்டியன் முதலிய நாகர் குலத்துப் பிரதானிகளையெல்லாம் வெட்டிக் கொன்று செயித்துச் சிலரை அந்நகரத்தாலகற்றியும் தெட்சணாபதியைத் தன்னளவிருத்திச் சோழநாட்டு வீரியர்களைக் காவல் வைத்து மட்டக்களப்பை அரசுபுரியும் வாகூரன் புத்திரன் பிரசன்னசித்துவிடத்தில் மனைவி துணைவரோடு வந்து குலமுகமன் கொண்டாடி ஆகாரமுண்டு பிரசன்னசித்துவிடத்தில் தெட்சணாபதியை ஒப்புக்கொடுத்துச் சில நாளிருந்து புவனேகயவாகுவும் தனது நகரம் போகக் கருத்துற்ற போது பிரசன்ன சித்துவும் நாகர்முனையில் பண்டு-நாளில் சுப்பிரமணியர் ஆலயம் பாழடைந்திருப்பதால் நாட்டுச் சிற்பிகளை அழைத்துச் செப்பனிட்டுத் தரும்படி வேண்டினன். அதனை உணர்ந்த புவனேயகயவாகுவும் தனது மாமன் திருச்சோழனுக்கு மட்டக்களப்பு நாகர்முனைச் சுப்பிரமணியர் ஆலையத்தைச் செப்பனிடக் கருத்துற்றேன். அதற்குச் சிற்பிகளும் திரவியங்களும் அனுப்பும்படி திருமுகம் அனுப்பினன். திருமுகத்தை வாசித்த திருச்சோழனும் சந்தோஷமடைந்து மருகன் கேட்டபடி அனுப்பினன். சிற்பிகள் வந்து புவனேயகயபாகுவைக் கண்டு நமஸ்காரம் செய்து ஆலயத்தைச் செப்பனிட்டு புவனேயகயபாகுவும் அந்தணர் புத்தியின்படி அபிசேகஞ் செய்து திருக்கோயிலென நாமஞ் சாற்றி பிரசின்ன சித்துவிடம் ஒப்புக்கொடுத்துச் சில நாளிருக்க புவனேயகயபாகுவின் மனைவி தம்பதி நல்லாளுக்குக் கெற்பமுண்டாக பிரசின்னசித்துவும் மனமகிழ்ச்சி கொண்டு புவனேயகயபாகுவுக்கு ஒரு நாடுண்டாக்கக் கருதி, வடக்கு மக்கனல் வெட்டுவாய்காலும், தெற்கு மாணிக்க கங்கையும், மேற்குக் கடவத்தையும் கிழக்குச் சமுத்திரமாயுமுள்ள ஒரு கிராமத்தை உண்டாக்கிக் கவடா மலையில் மாளிகை உண்டாக்கி புவனேயகயபாகுவுக்குக் கைலஞ்சமாகக் கொடுத்து அரசிருக்கச் செய்து புன்னரசி என்று நாமஞ்சாற்றிக் கல்லிலும் வெட்டிவைத்து தன்னிருப்பிடஞ் சென்றான். இது நிகழ்ந்தது கலிபிறந்து மூவாயிரத்து நூற்றுமுப்பதாம் வருஷம். அதன்பின்பு புவனேயகயவாகு தன்னோடு வந்த பிரதானி சோழவீரியர் சிறைத்தளங்களாகவும், தன்னரகாயிருத்தி தனது நகரத்துள் கழனிகள் திருத்தி குடிபடைசிறைகளை வைத்து வாழ்ந்து வருங்காலம் தனது மனைவிக்குப் பிரசவ காலம் நேரிட்டது. அன்று விடாமழை பெய்ய அத்தினத்தில் புத்திரன் பிறந்தான். அப்பிள்ளைக்கு மேகவர்ணன் என்றும் மனுநேயகயவாகு என்றும் நாமஞ்சாற்றி வாழ்ந்து வருங்காலம் புத்திரனுக்கு இராச பருவகாலம் வர வங்கதேசத்துக் குலசந்திரனுடைய புத்திரி அழகுவல்லியை மணம்முடிப்பித்து உன்னரசுகிரியையும் பட்டங் கட்டிச் சிலகாலத்தின் பின் புவனேகயவாகுவும் அவர் மனைவியும் ஒரே தினத்தில் தேகவியோகம் அடைந்தனர்;.

மனுநேயகயவாகுவின் சரித்திரம்

மனுநேயகவாகு கலிபிறந்து மூவாயிரத்து நூற்றைம்பதாம் வருஷம் பட்டத்துக்கு வந்தான். இவன் உன்னரசுகிரிக்கு மேற்கிலும் தெற்கிலும் உள்ள நாடு நகரங்களை எல்லாம் தன்கைவசப்படுத்தித் திசைவாங்க அரசுபுரியுங்காலம் மட்டக்களப்பை அரசுபுரியும் பிரசன்னசித்துவின் புத்திரன் நாசகனைச் சிநேகம் கொண்டு தந்தையாலியற்றிய நாகர்முனை ஆலயத்தை அந்தணர் புத்தியின்படி செப்பனிடக் கருதிச் சோழநாட்டுச் சிற்பிகளை அழைத்து ஏழுதட்டுத் தூபியும் மதில் மண்டபங்கள் மாதர்சாலை, வாகனவீடு, கோபுரவாசல், தங்கத் தகடு பூட்டிய கொடித்தம்பம் தூபியின் மேலே ஏழு தங்கக் குடமும் நிறைந்து ஆறுவீதியும் அலங்கரித்து அந்தணரால் அபிஷேகங்கள் செய்வித்துத் தனது மாதாபிதா வமிசத்தாருக்கு வங்கதேசம் சிங்கபுரம் சோழநாடு கலிங்கநாடு இராமநாடு இவைகளை அரசுபுரியும் புரவலர்களுக்குத் தந்தை தாயுடைய சம்பவங்களும் கலிங்கர் வங்கர் சிங்கர் இலங்கையை அரசுபுரியும் நேர்மைகளும், தனது தந்தையால் முன் நாகர் முனையிலியற்றிய திருப்பணிச் சம்பவங்களும் அந்தத் திருமுகப்பணியை யான் அந்தணர் புத்தியின்படி தமிழ் மதம் ஓங்கச் சோழ நாட்டுச் சிற்பிகளை அழைத்து செப்பனிட்டு அபிசேகம் இன்னதினமெனத் திருமுகம் அனுப்பினர். அதை வாசித்தறிந்து அரசர்கள் மாணிக்கம், முத்து, இரத்தினம், நாகமணி, தங்கத்தட்டு, பாரிசாதம், சரிகைப் பட்டு இவைகளை ஏழு இராசர் கையில் கொடுத்து தங்கள் தங்கள் பந்துக்கள் நாற்பது திறைக் குடிகளையும் அனுப்பிவிட்டனர். அவர்கள் ஒருங்கு சேர்ந்து ஒரு படகில் ஏறி தென்சமுத்திரம் சார்ந்து நாகர்முனைக்கு அடுக்காயிருக்கும் களப்பு முகத்திலிறங்கி நிற்க, தாசகன் மனுநேயகவாகுனின் பிரதானிகள் அந்தணர்களோடு எதிர் சென்று முகமன் கொண்டாட அந்தணர்களை ஏழு இராசரும் நாற்பது திறைக் குடிகளும் தம்பட்டனென வாழ்த்தித் திருப்பணிக்குச் சென்று ஏழு இராசரும் அவர் அவர்கள் கொண்டு வந்த திரவியங்களையும் அரசினர்தந் பதி நல்லாள் பந்துகள் கொடுத்த பத்திரங்களையும் மனுநேயகவாகுவிடம் கொடுத்து பரிசுபுரிந்தனர். மனுநேயகயவாகுவும் வந்தவர்களை ஆசீhவதித்து அறுசுவையுடன் அமுதளிப்பித்து அபிசேகஞ் செய்து ஆறுகாலம் பூசை நடக்கும்படி ஏழு இராசர்களையும் படையாட்சி குலத்தில் மூன்று வன்னியர்களையும் வகுத்து இருபாகை முதன்மையாக கலிங்ககுலத்து பிரசன்னசித்துவினுடைய சந்ததிகளே வரவேண்டுமென்றும், ஐந்து பண்டாரங்களும், அந்தணர். முதன்மை இராசர் இவர்களுடைய உள்ளியர் என்றும் பதினாறு சிறைகளும் காராளருடைய உள்ளியர் என்றும் மனுநேயகயவாகுவும் தாசகனும் கற்பித்தனன். பின்பு திருப்பணிக்கு ஆதாரமாக மனுநேயகவாகுவும் தாசகனும் ஏரிகள் இயற்றிக் கழனிகள் உண்டாக்கக் கருதி சங்குமண்கண்டு தலையாகவும் தாடைகிரிபாதமாகவும் இருபத்துநாலு ஏரி ஒன்றாகவும் முப்பத்திரண்டு மதகுவைத்து ஒரு ஏரி இயற்றி சமுத்திரக் கரைவரை கழனிகள் திருத்தி நீர் மிஞ்சிவந்தால் ஏரியை இரண்டாகப் பிரித்து நடுவில் கள்ளி ஓடையாய் வெட்டிச் சமுத்திரக் கரையில் கொண்டுவிட்டு நாகமுனைக்குத் திருப்பணிக்கு ஈந்து மட்டக்களப்பை அரசுபுரியும் தாசனிடத்து ஒப்புக்கொடுத்து இராசரும் வந்த திறைக் குடிகளும் தம்பட்டர் என்று அந்தணர்களைக் கண்டு பேசிய இடத்தில் அந்தணர்களைக் குடியிருத்தி பட்டையும் வரிசைகளையும் கொடுத்து மாணிக்க வைரத்தால் ஒரு கணேசவிக்கிரகமும் ஸ்தாபித்து தம்பட்டார் ஊரென நாமம் சூட்டி, தனதுமாதா தம்பதி நல்லாள் பேரில் ஒரு வாவியும் இயற்றி அந்த வாவிக்குத் தம்பதிவில் என்று நாமம் சாற்றி தாசகனிடத்து விருந்துண்டு முகமன் கொண்டாடி உன்னரசுகிரிவில் மனைவியும் வரும்சிறைத் தளங்களோடு சென்று வாழ்ந்துவரும் காலம் மனைவிக்கு சந்தானமில்லாமையால் விசனமுற்று இருக்கும்போது ஒரு பேழை சமுத்திரத்தில் அடைந்துவந்து கரை ஏறக்கண்ட வேவுகாரன் ஒருவன் உன்னரசுகிரியில் சென்று மனுநேயகயவாகுவிடத்தில் கைகட்டி நின்று. அரசே சமுத்திரக்கரையில் ஒரு அழகுசவுந்திரியமான பேழை அடைந்து கரைசேர்ந்திருக்கிறதென விண்ணப்பம் செய்தான். அதைக்கேட்ட அரசன் பிரதானிகளோடு கடற்கரைக்கு சென்று பேழையைத் திறந்தான். அதற்குள் ஒருபெண் குழந்தையிருந்து கல கல என நகைத்தது. அதைக் கண்ட அரசன் மனமகிழ்ச்சியோடு பல்லக்கில் வைத்து உன்னரசுகிரிக்குச் சென்று தன் மனைவி கையில் கொடுத்து ஆடகசவுந்திரி என நாமம் சூட்டி நாளொருவண்ணமாய் வளர்த்துப் பேழை அடைந்த இடத்தை நகராக்கி பாலர்நகை நாடென நாமம் சாற்றிக் குடியேற்றி அந்தநாடும் மட்டக்களப்பு எல்லையான படியால் தாசகனிடத்தில் ஒப்புக்கொடுத்துத் தனது நகரம் போயினன். தாசகனும் அந்தப் பாலர் நகரைக் காட்டில் படகுகட்டும் துறையாக்கி அணையும் இயற்றினன். அதன்பின் வடநாட்டு வர்த்தகர்கள் வந்து வர்த்தகம் செய்தனர். பின்பு மனநேயகயவாகுவின் மந்திரி ஆடகசவுந்தரிக்கு ஏழுவயதில் சயனிக்கும் போது ஒருவர் தெரிசனபிரசன்னராகி இராமமந்திரம் ஒன்றும், இராமதியானமே வணக்கமொன்றும், உபதேசித்தகன்றார். உடனே விழித்து மறுநாட்காலையில் மந்திரஞ் செபித்து இராம மூர்த்தியை வணங்கி வருங்காலம் மனுனேயகயவாவுக்கு ஆடகசவுந்தரியினுடைய பூர்வ சம்பவங்களை வடநாட்டு வர்த்தக்ப பிரபுக்கள் விளங்கப்படுத்தினர். மனுனேயகயவாகுவும் புத்திரிதனக்கு உரிமை உடையவளென்றும் உன்னரசுகிரியைப் பட்டங்கட்டி பரமபதம் அடைந்தனன்.

ஆடக சவுந்தரி சரித்திரம்

சீர்கலி உதித்த காலம் மூவாயிரத்து ஒருநூற்றி எண்பதாம் ஆண்டில்
வாரனி சௌந்தரி அசனனைவகுத்த போதில்
யார்செழித் தோங்க மந்திரி அறுவரைப் பக்கமாக்கி
கார் அகன்றிடவே செங்கோலோச்சிவள் அக்கருணையன்றே.

ஆடக சவுளந்தரி கலிபிறந்து மூவாயிரத்தொரு நூற்றொண்பதாம் ஆண்டு அரசியாக உன்னரசுகிரிக்கு வந்தபோது ஆறுமந்திரிகளை வகுத்து நாற்பது வருஷம் அரசு செய்து வருகிற நாளில் உன்னரசுகிரியிலுள்ள குறுநில எயினன் ஒருவன் அரசியின் எதிர்நின்று கைகட்டி, அம்மணி! ஒரு கற்குகையில் யானையைப் போன்ற தேகமும், மானிட உருவமும் உள்ள ஒருவர் இருக்கிறார். குகைக்கருகான இடமெல்லாம் செந்நெல் முத்துக்கோதுகள் பிரமாண்டமாய்க் குவிந்திருக்கிறதெனக் கூறினன். அரசியும் மந்திரிகளை நோக்கி இந்த எயினகுலத்தவன் கூறிய மொழியை யூகியுங்கள் என்றனள். பிரதானிகள் எயினனை நோக்கி அந்த இடத்தைக் காட்டும்படி கட்டளைசெய்து தளத்துடன் வந்து இடத்தைப் பார்த்தனர். ஒன்றும் தோன்றாமையால் இராசாத்தியிடத்து எயனனைக் கண்டிக்கும் படி கட்டளையிட்டனர். அரசியும் இவனுடைய காலில் விலங்கிட்டு வைக்கும்படி கட்டளைசெய்து பொழுது அஸ்தமனமானதால் ஆகாரம் உண்டு தாம் பூலம் தரித்துப் பாங்கிமாருடன் மஞ்சத்தில் சயனித்தாள். அந்தநேரத்தில் இராமமூர்த்தி பிரசன்னராகி எயினன் கூறியது உண்மையென்றும், நூற்றிருபது பருவம் ஆயுள் என்றும், நூற்றுப்பதினேழாவது பருவத்தில் ஒரு புத்திரனைப் பெறுவாயென்றும், முற்காலத்தில் இராவணேஸ்வரன் நிகும்பலை யாகஞ்செய்ய அதிலுண்டாகிய பூதங்கள்தான் எயினன் கூறிய குகைக்குள் இருக்கிறதென்றும், நீ அந்த இடத்திற்சென்று உன் இராம மந்திரத்தைத் தியானிக்க அப்பூதம் நூற்றெட்டும் உன் அடிமையாய் வாழும் என்றும் தெரிசனத்திற் சொல்லி மறைந்தனர். அரசியும் திடுக்கிட்டு விழித்து இராமமூர்த்தியைத் தெரிசனைசெய்து இராம மந்திரத்தையும் செபித்து விடிந்தபின் பிரதானிகளோடு எயினன் கூறிய இத்தில் நின்று இராமதியானஞ் செய்ய பூதம் நூற்றெட்டும் அரசியின் காலில் விழுந்து உமக்கடிமை எனச் சாயல் காட்டி நின்றன. அதைக்கண்ட அரசி பூதங்களுடைய தேகங்களையும், அவைகள் சஞ்சரித்த குகைகளையும் கண்டு ஆச்சரியமுற்று பூதங்களுக்கு ஒரு நாளைக்கு இருபது கலன் அரிசிக்கஞ்சி காய்ச்சிப் பகிர்ந்து கொடுக்கும்படி ஏவலாளர்களைத் திட்டப்படுத்தி பூதங்களிருந்த இடத்திற்கு இராட்சத கல் என நாமம் சாற்றி மட்டக்களப்பை அரசுபுரியும் தமனனை அழைத்து இந்த இடத்தை நகராக்கிக் குடியேற்றும் படி திட்டம் செய்து பூதங்களோடு உன்னரசுகிரிக்குச் சென்றனள். பின்பு பூதங்களால் அதிக சித்திகளடைந்து வாழுங்காலம் இலங்கையைப் பல திக்கிலுமிருந்து ஆண்ட அரசர்கள் ஆடக சவுந்தரியை இலங்கை முழுவதுக்கும் ஏக சக்கராதிபதியாக்கினர்.

ஆடக சவுந்தரியின் பிதாவாகிய அசோதசுந்தரன் அசோககிரியை அரசுசெய்து பரமபதமடையுங் காலம் வரத் தனது புத்திரி இலங்கையை அரசுபுரிவதை அறிந்து அறிந்து ஆடகசவுந்தரிக்கு வேண்டிய திரவியங்களை அனுப்பிவிட்டுப் பரமபதமடைந்தனன். அடகசவுந்தரியும் தந்தை அனுப்பிய திரவியங்களைப் பெற்று ஆளுங்காலம் ஓரிரவு சயனிக்கும் போது இராமமூர்த்தி தெரிசனப்பிரசன்னராகி, ஆடகசௌந்தரியே! நீ திரேதயுக முடிவில் இலங்கையை அரசுபுரிந்த இராவனேஸ்வரனுக்குப் புத்திரியாகப்பிறக்க இராவணேஸ்வரன் சோதிடரை அழைத்து, உனது பிறவிநோக்கைப் பார்வையிட்டுச் சோதிடர் “இந்தப்பிள்ளை இராச்சியத்துக்காகாது” என உமது பிதாவாகிய இராவணேஸ்வரன் உன்னைப் பேழையில் அடைத்து ஆழியில்விட அந்தப்பேழை வடகடல் மருங்காயடைந்து சனகனுடைய யாகஞ்செய்யுமிடமாகிய கடலருகிலடையச் சனகன் உன்னை எடுத்து வளர்த்துப் பருவகாலத்தில் அயோத்தியைப் பரிபாலிக்கும் தசரதன் மகன் சிறிராமனுக்குப் பாணிக்கிரகணஞ் செய்துவைக்கச் சிறிராமனும் பதினான்குஆண்டு வனத்தரசனாகித் தம்பி இலட்சுமணனைத் துணைகொண்டு உன்னையுங் கூட்டிக்கொண்டு போயிருக்க இராவணேஸ்வரன் தங்கையாகிய சூர்ப்பனகி திருச்சிராலில் வாசஞ் செய்து கொண்டிருந்து கங்கைநதித் தீர்த்தமாட வரும்போது சிறிராமரைக்கண்டு மோகங் கொள்ள இலட்சுமணன் காதும், மூக்கும் அரிந்துவிடச் சூர்ப்பனகியும் தனது அண்ணனாகிய இராவணேஸ்வரனிடத்தில் முறைகூற அவனும் உன்னை மாயமாய் இலங்கையில் சிறைவைக்கச் சிறிராமர் அவனைக்கொன்று அவன் தம்பியாகிய விபூஷணனுக்குப் பட்டங்கட்டி அயோத்தி மார்க்கமாகப் போகவேண்டியதால் அனுமானை ஏவிக் காசிநதியில் அவிமுத்தி தீத்தமெடுத்து ஒரு வாவியில் கலந்து இருவரும் ஸ்நானஞ் செய்து பாவத்தை நீக்கி அயோத்திக்குப் போய் வாழுங்காலம் குசன் பிறந்து வால்மீகரால் உபதேசம் அளிப்பித்து பரமபதம் அடைந்தாய். அதேபோல் இச் செனனமும் எடுத்தாய். இப்போது காசி அவிமுத்தி நீர்கலந்த நதி உன்னுடைய ஆசிரமத்திலிருக்கிறது. அந்த நதியை அறியவேண்டில் பசும் சேறாயிருக்கும். குஷ்டரோகிகள் ஸ்நானஞ் செய்தால் உடனே நோய் தீர்ந்து போகுமென்று மறைந்தனர். அரசியும் விழித்து அந்நதியை ஆராய்ந்து கண்டறிந்து பார்க்கும்போது காசி அவிமுத்திநதி கலந்த தெனவறிந்து மாமங்கை நதியென நாமஞ்சாற்றி ஸ்நானஞ் செய்து ஆண்டாண்டுதோறும் தீர்த்தமெடுத்துக் கொண்டு திருக்கோயில் சமுத்திரத்தில் விட்டுக் கலந்து ஆடித்திங்கள்-அமாவாசை அன்று ஸ்நானஞ்செய்து கொண்டாடி வந்தனர். பின்பு ஆடக சவுந்தரியும், நூற்றுப்பதின்மூன்று வருஷம் மட்டும் உன்னரசு கிரியை ஆண்டுவருங்காலம் மட்டக்களப்பையும் ஆடகசவுந்தரியே ஆண்டுவந்தாள். மட்டக்களப்பை ஆண்ட தனசேனனுடைய சந்ததிகள் சவுந்தரிக்குத் துணையாயிருந்தார்கள். மேல் வங்கர்குலத்து மகாசேனன் என்பவன் கலிபிறந்து மூவாயிரத்து முந்நூற்று நாற்பதாம் வருஷம் இலங்கைக்குக் கிரீடாதிபனாக வேண்டுமென்று நினைத்து கலிங்கதேசம் போய்க் கலிங்ககுலத்துத் தத்திசனுடைய சகோதரன் சங்கமிகுந்தனைக்கண்டு சகோதர முகமன் கொண்டாடி ஆகாரமருந்தும்போது, சகோதரா! நான் இலங்கையை ஆளக் கவனங்கொண்டிருக்கிறேன். அதற்கொரு உபாயஞ் சொல்ல வேண்டுமென்று வேண்டினன். சங்கமிகுந்துவும், கேளும் மகாசேனனே! வைதூலியமென்னும் சைவமத்தை வளர்ச்சிசெய்து தட்சண கையிலையில் முற்காலத்திலே தசகண்டராவணன் முக்கோணமுள்ள ஒரு லிங்கத்தை ஸ்தாபித்துக் கன்னியாகுமரி என்று ஏழு நதி உண்டாகிப் பாவநாசச்சுனை என்று நாமஞ்சாற்றி வெகுகாலமாய்ப் பூசித்து வருகையில் தனது தங்கை சூர்ப்பனகை சொற்கேட்டு அயோத்தியை அரசுபுரியும் தசரதச்சக்கரவர்த்தி மகன் சிறிராமன் வனத்தரசனாகிப் பதினான்குவருஷம் தனது மனைவி சீதையோடு தம்பி இலட்சுமணனைத் துணை கொண்டு குகனைச் சினேகம்பிடித்து வாழுங்காலம் இந்த இராவணேஸ்வரன் சீதையை இலங்கைக்குக் கொண்டு வந்து சிறைவைக்க ரகுநாதனுடைய வால்நரர் வீரியர்களைச்சேர்த்து இலங்கையில் சென்று இராவணன், கும்பகர்ணன், அதிகாயன், இந்திரசித்து, மகாமாயன் முதலாம் யாவரையும் கொன்று சீதையை மீட்டு அயோத்திக்குச் சென்று வாழ்ந்தனர். அந்தக் காலந்தொட்டு பூசா ஆரம்பம் நடைபெறச் செய்து. வைதூலிய சைவமதத்தையும் போதித்து வளரும்படி செய்தால் இலங்கைமுழுவதும் உன் கைவசப்படுமென்று செப்பினன். அந்தவார்த்தையைக் கேட்டு மகாசேனன் சந்தோஷமடைந்து, ஆகாரமுண்டு, தாம்பூலந்தரித்து, முகமன் கொண்டாடி காலிங்கநகரம் விட்டு வங்கநாட்டில் சென்று சிவாலயமியற்றும் சிற்பிகளும், ஒரு பெரிய சைனிய வீரியர்களும், அதற்குரிய திரவியங்களும் தயார்செய்து தந்தை வீரசோகனிடத்தில் விடைபெற்று ஒரு படகிலேறித் தென்சமுத்திரஞ் சேர்ந்து தட்சணாகயிலைக் கப்பாலிறங்கி அனுரதன் புரியை அரசுபுரியும் தெத்தீசனைக் கண்டு சகோதரமுகமன் கொண்டாடி வைதூலிய சமயத்தைப் போதித்து அந்த அரசனைக் கைவசப்படுத்தித் தெட்சணாபதி ஆலயமும் நேர்பண்ணி அபிஷேகம் செய்வித்து நெத்தீசனால் மீன வாவியில் ஒரு ஏரியுண்டு பண்ணி வித்து மீனேரி என நாமஞ்சாற்றி அதற்குரிய கழனிகள் திருத்தி அந்த ஆலயத்துக்கீந்து புத்தாலயங்களையும், புத்த விகாரைகளையும் இடிப்பிடித்துத் தானே அரசெனக் கெர்வங்கொண்டு தெத்தீசனையுமடக்கி வாழுங்காலம் மட்டக்களப்பு உன்னரசுகிரியை அரசுபுரியும் ஆடகசவுந்தரி அறிந்து முதலாம் மந்திரியை அழைத்துச் சொல்லுவது:- வைதூலிய சைவன் ஒருவன் வந்து தட்சணாகயிலையில் இருந்து தெத்திசனைத் துணைக்கொண்டு சிவாலயங்களை நேர்பண்ணிப் புத்தாலயங்களை இடிப்பிக்கிறான். அவனை ஒரு சைனியத்தோடு சென்று அவன் நேர்செய்த ஆலயத்தை இடித்துக்கடலில் தள்ளி அவனையும், அவன் துணைவனையும் அடித்துத் துரத்திவிட்டு வரும்படி கட்டளை பண்ணினள். அதனை உணர்ந்த மந்தியும் படைவீரியரோடு புறப்பட்டு ஆறாம்நாள் கொட்டியனூரில் தங்கி மறுநாள் தட்சணாபதியில் சென்று மகாசேனனை கண்டு போர்புரியும் நோக்கம்; கொண்டு பார்க்க மகாசேனனும் மந்திரியை அமர்த்தி அமர்செய்து தெத்தீசனிடத்தில் ஆடகசவுந்தரியின் சம்பவங்களை அறிவித்தான். நெத்தீசனும் மகாசேனனை நோக்கி அன்னவள் மட்டக்களப்புக்குத் தென்பாகமாயுள்ள உன்னரசு கிரியை இராசதானியாக்கி இலங்கை முழுவதுக்கும் சக்கராதிபதியாயிருக்கிறாள். பூதப்டை உடையவன் இராம கோத்திரமுள்ளவள். அந்த அரசியின் பருவம் நூறாண்டுக்குமேல் இருக்கவேணும். இப்போதும் வாலமங்கையாயிருக்கிறாள். மணமுறையில்லை. அந்த அரசியோடு போர் செய்து வெற்றியடைய இயலாத நாங்களிருவரும் உன்னரசுகிரிக்குச் சென்று அரசியோடு சமாதானம் பெற்று வாழவேண்டும். மறுப்புரை சொல்லப்படாதென்று கூற மகாசேனனும் சம்மதமுற்று ஆடகசவுந்தரியின் மந்திரியிடத்தில் விடைபெற்று இருவரும் உன்னரசுகிரிக்குச் சென்று ஆடற்சவுந்தரியைக் கண்டு தங்களுடைய முறையைத் தெரிவித்தனர். ஆடகவசுந்தரியும் மனமகிழ்ச்சி கொண்டு தனது சந்ததியாரென்று சிம்மாசனம் விட்டிறங்கி இருவரையும் ஆசீர்வதித்து அமரச்செய்து சில நல்ல வசனங்களை மூவரும் பேசி, அரசி மகாசேனனைநோக்கி வைதூலிய மென்னும் சைவசமயத்தைக்கேட்டு ஆச்சரியமுற்றத் தானும் அந்தச் சமயத்திலிருக்க விரும்பினள். அதையறிந்த தெத்தீசன் இருவரையும் மணமுறை நடத்திவைத்து மாகாசேனனாலிடித்த விகாரைகளை நேர்பண்ணத் திட்டஞ் செய்து ஒவ்வொரு விகாரைத் தலங்களிலும் கதிரேசனாலயமியற்றுவித்துப் பூதங்களால் ஒவ்வொரு ஏரியுமுண்டாக்கி அதற்குக் காந்தளை ஏரியென நாமஞ்சாற்றி தெத்தீசனிருவரிடத்திலும் முகமன் கொண்டாடி அனுரதன் புரிக்குச் சென்றான். பின்பு மகாசேனனும், மனைவி ஆடகசவுந்தரியும் முகமன் கொண்டாடி அனுரதன்புரிக்குச் சென்றான். பின்பு மகாசேனனும் மனைவி ஆடகசவுந்தரியும் வைதூலியராய் வாழுங்காலம் சிங்ககுமாரனைப் பெற்று மூன்றுவருஷத்தில் ஆடகசவுந்தரி தேகவியோகமானாள். பூதங்களும் காடேறி மறைந்தன. அதன்பின் மகாசேனன் தனது புத்திரனை வளர்த்து இளவரசுடைய புத்திரி தாரகசோதியைப் பாணக்கிரணஞ் செய்து வைத்து மட்டக்களப்பு, உன்னரசுகிரி, தட்சணாபதி மூன்றையும் பட்டங்கட்டி ஆளும்படி முடிசூட்டித் திரிகயிலையில் சென்று சில காலத்தின்பின் கியலைவாசனோடு கலந்து முத்தி அடைந்தனர்.

சிங்ககுமாரன் சரித்திரம்

பொன்னொளி மணிபுரப்பரேடன் பூஷணமிலங்கி மேவ
கன்னியர் கவரிவீசக் கபூதலர் முன்பின்னிற்ப
மன்னுநாள் கலிபிறந்து மூவாயிரத்து முன்னூற்று எழுபதாண்டில்
அன்னவன் சிங்கனாண்ட நாளென அறியலாமே.

சிங்ககுமாரனும் கலிபிறந்து மூவாயிரத்து முன்னூற்றெழுபதாம் வருஷம் உன்னரசுகிரியை இராசதானமாக்கி தட்சணாபதியைத் தன்னிழலிருத்தி மட்டக்களப்பை தனசேனனுடைய புத்திரியின் பிரசேது என்பவனுக்குப் பட்டங்கட்டி முகமன் கொண்டாடி உன்னரசுகிரியிலிருந்து அரசுபுரியுங்காலம் குமாரமங்கலனுடைய இரண்டாம் புத்திரன் கனகசுந்தரன் காளிகட்டத்திலுள்ள முப்பது சிறைக்குடியும் நாற்பது குகன் வீரியக்குடியும் ஏழு மாலிங்கப் பண்டாரக்குடியும் கொண்டு ஒரு படகிலேறி உன்னரசுகிரியாளத்துறையில் இறங்கிச் சிங்ககுமாரனிடத்தில் வந்து உன்னரசுகிரிக்குத் தெற்கிலுள்ள மத்தங்கடவத்தை நாட்டில் குடிபதிந்தனர். குமார மங்கலன் புத்திரன் கனகசுந்தரனைத் திரிகயிலைக்கதிபதியாக்கிச் சிங்ககுமாரன் அரசுபுரியுங்காலம் சோழவமிசத்தைச் சார்ந்த ஆரிய நாட்டுக் காலிங்கை ஆரியன் என்பவன் தனது பந்துமித்திரருடன் சேதுநதியில் தீர்த்தமாடி இராமேஸ்;வரந்தெரிசனை செய்ய வரும்போது மடுவோடை என்னுமிடத்தில் நாகர் குலத்துப் பெண்ணொருத்தி நிற்கக் கண்ட ஆரியன் அந்தப் பெண்ணின் ரூபலாவண்யத்தைக் கண்டு அப்பெண்ணை நோக்கி அம்மணி! நீ யார்? உன் குலமேது? உன்பேர் என்ன? சொல்ல வேண்டுமென வினவினன். அதைக் கேட்ட அப்பெண் நான் நாகர் குலம்@ என்பெயர் நாகபத்தினி@ எங்கள் ஆதீன ஊர் உகந்தகிரிக்கு அருகாயுள்ள நாகத் தீவு@ இதுதான் என்னுடைய பூர்வோத்திரம் என்றனள். ஆரியனும் அம்மணி! உகந்தகிரி எவ்விடம்? நீங்கள் ஆதின ஊரென்று கூறுவதேன்? அதை விபரமாகக் கூறவேண்டுமென விளம்பினன். அப்பெண்ணும் எங்கள் பாட்டன்மார் கூறுகிறார்கள். புவனேகயவாகு என்பவர் வடநாடுவிட்டு தனது மனைவி சிறைத்தளங்களோடு கோணேசர் தரிசனை கண்டு நிற்க நாகர்குலத்துச் சிற்றரசனொருவன் புவனேகயவாகுவை நோக்கி என்னுடைய உத்தரவின்றி இவ்விடம் வரப் படாதெனக் கூறினன். அதனைக் கேட்ட புவனேகயவாகுவும் முன்பின் யோசியாமல் தன்னோடு வந்த படைவீரரை ஏவி எங்களரசனையும், பிரதானிகளையும் வெட்டிச் செயித்து எங்கள் குலத்தவர் யாவரையும் அந்நகரத்தால் அனுப்பிவிட்டு அப்பகுதிகளைத் தன்னிழலிருத்திக் கொண்டானென்றும் அதிலிருந்து வடகடலருகாயுள்ள குடாவைச் சேர்ந்து குடியேறி நாகதீவென நாமஞ்சாற்றி வாழ்ந்ததென்றும் ஆரியனிடம் அந்தப் பெண் தன் மூதாதையர் சொல்லுகிறார்கள் என்று கூற அரியனும் அப்பெண்ணை நோக்கி உங்கள் நாட்டைக்காட்டும்படி வினவி நாகதீவில் வந்து நாகர்குலத்தவரைக்கண்டு புவனேயகயவாகுவின் சில சந்ததிகளையும் விசாரித்து அந்தத் தீவை நகராக்கக் கருதி ஆரிய நாட்டிலிருந்து ஆதிக்குடும்பங்களை வரவழைத்துக் குடியேற்றி அந்தத் தீவுக்கு அரசனாகி ஆரியநாட்டுச் செட்டி குலத்தவர்களை வரவழைத்து வர்த்தகஞ் செய்யத் திட்டஞ் செய்து அத்தேசத்து வீரியர்களை படைத்துணைவராகச் சேர்த்து உன்னரசுகிரி சென்று புவனேயகயவாகுவின் வம்மிசத்தரசனாகிய சிங்ககுமாரனோடு சமராடினன். சிங்ககுமாரனும் பின்னிடாமல் மட்டக்களப்பு அதிபதிகளோடும் தனது படைத்துணைவரோடும் ஆரியனையும் ஆரிய நாட்டு வீரியர்களையும் நாகர்களையும் முதுகிடச் செய்து துரத்திக் கொண்டு தட்சணாபதிக்கப்பால் விட்டுத் திரும்பி உறவுகொண்டாடி அந்த இடத்துக்கு எல்லைக் கல்லும் நாட்டி, அந்த இடத்துக்கு உறவுப் பெற்றாளை என நாமஞ் சூட்டித் திரும்பித் தெட்சணாகயிலையில் சென்று சிங்ககுமாரன் தந்தையாலியற்றிய திருப்பணியை ஆலிங்கனஞ் செய்து உன்னரசுகிரியில் வந்து அரசு செய்து வருங்காலம் ஒருநாள் கொலுக்கூட்டத்திலிருந்து மந்திரிகளை நோக்கி எனது தந்;தை தட்சணாகயிலையில் ஆலயமியற்றிச் சிவபதமடைந்தார். நானுமொரு சிவாலையமியற்ற வேண்டும் அதற்கு நீங்கள் ஆழியின் அருகாலுள்ள ஒரு மலையை ஆராய்ந்து சொல்லுங்களென திட்டஞ்செய்தனன். அதனைக் கேட்ட மந்திரி பிரதானிகள் சிங்ககுமாரனை நோக்கி இராசராசனே! கேளும்:- முற்காலத்திலே இலங்கையை இராசதானியாக்கிப் பரதகண்டத்திலும் சிலபல நகரங்களை ஆண்டு தேவஸ்திரிகளைச் சிறையில் வைத்து அரசுபுரிந்து வந்தான் இராவணேஸ்வரன். இதனால் இவன் நாமம் இராவணேஸ்வரன் என்பதாயிற்று. இவ்விடம் வந்த இயமதன்மன நீ பெரும் பாவியென்று கூறித்தன்னிருப்பிடம் செல்ல இராணவனும் தன் பாவத்தைத் தீர்க்கும் பொருட்டாய் தட்சணாகிரி, உகந்தகிரி என்னும் இருமலைகளிலும் ஆலயமியற்றிப் பூசாரம்பமியற்றி வாழ்ந்து வருங்காலம் இராமமூர்த்தியின் கையம்பால் மாண்டான். அதன் பின் இராவணனுடையசந்ததிகள் சீதையின் சாபத்தால் வேரற்றுப் போனபடியால் தட்சணாகிரி, உகந்தகிரி ஆகிய இரு ஆலையங்களும் ஒரு யுகம்வரையும் பாழடைந்திருக்க உனது தந்தை தட்சணாயகிரி ஆலயத்தைச் செப்பனிட்டு திருக்குளமும் கட்டுவித்து ஆறுகாலமும் பூசை நடைபெறச் செய்து சிவபதம் அடைந்தார். அதேபோல உகந்தகிரியில் ஆலயமியற்றி உமது எண்ணம்போலிருக்கிறதென்று மந்திரிமார் கூறினர். அதையுணர்ந்து சிங்ககுமாரன் பிரதானிகளோடு உகந்தலையில் ஏறிப்பார்த்து மனமகிழ்ச்சி கொண்டு வடநாட்டுச் சிற்பிகளை அழைத்து மலையின் உச்சியிலே சிவாலயம், விஷ்ணுவாலயம், பிரமாவாலயம் மூன்றும் இயற்றுவித்து மலையடிவாரத்து எட்டுத்திக்கிலும் இந்திரன், அக்கினி, இயமன், கிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானியன் என்னும் எட்டு ஆலயம் எட்டுத் திக்கிலும் இயற்றிவித்துச் செப்புக்கொடித்தம்பம் ஒவ்வொன்றுக்கும் நிறுத்தி மலையுச்சியிலே மூன்று ஆலயத்திற்கும் நடுவிலே ஒரு தங்கக் கொடித் தம்பம் நிறுத்தி அந்தணர் புத்தியின்படி அபிசேகமும் செய்து ஆயிரம் ஆவண நெல்-கழனிகள் திருத்திக் குமுகனல் வெட்டு வாய்க்காலிலிருந்து நீர் எடுத்து மூன்று ஏரியில் நிறுத்தி செந்நெல் செழித்தோங்கும்படி செய்து உகந்தைத் திருப்பணிக்கு ஐந்நூறு அவணத்தறையுமீந்து அந்தணர் முதலான ஆலய ஊழியர்களுக்கு இருநூறு அவணத்தறையும் ஈந்து புவனத்திருப்பணி அதிகாரரே எக்காலமும் கடமைக்காரரெனத் திட்டம்செய்து மட்டக்களப்பை அரசுபுரியும் பிரேசேதுவிடம் முகமன் கொண்டாடி ஆடித்திங்கள் அமாவாசை இரண்டு தினமும் இராவணேஸ்வரன் பேரில் உக்கந்தத் திருப்பணியில் பெரிய தீபம் ஒன்று ஏற்றும்படி திட்டம் செய்து அரசுபுரிந்துவருங்காலம் தனது மனைவி தராகத்சோதி வயிற்றிலுதித்த சிறீசிங்கன் பருவகாலமான போது மட்டக்களப்பை அரசுபுரியும் பிரசேதுவின் புத்திரி அரசினாச்சி என்பவளைப் பாணிக்கிரணம் செய்துவைத்து உன்னரசுகிரியையும் பட்டம்கட்டிச் சிலகாலத்தின் பின் தேகவியோகமானார். மட்டக்களப்பையும் பிரசேது தனது புத்திரன் தினகரசேனனுக்குப் பட்டம் கட்டிச் சில காலத்தின் பின் பரமபதமடைந்தான். சங்கனும் கலிபிறந்து மூவாயிரத்து நானூற்றிருபதாம் வருஷம் உன்னரசுகிரிக்கு அரசனாகி மனுமுறையின் படி ஆண்டு வருங்காலம் தனது மனைவி அரசுநாச்சி வயிற்றில் ஒரு புத்திரனும் இரு புத்திரியும் பிறந்தார்கள்.

முதல்புத்திரனுக்கு பானு என்னும் நாமமும், புத்திரிகளிருவருக்கும் செங்கமலம், மகிழ்தாளென்னும் நாமமும் சூட்டி வளர்த்துப் பருவகாலம் முதல் புத்திரன் பானுவுக்கு அனுரதபுரியை அரசுபுரியும் குமாரதீரனுடைய புத்திரி மாணிக்கமுத்தைப் பாணிக்கிரணம் செய்து உன்னரசகிரியையும் பட்டங்கட்டி புத்திரிகளிருவருக்கும் மட்டக்களப்பில் தனது குலத்தவரில் மிதிய அதிபருடைய புத்திரர்களையும் பாணிக்கிரணம் செய்து வைத்து வாழுங்காலம் மட்டக்களப்பை அரசுபுரியும் தினகரசேனனுக்குச் சந்தானமில்லாமையால் சிறிசிங்கன் புத்திரன் பானுவுக்கு மட்டக்களப்பைப் பட்டங்கட்டி உன்னரசுகிரியை மட்டக்களப்போடு சேர்த்தனன். பானுவுடைய காலத்திலேதான் தெற்கு மந்தங்கடவத்தன நாடம், வடக்கு உறவுப் பெற்றானையும், மேற்குக் கவடாவை மன்னம்பிட்டியம், கிழக்கு சமுத்திரமும், சிறிசிங்கன் திககரசேனன் காலத்தின்பின் பானுவும் இலங்கை முற்றிலும் அரசுபுரியும் இராசர்களிடத்திலே முகமன் கொண்டாடி வந்தனர். பானுவுக்குப் புத்திரர் ஐவர். புத்திரிகள் இருவர். முதல்புத்திரன் அமரசேனன் என்பவனுக்கு விசயதுவீபத்தை அரசுபுரியும் குடகனுடைய புத்திரி வருணாளியாளைப் பாணிக்கிரணஞ் செய்து வைத்து மட்டக்களப்பையும் பட்டங்கட்டி சில காலத்தின் பின் பரமபதம் அடைந்தான்.

அமரசேனன் சரித்திரம் - மறவர் வருகை

தினகர சேனன்றானும் பானுவுக்கரசளிக்க
மனுவர முறையாயிந்த மட்டமாங் களப்பையாண்டு
புனிதமற ஈன்றமைந்தன் புகழ் பெறுமமரசேனன்
பனுவளர் கலியுத்த மூவாயிரத்து நானூற்றி அறுபத்தாறே.

அமரசேனன் கலிபிறந்து மூவாயிரத்து நானூற்றறுபத்தாறாம் வருஷம் அரசுபுரியும் போது தனது உடன்பிறந்தாருக்கு இலங்கை பலதிக்கிலும் வதுவை செய்து வைத்து அரசு புரிந்து வருங்காலம் இராமநாட்டு மறவர்குலத்து இராசவம்சத்தைச்சார்ந்த ஏழுபெண்கள் தங்கள் தங்கள் மணமகனுடனும், சிறைதளங்களுடனும் வவனியர்குலத்துக் குருகக் குடும்பம் ஐந்தும் சேர்ந்து மட்டக்களப்பின் பரிசுத்தங்களை அறியும் படியும், வைதூலிய சமயத்தை மாற்றி அரிநமோ என்னும்நாமத்தைப் போதித்து வைக்கவேண்டுமென்றும் கம்பர் இயற்றிய இதிகாசப்பிரதியை எடுத்து இராமநாடுவிட்டுச் சேதுதனில் ஸ்னானம் செய்து இராமேஸ்வர தெரிசனைகண்டு ஒரு ஓடத்தில் ஏறி மண்ணால் இறங்கி திருக்கேதீஸ்வரம், கோணேஸ்வரம் தெரிசனைகண்டு கொட்;டியன் புரத்தில் வந்து மட்டக்களப்பில் அமரசேன அரசனைக்கண்டு தங்கள் வரலாற்றைக் கூறி, வன்னிச்சிமாரென விருதுபெற்று கலைவஞ்சி ஓர் ஊரிலும், மங்கி அம்மை ஒரு ஊரிலும், இராசம்மை ஒரு ஊரிலும், வீரமுத்து ஒரு ஊரிலும், பாலம்மை ஒரு ஊரிலும், தங்கள் தங்கள் மணமகனுடனிருந்து வந்த சிறைகளைக் கொண்டு கமத்தொழில் செய்து வாழ்ந்தனர். மட்டக்களப்பை அரசுபுரியும் அமரசேனன் மனுனேயகயவாகுவாலுண்டாக்கிய ஏரியைச் செப்பனிட்டு கழனிகளில் செந்நெல் விளையும்படியாய்ச் செய்து அரசுபுரிந்து வருங்காலம் கலிங்கநாட்டு விபாலசந்திரசேனர் இலங்கைக்குப் பெருத்த சைனியத்துடன் வந்து புத்தவிகாரைகள் செழிப்புறச் செய்து மட்டக்களப்பில் வந்து அமரசேன அரசனைக்கண்டு சந்ததிமுகமன் கொண்டாடி விருந்துண்டு கலிங்கநகரம் சென்றான். அமரசேனனும் தனது புத்திரன் குணசிங்கனுக்கு மட்டக்களப்பைப் பட்டங்கட்டி சில காலத்தின் பின் பரமபதம் அடைந்தான். குணசிங்கனும் மட்டக்களப்பை அரசுபுரிய வந்தகாலம்.

குணசிங்கன் சரித்திரம்

உலகுள்ளோர் புகழ்ந்து வாழ்த்த உற்றவர் விழுந்து போற்றத்
தலைவனாய் எழுந்து மட்டக்களப்பினில் இருந்தகாலம்
கலைவளர் கலியுதித்து மூவாயிரத்தைந்நூறு கடந்த காலம்
புலவர்கள் பாடச் செங்கோலோச்சினான் புரவரன்றான்.

குணசிங்கன் மட்டக்களப்பைக் கலிபிறந்து மூவாயிரத்து ஐந்நூறாம் வருஷம் பரபாலித்து வருங்காலம் கலிங்க ஓரிசா தேசத்தை அரசுபுரியும் குகசேனனுடைய புத்திரி உலகநாச்சி என்பவள் கௌதமபுத்தருடைய தசனத்தை எடுத்து நெடுங்கூந்தலுள் மறைவாய் வைத்துக் கைலயங்கிரியில் குகவம்சத்தார் முன் காலத்தில் எடுத்துக் கொண்டுவைத்த சிவலிங்கத்தையும் எடுத்துக்கொண்டு தனது சகோதரன் உலகநாதனுடன் தனது தந்தை குகசேனனிடம் விடைபெற்று வர்த்தகருடைய படகிலேறி மணிபுரத்திலிறங்கி விசயதுவீபத்தில் வந்து மேகவண்ணனைக்கண்டு குலங்கோத்திரமெல்லாம் விளங்கப்படுத்திப் புத்தருடைய தசனத்தைக் கொடுத்தாள். மேகவர்ணனும், புத்தமதத்துக்கு இனி அபாயமில்லையென்று அதிக சந்தோஷங் கொண்டு உலகநாச்சியை நோக்கி உமக்கு வேண்டியதைக் கேளுமென்ன உலகநாச்சியும் அரசனே! இந்த இலங்கையில் காடுசெறிந்து குடிவாழ்வில்லாத கிராமமொன்றீயும்படி வேண்டினள். அதைக்கேட்ட மேகவர்ணன் மட்டக்களப்பை அரசுபுரியும் குணசிங்கன் தனது சிநேகிதனாதலால் ஒரு திருமுகம் வரைந்து அதில் உமது மட்டக்களப்பு, உன்னரசுகிரி இவைகளில் காடுசெறிந்து குடிவாழ்வில்லாத பதி ஒன்று இந்த உலகநாச்சிக்குக் கைலஞ்சமாய் ஈய்ந்து கொடுக்கும்படி வேண்டி உலக நாச்சிக்குக் கொடுக்கும் உபகாரங்களையும், இரத்தினமாலையையும் கொடுத்து மட்டக்களப்புக்கு அனுப்பிவைத்தான். அவர்கள் கொங்கு காசி அப்பன்புட்டி வழியாய் வந்து திருமுகத்தைக் குணசிங்கன் கையில் கொடுத்தனர். குணசிங்கனும் திருமுகத்தை வாசித்து சந்ததியுரிமை கொண்டாடி மட்டக்களப்புக்கு வடபாகமாயுள்ள அம்பிலாந்துறைக்கப்பால் மன்னேறிமுனை வளர்ந்து காடுசெறிந்து குடிவாழ்வற்ற பகுதியை நிந்தமாயீந்து ஒரு இடத்தில் குடிகளை அனுப்பி வெட்டித்தூர்த்து மாளிகை உண்டாக்கி உலகநாச்சிக்கீய உலகநாச்சியும் குடிவாழ்ந்து சில காலம் சென்றபின், தனது தம்பி சிவநாதனைத் தந்தையிலிடத்திலனுப்பிக் குகன் குடும்பம் நூற்றாறும், சிறைக் குடும்பம் முப்பதும் எடுப்பித்துக் குகக்குடு;ம்பங்களைத் தன் அருகாயிருத்தி அந்த இடத்தில் ஆலயமியற்றிச் சிவலிங்கத்தை ஸ்தாபித்து வணங்கிவந்தனர். பின்பு இன்னும் ஒரிசாநகரமிருந்து அநேக குகக்குடும்பங்களை அழைத்து காப்புமுனைக் காட்டை அழித்துச் செப்பனிட்டுக் குடியேற்றி அப்பகுதிக்கு அரசியாகி மண்முனையென நாமஞ்சூட்டி வாழுங்காலம் களப்புமுனைக்குத் தென்பாகமாயுள்ள காட்டை அழிப்பிக்கும் போது திடகனென்பவன் கொக்குநெட்டி மரத்தை வெட்ட உதிரம் பாய்ந்தது. அதைக்கண்ட திடகன் தனது உடைத் துணியால் மரத்து வெட்டிவாயைக் கட்டிவைத்துப் போட்டு உலகநாச்சியிடத்தில் வந்து இந்தச்செய்திகளை அறிவித்தான். உலகநாச்சியும் அந்த இடத்தில் போய்ப்பார்க்கும்போது அந்தக் கொக்கு நெட்டிமரத்தடியில் ஒரு இலிங்கமிருந்தது. மறுபேர்கள் கண்ணுக்குப் புலப்படாதபடியால் உலகநாச்சியும் சிவலிங்கமெனத் திட்டம்பண்ணி அவ்வனத்தை அழிப்பித்து தூசி நீக்கி ஆலயமியற்றி வடநாட்டுக் கொல்லடத்திலிருந்து பட்டர் மூவரை அழைத்துப் பூசைபுரியும் படி திட்டம் செய்து, அதிக கழனிகள் திருத்தி குணசிங்கனுடன் பிறந்தானாகிய கிரசரன் என்பவனை மணந்து ஒரு புத்திரனையும், ஒரு புத்திரியையும் பெற்று வாழ்ந்து வருங்காலம் தந்தபுரத்திலிருந்து ஆரம் தொடுக்கும் குடிகள் பதின்மரை அழைத்து தனது குடிக்கருகாயிருத்திப் பத்தனென்பவனை அவர்களுக்குத் தலைவனாய் வைத்து இரண்டு ஆலயத்துக்கும் ஆரங்கட்டும்; குடிகளாக வகுத்தனன். பின்பு கலிபிறந்து மூவாயிரத்து ஐந்நூற்றுமுப்பதாம் வருஷம் குணசி;ங்கனின் புத்திரன் அதிசுதன் என்பவனுக்கு மண்முனையையும் இருதினங்களில் பட்டங்கட்டினன். அதிசுதன் மனைவியின் நாமம் நாமவல்லி, கனகசேனனுடைய மனைவி அருந்தாள். இவர்கள் இலங்கையில் உள்ளவர்கள். இவர்களின் சந்ததிகள் மட்டக்களப்பு, மண்முனை இருபகுதிகளையும் இருநூறு வருஷங்களாக ஆண்டு வந்தனர். பின்பு கலிங்ககுலத்து வங்கலாடன் என்பவன் அரசுக்கு வந்தான்.

வங்கலாடன் சரித்திரம்

திரை செறிந்திலங்குமாழி திடலென வகுத்தயீழத்
தரைதனை அரசுசெய்யச் சைனிய வீரரோடு
விரைவொடு கலிங்கதேசம் விட்டனன் வங்கலாடன்
கரை நகரெனுமிலங்கை கண்டனன் களறுவேனே

கண்டன விலங்கை முற்றும் கலக்கின னரசர் கோவை
பண்டு நாளுரிமை கேட்கப் பகுத்ததோர் முறைமை கூற
வண்டி சைபாடும் மட்டக்களப்பினை வந்து கண்டு
அண்டு நாளரசு செய்தான் என்றனர் புலவர்தாமே.

கலிபிறந்து மூவாயிரத்தெழுநூற்று முப்பத்தைந்தாம் வருஷம் கலிங்ககுலத்துதித்த வங்கலாடன் ஒரு படைத்துணைவரோடு இலங்கைக்கு வந்து குதிரைமலை, அனுரதன்புரி, விசயதுவீபம், காளிதேசம் இவைகளை அரசு செய்யும் அரசர்களை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்று மட்டக்களப்பை இராசதானமாக்கித் திறைவரி பெற்று அரசாண்டு வருங்காலம் மதுரை நகரை அரசு புரியும் செககுணன் என்பவன் இலங்கையை அடைந்து மட்டக்களப்பிலும் வந்து வங்கலாடனைக்கண்டு முகமன்கொண்டாடி மதுரையை அணுகினன். வங்கலாடன் மகன், மகன் மகனின் மகன்மட்டக்களப்பை நூற்றிருபது வருஷம் வரையும் அரசாண்ட நாற்பது வருஷம்வரை இரத்தினவல்லி அரசியின் கீழிருந்து வருங்காலம் சிங்கர்குலத்தில் விரகதன் என்பவன் அனுரதபுரியை அரசுபுரியும் மிகுந்தன் சைனியத்தலைவனாயிருந்து வருங்காலத்தில் தனது மனைவி விரோசனி என்பவள் வயிற்றிற் பிறந்த புத்திரன் இலங்கை சிங்கன் என்பவன் பருவகாலத்தில் மட்டக்களப்பு நிதிய அதிபனானான். குமாரகுணன் புத்திரி சோபனமுத்தைப் பாணிக்கிரகணஞ்செய்து அனுரதன் புரத்தில் முந்நூறு பேர் கொண்ட சைனியவீரரைத் துணை கொண்ட இரத்தினவல்லி நகரத்தரசனை எதிர்த்து மட்டக்களப்பைத் தன் கைவசப்படுத்தி தோப்பாவையை அரசுபுரியும் சேனனுடைய புத்தரி பவளமுத்தைப் பாணிக்கிரகணஞ் செய்து மட்டக்களப்பை அரசுபுரிந்து வருங்காலம் பாண்டியகுமாரன் ஒருவன் தன் தந்தை வைப்பாட்டி மகனுக்கு மதுரை நகரத்தைப் பட்டம்கட்ட பட்டத்துதேவி புத்திரனாதலால் அந்தப் பாண்டியன் தந்தையாய் இருந்தபோதிலும் அவனைக் கொன்று மதுரைமா நகரத்தை அரசாளக்கருதி இலங்கைக்குச் சென்று தோப்பாவையை அடைந்து சேனனிடத்தில் முறை கூறி நின்றான். சேனனும் இவன் தந்தையின் முற்பழிவாங்கலாமென்று மட்டக்களப்பை அரசுபுரியும் தருமசிங்கனோடும், இலங்கை முற்றிலுமுள்ள படைவீரர் மூவாயிரம் பேரோடும், பாண்டிகுமாரன் புனந்துறுவனுடனும் மதுரைக்கு அனுப்பிவிட்டான். அவர்களும் மதுரையை அணுகி மதுரைநகரில் புகுந்து சின்னாபின்னப்படுத்தி பாண்டியனை வாளுக்கிரையாக்கி பாண்டியவீரரில் அனேகரைக்கொன்று அவர்களுடய இல்லத்துக்கெல்லாம் எரிமூட்டி முன்பு இலங்கையின் நின்று மதுரைக்கு; கொண்டு சென்ற நிதிகளையும் கைப்பற்றி பாண்டியகுமாரன் புனந்துறுவனை அரசிருத்தி பத்துவருஷம் இலங்கைக்குக்கீழ் மதுரையை இருத்தி இலங்கைக்கு மீண்டுதரும் சிங்கன் மட்டக்களப்பை அரசுபுரிந்து வருங்காலம் புத்திரரில்லாமையால் கொக்குநெட்டி ஆலயத்தைக் கல்லினால் கட்டி அந்தணர் புத்தியின்படி மதில்மண்டபங்களுமியற்றி மூன்றுரதமும் சோழதேசமிருந்து அழைத்து அபிசேகமும் செய்து சிறைகளும் வகுத்து வாழுங்காலம் ஒரு புத்திரன் பிறந்தான். அப்புத்திரனுக்குக் குமாரசிங்கனென்னும் நாமம் சூட்டி வளர்த்துப் பருவகாலமான போது சேனனுடைய புத்திரியின் புத்திரி சோதிமதியைப் பாணிக்கிரணம் செய்துவைத்து மட்டக்களப்பையும் பட்டங்கட்டி சிலகாலத்தின் பின் பரமபதமடைந்தான்.

குமாரசிங்கன் சரித்திரம்

இரவிகுலத் ததிபனெனும் குமார சிங்கன்
ஏரியெழும் மட்டமென்னும் களப்பு நாட்டை
மருவி அரசியமியற்றுகலி வந்துதித்த நாலாயிரத்தெண்பதாண்டில்;
விரலியதோர் களனிகளும் குடிகள்வாழ் மேதினியோர்
விருதுயர்த்திவிளங்கச் செய்து
கருதலறு முற்குலத்திற் கலந்து வாழ்ந்து வந்தகாமெனப்
புலவரெல்லாம் பாடினாரே.

குமாரசிங்கன் கலிபிறந்து நாலாயிரத்தெண்பதாம் வருஷம் மட்டக்களப்பை அரசுபுரிய மௌலி தரித்து மனுமுறையின்படி இருபது வருஷம் அரசு செய்து வருங்காலம் தனது மனைவி வயிற்றில் ஒரு புத்திரன் பிறந்தான். அப்புத்திரனுக்கு கதிர்சுதன் என்னும் நாமம்சூட்டி வளர்த்துப் பருவகாலமான போது மட்டக்களப்பைப் பட்டங்கட்டி தோப்பாவையை அரசு புரியும் தினசேனனுடைய மகளையும் பாணிக்கிரகணம் செய்து வைத்து தேகவியோகமடைந்தான்.

கதிர்சுதன் சரித்திரம்

மதி சொலித் திலங்கும் மட்டக்களப்பினை மௌனி சூட்டும்
கதிர் சுதன் செங்கோலோச்சும் காலமே கலியுதித்து
முதிய நாள் நாலாயிரத்து ஒரு நூற்றுப் பதினைந் தாண்டில்
பதி யரசாண்டானென்று பாடினர் புலவர் தாமே.

கதிர் சுதன் கலிபிறந்து நாலாயிரத்தொரு நூற்றுப்பதினைந்தில் மட்டக்களப்பு மண்முனை உன்னரசு கிரி இவைகளுக்கரசனாகி தனது படைவீரர்களை மூன்று பகுதிகளிலுமிருத்தி மதபேதமில்லாமலும், நிதிமிடியில்லாமலும் புத்தாலயம், சிவாலயம் இவைகளைச் செப்பனிட்டு அரசர் குடிகளில்லாமல்; மட்டக்களப்பை அரசுபுரிந்து வருங்காலம் வடநாட்டுப் புலவர்கள் இவரைத்தான் இராச இராசரெனப் புகழ்ந்து பாடினர். இவருடைய மந்திரிகள் ஏழு பேர் இவர்களின் நாமம் வவுணசிங்கம், புலியமாறன், சத்துவண்டன், கொட்டகக கச்சன். நீலவண்ணசேனன், அகுராகு, கட்டகமன். இந்த ஏழு மந்திரிகளையும் மட்டக்களப்பு மண்முனை உன்னரசு கிரி இவைகளில் சிற்றரசு மந்திரிகளாக வைத்து மாமி சபோசனத்தை மாற்றி தவாவர போசனவாசிகளாய்த் தனது நகரத்தவர் யாவரையும் மறைநெறியால் திட்டம் செய்து அரசியற்றிவருங்காலம் தனது மனைவி குணவல்லி வயிற்றில் மூன்று புத்திரர்கள் பிறந்திருந்தார்கள். இவன் காலத்திலேதான் வடமதுரையில் இருந்து மகமது சூசினி நிர்ப்பாக்கியத்தால் மூன்று படகுக்குகக் குடிகள் மட்டக்களப்புக்கு வந்து கர்சுரனைக் கண்டு தோப்பாவை தட்சணாபதி மட்டக்களப்பு இவைகளில் குடிபதிந்தனர். இவர்கள் இறங்கிய இடத்துக்குக் கண்டுமுனை என நாமம் சாற்றி, படகு அடைய ஒரு அணையும் ஏற்படு;த்தி வடமரை வர்;கர் போக்குவரத்து செய்யும் துறைமுகமாக்கி வைத்ததனர். அந்தக் துறைமுகத்துக்குக் கல்லேறுமுனைத்துறை என வழங்கி வந்தது.

மதிசுதன் சரித்திரம்

கதிர்சுதனும் தனது புத்திரன் மதிசுதனுக்குப் பட்டங்கட்டி சிலகாலத்தின் பின் பரமபதம் அடைந்தான். மதிசுதனும் பொல்லநறுவையை அரசுபுரியும் மிகுந்தன் புத்திரி மதாகியை மணம் புரிந்து மட்டக்களப்பை மனுமுறைப்படி அரசு செய்துவரத் தேவாலயங்கள் செழிப்புற்று வரவும், கழனிகளில் செந்நெல் செழித்தோங்க மாதம் மும்மாரி பொழிந்துவரவும் தான தருமங்கள் மேலோங்கி மட்டக்களப்பு, மண்முனை, உன்னரசுகிரி இவைகளில் குறைவின்றி வாழ்ந்து வருங்காலம் தனது வயி;ற்றில் பத்து வருஷம் சந்தானமில்லாமையால் இயக்கர் நாகர் என்னும் இரு சாதிகளும், ஒருங்கு கூடி, இயக்கர் இராட்சத சந்ததிகளாதலால் பத்திரகாளி ஆலயமும் நாகர் குருகுல வம்மிசமாதலால் முருகையன் ஆலயமும்; உண்டாக்கி, போர்முனை வீரர்களையும், அந்த இடத்தில் இருத்தி, இயக்கர் மந்திகளாயும் நாகர் இராச்சிய அதிபராயுமிருந்து அரசுபுரியும் காலம் கலிபிறந்து இரண்டாயிரத் தெழுனூற்றொன்பதாம் வருஷம் அயோத்தியில் இரகுவமிசத்தைச் சேர்ந்த கால சேனன் என்பவன் பெருத்த போர்முனைவீரர்களோடு இலங்கையில் வந்து நாகர் இயக்கர்களைச் ஜெயித்து மண்டுநாகனையும், போர்வீரர்களையும், மாடமாளிகைகளையும் உடைத்துத் தள்ளி, அவர்களியற்றிய ஆலயங்களிரண்டையும் இடித்து அரசுசெய்து, விசயகுமாரனால் இறந்தான். அந்தக் காலம் தொட்டு மண்டு நாகன் பகுதி பாழடைந்து இருக்க. மதிசுதனும் முருகையன் ஆலயத்தை நேர்பண்ணக்கருதித் தொண்டை நாட்டுச் சிற்பிகளை அழைத்து, அந்தணர் புத்தியின் படி ஐந்து தட்டுத் தூபியும், கோபுரவாசல் வாகனவீடு, ரதசாலை, மூன்றுசுற்று மதில்கள் தங்கத்தகடு பூட்டிய கொடித்தம்பமுமிட்டுத் தங்கக்குடமும் தூபியின் மேல் நிறுத்தி அபிஷேகமுஞ் செய்வித்து அந்தணர் இருபாகையும் அவர்களுக்கு முதன்மையும் முதன்மைக்குக்குச் சிறைகளும் வகுத்து பூசாரம்பம் நடைபெறச் செய்து சித்திரவேல் ஆலயமென்றும் அந்தப் பகுதிக்குப் போர்முடை நாடென்றும் மண்டுநாகன் இருந்த இடத்துக்கு மண்டுநாகன்சாலை என்றும் நாமம் சூட்டிக் குடிகளையிருத்தி அரசுபுரிந்து வரத் தனது மனைவிக்குப் புத்திரசந்தான முண்டாகி ஒரு புத்திரன் பிறந்தான். அப்புத்திரனுக்கு நாதனென்னும் நாமஞ்சூட்டி வளர்த்து வாழ்ந்து வருங்காலம் நாதன் பேரால் மதிசுதனும் சித்திரவேல் ஆலயத்துக்காதாரமாக ஆயிர அவுணக் கழனிகள் திருத்தி செந்நெல் குறைவின்றி விளையும்படி மேட்டுநீரைத் தகைய ஒரு அணையும் கட்டி மதகுவைத்துக் கழனிகட்குப் பாயச் செய்த நாதனணை என்றும் வேலாயுதர் வெளியென்றும் நாமஞ் சாற்றி சித்திரவேல் ஆலயத்துக்கு ஈந்து அரசியற்றி வருங்காலம் நாதன் பட்டத்துக்குப் பருவகாலமான போது தோப்புவைடி அரசுபுரியும் விசுவதாசனுடைய புத்திரி சித்திரரேகை என்பவளைப் பாணிக்கிரகணஞ் செய்து வைத்து மட்டக்களப்;பையும் பாட்டங்கட்;டிப் பரமபதமடைந்தான்.

நாதன் சரித்திரம்

அலை செறிந்துலகில் மட்டக் களப்பினி லரசு செய்ய
கலை வளர் நாதன் தானுங் கருத்து ஏந்துங் காலம்
சிலை வளர் கலிபிறந்து நாலாயிரத் தெழுநூற் றெண்பதாண்டில்
பலர் புகழ்ந்திருக்கும் நாதன் பட்டமே தரித்த தன்றே.

நாதன் மட்டக்களப்புக்குக் கலிபிறந்து நாலாயிரத்தெழுநூற்றெண்பதாம் ஆண்டில் அரசுக்கு வந்து மனுநீதியின் படி அரசுபுரியுங்காலம் சோழகுலத்துக் குலசேகரன் சோழநாடு விட்டுப்பெருத்த படையுடன் பாண்டிய நாட்டைக் கொள்ளையடித்துப் பாண்டியனையும் வெட்டிக் கொன்று அந்நகரத்தைத் தன்னிழலிருத்தித் தமிழ் வாசிகளை நாமதாரிகளாக்கிக் குலசேகரன் தனது படைவீரர்களோடு இலங்கையில் வந்து மண்ணாறு, முள்ளுத்தீவு, கொட்டினூர் இவைகளிலுள்ள தமிழர்களை அதட்டிப் பயமுறுத்தி நாமதாரியாக்கி அந்நாட்ட அரசினர்களையும் அஞ்சச் செய்து மட்டக்களப்பில் வந்து நாதனைக் கண்டு நீயும் உன் பிரசைகளும் நாமதாரியாயிருக்க வேண்டுமெனச் சம்மதமுடன் வேண்டினன். அதற்கு நாதனும் சம்மத முற்றுத் தத்தஞ் செய்து கொடுத்தனன். பின்பு கலசேகரனும் தனது படைவீரரோடு திசைமாறாமையிற் சென்று லோகேஸ்வரனைக்கண்டு இருவரும் முகமன் கொண்டாடி நாமதாரிகளாயிருக்கச் செய்து விருந்துண்டு தனது நகரஞ் சென்றனன். பின்பு நாதன் மட்டக்களப்பைச் சோழ குலத்துக் குலசேகரன் நிழலில் மாற்றி அரசுபுரியுமாப் போல தமிழர்களை நாமதாரியாருக்க வைத்துத் தனது புத்திரராயிருவரில் முதல் புத்திரன் தினசிங்கன் பருவமானபோது சோழநாட்டை அரசுபுரியும் வீரசோழனின் புத்திரி இராச சுந்தரியைப் பாணிக்கிரகணஞ் செய்து வைத்து மட்டக்களப்பையும் பட்டங்கட்டி மறுபுத்திரனுக்கு இராசசுந்தரியின் உடன் பிறந்தாளாகிய மதிகுணத்தையும் பாணிக்கிரகணஞ் செய்து வைத்துச் சிலநாள்சென்ற பின்பு தேகவியோகமடைந்தான்.

தினசிங்கன் சரித்திரம்

கரி அரி கலந்து வாழும்காசினி புகழும் மட்டம்
புரிகளப்பதனை நாதன் புத்திரன் செங்கோலேந்துங் காலம்
பரிகலி பிறந்த நாலாயிரத்திருநூற்றிருபது பகுத்த நாளில்
திரிபுரம் சிறந்தெறிப்பத் தினசிங்கன் வந்த ஆண்டே

தினசிங்கன் கலிபிறந்து நாலாயிரத்திருநூற்றிருபதாம் வருஷம் மட்டக்களப்பை அரசுபுரிய வந்தபோது மணிபுரத்தை அரசுபுரியும் நாகர் குலத்துத் திரிதாட்டிக ஆரியனைச் சினேகம் பிடித்து மணிபுரத்தில் வர்த்தகஞ் செய்யும் சிலரை மட்டக்களப்பில் வரவழைத்து மட்டக்களப்புப் பலதிக்குகளிலும் இருத்தி அரசுபுரிந்து வந்தான். அந்தக் காலத்திலே தமிழ் மதமருகிப் போகச் சமணமதம் பெருகி வந்தது. தினசிங்கன் குலமானபடியால் அவன் கலிங்கர் வங்கர் முற்காலத்திலேயியற்றிய தேவாலயங்களையிடித்துச் சோழநாட்டுப் படகுகளிலனுப்பி முகமன் பெற்று வந்தான். அதைக் கண்ட கலிங்கர் வங்கர் மனவருத்தமுற்றுப் பயங்கரங் கொண்டிருந்தனர். தினசிங்கன் தனது மைத்துனன் தோப்பாவைக்கு அரசுக்கு வந்தபோது அவனுடன் சினேகம் பிடித்துத் தமிழ் ஆலய நிதியங்களைச் சோழ நாட்டுக்கு அனுப்பினன். இவன் மைத்துனன் அணிகங்கன் தினசிங்கன் மந்திரி இருவரும் படையாட்சி குலம். இவர்களின் நாமம் சம்பன், சதாங்கன், தினசிங்கன் கொலுக்கூட்டத்திலிருந்து மந்திரியிருவரிடத்திலும் நாட்டு வளப்பங்கேட்டு முடிவில் மந்திரியிருவரையும் நோக்கி இனி வரப்போகிற காரியமென்னவென வினவினன். அதை உணர்ந்த மந்திரிமார் அரசனே கேளும், கலி;ங்ககுலம் மகாவம்மிசம். அவர்களில் வங்கர் குலங்கலந்ததால் கெங்கர்குல மறைந்து கலிங்கர் காலிங்கர் குலமென வழங்கி வந்தது. அவர்களுடைய குலந்தான் இந்த மட்டக்களப்பை உண்டாக்கியது. அவர்கள் இயக்கர் நாகரைத் துரத்திச் சுயதேச மென்றும் அரசுபுரிந்தனர். சிவாலயங்கள் எந்தக் குலத்து அரசர்களியற்றினாலும் கலிங்ககுலத்ததிபருக்கே முதன்மை கொடுத்து வாழ்ந்தவர். இப்போ நீர்சோழகுலத்தில் கலந்து சோழரைத் துணைக் கொண்டு தமிழ் மதங்களை மாற்றி ஆலய நிதியங்களையும் சோழநாட்டுக்கு அனுப்பிவிட்டீர். அதனால் கலிங்கரால் சில துன்பம்வர வேண்டியது அறிந்துகொள்க. இன்னும் கலிங்கதேச வர்த்தகப்படகும் மணிபுரத்தில் ஊடாடுகிறது அறிந்து கொள்க என்று மந்திரிமார் கூற தினசிங்கன் ஆலோசனை செய்து கொலுக்கலைந்து தனதுஇருப்பிடம் போய் மறுநாள் மைத்துனனை அழைத்து வரும்படி மந்திரி ஒருவனை தோப்பாவைக்கனுப்பி அழைத்து அணிகங்கனிடத்தில் மந்திரிமார் கூறியதை விளங்கச்செய்து இருவரும் ஆலோசனை செய்து காலிங்க குலத்து நிதிய அதிபர்களைச் சோழநாட்டில் சிறைவைக்க ஆதாரந் தேடினர். இந்த சந்தர்ப்பங்களை அறிந்து கலிங்கன் குலத்து சுகதிரன் என்பவன் தினசிங்கன் இவனின் தந்தை நாதன் இவர்கள் சோழரில் கலந்து இலங்கை முற்றும் நாமதாரியாக மட்டக்களப்பிலுள்ள சிவாலயங்களையிடித்து அதிலுள்ள நிதியங்களையும் சோழநாட்டுக்கனுப்பிவிட்டு எங்கள் குலத்தவர்களையும் சோழநாட்டில் சிறை வைக்கக் கருதுகிறார்களென்றும் ஒரு திருமுகம் வரைந்து மூன்று வேவுகாரரிடம் கொடுத்துக் கலிங்க தேசவர்த்தகப் படகிலேற்றி அனுப்பிவிட்டான். பின்பு அய்யமுற்றவர்களை அஞ்சாநெஞ்சராயிருக்கும்படி திடஞ் செய்து வைத்தனன். பின்பு கலி;ங்க தேசம் சென்ற வேவுகாரர் அந்நகரஞ்; சேர்ந்து கலிங்க தேசத்தை அரசுபுரியும் மனுவரதனிடம் கொடுத்து இருகரங்களையும் கூப்பி நின்றனர். மனுவரதன் திருமுகத்தை வாசித்துத் தனது மூன்றாம் புத்திரன் மாகோனை அழைத்துச் சங்கற்பங்கூறி இரண்டாயிரம் பேர் கொண்ட சைனியங் கொடுத்து இலங்கை முற்றிலும் தமிழ் மதம் வளரச் செய்து மட்டக்களப்பையும் சுகதிரனுக்குப் பட்டங்கட்டி வரும்படி திட்டஞ்செய்து அனுப்பி விட்டனர். மாகோனும் படைவீரரும் வேவுகாரருக்கு யுத்தப்படகிலேறித் தென் சமுத்திரஞ் சேர்ந்து மணிபுரத்திலிறங்கி அந்நகரத்து நாகர் குல அரசனைக் கண்டு சோழன் செய்த நிபந்தனைகளை விசாரித்து மட்டக்களப்பில் வந்து கலிங்க குலத்துச் சுகதிரனைக் கண்டு குலமுகமன் கொண்டாடி விருந்துண்டு தினசங்கன் மனைவி மக்கள் அவன் தம்பி முதலாகிய சந்ததிகள் யாவையும் தனது வாளுக்கிரையாக்கி நாமதாரிகளைப் பிடித்துக் கண்களைப் பறித்து முழங்கால் சில்லுகளை எடுத்துவிட்டும் சிலரை வாளுக்கிரையாக்கினன். அதை அறிந்த சிங்கன் குலத்தவர்கள் பெருந்திரளாகத் திரண்டெழுந்து மாகோனை எதிர்க்க மாகோனும் படைவீரரும் சிங்கன் குலத்தவரை வாளுக்கிரையாக்கிச் சில சிங்கரையும் மட்டக்களப்பாலகற்றிவிட்டு மட்டக்களப்பைத் தன்னிழலிலிருத்தி காலிங்க குலசுகதிரனுக்குப் பட்டங்கட்டிப் பின்பு இலங்கை முற்றும் தன் கைவசப்படுத்தித் தோப்பாவையிற் சென்று அணிகங்கன் என்பவனை வாளுக்கிரையாக்கி தோப்பாவையில் உள்ள புத்தவிகாரை புத்தாலயங்கள் எல்லாமிடிப்பித்துப் புத்தகுருக்களை எல்லாம் தேடிப்பிடித்துச் சிறைப்படுத்தி வைத்து இலங்கை முற்றுக்கும் தோப்பாவை இராசதானியாக்கி அரசு செய்து வாழுங்காலம் இலங்கை முற்றிலுமுள்ள காலிங்க குலத்தவர்களுக்குத் தேசராசகுலமென விருதுகளுயர்த்திக் கதிர் காமத்திலும் விசைய துவீபத்திலும் சிவாலயமுன்னீரும் பெற்று மட்டக்களப்புக் கலிங்கரே எக்காலமும் இராசராகவும் படையாட்சி வங்கர் இரு குலத்தவரும் மந்திரியாகவும் வரவேணுமெனத் திட்டஞ் செய்து வட இலங்கையென இராமேஸ்வரத்தை இலங்கையோடு சேர்த்து மாகோன் தோப்பாவையிலிருந்து அரசுபுரியக் கலிங்கதேசத்தை அரசுபுரியும் மனுவரதன் தனது புத்திரன் மனுவரசனுக்குச் சகோதரி மதிசுந்தரியின் புத்திரி அதிமதியை மணமாலைசூட்டி வைத்தான். மாகோனும் குலவரிசை ஏற்படுத்தி மட்டக்களப்பு முழுவதும் தமிழ் மதமே வளரச் செய்து வைத்தனன்.

சுகதிரன் சரித்திரம்

அலி கங்கரன் றனை வதைத்து மாகோனாலரசு
பெற்ற ஆழி சூழும்
பனிசூழும் மட்டுமன்னுங் களப்பு நாட்டைக் கலியுதித்து
நாலாயிரத்து இருநூற்று ஐம்பதில் பரிவினோடு
மணிவயிர முடி தரித்தான் மாகோனும் புகழ்ந்திருக்க
மனுக்கள் போற்ற
தணிகை வளர் குகநாடு தழைத்த தென்னக் கழனி செந்நெல்
மேலோங்கித் தரித்த தன்றே.

சுகதிரன் கலிபிறந்து நாலாயிரத்திருநூற்றைம்பதில் மட்டக்களப்பை அரசு புரிய வந்தபோது மாகோன் என்பவன் புலியமாறன் மந்திரியாயிருந்த ஊரில் ஒரு சிறிய கோட்டை செங்கல்லாலியற்றி சுகதிரனுக்கு இராசதானமாக்கி வைத்து தோப்பாவை அரசுபுரியும் போது சுகதிரனும் மாகோனாலியற்றிய இராசதானமாயிருக்கும் இடத்துக்கு மண்முனை வடபகுதி என நாமஞ்சாற்றி அரசுபுரியும் போது தோப்பாவையிலிருந்து மாகோன் தனதிருப்பிடம் வந்து போகும் படி ஒரு பாதை ஏற்படுத்தினன். பின்பு சில நாளைக்குப் பின் மாகோனை அழைத்துச் சில நல்வசனம் பேசுவதற்காக அழகு செறிந்த பந்தல் விதானங்கள் செய்து தோப்பாவை அரசுபுரியும் மாகோனுக்கு ஒரு வரவுப் பத்திரமனுப்பி விட்டான். மாகோனும் சுகதிரனுடைய பத்திரத்தைக் கண்ட மனமகிழ்ச்சி கொண்டு சிறு போர்முனை வீரரோடு பட்டத்து யானை மேலேறி மட்டக்களப்புக்குவரச் சுகதிரனும்பிரதானிகளோடும் மட்டக்களப்புத் திக்கதிபரோடும் தானிய பந்தலில் சந்தித்து இருவரும் சுகதிரன் மாளிகையிலிருந்து மட்டக்களப்புச் சுகசெல்வங்களைப் பேசி விருந்துண்டு மாகோன் எழுதினம் சுகதிரனுடனிருந்து தோப்பாவைக்குச் சென்றனன். பின்பு சுகதிரன் மட்டக்களப்பை மனுமுறையின்படி அரசுபுரிந்து வருங்காலம் தனது மனைவி வயிற்றில் ஆறுபுத்திரர் பிறந்தார்கள். அவர்களின் நாமம்:- சமுகதிரன், தருமதன், சி;ங்கதன், செகதிரன், மற்ற இரண்டு புத்திரியின் நாமம்:- குமாரபத்தினி, குணபத்தினி, இவர்கள் அறுவரில் முதற்புத்திரன் சமுகதிரனுக்கு மண்ணைப் பகுதிக்கதிகாரம் செய்யும் இராமசுந்தரன் புத்திரி மானிநாச்சியைப் பாணிக்கிரகணஞ் செய்து வைத்து மட்டக்களப்பையும் பட்டங்கட்டி அரசு செய்யும்படி மாகோன்சம்மதப்படி திட்டஞ் செய்தனன். மற்ற ஐந்து புத்திரர்களுக்கும் மட்டக்களப்பு நிதிய அதிபருடைய புத்திரி புத்திரர்களுக்கு பாணிக்கிரகணஞ் செய்து வைத்துச் சமுகதரனுக்குப் பட்டங்கட்டிப் பதினைந்தாம் வருஷம் சுகதிரன் தேகவியோகமடைந்தான். மாகோனுடைய மனைவி அதிமதி வயிற்றில் நான்கு புத்திரர் பிறந்தனர். முதல் புத்திரன் வரதகுணன் என்பவனுக்குத் தனது உடன்பிறந்தாள் மவுனசுந்தரியின் புத்திரி கனகமுத்தைப் பாணிக்கிரகணஞ் செய்துவைத்துத் தோப்பாவையும் பட்டங்கட்டினன். மட்டக்களப்பைச் சமுகதிரன் நாற்பது வருஷம் ஆண்டபின் அவனின் புத்திரன் பரதசுந்தரன் அறுபது வருஷம் ஆண்டு அவனின் புத்திரன் இராசசந்திரன் பதினாறு வருஷம் ஆண்டு அவனின் புத்திரன் யாகசேகசேனன் ஐம்பது வருஷம் ஆண்டு அவனின் புத்திரன் குசசந்திரன் பத்து வருஷம் ஆண்டு வந்தனர். பின்பு மட்டக்களப்பை நான்கு பாகமாக்கிப் படையாட்சி குலத்தவர்க்கு மண்முனை வடபகுதியும், காலிங்ககுலத்தவருக்கு மண்முனைப்பகுதியும் வங்கர் குலத்தவருக்கு மட்டக்களப்பும் சிங்கன்குலத்தவருக்கு உன்னரசுகிரியும் நான்கு குலத்தவரும் எழுபது வருஷங்களாகச் சம்மதமுற்று ஆண்டு வந்தனர். பின்பு சிங்கன் குலத்தவர் மேலேழுப்பி வங்கர் குலத்தவர்களைத் துணைக்கொண்டு விசயதுவீபத்தை இலங்கை முற்றுக்கும் மத்திய தலமாக்கி மண்முனைக்களப்புக்கு வடக்கே கோறளை நகராக்கி வங்கர், சிங்கர், படையாட்சி மூன்று குலத்தவரையும் குகன் குலத்தவரெனத் திட்டஞ் செய்து மட்டக்களப்புக்குத் திக்கதிபராகத் திட்டஞ்செய்து ஆண்டனர். விசயதுவீபம் மத்திய நகரானவுடன் இலங்கை முற்றிலுமுள்ள நடுநீதிகளை மத்திய இராசதானத்திலே விளங்கிக் குற்றஞ் செய்த வரைக் கண்டிக்கும்படியாய் மட்டக்களப்புக் குடாநாட்டு அனுரதன்புரம், வதுளா, மண்ணாறு, காளி, அம்மான்தோடை, இரத்தினவல்லிநாடு, முள்ளுத்தீவு, தட்சணாபதி, கொட்டியனூர், தோப்பாவை, நூரெலியா இவ்வளவு நாட்டதிபர் சம்மதமுற்றுக் கைச்சாத்திட்டனர். அதற்காகச் சிங்கதுவீபமென்பதை மாற்றிக் கண்டி நகரென்று அரசாண்டனர். கண்டி நகராகிய சிங்கன் குலத்தவர் முப்பத்தெட்டு வருஷம் மட்டக்களப்பை அரசுபுரிந்து வருங்காலம் இவர்களுக்குள் கலகம் உண்டாகிதோப்பாவையிலதிகாரஞ் செய்யும் கலிங்க குலத்துமாருதசேனன் இலங்கைப் பல பகுதிகளிலுள்ள திக்கதிபர்களைத் துணைக்கொண்டு மத்திய நகரத்தரசனை எதிர்த்துத் தோப்பாவை முன்போல் இராசதானமாக்கித் தன்நிழலிருத்தி அரசுபுரியும்போது போர்த்துக்கீசரும் மண்ணாறு, மணற்றிடர் என்பவைகளைக் கைப்பற்றினர். இதையறிந்த மட்டக்களப்புக்கதிபதிகள் மாருததேனனிடத்தில் மட்டக்களப்பையும் ஒப்புக்கொடுத்துத் திக்கதிகாரராயிருந்தனர். மாருதசேனனும் தனது புத்திரன் எதிர்மன்னசிங்கம் என்பவனுக்குத் தோப்பாவையையும் மட்டக்களப்பு, உன்னரசுகிரி, மண்முனை, கோறளையிவைகளை, கலி உதித்து நாலாயிரத்து அறுநூற்று நாற்பதாம் வருஷம் பட்டங் கட்டினன்.

எதிர்மன்ன சிங்கன் சரித்திரம்

கார்தொலைப்பானென யிலங்கைக் கனகமுடி மன்ன ரெல்லாங் களித்து வாழ்த்தச்
சீர் லங்கும் மட்டமெனுங் களப்பு நாட்டைச் சிறந்த கலிபிறந்து நாலாயிரத்தறு
நூற்று நாற்பதாண்டில்
பார்செழிக்க முடிபுனைந்தான் தோப்பாவைப் பண்டதாக்கி பருதிகுலன் பவனி யாய
தேரினிடம் வலந்திரிந்து செங்கோலோச்சு மதிப்பவரசர் மரபனென்னும்
எதிர்மன்ன சிங்கன் தானே.

மாருதசேனனுடைய புத்திரன் எதிர்மன்ன சிங்கன் அரசுக்கு வந்தபோது வர்த்தகசாலைகளும், வைத்தியசாலைகளும் மட்டக்களப்பு, உன்னரசுகிரி, போரமுனை நாடு, மண்முனை, கோறளைநாடு இவைகளியற்றி வைத்து முன்னவர்களியற்றிய ஏரிகளைச் செப்பனிட்டுக் கழனிகளில் செந்நெல் விளைவுறும்படி செய்வித்துத் தானியசங்கமொன்று ஏற்படுத்திக் கல்விச்சாலைகள் பல திக்குகளிலுமுண்டாக்கிச் சிதைவுற்ற சிவாலயங்களைச் செப்பனிட்டு ஆறுகாலம் பூசைபுரிவித்துத் திக்கதிபதிகள் வைத்து அரசு புரியுங் காலம் வடநாட்டுக் கொங்கு நகரிலுள்ள தாதன் என்றொருவன் விஷமத் தனத்தைப் போதிப்பதற்காகத் துபாபர யுக முடிவில் அத்தனாபுரியை அரசுசெய்த குருகுலத் ததிபர் நாகர் குலத் துரியோதனாதிகள் பாண்டுவின் குலத்துத் தாமர்களுக்குச் செய்த அபராதங்களையும் மகாபாரதத்தோடு சேர்த்துப் புலவர்களால் பாடிய இதிகாசத்தை மடலில் வரைந்து எடுத்துக்கொண்டு காவிகமண்டல தாரிகளாய் வேடம்பூண்டு கோங்கு நாடு விட்டு இலங்கையில் மட்டக்களப்புக்கு வந்து நாகர் முனைத் திருக்கோயிலைக் கண்டு தெரிசனை செய்து மகாபாரத இதிகாசத்தை அவ்வாலயத்தில் போதித்தனன். அதையறிந்த திக்கதிபரொருவர் எதிர்மன்னசிங்க நிருபனுக்கு அறிவித்தனர். எதிர்மன்ன சிங்க நிருபனுக்கு அறிவித்தனர். எதிர்மன்னசிங்க நிருபன் திருக்கோயிலுக்குச் சென்று தாதனைக் குலம் கோத்திரம், நாமம், சுயநாடு இவைகளை அறிவிக்கும் படி கூறினன். தாதனும் அரசனை நோக்கி அரசே, என்குலம் வசியன். என் நாமம் தாதன். என்னுடைய கோத்திரம் விஷ்ணு. என்னுடைய நாடு கோங்கு நகர். நான் பாண்டவகுலத்துத் தருமாதிகளுக்கு நாகர் குலத்துத் துரியோதனாகிகள் செய்த தீமைகளைக் காண்பி;க்கும்படி வந்தேன் என்று கூறினன். எதிர்மன்னசிங்கனும் அதனை அறிவிக்கும் படி வேண்டினன். தாதனும் அரசனை நோக்கி அரசே! பஞ்சபாண்டவர்களைத் துரியோதனாதிகள் சகுனி என்பவனைத் துணைக்கொண்டு இந்திரப்பிரசித்தத்தை அத்தினாபுரத்தோடு சேர்த்து அரசாளக் கருதிச் சகோதர உரிமை கொண்டாடி விருந்தழைத்துச் சூதாடி வெற்றிகொண்டு இந்திரப்பிரசித்தை அத்தினா புரத்தோடு சேர்த்துப் பஞ்சபாண்டவர்களை வனவாசம் போகும்படி திட்டஞ்செய்து துரியோதனுடன் பிறந்த துச்சனன் என்பவன் பாஞ்சாலனுடைய புத்திரி துரோபதியினுடைய உடைத்துகிலை உரியப் பஞ்சபாண்டவர் முன்பாகத் துரோபதியின் மயிரைப்பிடித்து வந்து துகிலைக் கிளைய, விதுரன் அதைத் தடுக்கப் பஞ்சபாண்டவர் தங்கள் இந்திரப்பிரசித்த நாட்டை இழந்து காட்டிற் சென்றதும் பின்பு பாண்டவர்கள் துரியோதனாதியரைக் கொன்றதும், அரவானைக் களப்பலி செய்ததும், பாத்தன் சிவனிடத்தில் பாசுபதம் பெற்றதும், பெற்ற பின்பு அக்கினி குளித்து மீண்டு இந்திரப்பிரசித்தம், அத்திபுரம் இவைகளை அரசுசெய்துங் காண்பிக்க வேண்டும். அதற்குச் சமுத்திரக்கரை அருகும் வடவால் நிறைந்தவிடமும் அதற்கு அப்பால் வனமுமிருக்குமிடத்தில் தான் காண்பிக்க வேண்டுமென்று வேண்டினன். அரசனுஞ் சம்மதமுற்றுத் திருக்கோவிலிலிருந்து கடலருகாய் வரும்போது தாதன் வேண்டியபடியிருந்தது. அந்த இடத்தில் பாண்டவருடைய உறுப்பை ஆறுபேருக்கு உண்டாக்கி அதனை நம்பும் படி தீ வளர்த்து அதிலிறங்கி மீண்டு காட்டினன். அரசனும் மகிழ்ந்து ஆலயமுண்டாக்கிப் பாண்டுறுப்புமுனை என நாமஞ்சாற்றி வங்கர் குலத்துத் திக்கதியரே பரிபாலக்கும்படி திட்டஞ் செய்து தன்னிருப்பிடஞ் சென்றனன். பின்பு எதிர்மன்னசிங்கன் மனுநூலோங்க மட்டக்களப்பை அரசாளும்போது வடநாட்டு அண்ணாமலைச் செட்டிகள் வர்த்தகஞ் செய்ய மட்டக்களப்பு நாப்புட்டிமுனைக்கு மேற்கில் வர்த்தகச் சாலை, கிட்டங்கி வீடுகளியற்றி வர்த்தகஞ் செய்தனர். அந்தக் காலத்தில் காட்டான், பட்டாணி, சுல்தான். சீகந்தர், வேரடியோடு வர்த்தகஞ் செய்வதற்காகச் சில துலுக்க குடும்பங்களுடன் மண்முனைக்கடுக்கப் பாளையம் போட்டு வர்த்தகஞ் செய்தனர். எதிர்மன்ன சிங்கன் நாற்பதுநான்கு வருஷம் மட்டக்களப்பை அரசு புரிந்து தேகவியோகமாக மத்திய நாட்டுக்குக் கீழ் மட்டக்களப்பு இருந்தது. அந்தக் காலத்தில் மத்திய நாட்டுக்கு அரசன் இராசசிங்கன். கலிபிறந்த நாலாயிரத்து அறுநூற்று எண்பதாம் வருஷம் போத்துக்கீசர் மட்டக்களப்பை ஆதீனப்படுத்தி கோட்டை கட்டக்கோலினர். மட்டக்களப்பில் கலிங்கர் வங்கர் குலத்தவர்களுக்கு நிலைமை என உத்தியோகம் வகுத்து அரசாண்டனர். போர்த்துக்கீசர் மட்டக்களப்பை பதினெட்டு வருஷம் ஆளும்போது கோட்டைகட்டக் கல்லுக் குறைவாய் இருந்தபடியால் காளிசேனனுடைய கோட்டைக்கருகாயிருந்த களப்பினில் கல்லிருக்க அதிலிருந்து சமுத்திரவழியாய்க் கல்லெடுத்துக் கோட்டைத்தானத்தில் கொண்டுபோய்ச்; செல்ல வருத்தமாயிருந்தபடியால் மண்முனையிலும், போரமுனையிலுமிருந்த மேட்டைவெட்டிக் களப்பிலிறக்கி ஓடங்கள் விட்டுக் கல்லெடுத்து கலிபிறந்து நாலாயிரத்தெழுனூற்றி ருபத்திரண்டாம் வருஷம் போர்த்துக்கீசர் புலியமாறனுடைய கோட்டை முற்றுவித்தனர். இதற்குமுன் இவைகள் களப்புமேடு போரமுனை மேட்டில் சித்திரவேல் ஆலயம் பட்டர்களிருந்த இடம். அந்தக் காலத்திலே மத்தியநகரை அரசுபுரிவது விமலதர்மன். போர்த்துக்கீசரும் விமலதருமனை எதிர்த்துச் சித்திபெறாமையால் போர்த்துக்கீசர் மணற்றிடர்ப் பண்ணையில் பெரிய கோட்டைகட்டி இராசதானமாக்கி மண்ணாறு, திரிகோணைப்பதி, முள்ளுத்தீவு, காளி தேசம், மட்டக்களப்பு இவைகளை ஆதினமாக்கிப் போர்த்துக்காலிலிருந்து கிறீஸ்த மதவாசிகள் அநேகரை வரவழைத்துப் பண்ணையிலுங் காளியிலும் கிறீஸ்த மதத்தை வளர்ச்சியுறச் செய்து அந்நரகத்துப் பிரபுக்களை அச்சமயவாசிகளாக்கிப் பண்ணைப்பதியை அறுபத்துநான்காகப் பிரித்துக் கிராமமாக்கிக் கிறீஸ்த மதவாசிகளுக்கு இராசதொரென்னும் உத்தியோகத்தை நிருபித்துக் கிறீஸ்துமத ஆலயங்கள் அறுபத்து நான்கு கிராமங்களிலும் வகுத்துப் புத்தாலயங்கள் தேவாலயங்களையிடிப்பித்து அரசுபுரியும்போது மத்திய பகுதியை அரசுபுரியும் விமலதருமனுக்கு மட்டக்களப்பிலுள்ள நிதியதிபர்கள் மட்டக்களப்பிலும் கிறீஸ்துமதத்தைப் பரப்பியதையும் அறிவித்தனர். அதை அறிந்த விமலதருமன் மலாயவீரர்களை அழைத்து மட்டக்களப்பால் போர்த்துக்கீசரை அகற்றிவிட்டுக் காவல் வைத்து மத்திய நகரத்தின் கீழ் மட்டக்களப்பையிருத்தினன். இந்தச் சம்பவங்களை அறிந்த நாடாரும் நம்பிகளும் ஒத்துக்குடா யாழ்ப்பாணத்தில் இருந்த கந்தப்பரிடம் எங்களையும், எங்கள் கண்ணகை அம்மன் விக்கிரகங்களையும் மட்டக்களப்பில் கொண்டு குடியிருக்கும்படி வேண்டினர். கந்தப்பரும் ஆலோசனை செய்து இனி இந்தநகரம் தமிழ்விலகிக் கிறிஸ்தவமே பெருகிவருமென்று நினைந்து தனது மனைவியிறந்தபடியால் புத்திரி பக்குவவதியாயிருந்தபடியாலும் ஏழுநாடார்க் குடும்பங்களையும் ஏழு கண்ணகை அம்மன் விக்கிரகங்களையும் ஏழு ஆலய ஊழியக் கோவியக் குடும்பங்களையும் மூன்று நம்பிக் குடும்பங்களையும் அவர்கள் வயிரவ விக்கிரகங்களையும் தயார்செய்து தனது சகோதரி மயிலியர், செம்பியார் புத்திரி மூவருடன் ஒரு சிறு படகிலேறி மட்டக்களப்பு மண்முனையிலிறங்கி காலிங்க குலத்து மண்முனைக்கடுக்க ஒரு கிராமமியற்றி ஏழு கண்ணகை அம்மன் விக்கிரகத்தையுமிருத்திப் பூசை புரிந்து வரும்படி ஏழு நாடாரையும் திட்டஞ் செய்து கோவியரைக் கண்ணகை அம்மனுக்கு தனக்கும் ஊழியஞ் செய்யும்படி செய்து ஒரு இடத்தில் மாளிகை இயற்றி இருக்க மட்டக்களப்புத் திக்கதிபனொருவன் மத்திய பகுதியை அரசுபுரியும் விமலதருமனுக்கு ஒத்துக்குடாவில் இருந்து ஒரு புத்திரியும், உடன் பிறந்தாளிருவரும் ஏழு கண்ணகை அம்மன் விக்கிரகங்களையும் ஏழு கிராமமியற்றி அதிலிருத்தி ஏழு நாடார் குடும்பங்கள் பூசைபுரிந்து வருகிறதென்றும் அவர் எங்கள் உத்தரவில்லாமல் குடிபதிந்திருக்கிறாரென்றும் போர்த்துக்கீசருக்கு வேவுகாரன் போல் இருக்குமென்றும் திருமுகம் வரைந்து அனுப்பிவிட்டனன். விமலதருமன் அத்திருமுகத்தை வாசித்து எங்களுத்தரவில்லாமல் வந்தேறிய கந்தப்பனையும் அவன் சகோதரியிருவரையும் களப்பில் தாட்டுக்கொல்லவும்;. அவன் புத்திரியைக் காலிங்க குலத்தவனொருவனுக்கு மணஞ்செய்து வைக்கவும். ஏழு கண்ணகை அம்மன் விக்கிரகங்களை மட்டக்களப்புப் பிரதான ஆறு ஊரிலிருத்தவும், இந்த இடத்தில் ஒரு விக்கிரகம் இருக்கவும், நாடாரே பூசகராக இருக்கவும், கோவியரே ஆலய ஊழியராயிருக்கவும் ஒரு திருமுகத்தில் வரைந்து விமலதருமன் அனுப்பிவிட்டான். அதை அறிந்த படையாட்சி குலத்துத் திக்கரன் கந்தப்பரையும் ஆற்றில் தாழ்த்திச் சகோதரியிருவரோடு கங்குல் காலத்தில் மூவரையும் தாழ்த்துப் பிரேதமானவுடன் எடுத்துக் கோவியர்களைக் கொண்டு அடக்கஞ் செய்து கந்தர்ப்பர் புத்திரி சங்கு முத்தைக் காலிங்ககுல வில்லவனுக்கு மணஞ் செய்வித்துப் பின்பு ஆறு கண்ணகை அம்மன் விக்கிரகத்தை மட்டக்களப்பு ஆறு ஊரிலுமிருத்தி ஒரு விக்கிரகத்தை இருந்த இடத்திலுமிருத்தி நாடாரே பூசகராகவும் கோவியரே ஊழியராகவும் திட்டஞ் செய்து வைத்தனர். அந்தக் காலத்திலே மட்டக்களப்பிலிருந்து மத்திய நகரமென்னுங் கண்டிக்குப் போகவர ஒரு பாதையும் ஏற்படுத்தினர். இது நிகழ்ந்தது நாலாயிரத்து எழுநூற்றுமுப்பத்தெட்டாம் வருஷம். மட்டக்களப்பு முற்றும் போர்த்துக்கேயருக்கு ஆதீனப்பட்டது. அதை அறிந்து கண்டி அரசனான இராசசிங்கன் போர்த்துக்கேசருக்கு வினைதேடினன். அதை அறிந்த ஒல்லாந்தரில் ஒருவன் கண்டியை அணுகி இராசசிங்கனைக் கண்டு போர்த்துக்கீசரை இலங்கையால் அகற்றிவிடுகிறோம். கரைநாடுகளை எங்களுக்கு ஆதீனப்படுத்தும் படி வேண்டினன். இராசசிங்கனும் ஒல்லாந்த வேட் என்பவனை நோக்கி மட்டக்களப்பை நீக்கி மற்றக் கரைநாட்டைப் பெற்றுக்கொள் என்றும் போர்த்துக்சீசரோடு போர் செய்துமுடியும்வரையும் செலவும் போர்வீரரும் தருவோமென்றும் ஒல்லாந்துவர்த்தகரே இலங்கை முற்றிலும் வர்த்தகஞ் செய்யவேண்டுமென்றும் மறுதேச வர்த்தகர் வர இடங்கொடுக்கப்பட மாட்டாதென்றும் கத்தோலிக்க குருமார் மட்டக்களப்பு, கண்டி, அனுராதபுரம் இவைகளில் இருக்கப்படாதென்றும் இருவரும் கைச்சாத்திட்டனர். பின் ஒல்லாந்தர் பெருத்தபடையோடு சென்று போர்த்துக்கீசரை எதிர்த்து வெற்றிகொண்டு மட்டக்களப்பை இராசசிங்கனோடு சேர்த்து மற்றக் கரைநாடுகளைக் கைவசப்படுத்தி அரசுபுரிந்து வரும்போது போர்த்துக்கீசரும் ஒல்லாந்தரும் சம்மதமுற்றுக் கரைநாட்டுக் கோட்டைகளைப் போர்த்துக்கீசருக்கு ஆதீனமாய்ப் பத்து வருஷம் வரைக்கும் கொடுத்து ஒல்லாந்தர் அரசு புரிந்தனர். அதனால் மட்டக்களப்புக் கோட்டையும் போர்த்துக்கீசருக்கு ஆதீனப்பட்டது. இதை அறிந்த இராசசிங்கன் ஒல்லாந்தரோடு போர் தொடுத்து ஒல்லாந்தத் தலைவனின் சிரசைவெட்டி ஒரு சாக்கிலிட்டு யாழ்ப்பாணத்து ஒல்லாந்த அரசுக்கு அனுப்பிவிட ஒல்லாந்தர் இராசசிங்கனுக்குப் பல வந்தனத்திருமுகம் வரைந்து அனுப்பித் திருப்திப்படுத்தி ஒல்லாந்தரும் இராசசிங்கனும் சம்மதமுற்றுப்; போர்த்துக்கீசரை இலங்கையால் அகற்றி மட்டக்களப்பை கண்டி நகரத்தோடு சேர்த்து மற்றக் கரைநாடுகளை ஒல்லாந்தருக்கு ஒப்புக்கொடுத்து அந்நாட்டுச் கோட்டைத் திறைகளைப்பெற்று வந்தனன். இது நிகழ்ந்தது கலிபிறந்து நாலாயிரத்தெழுநூற்று ஐம்பத்தெட்டாம் வருஷம். இராசசிங்கன் மட்டக்களப்பில் வந்து நிலைமை அதிகாரரைச் சந்தித்து இராசமலையில் தனது குலம், கோத்தரம், நாமம். போர்த்துக்கீசர் ஒல்லாந்தரை வெற்றி கொண்டயாவையும் வெட்டிச் சகல ஆடம்பரங்களோடு கண்டிக்குச் சென்றனன். இந்த மட்டக்களப்பு இலங்கை மத்திய நகராகிய கண்டிக்கு ஆதீனமுடையது. கரைநாடுகளுக்குள் நீர்வளம் நிலவளமுள்ளதுமான இடம். ஆனால் தோப்பாவையும் இந்த மட்டக்களப்பு அதிபர்கள் உண்டாக்கிய இடம். இராசசிங்கன் தேகவியோகமடைய மட்டக்களப்பில் ஒருவர்க்கொருவர் வாக்குவாதத்தால் ஆறு வருஷம் வரைக்கும் மழைகுறைந்து செந்நெல் விளைவு குன்றிப் பெரும் பஞ்சம் நேரிட்டு நோயினால்துயர முற்று வெகுகுடிகள் அழிந்து போயின. அதிலிருந்து கண்டி அரசர்களும் மட்டக்களப்;பைக் கண்டியால் நெகிழவிட்டனர். மட்டக்களப்பு முப்பதுவருஷம் பஞ்சத்தால் துயரடைய ஒல்லாந்தர் தானியங்களைக் கொடுத்துக் குறைந்த விலைக்குக் கொடுத்துத் தாபரித்து வந்தனர். அதனால் மட்டக்களப்பில் உள்ள நிலைமைகளுக்கும் திக்கதிகாரிகளுக்கும் ஒல்லாந்தரில் அதிக விரும்பமுண்டாகி ஒல்லாந்தரையே மட்டக்களப்புக்கு அரசுசெய்வோராகக் கருதி ஒருசபை கூடி கண்டிக்கும் மட்டக்களப்பு அரசுவருமானத்தில் மூன்றிலொன்று கொடுக்கும்படி கண்டி அரசனிடம் சம்மதமுற்றுக் கலிபிறந்து நாலாயிரத்தெண்ணூற்றுப்பத்தாம் வருஷம் மட்டக்களப்பை ஒல்லாந்தருக்கு ஒப்புக்கொடுத்தனர். ஒல்லாந்தர், காலிங்கர், வங்கர். சிங்கர் என்னும் முக்குலத்தவரையும் நிலைமைகளாய்வகுத்தனர். இருபது வருஷம் அரசு செய்யும் போது இந்த முக்குலத்தவரிலும் நம்பிக்கை இல்லாதவராய்த் தங்கள் இராசதானம் என்னும் பண்ணை நாட்டிலிருந்து பஸ்கோலென்பவனை இரச்சிய முதலியாய் அனுப்பினர்.

பஸ்கோல் முதலிவரவு

பஸ்கோலும் முதலிப்பட்டம்பெற்று நாலாயிரத் தெண்ணூற்று முப்பதாம் வருஷம் முப்பது கிறிஸ்தமத திறவரோடு மட்டக்களப்புக்கு வந்து தனது அதிகாரத்தைப் பத்து வருஷம் வரையும் செலுத்தி மட்டக்களப்பிலொரு கிறிஸ்தமதக் கோயிலுண்டாக்கிப் பண்ணையினின்று கிறிஸ்தமதவாசிகளையும். குருமாரையும் அழைப்பித்து மட்டக்களப்புத் திமிலதீவிலிருத்திச் சமயத்தைப் பெருப்பிக்கும்படி செய்தனன். அதனாலிந்த நிலைமை முக்குலத்தவரும் அந்தச்சமயம் போதிக்கப்படாதென நிறுத்தினர். பஸ்கோல முதலியும் நிலைமைகள் எதிர்ப்புக்கமைந்தவன் போல் இருந்து இவர்களை மடக்கும்விதம் எப்படி எனத் தனக்குள் ஆலோசித்துக் காளிதேசத்தி;ல் வர்த்தகஞ் செய்யும் பிரதானிவம்சத்தைச் சார்ந்த போர்த்துக்கீச பிறஞ்சிசு என்பவன் இந்த மட்டக்களப்புக்குள் வர்த்தகச்சாலைகட்டி வர்த்தகங் செய்யுமாப்போலிருந்து போர்த்துக்கல் நாட்டுப் பகையை எடுத்து ஒல்லாந்தரைப் பறக்;கடித்து உன்னுடைய சொல்லுக்கமைவோமென்று ஒரு கடிதம் வரைந்து போர்த்துக்கீசப் பிறஞ்சிசு என்பவன் கைச்சாத்திட்டு ஒல்லாந்து நிருபனிடம் காட்டினன். ஒல்லாந்த நிருபனும் கண்டியை அரசுபுரியும் சிறி விசயராசசிங்கனிடம் காட்டி நிலைமைகளையும் முக்குலத்தவரில் நிருபர் அநேகரையும் வழக்கு நடுப்படுத்தி சிறிவிசயராசசிங்கன் இவர்களை விசாரணை செய்து முக்குலத்தவரில் சிலரை நடுவால் நீக்கி நிலைமை இருவரையும் எண்பது நிதிய அதிபர்களையும் குற்றஞ்சாட்டிச் சிரச்சேதஞ் செய்தனர். அதன்பின் பஸ்கோல்முதலியும் தானே மட்டக்களப்புக்கு அதிபனென எண்ணிக் கிறிஸ்த மதத்தைப்போதிக்கும் படிசெய்து நாப்புட்டிமுனைக்கு மேற்கே கிறிஸ்தவ ஆலயமியற்றி முக்குலத்தவரில் சிலரை அச்சப்படுத்தி யானைக்கொம்பு, தங்கக்குடம், தங்கத்தேங்காய். வாராகன். முத்துமாலை இவைகளை வஞ்சமாய்ப் பெற்றுவந்தான். பின் முக்குலத்தவரில் சிலர் திரண்டு கண்டியை அணுகி சிறிவிசயராசசிங்கனிடம் குய்யோமுறையோவென அழுது நின்றனர். அரசனும் அவர்களை அமர்த்திக் காளிதேசத்தில் வர்த்தகஞ் செய்யும் போர்த்துக்கீசப் பிறஞ்சிசை வரவழைத்துக் கடித சம்பவங்களை வினவிய போது பிறஞ்சிசு திகிலடைந்த நெடுநேரமறிவுமாறி நின்று பின்பு நான் ஒல்லாந்தருக்கு மாறாகக் கடிதம் வரைந்தவனில்லை எனச் சிறி விசயராசசிங்கனுக்குத் தத்தஞ் செய்தனன். சிறி விசயராசசிங்கனும், பிறஞ்சிசை பண்ணைநாட்டுக்குப்போய் அரசனைக்கண்டு பிறஞ்சிசு கைச்சாத்தைச் சோதித்துப்பார்க்கும்போது பஸ்கோலின் சூதுக்கடிதமெனத் திட்டஞ்செய்து பஸ்கோல் முதலியை இராசசேவையால் நீக்கிவிட்டும், ஊர்காவற்றுறைச் சிறையில் வைத்துப் பின்பு அவருடைய சந்ததியாவருக்கும் மட்டக்களப்பில் இராச உத்தியோகப்பதவி கொடுக்கப்படாதெனத் தீர்ப்பிட்டும், மட்டக்களப்பில் இந்த முக்குலத்தவரைப் புராதன இராச அதிகாரரெனத் தீர்ப்பிட்டு இராச பட்டயத்திலும் வரைந்து அந்நியநாட்டு அதிகாரருடைய எந்தச் செயல்களும் ஏற்கப்படாதென்றும் பின்வரும் நிருபர் காணும்படியாய் அதிகாரச்சட்டத்தில் வரைந்து அரசு புரிந்தனன். பின்பு நிலைமை உத்தியோகம் நிருபிப்பது கண்டியில் நிச்சயம் வகுத்து ஒல்லாந்தர் மட்டக்களப்பில் உள்ள முக்குலத்தவரில் சிலரை ஒல்லாந்த சங்கத்திலுமிருத்தி இந்த மட்டக்களப்பிலுள்ள முக்குலத்துப் பிரசைகளையும் மாதாப்பிதாப்போல் ஆசீர்வதித்து அரசுபுரிந்துவருங்காலம் கீர்த்தி சிறிராசசிங்கம் கண்டிக்கு அரசனாயிருக்கும் காலம் மட்டக்களப்புக்கு நிலைமை வகுக்க வேண்டியிருந்தபடியால் ஒல்லாந்தர் மட்டக்களப்பை இருபாகஞ் செய்து தெற்குப்பாகத்துக்குக் கந்தப்போடி என்பவனையும், வடக்குப்பாகத்துக்கு அறுமக்குட்டியையும் நிலைமைப் போடியாய் மட்டக்களப்புக்கு நியமனஞ் செய்தனர். இந்தச் சக்கரவர்த்தியின் நாமம் கோலாண்தொர். இன்னும் பிரதான உத்தியோகத்தர் மெஸ்தர்குமான், வெல்லம்பல்க, அர்த்கோராபயன, அங்கலவெக், அதிரியானிஸ், யுவானிஸ், பிறான்ஸ்கே இவ்வளவு உத்தியோகத்தரும் இந்த இருவர் ஆக்கொத்திலுங் கைச்சாத்திட்டனர். அறுமக்குட்டி போடியும், கந்தப்போடியும் நிலைமை உத்தியோகத்தை ஏற்று, அறுமக்குட்டி போடி மட்டக்களப்புக்கு வடபாகமாயுள்ள எருவில், போரமுனைநாடு, மண்முனை, கோறளை என்னும் நான்கு கிராமங்களையும் கந்தப்போடி கரவாகு, சம்மாந்துறை, பாணகை, உன்னரசு கிரி ஆகிய நான்கு கிராமங்களையும் நிலைமைப் போடி அதிகாரிகளைச் செலுத்தி, மட்டக்களப்பல் கலிங்கன், வங்கன், சிங்கன் எனும் முக்குலத்தவருக்காக ஒல்லாந்த அரசினர் சட்டத்தில் முக்குக சட்டமொன்றுண்டாக்கி அறுமக்குட்டி போடி காலிங்ககுலமானபடியினால் சிறைத்தள தாபர அதிகாரத்திலும் மட்டக்களப்பு முற்றும் முதன்மைபெற்று வந்தார். தேவாலயங்களைச் செழிப்புற நடத்தியவர் இவர்தான். செட்டிப்பாளையத்திலும் கண்ணகை அம்மனை இருத்தியவர். இவர் காலத்திலேதான் தோம்பதேர் என்னும் உத்தியோகம் மட்டக்களப்பில் நிரூபித்தது. இவருடைய மனைவிமார் ஏழுபேர். முதல் மனைவி பாணகைப்பகுதியைத் திக்கதிகாரஞ் செய்த வேலப்புவின் புத்திரி சிறுநாச்சி. மற்ற ஆறு பெண்களும் மண்முனைப்பகுதியிலுள்ள பெண்கள். இவர்தான் மட்டக்களப்பில் முதன்முதல் குலவிருதுக்குறி ஏற்படுத்தியவர். இவர் பராக்கிரமசாலி@ தருமத்தில் விரும்பியவர்@ கல்வியில் சிறந்தவர்@ ஆடவர்க்குரிய இலட்சணமுடையவர்@ பூரண ஆயுள் உடையவர்@ பல்லக்கில் ஊர்வலம் வந்தவர்@ இவருடைய பிதா பாணகை. மாதா சத்துருவண்டான். இவர் கலிபிறந்து நாலாயிரத்தெண்ணூற்றெண்பதாம் வருஷம் கண்டிக்கு அரசனாக இராசாதிராசசிங்கம் முடிதரிப்பதற்கு மட்டக்களப்பு அறுமக்குட்டிப்போடி, கந்தப்போடி இருவரோடு இன்னும் முக்குலத்தவரில் நிதிய அதிபர்களையும் அழைத்து முடிதரித்துக் கொண்டாடினர். அறுமக்குட்டி போடி வயிரமாலையும், கந்தப்போடி வராகன் மாலையும் இராசாதிராசசிங்கனுக்குக் கழுத்தில் போட்டனர். மற்றவர்கள் பூவராகன், பொன்னரிசி, தங்கத்தட்டு இவைகளைக் கையிற் கொடுத்துப் பரிசு பெற்றனர். பின்பு ஒல்லாந்தரும் மட்டக்களப்பு அரசை நிலைமைப் போடிமாருக்கு ஒப்புவித்துத் திறைவரி பெறுவதற்காகப் பண்ணைநாட்டிலிருந்து இரண்டு கணக்குப்பிள்ளைகளை அனுப்பிவைத்துத் திறைவரி பெற்றுவர பத்துவருஷத்தால் அந்தக் கணக்கப்பிள்ளை இருவரையும் வெட்டிக் கொல்லுவித்தனர். அந்தக்கொலையை ஒல்லாந்த நீதிபதிகள் கண்டி பிடித்துக் கொள்ள முயன்றும் சித்திபெறவில்லை. அதனால் ஒல்லாந்தர் கலிபிறந்து நாலாயிரத்தெண்ணூற்றுப் பதினைந்தாம் வருஷம் மட்டக்களப்;பைக் கண்டி அரசனான இராசாதிராசசிங்கனிடம் ஒப்புக்கொடுத்து மட்டக்களப்பால்; மீண்டனர். இராசாதிராசசிங்கனும் மட்டக்களப்பை நிலைமைப்போடிகளே வைத்து திறைவரி வாங்கிவந்தான்.

3.சாதியியல்@ 4. ஆலயவியல்

குளிக்கல் வெட்டுமுறை

மாகோன் அரனூழியம் வகுத்தது.

அந்தணர்கள் மாகோனைக் கண்டு போற்றி
அரனகத்து ஊழியர்கள் அகன்று நாகர்
பந்தமதிலி; சேர்ந்து கயல் பிடித்து உண்டு
பண்டுநாள் கலிங்கனிட்ட கடமை மாற்றி
சந்தி அந்தி நாமமிட்டு அரனைத்தூற்றித்
தசரதன்றன் மகன் ராமன் தன்னைப் போற்றி
இந்த தமிழ் இல்லையென எங்கள் முன்பு
தருமமூட்டித் தந்துயரிகழ்ந்து செல்வார்.

1. இகழந்தவர்களனைவரையும் மாகோன் கண்டு
யிருவிழியை யெடுத்தடுத்து யிடுக்கண் செய்து
மகிழ்ந்து அரிநாமமிட்டோர் தமைக் கழுவில்
வைத்தபின்னர் சைவமதம் வளர்ந்து ஓங்க
புகழ்ந்து சிவ ஆலயங்கள் பூத்திலங்க
பூசுரர்கள் சொற்படியே ஊழியங்கள்
செகந்துதிக்க கோவசியர் தன்னிலேழு
சிறையாக்கித் திருநாமம் செப்பக் கண்டான்.

2. கண்டனோடு சருகு பில்லி கட்டப்பத்தன்
கருதரியகவுத் தனுமத்தியாயன்
மண்டலத்தில் பொன்னாச்சி வயித்தியென்று
கோவசியர் மக்களிலே வருணமாக்கிப்
பண்டுமுறை தவறாமல் ஏழுகுடியாய்ப்
பகுத்தீசர் பணிபுரியப் பரவணியாய்
அண்டர் தமைச் சாட்சி வைத்துத் தத்தம் வாங்கி
அரனகத்து ஊழியராய் அமைத்துச்சொல்வார்.

3. சொல்லரிய விளக்கேற்றல் பூவெடுத்தல்
தூசகற்றல் சாணமிடல் அணிவிளக்கல்
நல்ல மலர் மாலை கட்டல் மேள மீட்டல்
நற்சந்தன மரைத்திடுதல் நெல்லுக்குத்தல்
துல்லியமாய் வளர்ச்சிவிகை ஏந்திச் செல்லல்
தானிகட்டல் அழுதுவைத்தல் முதன்மைபாப்பான்
வல்ல பதம் நீர்வார்த்தல் அகத்தில் தொண்டு
புரியுமொன்று மாகோனும் வகுத்துப் பின்னும்.

4. பின்னாக வருமாசனிதனை மாற்றப்
பிடித்தடித்துத் துலங்கிட்டு வருத்தினாலும்
உன்னாணை உங்களெழு வகுப்போர்க்கிட்ட
உத்தரவு மாற்றிலெழு நரகில் வீழ்ந்து
என்னாணை உங்கள் பிறசந்ததிகள்
எண்ணாழி காலமட்டும் வறுமையுற்று
தன்னாணை சதாசிவனார் பாதத்தாணை
சங்கரனார் உள்ளியாய்த் தரிப்பீரென்றார்.

இது நிகழ்ந்தது கலிபிறந்து நாலாயிரத்து இருநூற்று ஐம்பதாம் வருஷம்.

பெரிய கல்வெட்டு

திருவளர் தேவசெனனமே பெரியதாய்
அரியயன் மாலில் அழகொடு உதித்து
மனுவெனுஞ் சக்கரவர்த்தியாலுலகில்
கணமென நராணன் காட்சியும் புகழும்
வினைகெட நலமும் வேதசாத்திரங்கள்
துணைகொடு புவியிற்சூழவே வகுத்துப்
புல்லறிவகற்றிப் புனிதனுஞ் சுகித்து
இல்லறமியற்கை மீசனார் தபங்கள்
சொல்லறிவித்துத் துயில்வது
மெல்லியர்க்களித்து வெட்கமுங் கொடுத்து
ஆனவரி வையடக்க மென்றமைத்து
வீணைகள் தொனிக்க வேந்தனுஞ் சுகித்தான்
நாணமும் ஞானமும் நளினமுமெழவே
தோணுதிச் சுடரைச் சூரியனென்னும்
மனசுக் குளிர்ச்சியை வாய்வென அமைத்து
தினகரன் சுடராலதிக மழை என்றும்
சந்திரன் வெள்ளி தாரொடு அண்டம்
அந்தர் வாசி அளவதை எடுத்துப்
பிரித்தே கூட்டிப் பெருக்கியே
கழித்தும் மரிப்பதோ மனுக்கள் என்றவன்
கணிக்க ஓம் என அறிந்து யுகமது
பிரித்துச் சமமாம் வட்டங் கிரகம்
வாரமும் ஊழி கட்டினால் கலைகளமே அகல
மிருத்துகளறிந்து வேந்தனு மினமும்
பரத்தடி சார்ந்து சரமொடு அண்டத்
துருத்தராய் வாழ்ந்தூழிகளகற்றி
விருத்தராய் விண்ணவ ரெனவே சுகித்தார்
சூரியன் கிரணச் சுடரது விழித்து
விரிய அவுணசாதிகளுதித்து
முன்னறிவித்த முறைமைகள் கெடுத்து
தண்ணெறி வரவே தாரணி ஆண்டு
மனுக்களை அழைத்தெனை வணங்கென வதைத்து
அனுக்களு மிரங்கா தறிவால் நகைத்து
பசுபதி யகற்றிப் பாசமே கொண்டு
சிசு வதை செய்து கொடுங்கோல் செலுத்தி
ஆண்டனர் மூன்று லோகமு மவுணர்
தோன்றியே திருமால் சூரரை வதைத்து
முன்னவன் முறைமை மூவுலகேற்றி
அன்னவன் நகர்க்கு அரசுகொடுத்து
வில்லொடு கணைகள் வேகமுமடக்கி
கல்லென அவுணர் பதியெலாம் சபித்து
கங்கையால் நிறைத்து அவுணர் தன் கருக்களைச்
செங்கையாற் பிடித்துத் திருகியே வதைத்து
பாசமே யகற்றிப் பரமொடு கரந்தனர்
காசிபனுதித்துக் கன்மமே யகற்றிச்
சாதிகள் வகுத்தான் சமுகன் மரபன்
ஆதியும் அந்தணன் அரசன் சத்தரியன்
வைசியன் வணிகன் வளர் தினகரன்குலம்
எனவே வகுத்து எழிலயன் மகனும்
அனைவரை அழைத்து அறிவதூட்டிப்
பசுபதிக் கமைந்த பழமுறை நடாத்தி
வைசியர் மறையோர் மன்னரை நோக்கி
வாவென மூன்று சாதிக்குரைத்து
ஆவன அறிந்து அடக்கமோடமரென
வருகையில் மூவரில் மாயைகளணுகித்
திருகுலப் பாசநரர்களைத் தள்ளி
சூத்திரராகத் தொல்லுலகேற்றிச்
சாத்திர வேதத் தவங்களைச்செய்து
மாற்றியுன் சனனம் வைசியனாய்ப் பிறப்பீரென்று
ஏத்தியே காசிபனிவ்வகை சபித்தான்
பாண்டியன் சோழன் சேரன் பரதநாடதனில்
தோன்றியே கலியுகத் துரத்தனஞ் செய்து
வேண்டிய சிறையொடு வேந்தராயாண்டு
தூண்டினார் மூவர் தேவாலயங்கள்
சிறைகளை வகுத்துத் திருத்தொண்டராக்கி
திறைபெருக கலிங்கராசனைச் சேர்த்து
துறைவளர்பரத நாடுகளாண்டு
வந்தபின் கலிங்கன் மாயன ரணாசலன்
தந்தையிடத்தில் தரும விடைபெற்று
முடியது தரித்து முதல்வனைப் போற்றி
துடிமுரசதிரச் சூழவே சயினியம்
படையொடு சென்று மந்திரியுடனே
மரக்கல மேறி வந்தன னிலங்கையில்
சிரத்தொளி துலங்கத் தினகரனிலங்க
வரத்தொடு மட்டக்களப்பினி லிறங்கி
நிரைதனி வகுத்து நிறுத்திய பின்பு
கரத்தினில் வாளொடு காவலன் திமிலன்
நாடியே நீயார்? நானென வரசன்
ஓடியே போமென் றுரைத்தவன் முறுவ
வாட்படை வீரரும் மழுப்படை வீரரும்
சூழ நிறுத்திக் கலிங்கனோ டெதிர்க்க
வெட்டினான் திமிலரை வேந்தனும் சிறைகளும்
கட்டியே திமில அதிபதிகளைப்
பறித்தபின் கொன்று திமிலப்படையை
அறுத்தறுத் தழித்து ஆழியில் போட்டு
படைகளுக் கஞ்சிப் பதுங்கிய திமிலரை
நடவெனத் துரத்தி நாட்டினான் கல்லு
மாவலி கங்கை யிரண்டினுக் கிடையில்
காவலனாளுங் கருத்தினை அறிந்து
சிங்க நன்மரபன் திறையது கேட்கத்
துங்கநேர் கலிங்கத் துரையவனும்பரன்
இலங்கையைப் பன்னிரண்டிடமாய்ப் பிரித்து
கலிங்கனுஞ் சிங்கமரபனு மொத்து நுவரை கழனி
நுவரெலி மாத்தளை பகரனுரதமொடு காலி
வதுளை விந்தனை வளர்பதி யெட்டும்
பதிபுகழ் சிங்கமரபனுக் கமைத்து
அன்னவரிருவர் படையாட்சியை யழைத்து
கன்னல் சூழ் மட்டக்களப்பு முக்கென்னும்
திருக்கோணைப் பதியைத் திருமலருக்கமைத்து
திருகுலவம்மிசக் கொடியினர் தமக்கு
மணற்றிடர் மண்ணாறு மாநகரமைத்து
கனத்தொடு மனுவெனுங் கட்டளைப்படிக்கு
ஆளுவீரெங்களரசது வென்றும்
வாழு வீருங்கள் வரிசைகளோடு
திறைமு றையகற்றி னோம் தேவரில்லங்கள்
குறைவகற்றிக் கொடுங்கோல் மாற்றி
கலிங்க நாட்ரசன் சிங்கவாகுவே கனமென
இலங்கையை விட்டு ஏகினனப்பால்
மதுவளர் சோலை சூழ் மட்டக்களப்பு
பதிதழைத்திடப் படையாட்சியாரா ண்டார்
உலகினில் குருவெனும் நாதன் ஒருவன்
கலை வளர்யாவையுங் கற்றபின் கலிங்க
இராசனைக் கண்டு ஆழிகுழிலங்கை
தேசமே சிவதலம் திருத்தினை யோவென
பாசமே கொடுத்து நீங்கினேனிங்கெனக்
கொற்றவன் கூறக் குருவெனும் நாதன்
சித்தம் மகிழ்ந்து சென்றனனிலங்கை
கத்தன் கயிலைக் கடவை ராவணன்
நித்தம் துதிக்க நிறுத்திய வடிவைக்
கண்டனன் ஞானக் கண்ணது வெளித்து
வண்டிசை சூழுமை பாகனை வணங்கி
தெண்டிசைக் கயிலையிது வெனச் சாற்றி
அண்டர்கள் துதி திருகோணமென்று ரைத்து
இருத்தனர் யோக நிலையொடு குருவும்
அறிந்தனன் மட்டக்களப்புக் கரசனுமப்போது
ஓடமீதேறி ஒளிவளர் கயிலையை
நாடியே குருவை நமஸ்கரித் திறைஞ்சினன்
வாவெனக் குருவுமுன் வரவேதோதெனச்
சேவடி போற்றிச் செப்பு வனரசன்
காரைமா நகரம் கண்டம் கலிங்கம்
பாரினில யோத்தி பகைகெடுதில்லி
கொல்லிடம் மலையாள மோடிவைகள்
எல்லைகள் யாவையும் யான் திறைகொண்டு
வல்லவன் கலிங்கரா சனுக்களித்து
பல்லுயிர் யாவுங் குணனென வணங்க
சீர்வளர் திருப்பதி சிதம்பரம் ஏகிப்
பார் முழுதாண்ட பாண்டியன் சோழனை
கண்டு மகிழ்ந்து கடல் சூழிலங்கையில்
பண்டு மரபைப் பகுக்க நினைந்து
குடிபடை சிறையொடு கொற்றவனெழுந்து
முடிதரித் தெங்களைப் படைக்கு முதல்வனாயழைத்து
அனுப்பினா ராழி காலோடமீதேறி
மனுப்பணி மட்டக் களப்பதிலிறங்கி
துணித்து திமிலரைத் தூரத் துரத்தி
தனுப் பெறுவரசில் தானாயிருந்தோம்
வரைபதி சிங்க மரபனும் வந்து
திறையது கேட்க இருவரும் மகிழ்ந்து
தறைபுகழ் கலிங்கனுஞ் சிங்கமரபனுஞ் சார்ந்து
விரைதளை யிலங்கை யாறிரண்டாய்ப் பகுத்து
எந்தனுக்கீந்தாரி யல்புடன் மட்டக்
கந்தமே சூழ்ந்த களப்பென வகுத்துக்
குகனெனும் நாமங்கொடுத்தவர் கண்டார்
மகிபனே எனவிது வறியா
என்றவனுரைக்க எழில் பெறு குருவும்
நன்றென மகிழ்ந்து நல்வர மீந்து
அண்டராலயங்களை அமைத் தரசா ளெனச்
சென்றனன் மட்டத்திகழ்தரு களப்பில்
கலியுகவாண்டு கண்ட மூவாயிரத்து முப்பதாமாண்டில்
வலியனாய் மட்டக்களப்பது பெற்று
செங்கோல் செலத்தினன் சிறைகுடியேற்றி
எங்கும் குகன் குலமென வியற்றினன்
மதிநுதல் ஒல்லாந்த மன்னனே கேளும்!@
இதுவே குகன் குகன் குலமெனவறிவாய்
கன்னின் மகிழ்ந்து காவலன்றன்னை
வன்னிமைக் குலமாய் வைத்தவனாண்டான்.

பங்கு கூறுங் கல்வெட்டு

குருவளர் கலிங்கன் செகதலம் புகழ
மருமலர் தேவ தொண்டரை வகுத்து
ஆலயமியற்றி அணி மணி அமைத்துச்
சீலமோடானுரு செய்தங் கிருத்தி
மறையோன் றன்னை வாவென வழைத்து
முறையாய்ப் பூசை மூன்றிரு நேரம்
உறுமன் குலத்தாய் மேவி ஆலயத்தில்
அறுகொடு தற்பை ஆவின் பால்கனி
நறுநெய் பொங்கல் நல்லிள நீரொடு
சிறு தேன் சருக்கரை தேங்காய் கரும்பு
மற்பொரு மாங்கனி வருக்கன் தேங்காய்
அற்புதமுடனே அநேக வர்க்கமும்
சேர்த்து நீ படைத்துச் சிவனார்க் கூட்டம்
சூத்திரர் சாதி தொழுது உன்னாழி யம்புரிய
வகுப்பொடு வகுப்பாய் வழமை களறிந்து
செகத்தோர் துதிக்கத் திருவேட்டை சென்று
ஆடிப் பாடி ஆறி அங்கிருந்து
கூடிக் குரைத்துக் குசவர்கைக் குடுக்கையில்
அமுதுகள் படைத்து அந்தணர் அளிக்கத்
தமது பிற்சூத்திர சாதிகளெழுந்து
மன்னா@ மகிபா மானிலத் தரசே
அன்னா ளந்தணன் அறம் பறித்திடுவன்
சாதம் புசிக்கில் தனித்து உண்டிருப்பன்
ஓதி செலவர்க்கும் உபதேச மளியான்
ஈயர் குலத்தோனிடத்தில ருத்தி
தூயாத் தோஷம் தொடரு மென்றோதி
வெறுப்புறச் சூத்திரர் வேந்தனும் வினவ
அண்டத் தமராடிய தொண்டன்
பண்டுப் பெருமான் பசுபதி நெஞ்சன்
மாசற்ற குலத்தான் மாமிச மருந்தான்
தேசத்திலு யர்வோர் சிவனடி தொழுவோன்
உட லழுக்கறுப்போன் உழுது ஊண் உண் போன்
நடை தனிலழகன் நல்லற மீவோன்
தன்னுயிர் போலத் தரணியி லனைத்தும்
மன்னுயி ரெல்லாம் வணங்கவே வழங்கும்
சேவக மில்லாச் சீவகா குண்யன்
பூவுல கெங்கும் பொறுமை யோடிருந்து
தேவரா லயத்திற் தினமுஞ் சென்று
ஏவல்கள் புரிந்து இடையூறகற்றி
வேளாளர் என்று விருதுகள் பெற்றுழும்
ஏழா லடியார் இருகர மதனால்
தந்தா லுண்டு தானம் வழங்கி
கந்தர் குலத்தாய் உன்கட்டளை தவறின்
அன்றன்று தொண்டு அரசே புரிவோம்
சோறுஞ் சோழனும் சிறைதளம் வகுத்துப்
பாராண்டிருந்த பகுப்பதே பகுப்பாய்
காராளர் கொடுவெனக் கட்டளை இடுவீர்
என்னவே தேவ தொண்டரு முரைக்க
மன்னவன் மகிழ்ந்து வழமையோ டென்னும்
பட்டுமேற் போட்டுப் பங்குகள் பகிரென்ன
முட்டியை எடுத்து முதல் வகைலிங்கனை
காராளன் நோக்கிக் காசினி புகழ
அரார்க்கு முன்பின் அளிப்பது என்ன
திறலோன் சுலிங்கன் செப்பினன் பெரிய திருப்பதி வாசல்
அறமுயர் வேதம் நம்பியரி திருப்பாட்டுச் சரிகை சன்னாசம் தார்வளர்
தேசம் வன்னிமை வரிசையாயுலகுறு வருகுரு நாதா
பூபாலம் கோத்திரம் பூவசியன்
பாவலர் புகழும் பகுதி புன்னாலை
மண்முனை மட்ட வாழ்வுறு களப்பு
பெண் பெறுநாட பேர்பெறு நகரம்
கண்டி கதிரை கந்தாளை மாவலி
பண்டு முன்னயோத்தி பங்குகள் முதலாய்
கூறெனக் கொற்றவன் கூறிய உழவர்
ஆறிய பின்பு அரசனை வணங்கி
கலிங்கனே உனது கட்டளைப் படியே
இலங்கை மாநகரில் ஈசராலயத்தில்
வீதி துலக்கும் வேளாளர்க் கடிமைகள்
மாதுல கோயிலார் வரிசைப் பண்டாரம்
குசவர் கொல்லர் கோனார் தொழுவர்
திசைபுகழ் முதலி செக்கன் சாணான்
யீரங்கொல்லி யீட்டியன் பள்ளு
வாரந்தட்டி மாலை தொடுப்போன்
கடையன் துரும்பர்க்குக் காராளனீந்து
படையாட்சி கலிங்கன் பணிக்கன் சிங்கன்
அவர்களோடுழவர் அன்று மின்றாக
அவனியிலிருந்து அடியார்க் கெல்லாம்
வேண்டிய தளித்து விருதுகள் பறக்கத்
தோன்றிய ஐங்குலமும் சூழ வீற்றிருந்து
தேரொடு கோபுரம் தீர்த்தக் குளமும்
ஏறுயர் தொழிலே ஏற்றுமிருந்து
குன்றோ ரொன்றும் ஏற்றுமிருந்து
பண்டுபண்டாகப் பகர்ந்தனருலகில்
மட்டக்களப்பில் வருமுறை யிதெனச்
செட்டிகளுடனே செப்பினன் குகனும்
அப்போ வணிகர் அகமகிழ்வாகிக்
செப்பரிதான திருக்கோயில் தனக்கு
கொடி துவசக்கம்பம் கோபுர மண்டபப்
படிக் கெதிர் வாவி பத்ததி முறையாய்
வையகம் புகழ மட்டக்களப்பினில்
செய்தனர் மூன்று திருச் சந்நிதானத்தில்
மாசில்லா வணிகர் குகன் வடமளித்து
தேசறு காசி சென்றனர் பின்பு
தன வசியர்க்குச் சந்ததி முறையாய்
மனமகிழ் வோடு குகன்கொடு வரிசை
சதுர்த்ததி தினத்தில் தானொரு பூசை
விரித்தன ரென்றும் விழாவொரு முறையாய்ப்
புரிந்து வாவெனப் புகழ் திருப்படையில்
தெரிந்தவரறிந்து செப்புமிப்படியே.

தாதன் கல்வெட்டு

மேவு பூவுலகில் திரு மாலமைத்த வொழுங்கைப்பார்
மேவு தாதன் பகுக்க மனத்திலுன்னி
அரியோன் பதத்தை அடிபணிந்து தெண்டனிட்டு
குருவின் கையில் குதித்தோர் சரித்திரத்தை
மடலில் வரைந்து மனத்தை ஒருப்படுத்தி;க்
கொடையில் சிறந்த குகனிடத்தில் செல்லவென்று
காவி உடுத்திக் கமண்டலமுங்கைப் பிடித்து
ஆவி அடக்கி அஞ்செழுத்தை உச்சரித்துப்
பல் லோர் புகழப் பாருலகோர் ஈடேற
வில் விசையன் செய்தவத்தை மேன்மை பெறக் காசினியில்
பத்ததி போற் காட்டிப் பகுத்தறியத் தாதனுந்தான்
சுற்றம் மகிழத் துதித்தெழுந்து தென்னிலங்கை
சென்று மட்டுமாநகரில் திருக்கோயில்
சந்நிதியைக்கண்டு நமஸ்கரித்துக் கைகூப்பி நிற்கையிலே
இலங்கு திருப்பணிக்கு இடு பூசை காணையிலே
பரதநாட்டிற்பிறந்தான் எனவறிந்து பார்வேந்தன்
இரத நடவீதி யென்னும் இடம் வரவழைத்து
எதிர் மன்ன சிங்கமென்னும் நரபதியும்
கதிதங்கும் இப்பதியில் கண்டதில்லை உந்தனைத்தான்
ஆர நீரறையும்........ சுந்தரஞ் சேர்
பேரேது ஊரேது பெருமையுடனோது மென்னத்
தாதன் மனமகிழ்ந்து தாரளந்த மாயவன்றன்
பாதம் பணிந்து பரிவுடனே ஓதுகின்றான்
கோங்குநகர் மேவுங் கோவசியர் தன்குலத்தில்
பாங்குடனே நானுதித்துப் பாரதமென்றோர் மதத்தை
வங்கங்கலிங்கம் மலையாள புத்திபுரம்ம
அங்கங்கு சென்று அரியோன் அடியார்க்குக்
காட்டியபின் தென்னிலங்கைக் கலிங்கர் குலத்தோர்க்கு
சூடநினைவு கொண்டு துளசி மணிமாலையிட்டு
வந்தேனெனது மரபிதென்ன மன்னவனும்
சந்தோஷமாகித் தாதன்றனைத் தழுவி
வடவால் நிறைந்திருக்கும் வனமும் கடலருகும்
அடவாகத் தேடி ஆழி அருகாய் வரவே
கண்டார்கள் ஆல வனத்தைக் கடலுமருகிருக்க
தொண்டார் தாதன் துதித்து நமஸ்கரித்துப்
பஞ்சாட்சரத்தைப் பதித்து மனத் தொன்றாக்கிக்
கஞ்சன் முதலாக ஐவர் வந்தஞ் சேர்ந்தமட்டும்
தீட்டி ஒளியாக்கித் தீவளர்த்துப் பாய்ந்தபின்பு
காட்டி முறைப்படியே கலிங்கர் குலத்தோர்க்கு
வரிசை கொடுத்து மாலப் பதத்தைச் சேர்ந்தபின்பு
கரிசனையோ நம்பிசிறை கட்டுவதற்குச் சட்டமுடன்
தீர்த்து எதிர்மன்னசிங்கன் மனமகிழ்ந்து
பார்த்தவர்கள் கொண்டாடப் பாரதத்திற் சொன்னபடி
கம்பம் வனவாசம் கடல்குளித்துத் தீய்ப்பாய்தல்
அம்புவில்லுத் தண்டுடனே ஐவர் கொலுவாக்கி வைத்து
ஆடலொடு பாடி ஆதி துரோபதிக்கு
மாடமுயர் கோயில் வரிசையுடனி யற்றி
கும்பிட்டார் தெண்டனிட்டார் குவலயத்தைக்காருமென்றார்
தம்பட்டசல்லாரி தாரைசின்னஞ் சங்குதொனி
உடுக்குச் சிலம்பு மணி ஒளிதங்குதீப மெழ
அடுக்கு முறையோ டராவான் களப்பலியும்
பத்ததி போற்காட்டிப் பணிக்கண் குலத்தோர்க்கு
உற்றபுகழ் மேவ உங்களுக்கே முன்னீடு
ஈந்தேனிலங்கை எங்குமுயர்ந்தோங்க
ஆய்ந்து பணி செய்கென் றகல மன்னனப் பொழுது
பதினெண் வரிசை யொடு பத்தும் பதியுடனே
மதி வெண்ணொளி பரப்ப மாயோன் மதமோங்க
கண்டோர் களிகூரக் காசினியோர் கொண்டாட
என்றும் பாசிதமாயிப்பதியைப் பெற்றததினால்
ஆவினங்கள் வாழ அறமுயர்ந்து சாவி எழப்
பாவாணர் பாடப் பல்லுயிரெல்லாம் வாழ்க
மாதத்தில் மூன்று மழை மட்டுநகர் பெய்துவர
என்றார் பணிக்கர் குலத்ததிப னேந்தலிடம்
கண்டறிந்து மாயவன்றன் கருணைதனை யுண்மையென்று
விமலதரு மனென்னும் வேந்தனக மகிழ்ந்து
கமலவிழிக்கண்ணன் கருணை தங்கு மிப்பதிக்கு
வேண்டும் வயல் நிலமும் வெள்ளிக் களஞ்சியமும்
தூண்டு திகிரிதந்தம் சோதியெழயீந்த மன்னன்
கண்டிநகர் சென்றான் காசினியோர் தாமறியப்
பண்டு முற்ற என்றென்றுர் பார்.

போடி கல்வெட்டு

திங்கள் நேரு லாவுஞ் செகதல மனைத்தும்
மங்குறா தழகொடு மண்முனைக்கதிபன்
சிங்கவாகு வின் செல்மதி கொண்டு
பங்கிடான் வெளியெனும் பதிதனிலிருந்து
கலிங்கர் குலத்துக் கண்ணனென்றொருவன்
துலங்கிவாழ் நாளில் துதி பெறும் குகன்
முறை குன்றா தரசு குடிபடையோடு
கண்டிமாநகர்க்குக் கதியென நடத்தி
அண்டர்கள் வாழ்த்த அரசேற்றிருந்து
குகன் குலவரிசை குவலயம் வழங்க
மகம் பெரிதான மட்டக்களப்பினில்
செந்நெல் முன்தானியம் சேர்பதினெட்டும்
கன்னல் கதலி கமுகொடு தேங்கு
செழித்து இலங்கத் தேனினங் கூட்டி
தெளித்ததென வெங்கும் சிறந்திடு மாநகர்
அறமே துலங்க அதர்மங்கள் கலங்கத்
திறமேயிலங்கத் தீதே மலங்க
தேவராலயங்கள் சிறந்து விளங்க
மூவர் வேதங்கள் முற்றுமுணர்ந்து
மதுரமதனால் மட்டக்களப்பைச்
சதுர மதிலாய்த் தரித்து முன்னாண்டு
அன்னக் கொடையும் அண்டர்கள் மகிழ
மன்னர்க் கதிபன் மட்டக்களப்பில்
இருந்தனர் குடிமுறை யன்றோ டென்றும்
வரிந்தனர் வாவி ஏரிகள் சூழ
வாழ்வுறு நாளில் மதிகுலா சென்று
சூழ்பட குகன் நகர் சூட்டெனமுடியை
என்றடி பணிந்து தன்னிடரது ஓத
பண்டெனப் பறங்கி அரசனும் மகிழ்ந்து
போருக் கெழுந்து புகழ் பெறுமிலங்கை
ஏர்சீர் கண்டு இடிபோல் வெடியை
இட்டிட விசைய வாகுவு மெதிர்த்துப்
பட்டிடத் துரத்திப்பறைமுறை சாற்றி
கண்டி யாலகற்றிக் கரை நாடெங்கும்
நன்றுடன் கொடுத்து நன்மொழி பேசி
மணற்றிடர் மன்னார் மட்டக்களப்பு
இணற்றிரு கோணமலையோடு காலி
கைவசங் கொடுத்துக் கப்பமே பெற்று
வையகமதனில் மட்டக் களப்பைக்
குகனொடு சேர்த்துக் கொற்றவனாக்கி
பகம் பெரிதான பாபர்களென்றும்
செகமதில் திருச்சிரா சேர் நகரோரிவர்
தலைமையிலுயர்ந்தோர் இராம நாட்டதிபர்
நிலையாய் வைத்து நீயிவை யாளென
விசையன் குலத்து வேந்தனுமுரைத்து
திசைகளையா னெனச் சென்றனர் குகன் நகர்
பார்த்து மகிழ்ந்து பரிவொடு கலிங்கரை
சேர்த்து நிலைமையாய்ச் செய்திட இணங்கி
சங்க மொன்றியற்றித் தலைமையாய் வைத்து
போத்து நாட்டரசன் குகன் புகழ் பரப்பி
காத்தனர் இராசகுடும்பமாய் வைத்து
நிலைமையாய் எங்களை நிரூபித்த பின்பு
தலைமையாயிருந்தோம் தாரணி மகிழ
ஒல்லாந்த அரசே உமக்கிது உரைத்தோம்
பொல்லாங் ககற்றிப் போடியாய் வைத்தால்
செந்நெல் செழிக்குந் தேன்சொரிந்தொழுகும்
மன்னர் மகிழ மண்முனை தனக்கும்
என்றிடக் குகனும் ஏந்தலன் மகிழ்ந்து
பண்டுமுன் முறைமை பகுக்க வென்றெண்ணி
அறுமக்குட்டியை அழைத்திடச் செய்து
பெறு முன்னரசு பெருமையாய் வழங்க
போடி யென்றுரைத்துப் புகழ் பெற்றிருந்து
நாடுகள் தெரிய நன்முறை சாற்றி
ஆக்கொத்ததனில் அரசனின் கைச்சாத்திட்டு
ஆக்கினர் கோலோந் தோர் ராசனென் றெழுதி
மெஸ்தர் யீமான் வெல்லம் பல்க
அத்தர் கோராத பயன் அங்கல வெக
அதிரியானிஸ் யுவானிஸ் அரசொளி பிறாங்கே
கதி பெறு ஒல்லாந்தர் கட்டளை கொடுத்து
மட்டக்களப்பும் மண்முனைப்பற்றும்
திட்டப்படுத்திச் சிற்றரசாக்கி
வைத்தனரிந்த மாநகர் தன்னில்
அத்தெழு தாண்டு ஆயிரத்தெழு நூற்றறுபத்தாறு
திங்கள் நேர் கார்த்திகைத் திகதி ஆறதனில்
பொருத்தனை எழுதிக் கொடுத்திடப் போடி
கருத்துடன் பெற்றுக் காலிங்க குலத்தான்
தேவில்லங்கள் செழித்திட நடத்திப்
பூபாலன் என்னவே புவியோர் மகிழ்ந்து
இயலிசை நாடகம் எங்கும் வழங்கச்
செய லொடு திருச்சிரா தேசத்தவரில்
அம்பிலாலந்துறை அதிலே சென்று
வம்பிலாக் கலிங்கன் மரபின னொருவன்
பலநூலாய்ந்த பண்டிதர் சிலரைக்
கவிபல விளங்கக் காசினி யோர்க்கு
மெஞ்ஞானமூட்டி வினையகன்றிருக்க
அஞ்ஞான மகல அறிவுகள் வெகுள
செம்பனோ டைவருஞ் சேர்ந்திருந்நாளில்
கம்பப் புலவர் கட்டிய நூல்முறை
அன்னச் சத்திரம் அளித்திடு நகரில்
பன்னூN;லாதும் பண்டிதர் வரவே
சம்புநாதன் தனை இரு மென்று
அம்பிலாந்துறை யதனில் வைத்து
வேண்டிய தமிழ் நூல் விளங்கப் பயிற்றென
ஆண்டன னெங்கள் அடிகுகமரபினோர்
சங்கச் சதாசிவன் வணக்கமும்
எங்கும் சிறக்க இருந்தனர் குகன்குலம்
பட்டையம் வரிசைப் பவுசொடு வரன்முறை
வெட்டினர் கல்லின் மேன்மைகள் துலங்க
முன்னா ளெங்கள் மூதாதைச் சொற்படி
அன்னாள் தொட்டு அறமே விளங்கும்
சிறைத் தளதாபரம் சீவகாருண்யம்
மறை நான் கொழுங்கு வகுத்திரு மரபில்
எழுத்து நானோதி னேனிது முறை யல்லால்
ஒழிந்தது தானில்லை உத்தம அரசே
எனக்குகனோத ஆட்சியார் தாமும்
மனக்களிப்புடனே வன்னிமை மரபாய்
வைத்தனர் மட்டமா நகர் தன்னில்
வித்தகக் குகன் முறை வளம்பினனறிந்தே.

குல விருதுகள்

தோணி கரையார்க்குத் தொப்பி துலுக்கருக்கு
காணி யுழுமேழிசுளி காராளருக்கு
நாணி வில்லம்பு நாட்டிலுள்ள வேடுவர்க்கு
எழுத்தாணி சுளிமுற்குகர்க்கு கமலமலர் கோயிலார்க்கு
கைப்பிரம்பு பண்டாரப்பிள்ளைக்கு திமிலர்க்குப் பால்முட்டி
சேணியர்க்கு நூலச்சு அமலருக்குத் தேர்க்கொடிகள்
அம்பட்டருக்குக் கத்தரிக்கோல் விமலருக்குமத்துலகில்
வேதியர்க்கும் பூணுலாம்
வண்ணார்க்குக்கல்லு வாணிபர்க்குச் செக்கு
சுண்ணாம்புசுடும் கடையர்க்குக் கூடையாம் தொல்லு
வேந்தர்க்குச் செங்கோல் மேளமது வள்ளுவர்க்கு
சேர்ந்தகுயவருக்குக் கும்பகுடம் செப்புவேன் இன்னும்
தட்டார்க்குக் குறடு சாணார்க்குக்கத்தி
செட்டிகுலத்தோர்க்குத் தோடு தராசுபடி
இட்டமுடன் இந்த விதிப்படிக்கு எல்லாம் விருதெனவே
பட்டமது கட்டிவைத்தான் பாண்டிமன்னன்.

சாதித் தெய்வக் கல்வெட்டு

உழவருக்குச் சிவனாமுடுக்கு மாரியம்மன்
நழவருக்கு வயிரவனாம் நாடார்க்குக் கண்ணகையாம்
தொழுவருக்குப் பிதுராம் தொண்டருக்கு வேலவனாம்
மழுவருக்கு வீரபத்திரன் மறையோர்க்கு நான்முகனே.

வேந்தருக்கு மாலாம் வேடருக்குக் கன்னிகளாம்
ஏந்துபணிசெய்வோர்க்குக் காளியாம் நேந்துவைக்கின்
முட்டன் முடுவன் முனிவரெவரார் வரினும்
பட்டமது கட்டிவைத்தான் பாண்டி மன்னன் நிச்சயித்தான்.

நன்மைக்கும் தீமைக்கும் கும்பவரிசை

சீர் பெற்றிலங்கு வுயர்வாழீழநகர் மேவு தென்னவன் சென்னிகொங்கன்
தீர ரென மூவரரசாண்டு வருநாளிலே திறமை நலமேவு
வரிசை செய்திட்டமர பெக்காலமும் பூசுரன் திறலரசன் வணிகருழவர்
சிறைகள் பதினெட்டுடன வர்கள் பெறு வரிசை தீர்த்திட்ட செய்தியவேகேள்

பார்பெற்ற பரிதிகுல கலிங்கமரபினோர் பதின்மூன்று கும்பமும்
தேங்கினுயர் பாளைதனிப் பாவாடை மேற்கட்டி தாரை தவில்குழல்
வீணை பவனிபெறு பந்தலுள் ளிரண்டு நிறைகுடமுயரவும் பஞ்சமலர்
தூவவுங் கஞ்சமலர் மேவவும் பாவாணர் பாடிவரவும் பட்டாடை
பதின்மூன்று கொய்து மனைமேலெறிதல் பலகிரண தீபமிடுதல்.

ஏர்பெற்றிலங்கு நவதானியங் கொட்டுதல் பதினெட்டு வரிசை யெழுதல்
எதிருழவர் தங்களுக்கீந்த சிறை பதினெட்டு மியல் தொண்டு செய்து வரவும்
இலகு வெண்குடை தவள மேவு பூபாலனென வேற்று நரர் துதிபுரியவும்
எத்திருப்பதியிலும்; முகமனென முன்னீடிட்டு நன்முறைகள் முதலாய்
எற்றெவர் முன் தேசமென்று பணிசெய்து வரவும்

தார்பெற்றிலங்கபுவி வேளாளர் தன்வணிகர் சந்திர மரபர் தக்க கொடையீந்து
மகிழ மூன்று குகர்முறைகூறும் சாதிசிறையாதி முதலாய்த் தக்கபடியிம் முறைகள்
தவறாதிருத்தி முன்சாதி யென ஏற்று வரவும் இது தவறினோர் ஏழ்நரகு
வீழ்வரென மலையமான் சாற்றிவைத்திட்டதிதுவே
இது முறைமை தவறாது மூன்று குகமரபினோரிடுவரிசை பெறுமுதன்மை கேள்.

ஏர்சாலி கொடுவந்த படையாட்சிகுலமு டையினர் இடுகுடும்ப மொன்பதும்
இடுசிலை கொய்தெறிதலி யல்தேங்கு மலர்களிடுதல் இசைகள் தருபறை
மேளமொலி குரவை மேற்கட்டி இரு பந்தரெதிலிடுதல் முதுமைதருமுழவர்
சிறையெழுவர் பணிசெய்யவும் முகமலர்ந்துண்டு வரவும் முறைதமை தவறாது
நிலபாவாடை பலகிரண தீபமும் முன்கூரை முகடுதனில் முன்சொன்ன
பந்தலிலெந்தமலர் குவியினுமுலகுள்ளோர் ஏற்று வரவும் முற்கால
குகனென் குலமென்று மற்றுமுள்ளோர் முன்குகனென்றும் வரவும்
எதுகால பரியந்தம் செய்யென்று சேரனுமிட்டெழுதிவைத்த தருணம்

எதிர்நின்ற பணிக்கர் குலம் இவ்வரிசை செய்யென்றுமிடது வலமாக வரவும்
எஞ்ஞான்று காலமும் உழவுதொழில் புரியவும் நல்தானமீந்து வரவும்
இன்பமுறுமிருது வதுவை கொண்டாட்டமுயரவுமி ன்றென்று மேற்றுவரவும்
பொதுவாக வுலகிலுயர் போடி குலஞ் செய்வரிசை பூம்பந்தர் பறைமேளம்
வெடிகுரவை ஆலாத்தி புலவர்கவி பாவாடையும் புவிதேங்குமலர் மேவுகூரைமுடி
பன்னொன்று புதிய துயிலொன்பது கொய்தெறிதல் மேற்கட்டியும் புகழத்
தங்குவெள்ளார் கொண்டசிறை பன்னிரண்டு பொதுத் தொண்டு செய்து வரவும்
புவனமணி முடிகளணி புரவலன் செய்தானதே.

ஆன திருமரபிலுயர் வணிகர் வேளாளர் அவரவர்களுயர் வரிசைகேள்
ஆடலொடு பாடலும் நாகதொனிதாரை தவில் அழகெறி பந்தலெழவே
அட்டதிக்கோர் புகழ வருகூறைமுடி யேழு ஆடையேழ் கொய்து வளைதல்
ஆங்கு தேங்கு மலரணைதல் வெகுபுட்பமிடுதல்

தானமேழீதலோடு சிறைகள் பதினெட்டுடன் தனது தன்தொழில் புரிகுதல்
தம்பட்டம் வெடிகுரவை ஆலாத்தி தீ வெட்டி பாவாடை சங்குதொனி
மேற்கட்டியும் தானவரிபந்தரிலைடுதலியல் தொண்டுமுறை தப்பாமல்
செய்துவரவும் தக்கபடி மிக்கோர் பதினெழு சிறையினோடு மிவர்
சாற்று தொழில் செய்து வரவும்

ஞானமொடு ஏழுஞாண்டுவரிசை தப்பாமல் நன்கு வரவேணமெனவே
நகரிலுயர் வெள்ளாளர் தங்கள் சிறை பதினெட்டும் மூன்று முடி நன் பூக
மலரிடுதலும் நற்றுயில் முன்றெறிதல் மேற்கட்டி ஒன்றிலது முன்னவில்
வரிசையில்லை யெனவே நன்குமுறையாகவே வருவரென நாடி யறியென்று
நவில நாகநரர் தாகமெழ யேககுருவாதினோடு நடுவரெனவைத்தெழுதினர்

வானவர்களொப்பிடுதல் செய்முறைகள் குன்றாதவணிகர் வெள்ளாளர் மறையோர்
மகிழ்வுதரப் பரிதிகுல மன்னவன் நல்தீய வரிசை தீரத் திட்டமுறையோ
மானிலந்தன்னிலே வேரொடு மரபுமாற்றினும் வருநரகு எய்வரெனவே
மன்னுலகில் முற்குகரென்னுகத்துயர்வரென வைத்தெழுதி யிட்டமுறையே

கலங்க குலத்தாருக்குப் பதினமூன்றுகூரைமுடி மேற்கட்டி, நிலபாவாடை தேங்குமலர் பதினெட்டு வரிசை மேளவகை வெள்ளாளர்க்கீந்த சிறைமுற்றும் வெள்ளாளர் கொண்டு போய்விட்டு ஊழியஞ் செய்விக்கவும்.

படையாட்சி குலத்தாருக்கு ஒன்பது கூரைமுடியும், ஒன்பது சீலைகொய்து வளையவும், தேங்குமலர் மேற்கட்டி நிலபாவாடை வெள்ளாளர்க்கீந்த ஒன்பதும் ஊழியஞ் செய்யவும், இரண்டு பந்தரிடவும், பணிக்கனார் குலத்தாரும், படையாண்டகுலத்தாரும் வரிசை செய்யவும்.

உலகிப்போடி குலத்தார் செய்யும் வரிசை: பதினொரு கூரைமுடியும், ஏழு சீலைகொய்து கும்பம் வளையவும், தேங்குமலர் வெள்ளார்க்கீந்த சிறை பன்னிரண்டு ஊழியஞ்செய்யவும், மேல்கட்டி நிலபாவாடை மேளவகைகளும் (கலிங்க குலத்துக்புப் பெண்சந்ததி இரண்டும் இராசகுலம்)

வெள்ளாரும் காலிங்க குலத்தினருக்கு மாத்திரம் தங்களுக்கு ஈந்த சிறை பதினேழையுங் கொண்டு ஊழியஞ் செய்விப்பதேயன்றி மற்றவைகளுக்கு வெள்ளாளர் போவதேயில்லை. வெள்ளாளருக்கு ஏழுகூரை முடியும், ஏழு சிலைகொய்து கும்பவளையவும், சிறை பதினெட்டும் ஊழியம்புரியவும், பலவிதமான மேளவகை மேற்கட்டி நிலபாவாடை தேங்கு மலரிடவும்.

வேறு :- பதினெட்டுச் சிறைகளும், மூன்று கூரைமுடியும், மூன்று சீலைகொய்து கும்பம் வளையவும் மேற்கட்டி மாத்திரந்தான். மேற்கட்டியில்லை@ மேளவகையில்லை@ பூ கமலரிடவும் உள்ளாரில்லை. அவரவர்களே செய்து கொள்ள வேண்டும்.

பதினேழு சிறைகள் செய்யும் ஊழியம்

மாதுலர் அமுது சகைக்கவும், கோயிலார் சந்தன மரைக்கவும், பண்டாரம் சந்தனம், தாம்பூலம் பகிரவும், பண்டாரப்பிள்ளை வீடு, வீதி கூட்டிச் சாணம்போடுதல், கலமினுக்குதல், தண்ணீர்ரள்ளுதல், எச்சிக்கல்லை எடுத்தெறிதல், கொடிகட்டல், வள்ளுவருக்கு இராசமேளம், இராசப்பறை எடுத்துக் கையிற் கொடுத்தல், வீதி அதிகாரஞ்செய்தல், குசவர் குடம் முதலிய மண்பாண்டம் கொண்டுவருதல், கொல்லர் கோடரி, கத்தி முதலிய இரும்பாயுதங்கள் கொண்டுவருதல். முதலரிகள் நூல்சீலை, தீபச்சீலை கொண்டுவருதல், வாணிபன் எண்ணெய் கொண்டுவருதல், கொண்டுவந்து தலைக்கிடுதல், தீபத்துக்குமிடுதல், நம்பிகள் தீவெட்டி எடுத்தல், வண்ணார் துயில் தூசி நீக்கிக் கொண்டுவருதல், அம்பட்டர் மயிர் சவரம்பண்ணுதல், சாணார் தேங்குப்பாளை குருத்துவெட்டல், பள்ளர் நன்மைக்குப் பாணி கொண்டு வருதல். தீமைக்குப் பிரேதமெடுத்தற்கு விறகுவெட்டிச் சுடலையையும் செப்பனிட்டு வைத்தல், பறையர் பறைமேள மீட்டல், தீமைக்குப் பாடைகட்டல்......, பிரேதம் எரித்தல், கோவியர் பிரேதம் காவுதல், தவசிகள் பூமாலை கட்டல். பந்தல் முதலான விதானங்கள் சோடித்தல், கடையன் சுண்ணாம்புநீறு கொண்டுவருதல், மாதுலர், கோயிலார். பண்டாரம், பண்டாரப்பிள்ளைகள், தவசி, கோவியர் பந்தரிடலாம்@ சோடிதஞ் செய்யலாம். காலங்ககுல படையாட்சிகுலம், பணிக்கனார் குலம், உலகிப்போடி குலம் இவர்களுக்கே இந்தச் சிறைகள் ஊழியஞ் செய்வதேயொழிய மற்றவர்களுக்குச் செய்யக்கூடாதென்று பூபாலவன்னிமை மலையமான் தீர்த்தபடி பதினேழு சிறைகளுக்கும் கட்டளை பண்ணியது.

ஆசாரிகள் கல்வெட்டு

சீர்பெற்றிலங்கு வேதமொடு ஆதியும் திருவுற்ற மெய்ஞ்ஞானமும் தேடரிய எழுசுரம் பரவு நாதசுனையும் தினமுமுயர் ஆறுகாலமும் செய்யவென. சோழனென அரசு ஏற்றிட்ட சுரர் திருப்பணியுமமைத்து வளர்சிறைகள் பற்பல கிரணமுறைமையொடு, ஐந்தைந்து குடிகளும் மதிய நவஇரு சிறைகளும், பாருற்றெழுந்து சுரர் ஆலயத் தூபியும், பணிகள் பற் பல மதிள்களும், பரதிகுல அரசனென வருதீர சேர்னொடு பாங்குபெறும் அக்கசாலை பத்தியொட திருப்பணிக்காதாரமாக்கியே பதிஉயர்வு சித்திதரவே பண்டு செய்து அகமகிழவே தாருற்ற எக்கலம் வாழ்த்தவும், ஆசாரி நாமமும் சாற்றுவேன். தங்கி வளரத் தடமேவும், உலககுரு, சித்திரகுரு, அட்சணாதங்கு குரு, வேதகுரு, ததிநாம வேதகுரு, ஆசாரமாரெனச்சாற்றி உலகோர் களறியச் சநத்தயொளிபெற்று இட்ட திருப்பணி சகலதுமியற்றி வரவும் ஏற்றுற்ற வாளீழ்வெள்ளி, பொன்வங்குமும் இலங்கு செம்பைந்துடனே இட்டுண்டு வாழமரபு தருபரிதிகுலகுகன் ஏற்றி ஈழங்கரமணுகி எங்கெங்கும் உயர்வுகொடி எழுதவும் சாற்றரிய இந்தமறை, மறைகண்டு பணிய இரதவடமெங்கள் குல முண்பு தொடும் என்றரசர் பட்டமிது அறியவே பட்டமொடு தவள வெண்குடைகளும் பலிபீட பஞ்சகம் பரிதி குமிழம் பாவாடை மேற்தட்டு உத்தரம் தீவெட்டி பறைமேளம் சங்குவீணை பஞ்சகும்பமைந்து சில தேங்குமலர், நான்கு வழிப்பந்தல், பதினெட்டு வரிசைப் பவுசு பெற்று உலகிலுயர் காராளர் வரிசையும் பகுதியே பகுதி அறிவீர்.

சட்டசன அத்திகுரு விக்கிரகதாபனம், சரிகை சன்னாசமுறைகள். சாந்திமுறை, நற்குலத்தந்தணர்கள் தங்களோடு தக்கசபை ஏற்றுவரவும், தளிர்பூணூல் அணிதல், வெண்துயில் கட்டுதல், சந்தனம் நுதலில் இடுதல், தொட்டுவளர் தனவரிசை குகனேவல் செய்யவும், தொல்லுலகில் வாழ்ந்துவரவும், துடக்கறுரத்திட்டு உடல் பட்டாடை சுற்றவும், தொழில்கிரிகை செய்துவரவும் இட்ட வைத்திட்ட குகன் பின் ஊழியமுடிவிலே இது விருது, தரணி அறிய எக்காலமுயர்சாலை நனமக்களாய் இளமைபெற்று உழவருடனே ஈசனடியாரென்று வரிசையது மாறாமல் எப்போதும் உயர்வு தளராவிந்துமத சந்ததி சந்ததிகளாய் உலகு வாழும் என்று வைத்திட்ட குகனே.

முக்குகர் வன்னிமை

சீர்தங்கு வில்லவரும் பணிக்கனாரும் சிறந்த சட்டிலான் தனஞ்சயன்றான்
கார்தங்கு மாளவன் சங்குபயத்தன கச்சிலாகுடி முற்குகரினமேழேகான்
வார்தங்குகுகன் வாளரசகண்டன் வளர்மாசுகரத்தவன் போர்வீர கண்டன்
பார்தங்கு தண்டவாணமுண்டன் பழமைசெறி


சிங்களக் குடி

அரியகல மிடுமுதலி மீகான் கோடை அவுறாளை மேலச்சேனை பள்ளச்சேனை
பெரிய கல்மடுமுதலி மூவாங்கல்லு பேர்களேழே
புத்தூரர் மருங்கூரர் வீரச்சோலைபுகழ் காரைக்காட்டாரும் கொங்கைந்தும்
வித்தகமாய் மேழிதொழில் செய்யுமென்றான்

வெள்ளாளக் குடி

விறல் கலிங்கன் படையாட்சி இருவருந்தான் முத்தகல்லிலிருத்தி வைத்து
மாகோன் தானும் முதன்மை தரும் படையாட்சி வன்னியைச் சேர்ந்துபெறும்
தோப்பாவையைக் கைவசப்படுத்திப் படையாட்சி குலத்தார்க்கும் பகுத்து ஈந்தான்

செட்டி குடி

செட்டி, மங்குச்செட்டி, மாணிக்கன். சங்குச்செட்டி, சதாசிவன், சிங்கச்செட்டி
சின்னவன். பங்குச்செட்டி, பகுத்ததேழே கொச்சி வயிற்றார் முதலைக்குடி குறித்த
தாழாங்குடா ஒழுங்கு உச்சக்கரையார் ஆறுடனே பாவாடை உவந்த சலவை
ஆறுடனே அச்சமின்றி அவரவர் அறிந்து பார் நடத்துவரே.

நாவிதர்

சாரியுறு மண்முனையதில் அறவுதங்கும் மகிழத்தீவு சவளக்கடை
ஏரியுறு பாலைமுனை வழலவாயி லங்கு சம்மான் துறையென்னுமேழாய்
வாரியுறு மானிழலில் ரசுசெய்யும் மாகோனும் இவர் குடியை வகுத்து வைத்தான்
தாரணியறிந்தவர்கள் நாவிதனைப் தக்கபடி வைத்தமுறை சாரலாமே.

கரையார்.

கரையூரார் கம்பிளியா ராறுகாட்டி கருதுமுதலித்தேவன் வயித்திவேலன்
தறைசெறி வங்காளம் வீரமாணிக்கன் தான் கரையார்குடி ஏழாய்த்தரித்தான் பாரில்

சீர்பரதர்

துரைபோர்வீரகண்டன் சீர்பாதம் துடர்சித்தாத்திரன் காலதேவன் காங்கேயன்
நரையாவி வேளாலி மூடவெனென்னும் நாடதனில் பொட்டப்பறைச்சிசூடி யேழே
வரையாக இவர்களையும் வகுத்து வைத்து மானிலத்தி
லொற்றுமையாய் வாழுமென்று
திரையகல் சூழல்;புவி யரசன் வகுத்து வைத்துச்சீர்பாதம்
செட்டியென்று செப்பினாரே

பண்டாரப்பிள்ளைகள்

பண்டாரப்பிள்ளை தேசத்து எச்சிக்கல்லகற்றி
பறைதூக்கி கொடிகட்டி குருத்துக்கட்டி
விண்டரும் வீதி அதிகாரம் திருவட்டி ..............
மன்றாடும் போடியார் வீடு கூட்டி
மடத்தடியார் குளிசீலை பிழியுந்தொழில்கொண்டு
குகமரபினனுக்குச் செய்வதன்றி
வேறு குலமக்களுக்குச் செய்யொண்ணாதே.

தட்டார்

களுவத்த பணிக்கன் வேலன் கறுத்தக்கண்ணி பத்திச்சி
கொளுங்க குப்பட்டி குசவன் பாலன்குட்டி வகைகளதாக்கி
நழுவிய நம்பிமாரை நழவரென்ற வரியிற்சேர்த்து
வழுவில்லா மதுவெடுக்கும் வருணமென்றியம்பினாரே.

பறையர்

வள்ளுவம் தொட்டி தோட்டி வாஞ்சொலி சக்கிலியன்
துள்ளும் வெட்டி யானந்தனேழாய்ச் சுகித்திடவகுத்தவாறே
பள்ளுடன் கலந்தாலுங்கள் வரன்முறை குறையுமென்று
வள்ளலார் காலிங்க மாகோனும் வகுத்திட்டாரே.

5. ஒழிபியல்

திருப்படைக்களஞ்சியம்

சூகர வேட்டைக் கோலம்.

சிவலிங்கத்தைச் சோடித்து தங்கநூலாலிழைத்து வேட்டி உடுத்தி, முத்துக் குடையும்பிடித்து வெண்சாரை யிரட்ட வேலாயுதத்தையும் தங்கப் பல்லக்கில் கொள்ளச் சிவ விக்கிரகத்தைப் பண்டாரங்கள் தூக்கி நிற்க இருபாகையார் சுலோகஞ் சொல்ல முதன்மை முன்னே போக வன்னிபங்கன் பின்னே போகச் சகல மேளதாள வாத்தியங்களோடும் இருபாகை முதன்மையும் நடக்கப் பண்டாரங்களும், வெள்ளாளர்கனும் சுவாமியைத் தோளில் சுமந்து வேட்டையாடுமிடத்துக்குப் போய் இளைப்பாறியிக்கும் போது ஆரிய நாட்டுச் செட்டிகள் வெள்ளாளரைக் கொண்டு சுவாமியினுடைய இரத்தின மாலையைத் திருடித் தாருங்கள் என்ன அவர்களும் திருடிக்கொடுக்கும் போது பண்டாரங்கள் கண்டு வன்னிபங்களுக்குச் சொல்ல வன்னிபங்கள் செட்டிகளையும், வெள்ளாளர்களையும் பிடித்துக் கட்டி வைத்து அடிக்கும்படி கட்டடளை பண்ண பண்டாரங்கள் கட்டி வைத்து அடித்து அவிழாமல் கட்டுடனே கிடக்க சிவன் சூகரமாடி சகல திருவிளையாடல் செய்தபின் இரு பாகை முதன்மையும் ஈட்டி எடுத்துக் கொடுக்கப் பண்டாரத்தாரில் கனகசபைப் பண்டாரம் ஈட்டி தொட்டுக்கொடுக்கத் தம்பிரானார் பன்றி குத்துதல். (அதன்பின்பு குழுக்கை கூறுவது)

குடுக்கை கூறும் விபரம்

இருபாகை யென்னும் பரம்பார்ப்பான் குடுக்கை கூறுச் சூத்திரசாதிகள் சகலரும் எழுந்து இருபாகை முதன்மை என்மனும் கலிங்கராசனை வணங்கிக் கூறுவது :-

அரசே! இந்த இருபாகையார் தருமம் தானம் வாங்கப்பட்டவர்! தானதரும மீயாதவர்கள், மற்றவரிருந்தும் விருந்தினர்க்கீயாமல் அன்னபானாதி ஆகாரமருந்துவோர். உபதேசங்கொடுத்து மனுகுலத்தவருக்கு அறிவூட்டாதவர். ஈயார், சீவகாருண்யமில்லாதவர். இவர்களிடத்திலே அமிர்தம் போன்ற பிரசாத முட்டியை வாங்கி அருந்தினால் தருமதோஷம் வருமென்று சூத்திரர் சாதிகளான வெள்ளாளர் முதலான பதினெட்டுச் சிறைகளும் அரசனிடம் விண்ணப்பஞ்செய்ய அரசனும் மெய்யென்று மனமகிழ்ச்சி கொண்டு சூத்திரர்சாதிகளை நோக்கி உங்களுக்கு யார் பங்கிட வேண்டுமென்று வினவ, சூத்திரர் அரசனை வணங்கி, அரசர்க்கரசனே, தேசமென்னுந் திருநாமகுலத்தானே! எங்களில் முதல்குலமாகிய காராளர் சரித்திரங் கூறுகின்றோம்.

முற்காலத்தில் சேரன், சோழன், பாண்டியன் இவர்களைப் பிள்ளைக்குலமென்றும், நாயர்குலமென்றும், காராளர்வம்மிசமென்றும் விருதுகொடுத்து வந்தவர்கள். இவர்கள் பசுபதி சிந்தனையுடையவர்கள். தேவருக்குத் தொண்டூழியர்@ மாசில்லாத மரபில் பிறந்தவர்கள் மாமிசதேகமெடாதவர்கள். பண்டுபண்டு பெருமையுடையவர்கள். உயர்ந்த நடையுடையவர்கள். சிவவணக்கமுடையவர்கள். உடலிலழுக்கேறாதபடி உபதேசஞானத்தில் சிறந்தவர்கள். உழுது தானியமிட்டு யாவருக்குமாதாரமான தொழில் ஊண் உண்பவர்கள். தருமதானஞ் செய்யப் பட்டவர்கள். தன்னுயிர்போல் மன்னுயிரைப் பாதுகாப்பவர்கள். இராசசேவகத்துக்குப் போகாதவர்கள். தேவாலயத்தில் ஏவல்கொண்டு செய்பவர்கள் பொறாமை உடையவர்கள். பொய், கொலை, கள், காமம், குருநிந்தனை நீக்கப்பட்டவர்கள், இவர்களுடைய கையினாலே இந்த எம்பெருமானுடைய திருவிளையாடல்களைச் செய்து யாவருஞ் சித்தி முத்தி பெறுவதற்குக் கொண்டுள்ள வரிசை முட்டியைத் தந்தால் எக்காலமும் சிவமதத்திலேயேயிருந்து குகன் குலத்து வன்னிபங்கன் சொற்படி அரசனிட்ட கட்டளை தவறாமல் தேவாலய ஊழியஞ் செய்வோமென்று பதி கூற அரசன் கேட்டு பிரம சத்திரிய வைசியரென்னும் மூன்று வருணத்தாரும் சூத்திரருடைய கையினால் வாங்கமாட்டார்கள். ஆனால் முட்டியின்மேலே பட்டுப் போட்டு எக்காலமும் வரிசைமுட்டி கூறவேண்டுமென்றும் சூத்திரசாதி முதற்குலம்- வெள்ளாளனுக்கும் உங்கள் பதினெட்டுச் சிறைகளுக்கும் பட்டுப்போடப்படாதென்றும் கட்டளையிட்டு வரிசை முட்டி கூறும்படி பண்ணி வணிகனை அவிழ்த்துவிட்டுப்பின்பு வெள்ளாளர்களை அவிழ்த்து மஞ்சள் தண்ணீர் தெளித்து வரிசை கூறும்படி செய்தனர்.

வெள்ளாளனும் சங்கச் சபையை வந்தனம் பண்ணி வரிசைமுட்டியை இரு கரங்களாலுமெடுத்து முதல் யாருக்குக் கூறுவேண்டுமென்று கேட்க, அரசன் மகிழ்ந்து சொன்னதாவது :- பெரிய திரு வாசலென்று முன்பு கூறிப் பின் வேதமென்றுகூறி அதன்பின் நம்பி என்று கூறி, அதன்பின் திருப்பாட்டென்று கூறி அதன்பின் சரிகைசன்னாசமென்று கூறி, பின் தேசமென்று கூறி, பின்பு வன்னிமையென்று கூறி, அதன் பின் உலக குருநாதனென்று கூறி, பின் பூமால கோத்திரமென்று கூறி. பின் பூவசியனென்று கூறி, பின் புன்னாலையென்று கூறி, பின் மண்முனை என்று கூறி, பின் மட்டக்களப்பென்று கூறி, பின் நாடு என்று கூறி, பின் நகரமென்று கூறி, பின் கண்டி என்று கூறி, பின் கதிரை என்று கூறி, பின் கந்தளை என்று கூறி, பின் மகாவலியென்று கூறி, பின் அயாத்தியென்று கூறி, அதன்பின் தேவாலயத்து ஊழிய சிறைகளுக்கு அவரவர் கையில் முட்டியில்லாமல் பங்கிடுமென்று கலிங்ககுமாரன் கட்டளையிட வெள்ளாளர் அப்படியே கூறிச் சிறைகளுக்குப் பங்கிட்டு சுவாமிகளை ஆலயத்துக்குக் கொண்டு போய் வைத்து மஞ்சள் நீரூற்றி விளையாடி வாழ்ந்தனர்.

விமலதருமன் கண்டிக்கு அரசனான போது வன்னியர்களுக்கும், வெள்ளாளர்களுக்கும் முன்முறைமை தவறிக் கொந்தளிப்புண்டாக, விமலதருமன் வன்னிபங்களை வினாவ, வன்னிபங்கள் செப்பேட்டை எடுத்து வாசிக்க, விமலதருமனும். பங்குவாங்குவோரும் அவரவர்கள் மரபுமறிய விரும்பி விழாக்கடமை செய்யும்படி வன்னியர்களிடம் சொல்லி விழாவை நடத்திச் சூகரவேட்டைத்தலத்தில் வந்து, கலிங்கராசன் பண்டைக் காலத்தில் நடத்தியபடி காட்டுங்களென வன்னிபங்களும் வெள்ளாளரைக் கட்டிப் பண்டாரங்களைக் கொண்டு அடிப்பித்து அவிழ்த்து, மஞ்சள்நீர் தெளித்து முதன்மை சொன்னபடி கூறுமென்ன வெள்ளாளர் வரிசைமுட்டி கூறும்பொழுது அரசன் மகிழ்ந்து மட்டக்களப்புத் திருப்பணி மூன்றுக்கும் வெகுமதிகள் ஈந்த வெள்ளாளரையும், சிறைகளையும் நிறுத்தி வன்னிபம் முதன்மைகள் தங்கள் பண்டு ஊழியஞ்செய்யும் படி திட்டஞ் செய்தான். அதற்குத் தவறினால் கொடிய தண்டனை கிடைக்குமெனவும் திட்டஞ்செய்தான்.

பங்கு வாங்கும் விபரம்

பெரிய திருவாசல் என்பது கயிலையங்கிரி. வேதம் என்பது பிரமன். நம்பி என்பது விஷ்ணு. திருப்பாட்டென்பது சிவன். சரிகைசன்னாசம் என்பது படையாட்சி, உலக குருநாதரென்பது குரு ஆதி. பூபால கோத்திரமென்பது கலிங்க வெள்ளாளர். பூவசியன் என்பது வணிகன். புன்னாலை என்பது பணிக்கன் வன்னிச்சி-மண்முனை என்பது உலகிப்போடிகுலம். மட்டக்களப்பு என்பது தனஞ்செனான். நாடு என்பது இராமநாட்டு வேடன். நகரம் என்பது வவுனிய வெள்ளாளர். கண்டி என்பது நிலைமை. கதிரை என்பது வேடப்பெண். கந்தளை என்பது மலையாளமுக்குவர். மாவலி என்பது இடையர். அயோத்தி என்பது மறவர். இது தகுதியுடையவர்களே வாங்கும் படி எங்கள் முதன்மையாகிய மகாவம்சக் கலிங்கராசன் இட்ட முறைமையென்று வன்னிபங்கன் விமலதருமனிடங்கூறி முகமனும் பெற்றனர். இது நிகழ்ந்தது கி. பி. 4738-ம் வருஷம்.

பங்கு தடுக்கும் முறை

வரிசை முட்டிவாங்குவோரே யுன்குலமும் கோத்திரமும்
மங்கை மைத்துனராய் வந்தவாறும்
சரிகையொடு சைவநெறி தந்தார் பேருஞ்
சாதிவிட்டுக் கலவாமல் தரிக்குமாறும்
கிரிகை முறைப்படி நடந்து லகோர் வாழ்த்த
கொடுமுறையை யகற்றி யீசரில்லம் வந்து
பரிதிகுலக் காலிங்கன் முன்னாள்செய்த
பண்டுமுறை தனைக்கூறிப் பங்கு வாங்கேன்.

கூறமுறையறியாதாரெழுந்தாற் தோடம்
குலமறியார்தான் செய்தகுற்றங்காணார்
நீறணியு மிசைமுறை நீக்கி வாழ்வோர்
நிலையகன்று பிறர்குலத்தில் மணந்து கொள்ளார்
ஆறுபணி தாரமென்னு மாலயத்தில்
அனுதினமும் வந்துமல ரிட்டுண்ணார்
வேறுகுலமக்கள் மனை விருந்து ண்போர்
விறல்வரிசை முட்;டி விடேன் நீ நீ கேள்.

நீங்குநீதேசசங்க மதனிற்கூறும் நின்னையு
மென்னையும் நிலை நிறுத்திவைத்து
பாங்கு குலங்கோத்திரம் சைவமுறை
பண்டுகுற்ற மில்லாத தூயோனானாற் பங்கு
வாங்குமென்று விருதரிப்பாரெனக் குற்றம்
வகுத்திழுவாருன் தகுதி மங்குமாகில்
தாங்கு வென்னை யச்சபையோர் புகழுழவருன்னைச்
சங்கமதாலகற்றி வைப்பார் தகுதிபாரேன்.

பாரிலுயர் திருவாசல் வேதம் நம்பிரான்
பட்டுச்சன்னாசந் தேசம்
சீரிலங்கு வன்னிபமுங் குருநாதர் பூபாலன்
திறல்பெரிய கோத்திரமும் பூவின்செட்டி
ஏர்சிறந்த புன்னாலை மண்முனையு மிலங்கு
மட்டக்களப்பு நாடுநகர் கதிரை கண்டி
காரிலங்கு கந்தளை மாவலி யயோத்தி
கருத்தறிந்து வாங்காதார் கைநீட்டாதே

கையது நீட்டில் தடைசெய்வேன் பண்டுபண்டு
கலிங்கனிடு கடமைகளைத் தவறாதோர்கள்
பொய்யுரையார் புகழ்குறையார் தீண்டார் வீட்டில்
புசியாதார் திருப்பணிக்குப் பொன்னே யீவோர்
வையமதில் பிறர்நிதியந் திருடிவாழார்
மறைநூல்களா ராய்வோர் மாமிசத்தால்
உய்ய வுடன் வளராதார் திருப்பணிக்குள்@டு
சென்று வரிசை சங்கத்துரிமை கொள்ளேன்.

தர்க்கம் :

தேசம்

தேசமென்று வரிசை முட்டி வாங்கவந்தீருன்திறமை யென்ன
செங்கோலோச்சுந்திசை தானெங்கே
பாசமெறிஞமன் குணத்தோர் தன்னைக்கொன்று
பசுபதியாயு லகமதை வைத்ததெங்கே
தூசகற்றி யுனது முன்னோர் சுகித்ததெங்கே
தொண்டு தொட்டுச் சுயதிறமை சொல்வீரானால்
கூசாமல் வரிசைமுட்டி வாங்கலாகும்
குறியறியார் கரம் நீட்டிற் குலத்துக்கீனம்.

பேர்பெரிய வெனது முன்னோரிருந்த தேசம்
பிரமபுத்ரா நதிதனக்குப் பக்கமாகும்
ஆரெதிரி யில்லாமல் யோத்தி வங்கம ரிபுரம்
காளிகட்டஞ் சேர்ஒறிசாதேசமது
எரணிகள் ளர்முன் பின் படைகள் சூழ சிவகோத்திரத்
திறமையுடன் செங்கோலோச்சி
நீர்குழுமிலங்கை முற்றுமிராவணன் பின்
நிலையரசு புரிகலிங்க ராசனானே.

வன்னிமை

வன்னிபங்கன் குலவரிசை முட்டிகூற மகிழ்ச்சிகொண்டு
எழுந்திடுன் மரபும் நாடுமெந்த
மன்னருன்னை வன்னிபமாய் வகுத்ததென்றும்
மானிலத்திலுங்கள் முன்னோர் வாழ்ந்தவூரும்
துன்னுபுகழ் கோத்திரமும் தொன்று தொட்டுத்
துணையரசன் பேரூருஞ் சொன்னாலிந்த
பன்னுபுகழ் சபையோர்கள் மகிழக்கூறிப்
பங்குபெறு மறியாயானாற் பாவமாமே.

அறமியாதா னிச்சபைக்கு அகலநிற்பான் னெங்கள்
பரன்றோழும்பேர் பழிப்புரைப்பாரறைவே
நெறிதவறார் சுயநாடு காளிகட்டம் நீர்குலமே
படையாட்சி யுழுதூ ணுண்டோர்
வெறிகமழு மகாலிங்க வாசனெங்கள் திறத்தோரைப்
படைத்துணைக்குத் தலைவனாக்கி
குறியறிந்து வன்னிபங்கள் குலமே என்றும்
குகப்பட்டத்தரசு கொண்டோனானே.

குருநாதர்

குருநாதர் குலகுருவின் வரிசைமுட்டி கூறுமுன்னர்
குலம்கோத்திரம் குதுகலத்தின்
பெருமைகளும் மறைநான்கும் பட்டம்பெற்ற
பெரியோருங்கள் முறைவகுத்தார்


திருவரனை யிம்முறைக்குப் பதிலுரைத்துத்
திருப்படையில் பங்குபெறுமறியாதார் தீண்டில்தீதே

தீதகலப் பருவத்தில் பிரமபுத்ராத் தீர்த்தமதில்
சிவனுமையும் வேடரெனச் சிலையம்போற்றி
தாதுலவு நீராட வெங்கள் முன்னோர்
சதாசிவ வென்றடியைப்போற்ற
மாதுமங்கனறிந் தைந்து மந்திரத்தையீந்து
குருநாதரென மறைந்தபின்பு
பூதலத்திலுயர் கலிங்கராசனுடன்
வந்திலங்கை முதல் குருவாய்ப் புகுந்தோனானே.

பூபாலகோத்திரம்

பூபாலகோத்திரதின் புகழைக்கூறப் புவியதனில்
பூபாலன் போலெழுந்துவந்தீர் நில்லு நில்லு
பாவலர்கள் கவிபாடி வைத்ததெங்கே
படையரசு புரிந்தெந்த மதத்தில் நின்றோன்
தேவதனதான மெங்கே யுங்கள் முன்னோர்
சேர்ந்தவரின் குலமுமெந்தக் கோத்திரந்தான்
தூபமெனப் பிரித்துரைத்து வரிசை பெறும்
சொல்லறியானிச்சபைக்குத் தூர நில்லேன்.

தூரநில்லேன் பூபாலன் சோழனல்லத் துங்கமுடி
ராமல்ல வங்கர் கெங்கர் வடுகனல்ல
தூசிமாற்றுங் கெங்கர் குலத் தரசன் றானும்
செப்பரிய காலிங்கநகரரசு செய்யுங்காலம்
நீரகழிலங்கை முற்றுஞ் சைவமோங்க
நிலையரசு புரிந்து பூபாலனென்ன நின்றெங்கள்
காரகற்றிச் சிவப்பணிக்குக் காவல்வைத்த
காரணத்தால் சிவகோத்திரக் காளை யானே

பூவசியன்

மாசடைவசியரென வரிசைகூற மகிழ்ந்தெழுந்தீர்
நில்லு நில்லுன் வழமை யென்ன வணிகமெந்த
தேசமதிலுங்கள் குலமிருந்து சிவபணிக்குக்
கோத்திரத்தின் திறமைகொண்டு தேருஞ் சீரும்
வாசமலர்த் தோப்புகளும் தாசிநடமாடுதற்கு
மண்டபமும் வகுத்துச் செம்பொன்
நேசமுடனீந்துவிடமுற்றுங் கூறில் நீள்சபையோர்
வசியரென வரிசைபெறு நீதிதானே.

முற்குலத்து வசியரிலும் பூவசியன் முதற்குலமாய்ப்
புவியோர்வாழ்த்த அயன்மால் முன்னோன் தூய
தற்பரணார் மதிகளுக்கு நிதியமீது தேருடனே
சத்திரங்கள் தாசிநடனமண்டபமும் தரித்துக்காசி
விற்பரனார் கிருபையினாலெங்கள் குலம் கலிங்கனொடு
மிலங்கைசென்று திருப்பணிகள் மேன்iமாக்கி
கற்பகத்தின் கோத்திரமாயிருந்து மட்டக்களப்பிலுயர்
வசியகுலக்காளை யானே.

புன்னாலை

புன்னாலைப் பெருமைதனைப் புவியோர் கேட்கப்
புகழ்ந்து சங்கச்சபையோர் வரிசைகூற மற்றும்
முன்னேகி வேண்டவந்தீர் நில்லுநில்லுன்
முறைமையென்ன மூதாதைபண்டுளர் பேர்
தன்னாடு கோத்திரங்களாரரசர் சந்ததியும்
புன்னாலைத்தகுதி முற்றுஞ் சரியாகச் சொன்னால்
உன்னாணைப்பங்கு பெறு மறியாயாகிலு ற்றதிருச்
சபையைவிட்டோடிப் போவீர்.

திருச்சபையில் நிறைந்தவரே செப்பக்கேளும்
சீரெங்கும் சேர்க்கில் புன்னாலையாகும்
மருப் பெரிய சுந்தரனுமரசு செய்ந்நாள் மகவுதிக்க
வாகாதால் மணிப்பேழை வைத்துப்பூட்டி
பொருப்பிலிட வடைந்திளமனுநேயன்
புத்திரியாயிலங்கை முற்றுஞ் செங்கோலோச்சும்
கருத்தரிய சவுந்தரியாள் வங்கர்குலம் நானுமந்தக்
குலக்காளை யந்நாட்டுக் கடமைகேட்டேன்.

மண்முனை

மண்முனை மாநிலத்தில் மருங்கூரென்றும் மகிழ்ந்து
சங்கச் சபையோர்கள் வரிசை கூற
நண்ணிவந்து கரம்நீட்டி வாங்கமுன்னுன் நகரேது
குலமேது கோத்திரத்தின் நாமமேது
பண்ணுபுகழுன் மரபும் மண்முனையின் நாமமது
பகுத்தார் பேரும் பண்டு பண்பும்
திண்ணமுடனிச் சபையில் செப்பாராகில் திருவேட்டை
குடுக்கைதனைத் தீண்டில் தோஷம்

தீண்டாதார் தீண்டவரோ ஒறிசாதேசம்
செங்கோலை யோச்சுகுகசேனபுத்திரி
தூண்டு புத்ததசனமொடு சிறைகள்சூழச்
சுருதுதுயிலுடுத்த புவியீழநாட்டுத்
துரத்தனத்தான் மேகவண்ணன்
தாண்டகிரி மண்ணேறுமுனை
கொடுத்துத் தசனம்வேண்ட
மீண்டு மட்டக்களப்பு வடபகுதிதிருத்திக் குடியேற்றி
விறலரசுபுரிந்த குலசிங்கனானே.

மட்டமுறுங்களப்பதற்குப் புகழேயோங்க
வரிசைசங்கச்சபையோர்கள் முட்டிகூற
திட்டமுட னெழுந்து கரம்நீட்ட முதலுன்
குலமும் நேர்சீர் நாட்டின்
பட்டமது வைத்தவரின் பேருமூவரும்
பண்டுபண்புமிச்சபையில் பகர்வீரானால்
பிட்டதனை N;வண்டி மண்ணைச் சுமந்தோனாணைக்
குடுக்கை பெறும்புகலறியானிச் சபைக்குப் பின்போவீரே.

பண்டுநாள் விசயனென் பேரனீழநாட்டைப்
பரிபாலனம்புகுந்து பரமபதமடையுங்காலம்
திண்டிறல் கலிங்ககுல சேனனீன்றெடு;த்த
கூத்திகனுஞ் செங்கோலோச்சுங்காலம்
கண்டு கரைநகர் களப்பை முடியெங்கள்
காளிகட்டந்தனிலிருந்து வணைத்துமுன்னாள்
மண்டு சிறைக்கதிகாரப்பட்டந்தரு
பரிதிகுலன் பதிகாவல்புரிந்தோனானே.

நாடு

நாடதிகம் புவிதனிலே புகழிலங்கை
நன்னாட்டின் பெருமைதனை நாடிக்கூற
தேடரியதிருச்சபைக்கு முன்னேவந்து வரிசைமுட்டி
தீண்டமுன்னுன் பேரூருஞ் சிறந்தநாடும்
மாடமுயர் மண்டபமும் மரபும் நீங்கள்
வந்தவரலாறு முற்றும் வழுத்துவீராய்
ஏடலரும் வரிசைமுட்டி எடுப்பீரல்லாலிச்
சபையை விட்டகன்றே குவீரே.

சபையோரே மானிலத்திலதிகம் நாடுசங்கை
பெறுமெண்ணாட்டுள்ராமனோடு
எவையோரில் மறவர்குலத் தேழுமாதரிலங்கை
செல்ல மணமகனுஞ்சிறைகள் சூழ
அவையமென வெங்கள் குலத்தைந்துகுடி
யனைவருக்கும் பூசகரா யழைத்துமட்டச்
சுவைகளப்பில் குடியேற்றி யாவருக்கும்
குருக்களெனத் தோன்றும் நானே.

நகரம்

நகரமென்று திருச்சபையோர் வரிசைகூற
நாடி யெழுந்திருந்துனது பேருமூரும்
பகரரிய நகரமெது நீர்தானாரு பங்குபெற
வெழுந்தநீருன் குலந்தானேது
சிகரமெழு மேருகிரி குடையப்
பூமிசெழித்திலங்கும் நகரநாடு தேசமிச்சம்
மகரமெனக் கடல்புடைசூழ் குகனார் நாட்டோர்
வாழ்ந்தவாறு மொழியுரைத்துவரிசை வாங்கேன்.

மொழியுரைப்பேனைந்து பத்தாறுதேசம்
முப்பத்திரண்டுநகர் புரந்தானெட்டு சுந்தரனேழு
தளிர்துளியும் நாடுபத்துக் கிரிதா னெட்டு
சாற்றரிய கடலேழு மிவைக்குள் பூத்த
கிளிமொழியுந் தஞ்சை நகரெங்கள் குலந்
திருச்சோழகண்டபிள்ளை விழாக்கடமைத்
தொழில்புரிந்து ழுதுண்டு கண்டநெல்லுழவரென
தோன்றும் நானே

கண்டி

ஈழமுறுங்கண்டி யதன் பெருமை கூற வெழுந்துவந்தீர்
நில்லு நில்லுன்னூரும் பேரும்
வாழையடி வாழை யெனவந்தவாறும்
மானிலத்திலந்நகரையாண்டான் பேரும்
சூழநகருண்டாக்கி வைத்தார்பேரும்
சொல்லரிய உன்குலமுந் தொடர்புங்கூறி
நீளமெழுந்திருச்சபையில் வரிசை பெறுநிலை
தெரியாதாகிலிங்கே நில்லாதேகேள்

தெரியாதாரிச்சபைக்கு ருகராகார்
சிறிமதியின் வயிற்றுதித்தசிங்கவாகு
பரிவாக வீன்றெடுத்த விசயராசன்
பாங்காக வுண்டாக்குமந்நகர் தானிது
அரியென்னுங் கொடி யுயர்த்தி யரசுசெய்த
வன்னவன்றன் குலம்குலமாய் நிலைமைபூண்டு
வரிசைமுட்டி பெறுவதற்குத் தடையேதுமுண்டோ
வங்கர் குலக்கோத்திரத்தான் சிங்கன் நானே.

கதிரை

கதிரைநகர்ப் பெருமைதனைப் புவியோர்கேட்கக்
கனகமுறும் வரிசைமுட்டி கூறவந்தீர்
மதுரமுறு மொழியதனுலுன் பேருமூரும்
வந்தமுன்னாள் வெற்பதனை யாண்டார்பேரும்
எதிரொளிகள் சிறந்தெறிக்கும் கருணையாவும்
இச்சபையிலுரைத்து முட்டி எடுப்பீரல்லால்
நதியரவு சூடுமரன்றன் மேலாணை நவிலறியாதாகில்
நில்லாத கன்ற செல்லேன்

செல்லுவரிச் சபைக்குமுன் வாரார்கள்
செகமதனிலெம்கூடச் சிகரமாகும்
தொல்லுலகில் சூரர்க்கருவறுத்த வேலோன்
சூட்சமத்தால் வரையில் நின்று துலங்குதீபம்
வல்லியெனும் சூரருக்காய் வள்ளியம்மன் வந்துதித்து
வேலரொடும் மறைந்துமுன்னாள்
துல்லிபமாயெயினர் பதியாண்டதாலே நானுமந்தக்
குலமிந்தக் கடமைகேட்டேன்.

கந்தளை

கந்தளை மகிமைதனைத் தேசசங்கம்
காசினியில் வரிசைதங்கமுட்டிகூற
வந்துகரம் நீட்டமுன்னுன் பேருமூரும்
மகரவேரிசெய்வன்றன் நாமந்தானும்
விந்தையொடு யவர் மணந்த மங்கைபேரும்
விறலரசு புரிந்தாண்ட திசைகள் யாவும்
கொந்தளக சபையோர்களகமகிழக்
கூறிவரிசை பெறுங் கூறறியானிச் சபைக்குப்பின் போவீரே

பின்போவார் பெருமைகொண்டு வருவாருண்டோ
பேசரியவங்கமாக சேனன்றானும்
தன்செயலை நிலைநாட்ட வெண்ணி முன்னாட்
சதுரங்க சேனையொடு இலங்கை சேர்ந்து
அன்போடு முக்கோணா லயத்தைய
ருளொக்கச் செய்தேதானா டகத்தை
இன்பமொடு மணந்த மங்கை வங்கர்குலம்
நானுமக்குலத்தான் வரிசைகேட்டேன்.

மாவலி

மாவலியின் புகழ்தனை யுலகோர் வாழ்த்த
வரிசை முட்டி கூறவந்தீர் நில்லு நில்லு
தாவியதனு ற்பத்திதானுமெங்கே தளிர்கிரண
நித்திலங்கள் கலந்ததெங்கே
தேவசிவனடியெங்கே நீர்தானாரு திருச்சபையிலிவ்
வரிசைவாங்கச் சென்றீர்
நாவலர் களிந்த முட்டி பெறும்
நவிலறியாயாகிலிங்கே நாடாதோடேன்.

நாடாதாh நாடுவரோ பெருமைகூற
நற்சபைக்குமுன்னேகி வரிசை கொள்ளார்
தேடரிய சிவனடியில் செறிந்தெழுந்த
திருக்கங்கை வதனமாரிருந்து வாழ்ந்தார்
மாடேறு மீசனடி துதித்திடைய மக்களென்று
பண்டு பண்டு வரிசை பெற்றார்
வாடாத அக்குலத்து மரபன் நானும்
வரிசைபெற வினியேதுந்தடையதாமோ.

அயோத்தி

அயோத்தி நகரதற்குப் புகழேயோங்க
வரிய திருச்சபையோர்கள் வரிசைகூற
மெய்செழிக்க விச்சபையில் வந்திருங்கள் விருதுடனே
குலங்கோத்திர மரசுரிமைவேந்தர் பேரும்
வையத்தில் வந்தவாறுடனே
யந்தமன்னனிருவரன் முறையும் வழுத்துவீராய்
பொய்யுரைகள் கூறாமல் வரிசை பெறும் பொருள்
தெரியாதாகிலிந்தச் சபையின் பின் போவீரே

வீரனென்னும் பரதிகுல யிரகுமுன்னாள்
வேட்டை சென்றெங்கள் குலமெல்லிதன்னை
மாரனென்றணைத்தீன்ற சவலையர்க்கு
வருஇரகு நாடனென நாமமிட்டு
பூருவத்தி லயோத்தி யுரிமையீந்து
போன பின்னர் சிறிராமர் துணைவராகி
தீரரென்னுமரக்கர்குலம் வேரறுத்த
சிவமறவர்குலம் நானும் வரிசைகேட்டேன்

திருப்படைக் களஞ்சியம் முற்றிற்று

அனுபந்தம்:அ

அறுமக்குட்டி சாதி முக்குவன் எங்களிடத்திலே மண்முனைப்பகுதிக்குப் பெடியாய் இருக்கக் கெட்டபடியால் அதற்கு நாங்கள் நிர்ணயித்துப்பார்த்துத் தன்னுடைய நல்ல நடவடிக்கையைக் கெட்டுத் தீர்மானித்துமுன் சொல்லப்பட்ட மண்முனைப்பகுதிக்குப் பெடியாகக் கற்பிக்கிறோம். அது கூடக் கொடுக்கப்பட்டது. தமது தொழிலுக்கடுத்த சங்கையும் புரோசனமும் பெரியவர்களுக்கு நடக்கும் பூச்சியமும் பொது கிடைத்திருந்த படிக்கு இப்பொவும் அந்தப் பிரகாரந்தான் இதிற் கட்டளை பண்ணுகிறோம். இதிலடங்கிய சகலமான பேரும் இந்த அறுமக்குட்டியைப் பெடியாக அறிந்து உண்டான படிக்குக் சங்கிக்கவெணும். இதற்கு அடையாளம் திட்டப்படுத்தி வளமையான முத்திரையும் வைத்துக் கையொப்பம் பொட்டுக் கொடுத்தோம். இப்படிக்கு இலங்கைத் தீவிற் கொழும்புக்கோட்டைய்

766 ஆ. கார்த்திகை மீ 6 யிலே கையொப்பம் வைத்தது இமான் வெல்லமம்பல்க்

மேலான சங்கைபோந்த யுத்தமகத்தனா கிய கொலாண் மகாராசா மெஸ்தர் இமான் வெல்லம்பல்க் அவர்களை கட்டளைப்படிக்கு

இலங்கையில் முத்திரைசிவத்த லாகிரியாலேவைத்தது.

கீழே கையொப்பம் வைத்தது யொகான் கொஸ்தன் அங்கலவெக் சக்கடத்தார். சரிவரக் கண்டது.
அத்திரியானிஸ் பிறான்ஸ்கெதொலுக்கரித்தது.
கணக்கன்.

KALANILAYAM, 175, SEA ST. COLOMBO

--------------------------------------------------------------------------------

வடமொழி இலக்கிய வரலாறு

ஆசிரியர் :-

டாக்டர் கா. கைலாசநாதக் குருக்கள், ஆ. யு. Pர்னு.

உலக மொழிகள் பலவற்றுள் ஒன்றாகிய சம்ஸ்கிருத மொழியின் இலக்கியத்தின் வரலாறு பற்றியே இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

உலகில் உள்ள மேனாட்டுமொழிகளில் அமைந்து விளங்கும் இலக்கியங்கட்கு பல வரலாற்று நூல்கள் வெளிவந்திருக்கின்றன. இவ்வழியை பின்பற்றியே இவ்வடமொழி இலக்கிய வரலாறு வெளிவந்துள்ளது.

ர்.ளு. ஊ முதல் டீ.யு வரை உரிய சம்ஸ்கிருத சரித்திர இலக்கிய ஆராச்சியாளர்கட்கும், வடமொழி இலக்கிய வரலாற்றை அறியவிரும்பும் யாவர்க்கும் உபயோகமாகும் பொருட்டு எழுதப்பெற்றது.
விலை ரூ 3-00 (தபாற் செலவு சதம் 50)


யாழ்ப்பாண வைபவமாலை

பதிப்பாசிரியர் :-

முதலியார் குல சபாநாதன்.

இந்நூல் மாணவர்கட்கும், சரித்திர ஆராச்சியாளர்கட்கும் பிறர்க்கும் உபயோகும் ஆகும் பொருட்டு பல ஆராச்சிக்குறிப்புகளுடன் வெளியிடப் பெற்றது.

யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் பல நூற்றாண்டு காலமாக தங்கள் ஆதிக்கத்தை நிலைபெறச் செய்த வரலாறு போர்த்துக்கேயர் இலங்கை வருவதன் முன்பே சிங்கள மன்னரும் தங்கட்கு திறை செலுத்துமாறு பாரம்பரியமாக அரசாட்சி செய்தவை போன்ற பல அரிய சரித்திர சமய வரலாறுகளும் அடங்கியது.
விலை ரூ 1-50 (தபாற் செலவு சதம் 50)



கலாநிலையம், 175, செட்டியார் தெரு, கொழும்பு


குறைந்த விலை! நிறைந்த விஷயங்கள்!!


கலியுகத்தில் கண்கண்ட தமிழ் தெய்வமாகிய முருகனது பெருமைகள் அடங்கிய நூல் எது?

புராண நூல்கள், சங்க இலக்கியங்கள் யாவற்றிலும் குறிஞ்சி நிலக் கடவுளாகப் போற்றும் ஆறுமுகப் பெருமானுடைய வரலாறு அனைத்தையும் ஒருங்கே கூறும் நூல் எது?

யாழ்ப்பாணத்து மேலப்புலோலி மகா வித்துவான்
ஸ்ரீ. நா. கதிரைவேற்பிள்ளை அவர்களால்
இயற்றப்பெற்ற

சுப்பிரமணிய பராக்கிரமம்

இந்நூல் சைவமக்கள் யாவருக்கும் உபயோகமாகும் பொருட்டு முருகனின் எண்பத்தெட்டு பராக்கிரமங்களையும் சுமார் 160 வடமொழி, தமிழ் நூல்களில் இருந்து சேகரித்து பல அழகிய படங்களுடன் சுமார் 400 பக்கங்கள் அடங்கியது.

முருகனின் அழகிய கலர் முகப்புடன் அட்டை பைன்ட் செய்யப்பெற்றது.

விலை ரூபா 5-00 தபாற்செலவு 60சதம்)

கலாநிலையம்
175, செட்டியார் தெரு,
கொழும்பு.



உங்கள் வாழ் நாட்களிலே வேலையில்லை என்ற மனதில் கவலை வேண்டாம்

மாதம் 100 ரூபா முதல் பல்லாயிரக்கணக்கான ரூபாக்களை சம்பாதிக்கக்கூடிய

சுதேசி கைத்தொழில்

இதில் பல விதமான சோப்புகள். மெழுகு வத்திகள் வச்சரங்கள், சாக்குகள். வாண வேடிக்கை மருந்துகள், வார்னீஷ்கள், தீக்குச்சிகள். இங்கிகள் சாயங்கள், வெள்ளி, தங்கம், பொன் இவைகளுக்கு கில்டுபோடுதல் மாஜிக் இங்கிகள், வர்ண தினுசுகள், பெப்பரமெண்ட்; தினுசுகள், ஓமவாட்டர், பல வித பல் பொடி கூந்தல் தைலங்கள், அத்தர், சென்ட் தினுசுகள், ஊதுவத்திகள், பலவித கறையெடுக்கும் முறை, சேவிங் சோப், இன்னும் வாசைன சோப் செய்யும் முறை நரை மயிர் கறுக்கும் தைலம் செய்யும் முறை, பட்டாஸ்கள், மத்தாப்புகள், சுரு சுரு வத்திகள், முகவசீகர பவுடர் செய்யும் முறை. இதே போல் அநேக செய்முறைகள் பிரபல அனுபவசாலிகளால் எழுதப்பட்டிருக்கின்றது.
விலை ரூபா 2-00 தபாற்செலவு 40 சதம்

கலா நிலையம்
175, செட்டியார் தெரு,
கொழும்பு - 11



சிறந்த நூல்! குறைந்த விலை!!

மதச்சார்பின்றி எம்மதத்தவரும் சம்மதமாகக் கைக்கொள்ளும்

சர்வசமய சமரசக் கீர்த்தனைகள்
மாயூரம் முன்சீப்

ச. வேதநாயகம் பிள்ளை அவர்கள் இயற்றியது.

138 தேவ தோத்திரக் கீர்த்தனைகளும், ஈசுவர வருஷத்துப் பஞ்சத்தைப்பற்றிய கீர்த்தனை ஒன்றும் ஹிதோபதசக் கீர்த்தனைகள் 21ம், உத்தியோக சம்பந்த கீர்த்தனைகள் 13ம், குடும்ப சம்பந்த கீர்த்தனைகள் 16ம், ஆகமொத்த 189 கீர்த்தனைகள் அடங்கியது.

மதச்சார்பின்றி எம்மதத்தவரும் சம்மதமாகக் கைக்கொண்டு வாசித்து மகிழக்கூடிய அரிய கீர்த்தனைகள்
விலை ரூபா 2-00 (தபாற் செலவு 40சதம்)

சர்வ ஜாதக சந்தேக நிவர்த்தி

இந்நூல் எல்லா சோதிட நூல்களிலும் ஏற்படும் ஜாதக விஷயமாக சந்தேகங்களை பிறர் உதவியின்றி தாமே எளிதில்பார்த்து அறியுமாறும் பிரபல ஜோதிட நூல்களிலிருந்து சேரித்து எழுதப் பெற்றது. இந்நூலில் மட்டும் ஜாதகசம்பந்தமாக ஏற்படும் சந்தேகங்களை சாதாரணமானவர்கள் முதல் ஜோதிடர் வரை இலகுவாக அறிந்துகொள்ளும் பொருட்டு பல அரிய சக்கரங்களுடன் கூறப்பட்டிருக்கிறது.
விலை ரூ 1-50 (தபால் செலவு சதம் 35)

நறுமலர்மாலை

ஆசிரியர்:-
அருள் செல்வநாயகம்

இந்நூலில் தமிழரது உரிமையும் தமிழருக்கும் ஈழநாட்டிற்கும் முள்ள சரித்திர தொடர்பின் தொன்மை ஆகியவைகளை 1. சமந்தகூடம், 2. இராசகாரியம். 3. கண்ணகிவழிபாடு, 4. நெடுந்தீவு, 5. விவுலானந்தஅடிகள், 6. கிராமிய இலக்கியம். 7. செய்வினை, 8. சீர்பாதவரலாறு. 9. மட்டக்களப்பு வாவி, 10. காமன்கூத்து, 11, சிங்கார கண்டி, 12. பழங்கோயில்கள் மேற்கண்ட பன்னிரண்டு கட்டுரைகள் மூலம் ஆசிரியர் சரித்திர ஆராச்சியுடன் மாணவர்கள் முதல் யாவர்கும் உபயோகமாகும்படி எழுதியுள்ளார்.
விலை ரூ. 1-50 (தபால் செலவு சதம் 50)

விபுலாநந்த அமுதம்
பதிப்பாசிரியர் :-
அருள் செல்வநாயகம்

முத்தமிழ்ப் பெருங்காப்பியமான சிலப்பதிகாரத்தின் அரங்கேற்று காதையிலுள்ள இசை நூணுக்கங்களை தெளிவாக விளக்கி “யாழ் நூல்” என்னும் கலை செல்வத்தை தமிழ் உலகிற்களித்த பெருமை முத்தமிழ் வித்தகர் அருட்டிருவிபுலாந்தசுவாமிகட்கே உரியதாகும்.

தமிழ் பேச்சினாலும், எழுத்தினாலும் தமிழ் கட்டுரைகள் குறிக்கோளாகக்கொண்ட அடிகளாரின் 38 கட்டுரைகள் கையெழுத்துப் பிரதியாக அச்சுவாகனமேறாது கரந்தை தமிழ் சங்கத்தாரால் பாதுகாக்கப்பட்டு வந்த இந்த நூல் தற்போது அச்சுவாகனமேறி வெளிவந்துவிட்டதாதலால் தமிழர்கள் ஒவ்வொருவரும் தம் இல்லந்தோறும் வாங்கி வாசித்து இன்பமடையுங்கள்.
விலை ரூ 1-50 (தபால் செலவு சதம் 50)



பதினெண் சித்தர்கள் அருளிச் செய்த
விஷ வைத்திய மாந்திரீக

ஒன்பது விஷ ஆரூடம்

(பல அரிய சக்கரங்கள், மூல மந்திர பூஜா விதிகளும் அடங்கியது)
இந்நூலில் பாம்பு, தேள், நட்டுவக்காலி, பூரான் கடிகளுக்குத் தகுதியான கைகண்ட மந்திர வைத்திய முறைகளும். பாம்புகள் வசிக்குமிடடம் பரிமளகுறி, தூதன்குறி, படத்தின்குறி, ஆடுங்குறி, விஷத்தின் அளவு, எலி, பெருஞ்சாலி, பல்லி, அரணை, நாய், நரி. வண்டு, குரங்கு, உடும்பு, கீரி, பன்றி. மாடு, ஆடு, கழுதை, பூனை, தவளை, தேரை, ஓணான் முதலிய விஷங்களுக்கு அவுடதம், கலிங்கம், மூலிகை பிரயோகம், புகை, முடிகயிறு, கொடிய விஷங்களை இறக்குவதற்குரிய யந்திரங்கள் பூஜா விதிகளுடனும் , பச்சிரைகளால் விஷமிறக்கும் முறைகளும் அடங்கியது. இப்புத்தகத்தில் குறிப்பிட்ட மருந்துகளை அளவுப்படி கொடுத்து, மந்திரித்தால் எவ்வித கொடிய விஷங்களும் இறங்கி குணமடைவார்கள். இவ்வரிய நூல் கைவசமிருந்தால் விஷகடிகளைப்பற்றிய பயமேயில்லை.

விலை ரூபா 6-00
(தபாற்செலவு 60 சதம்)

கலாநிலையம்,
175, செட்டியார் தெரு,
கொழும்பு.
">See all Movies'); document.write('

?max-results=8">Movie Category 1

'); document.write("?max-results="+numposts2+"&orderby=published&alt=json-in-script&callback=showrecentposts1\"><\/script>");

துணை பகுப்பாக்கம்

அட்டவணை 1
நியம உப பிரிவுகள்

-01 தத்துவமும் கோட்பாடும்
-02 நானாவிதம்
-03 அகராதிகள், கலைக்களஞ்சியங்கள், சொல்லிசைவுத் தொகுதிகள்
-04 விசேட பொருட்துறைகள்
-05 தொடர் வெளியீடுகள்
-06 நிறுவனங்களும் முகாமைத்துவமும்
-07 கல்வி, ஆய்வு போன்றவை
-08 நபர்கள் வரலாறு
-09 வரலாறு, புவியியல், நபர்கள்

அட்டவணை 2
பிரதேச அட்டவணை

-01 பொதுவான பிரதேசங்கள்
-03 புரதான உலகம்
-04 நவீன உலகம்- ஐரோப்பா
-05 ஆசியா
-06 ஆபிரிக்கா
-07 வட அமெரிக்கா
-08 தென்னமெரிக்கா
-09 ஏனையவை


அட்டவணை 3
இலக்கியத்தின் உப பிரிவுகள்

-1 கவிதை
-2 நாடகம்
-3 புனைகதை
-4 கட்டுரை
-5 சொற்பொழிவு
-6 விவாதங்கள்
-7 அங்கதம்
-8 நானாவிதம்
-9 ஏனையவை


அட்டவணை 4
மொழியின் உப பிரிவுகள்

-1 எழுத்து அமைப்புக்களும் ஒலியியலும்
-2 சொற்பிறப்பியல்
-3 அகராதிகள்
-5 இலக்கணம்
-8 மொழிப்பிரயோகம்


அட்டவணை 5
இன, வகுப்பு, தேசிய குழுமங்கள்

-1 தமிழர்
-2 பிரித்தானியர்
-3 ஜேர்மனியர்
-4 நவீன இலத்தின் பேசும் மக்கள்
-5 இத்தாலியர், ரோமானியர்
-6 ஸ்பானியரும் போர்த்துக்கீசரும்
-7 ஏனைய இத்தாலிய மக்கள்
-8 கிரேக்கரும் அதனுடன் தொடர்புள்ள குழுக்களும்
-9 ஏனைய இனக்குழுமங்கள்


அட்டவணை 6
மொழிகள்

-1 தமிழ் மொழி
-2 ஆங்கில மொழி
-3 ஜேர்மனிய மொழி
-4 பிரெஞ்சு மொழி
-5 இத்தாலிய மொழி
-6 ஸ்பானியரும் போர்த்துக்கீச மொழிகள்
-7 இத்தாலிய மொழிகள்
-8 புராதன கிரேக்க மொழி
-9 ஏனைய மொழிகள்
Powered by Blogger.

நூல்பகுப்பு (Dewey's Classification


  • 000 - கணனி அறிவியல், தகவல் மற்றும் பொது ஆக்கங்கள்
    • 000 கணனி விஞ்ஞானம், அறிவு மற்றும் ஒழுங்கமைப்பு
    • 010 நூல்விபரப்பட்டியல்
    • 020 நூலகமும் தகவல் அறிவியலும்
    • 030 பொதுக் கலைக்களஞ்சியங்கள்
    • 040 பயன்படுத்தப்படவில்லை
    • 050 தொடர் வெளியீடுகள்
    • 060 பொது நிறுவனங்களும் அரும்பொருளகவியலும்
    • 070 செய்தி ஊடகங்கள், ஊடகவியல், வெளியீட்டுத்துறை
    • 080 பொதுச் சேகரிப்புகள்
    • 090 கையெழுத்துப் படிகளும் அரிய நூல்களும்


  • 100 - மெய்யியலும் உளவியலும்
    • 100 மெய்யியலும் உளவியலும்
    • 110 பெளதீக அதீதம்
    • 120 அறிவாராய்ச்சியியல், காரணம்
    • 130 ஒத்த உளவியலும் மாயமந்திரமும்
    • 140 விசேட மெய்யியல் துறைகள்
    • 150 உளவியல்
    • 160 அளவையியல்
    • 170 ஒழுக்கவியல்
    • 180 புராதன இடைக்கால கீழைத்தேய மெய்யியல்
    • 190 நவீன மேலைத்தேய மெய்யியல்


  • 200 - சமயம்
    • 200 சமயம்
    • 210 சமய மெய்யியலும், கோட்பாடுகளும்
    • 220 இந்து மதம்
    • 230 இந்து மதமும் கோட்பாடும்
    • 240 இந்து, ஒழுக்க மற்றும் பக்தி இறையியல்
    • 250 இந்துக் கோவில்கள் (தல புராணங்கள்)
    • 260 சமூக, மதகுரு சார்ந்த இறையியல்
    • 270 பக்தி இயக்கங்கள்
    • 280 இந்திய சமயங்கள்
    • 290 ஏனைய சமயங்கள்


  • 300 - சமூக அறிவியல்கள்
    • 300 சமூக அறிவியல்கள்
    • 310 பொதுப் புள்ளிவிபரத் தொகுப்புக்கள்
    • 320 அரச அறிவியல்கள்
    • 330 பொருளியல்
    • 340 சட்டவியல்
    • 350 பொது நிர்வாகமும் இராணுவவியலும்
    • 360 சமூகப்பிரச்சனைகளும் சமூக சேவைகளும்; சங்கங்கள்
    • 370 கல்வி
    • 380 வணிகம், தொடர்பாடல் மற்றும் போக்குவரத்து
    • 390 சடங்குகள், ஒழுக்க ஆசாரங்கள் மற்றும் நாட்டாரியல்


  • 400 - மொழியும் மொழியியலும்
    • 400 மொழியும் மொழியியலும்
    • 410 மொழியியல்
    • 420 நியம ஆங்கில மொழி
    • 430 ஜெர்மன் மொழிகள்
    • 440 பிரெஞ்சு மொழிகள்
    • 450 இத்தாலிய மொழிகள்
    • 460 ஸ்பானிய மொழிகள்
    • 470 இலத்தீன் மொழிகள்
    • 480 கிரேக்க மொழிகள்
    • 490 இந்தோ-ஐரோப்பிய செல்டிக் மொழிகள்


  • 500 - அறிவியல்
    • 500 அறிவியல்
    • 510 கணிதம்
    • 520 வானியல்
    • 530 பௌதீகவியல்
    • 540 இரசாயனவியலும் அதனுடன் இணைந்த துறைகளும்
    • 550 புவிசார் அறிவியல்
    • 560 புராதன உயிரியல்
    • 570 வாழ்க்கை அறிவியல்கள் உயிரியல்
    • 580 தாவரங்கள்
    • 590 விலங்கியல்


  • 600 - தொழினுட்பவியல்
    • 600 தொழில்னுட்பவியல்
    • 610 மருத்துவமும் சுகாதாரமும்
    • 620 பொறியியலும் அதனுடன் இணைந்த செயற்பாடுகளும்
    • 630 விவசாயவியலும் அதனுடன் தொடரபான தொழில்னுட்பங்களும்
    • 640 வீடும் குடும்ப முகாமைத்துவமும்
    • 650 முகாமைத்துவம் மற்றும் துணைச் சேவைகள்
    • 660 இரசாயனப் பொறியியல்
    • 670 உற்பத்தி
    • 680 விசேட பயன்பாட்டுக்கான உற்பத்திகள்
    • 690 கட்டிடங்கள்


  • 700 - நுண் கலைகளும் அலங்காரக் கலைகளும்
    • 700 நுண் கலைகளும் அலங்காரக் கலைகளும்
    • 710 குடிமக்களுக்கான தரையமைப்புக் கலை
    • 720 கட்டிடக்கலை
    • 730 பிளாஸ்ரிக் கலைகள், சிற்பக்கலை
    • 740 வரைதலும் மற்றும் அலங்காரக் கலைகளும்
    • 750 ஓவியமும் ஓவியக் கலையும்
    • 760 வரைபுக் கலைகள், அச்சுக் கலையும்
    • 770 ஒளிப்படவியல் ஒளிப்படங்கள், கணினிக் கலைகள்
    • 780 இசை
    • 790 புத்தாக்கக் கலைகள், நிகழ்வுக் கலைகள்


  • 800 - இலக்கியம்
    • 800 இலக்கியம்
    • 810 தமிழ் இலக்கியம்
    • 820 ஆங்கில இலக்கியம்
    • 830 ஜேர்மன் மொழி இலக்கியம்
    • 840 பிரெஞ்சு மொழி இலக்கியம்
    • 850 இத்தாலிய மொழி இலக்கியம்
    • 860 போர்த்துக்கேச இலக்கியம்
    • 870 இலத்தீன் மொழி இலக்கியம்
    • 880 ஸ்கன்டிநேவிய மொழி இலக்கியம்
    • 890 ஏனைய மொழிகளின் இலக்கியங்கள்


  • 900 - வரலாறும் புவியியலும்
    • 900 வரலாறும் புவியியலும்
    • 910 பொதுப் புவியியலும் பிரயாணமும்
    • 920 வாழ்க்கை வரலாறு
    • 930 புராதன உலக வரலாறு
    • 940 ஐரோப்பிய வரலாறு
    • 950 ஆசிய வரலாறு
    • 960 ஆபிரிக்க வரலாறு
    • 970 வட அமெரிக்க வரலாறு
    • 980 தென் அமெரிக்க வரலாறு
    • 990 ஏனைய பிரதேசங்களின் வரலாறு

நூல்பகுப்பு (Dewey's Classification


  • 000 - கணனி அறிவியல், தகவல் மற்றும் பொது ஆக்கங்கள்
    • 000 கணனி விஞ்ஞானம், அறிவு மற்றும் ஒழுங்கமைப்பு
    • 010 நூல்விபரப்பட்டியல்
    • 020 நூலகமும் தகவல் அறிவியலும்
    • 030 பொதுக் கலைக்களஞ்சியங்கள்
    • 040 பயன்படுத்தப்படவில்லை
    • 050 தொடர் வெளியீடுகள்
    • 060 பொது நிறுவனங்களும் அரும்பொருளகவியலும்
    • 070 செய்தி ஊடகங்கள், ஊடகவியல், வெளியீட்டுத்துறை
    • 080 பொதுச் சேகரிப்புகள்
    • 090 கையெழுத்துப் படிகளும் அரிய நூல்களும்


  • 100 - மெய்யியலும் உளவியலும்
    • 100 மெய்யியலும் உளவியலும்
    • 110 பெளதீக அதீதம்
    • 120 அறிவாராய்ச்சியியல், காரணம்
    • 130 ஒத்த உளவியலும் மாயமந்திரமும்
    • 140 விசேட மெய்யியல் துறைகள்
    • 150 உளவியல்
    • 160 அளவையியல்
    • 170 ஒழுக்கவியல்
    • 180 புராதன இடைக்கால கீழைத்தேய மெய்யியல்
    • 190 நவீன மேலைத்தேய மெய்யியல்


  • 200 - சமயம்
    • 200 சமயம்
    • 210 சமய மெய்யியலும், கோட்பாடுகளும்
    • 220 இந்து மதம்
    • 230 இந்து மதமும் கோட்பாடும்
    • 240 இந்து, ஒழுக்க மற்றும் பக்தி இறையியல்
    • 250 இந்துக் கோவில்கள் (தல புராணங்கள்)
    • 260 சமூக, மதகுரு சார்ந்த இறையியல்
    • 270 பக்தி இயக்கங்கள்
    • 280 இந்திய சமயங்கள்
    • 290 ஏனைய சமயங்கள்


  • 300 - சமூக அறிவியல்கள்
    • 300 சமூக அறிவியல்கள்
    • 310 பொதுப் புள்ளிவிபரத் தொகுப்புக்கள்
    • 320 அரச அறிவியல்கள்
    • 330 பொருளியல்
    • 340 சட்டவியல்
    • 350 பொது நிர்வாகமும் இராணுவவியலும்
    • 360 சமூகப்பிரச்சனைகளும் சமூக சேவைகளும்; சங்கங்கள்
    • 370 கல்வி
    • 380 வணிகம், தொடர்பாடல் மற்றும் போக்குவரத்து
    • 390 சடங்குகள், ஒழுக்க ஆசாரங்கள் மற்றும் நாட்டாரியல்


  • 400 - மொழியும் மொழியியலும்
    • 400 மொழியும் மொழியியலும்
    • 410 மொழியியல்
    • 420 நியம ஆங்கில மொழி
    • 430 ஜெர்மன் மொழிகள்
    • 440 பிரெஞ்சு மொழிகள்
    • 450 இத்தாலிய மொழிகள்
    • 460 ஸ்பானிய மொழிகள்
    • 470 இலத்தீன் மொழிகள்
    • 480 கிரேக்க மொழிகள்
    • 490 இந்தோ-ஐரோப்பிய செல்டிக் மொழிகள்


  • 500 - அறிவியல்
    • 500 அறிவியல்
    • 510 கணிதம்
    • 520 வானியல்
    • 530 பௌதீகவியல்
    • 540 இரசாயனவியலும் அதனுடன் இணைந்த துறைகளும்
    • 550 புவிசார் அறிவியல்
    • 560 புராதன உயிரியல்
    • 570 வாழ்க்கை அறிவியல்கள் உயிரியல்
    • 580 தாவரங்கள்
    • 590 விலங்கியல்


  • 600 - தொழினுட்பவியல்
    • 600 தொழில்னுட்பவியல்
    • 610 மருத்துவமும் சுகாதாரமும்
    • 620 பொறியியலும் அதனுடன் இணைந்த செயற்பாடுகளும்
    • 630 விவசாயவியலும் அதனுடன் தொடரபான தொழில்னுட்பங்களும்
    • 640 வீடும் குடும்ப முகாமைத்துவமும்
    • 650 முகாமைத்துவம் மற்றும் துணைச் சேவைகள்
    • 660 இரசாயனப் பொறியியல்
    • 670 உற்பத்தி
    • 680 விசேட பயன்பாட்டுக்கான உற்பத்திகள்
    • 690 கட்டிடங்கள்


  • 700 - நுண் கலைகளும் அலங்காரக் கலைகளும்
    • 700 நுண் கலைகளும் அலங்காரக் கலைகளும்
    • 710 குடிமக்களுக்கான தரையமைப்புக் கலை
    • 720 கட்டிடக்கலை
    • 730 பிளாஸ்ரிக் கலைகள், சிற்பக்கலை
    • 740 வரைதலும் மற்றும் அலங்காரக் கலைகளும்
    • 750 ஓவியமும் ஓவியக் கலையும்
    • 760 வரைபுக் கலைகள், அச்சுக் கலையும்
    • 770 ஒளிப்படவியல் ஒளிப்படங்கள், கணினிக் கலைகள்
    • 780 இசை
    • 790 புத்தாக்கக் கலைகள், நிகழ்வுக் கலைகள்


  • 800 - இலக்கியம்
    • 800 இலக்கியம்
    • 810 தமிழ் இலக்கியம்
    • 820 ஆங்கில இலக்கியம்
    • 830 ஜேர்மன் மொழி இலக்கியம்
    • 840 பிரெஞ்சு மொழி இலக்கியம்
    • 850 இத்தாலிய மொழி இலக்கியம்
    • 860 போர்த்துக்கேச இலக்கியம்
    • 870 இலத்தீன் மொழி இலக்கியம்
    • 880 ஸ்கன்டிநேவிய மொழி இலக்கியம்
    • 890 ஏனைய மொழிகளின் இலக்கியங்கள்


  • 900 - வரலாறும் புவியியலும்
    • 900 வரலாறும் புவியியலும்
    • 910 பொதுப் புவியியலும் பிரயாணமும்
    • 920 வாழ்க்கை வரலாறு
    • 930 புராதன உலக வரலாறு
    • 940 ஐரோப்பிய வரலாறு
    • 950 ஆசிய வரலாறு
    • 960 ஆபிரிக்க வரலாறு
    • 970 வட அமெரிக்க வரலாறு
    • 980 தென் அமெரிக்க வரலாறு
    • 990 ஏனைய பிரதேசங்களின் வரலாறு
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Library - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger